ஒருவனின் மனைவி இன்னொருவரின் காதலியானால்..?!. கவிதையாக சொல்ல வரும் ‘காகித பூக்கள்’

ஒருவனின் மனைவி இன்னொருவரின் காதலியானால்..?!. கவிதையாக சொல்ல வரும் ‘காகித பூக்கள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kagitha Pookkalகொரோனா காலமான இக்கால கட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்கள் முழு நலத்துடன் கொரோனா அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் படம் ” காகித பூக்கள்”.

இந்த படக் குழுவினர் பொள்ளாச்சி அருகே உள்ள .கிராமத்திற்கு சென்றனர். ஆனால் அந்த கிராம மக்கள் படக் குழுவினரை ஊருக்குள் வரக்கூடாது என கட்டுப்பாடு விதித்து வர விடாமல் தடுத்து விட்டனர்.

எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மொத்த யூனிட்டையும் பொள்ளாச்சியில் தங்க வைத்துவிட்டு இயக்குனரும் தயாரிப்பாளருமான . முத்துமாணிக்கமும் தயாரிப்பு நிர்வாகியான சுப்ரமணியமும் திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி கிராமத்திற்கு சென்று அனுமதி பெற்று மொத்த யூனிட்டையும் அங்கு வர வழைத்து ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்தனர்.

அந்த ஊர் அப்படி என்றால்
இந்த ஊர் இப்படி . . . (நாகரீகம் கருதி பொள்ளாச்சி – அருகே உள்ள கிராமத்தின் பெயரை குறிப்பிடவில்லை)

முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்ட “காகித பூக்கள் ” திரைப்படம் விரைவில் பெரிய திரையில் வர உள்ளது.

மேலும் படத்தைப் பற்றி கதை , திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குனராக அறிமுகமாகும் முத்துமாணிக்கம் கூறியவதாவது…

” ஒருவனின் காதலி இன்னொருவனின் மனைவியாகலாம். அதே சமயம் ஒருவனின் மனைவி இன்னொருவனின் காதலியாக முடியாது.

அப்படி ஆனால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை கவிதையாக சொல்லும் படம் தான் “காகித பூக்கள் “.

இதில் புதுமுகங்கள் லோகன் – பிரியதர்ஷினி இருவருடன் ப்ரவீண்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தில்லைமணி, தவசி , பாலு, ரேகாசுரேஷ் இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இத்தோஷ் நந்தா இசையமைக்க, சிவபாஸ்கர் கேமராவை கையாள, சுதர்சன் படத்தொகுப்பையும், பாலசுப்ரமணியம் கலையையும், ஸ்ரீ சிவசங்கர் – ஸ்ரீ செல்வி இருவரும் நடன பயிற்சியையும், சுப்ரமணியன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது..

இது என்னோட முத லாவது படம்.” என்றார் முத்துமாணிக்கம்.

Kagitha Pookkal movie story revealed

தனுஷ் வெளியிட்ட ‘சாணிக் காயிதம்’ போஸ்டர்..; அழுக்கான உடையில் செல்வராகவன் & கீர்த்தி சுரேஷ் லுக்

தனுஷ் வெளியிட்ட ‘சாணிக் காயிதம்’ போஸ்டர்..; அழுக்கான உடையில் செல்வராகவன் & கீர்த்தி சுரேஷ் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saani Kayitham posterதமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான திரைப்படங்களை தந்தவர் இயக்குனர் செல்வராகவன்.

இவரும் தற்போது நாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.

‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

தற்போது இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ரத்தக் கறையுடன் குற்றவாளிகளைப் போல குத்த வைத்து அமர்ந்துள்ளனர்.

இருவரின் முன்பு கத்தி & சில ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுவும் வித்தியாசமான படைப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Dhanush revealed Saani Kayitham second poster

‘பிஸ்கோத்’ படத்தை ரசிக்கிறார்கள்.. கொண்டாடுகிறார்கள்… இதெல்லாம் ஓடிடி-யில் கிடைக்காது.. – சந்தானம்

‘பிஸ்கோத்’ படத்தை ரசிக்கிறார்கள்.. கொண்டாடுகிறார்கள்… இதெல்லாம் ஓடிடி-யில் கிடைக்காது.. – சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanamகொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில் அரசின் அனுமதிக்குப் பின் தீபாவளியன்று ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, சந்தானம் நடிப்பில் வெளியான படம் ‘பிஸ்கோத்’.

இப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திரையரங்கில் படத்தை வெளியிட்டது பற்றி இயக்குநர் ஆர்.கண்ணனும், நடிகர் சந்தானமும் பேசியதாவது:

இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது…

கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100% நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம்.

ஆனால், மார்ச் 22 ஆம் தேதியே ஊரடங்கை அறிவித்து விட்டார்கள். ஒரு படத்தை எடுத்துவிட்டு 8 மாதங்களாக வெளியிட முடியாமல் இருந்தால் எந்தளவு வலியும் வேதனையும் இருக்கும் என்று எங்களுக்கு தான் தெரியும்.

ஊரடங்கு தளர்வை அரசாங்கம் அறிவித்ததும் இப்படத்தை ஓடிடி-யில் வெளியிடலாமா? அல்லது திரையரங்கில் வெளியிடலாமா? என்று ஆலோசித்தோம்.

திரையரங்கில் வெளியிட்டால் ரசிகர்கள் வருவார்களா.. மாட்டார்களா என்ற சந்தேகம் இருந்தது. பின் தைரியத்துடன் வெளியிட முடிவு செய்தோம்.

சந்தானம் இல்லையென்றால் இந்த படம் வெளியாக வாய்ப்பே இல்லை. இன்னும் 2 மணி நேரம் தான் இருக்கிறது. ரூ.50 லட்சம் இருந்தால் தான் இப்படத்தை வெளியிட முடியும். ஏதாவது உதவி செய்யுங்கள் என்று சந்தானம் வீட்டிற்கு சென்று கேட்டேன். அவர் உடனே உதவி செய்தார்..

தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளோம். இதற்கு காரணம் சந்தானம், ரவி ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தார், தேனப்பன் என்று பலரும் உழைத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் நடித்த ‘சௌகார்’ ஜானகி தற்போது பெங்களூருவில் இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். அவருக்கு இது 400வது படம்.

இப்படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சொந்த ஊரில் இருப்பதால் அவர்களை அழைக்க முடியவில்லை.

இந்த கொரோனாவால் 9 மாதங்களுக்கான வட்டி மட்டுமே 3 கோடி வந்துவிட்டது. பைனான்சியர் ராம் பிரசாத் அடுத்த படத்தில் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார். இதுபோன்ற உதவியை செய்தாலே போதும்.

இவ்வாறு இயக்குநர் ஆர். கண்ணன் பேசினார்.

நடிகர் சந்தானம் பேசும்போது…

இப்படத்தை முதலில் ஓடிடி-ல் தான் வெளியிட முடிவு செய்தோம். ஆனால், இயக்குநர் ஆர்.கண்ணன் சிறிது காலம் காத்திருக்கலாம். திரையரங்கிலேயே வெளியிடலாம் என்று கூறினார். அவர் தான் இப்படத்திற்கு தயாரித்தும் இருக்கிறார்.

தீபாவளியன்று வெளியானதும் ரசிகர்களைக் காண திரையரங்கிற்கு சென்றேன். முதல் காட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் எனது ரசிகர்கள் தான். அவர்களுக்கு கைகூப்பி எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன் பிறகுதான் மக்கள் குடும்பத்துடன் வர ஆர்ம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி. அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் இருக்கிறது.

எங்களை ரசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் இவையெல்லாம் திரையரங்கில் தான் கிடைக்கும், ஓடிடி-யில் கிடைக்காது.

கொரோனா முழுவதும் குறைந்தாலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டால் வருங்கால சந்ததிகளுக்கு நோய்த் தொற்று ஏற்படலாம் இருக்கும்.

ரசிகர்கள் பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்றி 2 வாரங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்றால், ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கலாம்.

மேலும், சரியான படம் எடுக்கவில்லையென்றால், இயக்குனரோ, நடிகரோ யாராக இருந்தாலும் தொலைந்து விடுவார்கள். அதேபோல், படத்தின் வெற்றியைப் பொறுத்து சம்பளம் வேறுபடும். அதற்கேற்ப நடிகர்களும் அனுசரித்து தான் போவார்கள். யாரும் நான் நடித்து விட்டேன், என் சம்பளம் வந்தால் போதும் என்று எந்த நடிகரும் இருக்க மாட்டார்கள்.

நான் அரசியலுக்கு வர மாட்டேன்.

நான் பாஜகவில் இணையப் போவதாக வந்த செய்தி தவறானது.. அது பிஸ்கோத் பட காமெடியை விட செம காமெடி.

இவ்வாறு நடிகர் சந்தானம் பேசினார்.

Actor Santhanam speech at Biskoth press meet

கார்த்தி & GV பிரகாஷ் & PS மித்ரன் மெகா கூட்டணி.; பூஜையுடன் தொடங்கியது..!

கார்த்தி & GV பிரகாஷ் & PS மித்ரன் மெகா கூட்டணி.; பூஜையுடன் தொடங்கியது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi GV Prakashகதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர்,கார்த்தி. தற்போது இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார்.

வித்தியாசமான கதை அமைப்பில் உருவான ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் P.S.மித்ரனுடன் கார்த்தி இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் ‘புரொடக்‌ஷன் 4’ படைப்பாக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க, இன்று தீபாவளி நன்னாளில் பூஜையுடன் பாடல் பதிவு ஆரம்பமானது.

ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், எடிட்டிங் – ரூபன், கலை இயக்கம் – கதிர், நிர்வாக தயாரிப்பு- கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை-பிரசாத், PRO- ஜான்சன்.

பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Karthi-P.S.Mithran film commences on Deepavali with auspicious Pooja and song recording

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். தீபாவளி திருநாளாகிய இன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்தார்.

தீபாவளி தினமான இன்று வெளியாகும் புதிய படங்களை “கோபுரம் சினிமாஸ்” திரையரங்குகளில் திரையிட்டு இதன் சேவையை துவக்குகிறார். மேலும் தமிழகமெங்கும் பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

“கோபுரம் சினிமாஸ்” நிறுவனத்தின் உரிமையாளரான செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீண்ட வரலாறு பொருந்திய ராஜ் திரையரங்கத்தையும் ஆறு திரைகள் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டராக மாற்ற முடிவெடுத்துள்ளார்.

மேலும் வரும் காலங்களில் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தரமான சிறந்த படங்களையும் தயாரிக்க உள்ளார். இதற்காக பல முன்னனி கதாநாயகர்களிடம் கதை விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

“கோபுரம் சினிமாஸ்” நிர்வாக உரிமையாளர் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில், ‘மதுரை மக்களுக்கு நல்ல படம் பார்க்கும் அனுபவத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதும், எங்கள் மல்டிபிளக்ஸ்ற்குள் வருபவர்களுக்கு நல்ல பாதுகாப்பையும், தரமான உணவையும் கொடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் தூய்மையான சூழ்நிலையையும் உருவாக்கி தருவதே எங்களுடைய மகத்தான நோக்கமாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.

“கோபுரம் சினிமாஸ்” மல்டிபிளக்ஸ் – சிறப்பம்சங்கள்

அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் முதல்முறையாக மதுரையில் நவீன ‘டால்பி’ தொழில் நுட்பத்துடன் Laser Projector, 4 Way Speaker, 3D Projection மற்றும் அகன்ற திரை வசதி கொண்ட 3 திரைகளுடன் பிரம்மாண்ட கோபுரமாய் “கோபுரம் சினிமாஸ்” உருவெடுத்துள்ளது.

அன்னிய தேசங்களின் தொழில் நுட்பங்களை மொத்தமாக உள்ளடக்கி புத்தம்புது பொலிவுடன் காட்சியளிக்கும் Interiors, மின்விளக்குகள் மற்றும் மிகப்பிரம்மாண்டமாக கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் Video Wallஐ மக்களுக்காக படைத்துள்ளது.

மக்களின் பாதுகாப்பிற்காக நவீன கேமிராக்கள் மற்றும் பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கோபுரம் சினிமாஸ் நியமித்துள்ளது. மேலும் மின் தடங்கல் இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மக்களின் வசதியை கருதி பிரம்மாண்ட பரப்பளவுள்ள கார் பார்க்கிங் மற்றும் பைக் பார்க்கிங்கை உருவாக்கியுள்ளது.

மேலும் மிக முக்கிய அம்சமாக மதுரையில் எங்கும் இல்லாத அளவிற்கு Customer Care வசதி மற்றும் இலவச WiFi வசதியையும் ஏற்படுத்தியுள்ளது

Famous financier Anbu Chezhiyan has ventured into movie theatre business

Stills9

Gopuram Cinemas

JD..? or KD..? தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்.; வாத்தி வந்துட்டாரு..

JD..? or KD..? தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்.; வாத்தி வந்துட்டாரு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master teaserவிஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன்தாஸ், ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இனிருத் இசையமைத்துள்ளார்.

இப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யவிருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது.

இன்று தீபாவளியை முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் ரிலீஸானது.

இதில் விஜய்யின் பெயர் படத்தில் JD என தெரியவந்துள்ளது.

அதிலும் இந்த வாத்தி மிரட்டலான ரவுடியிசம் செய்வார் என தெரிகிறது.

இந்த டீசரில் விஜய் & விஜய்சேதுபதி மோதும் ஆக்ஷன் காட்சிகள் தெறி லெவலில் உள்ளன.

இதனை விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

Much awaited Master teaser is out now

More Articles
Follows