விஜய்-ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் நயன்தாரா இணைவாரா..?

விஜய்-ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் நயன்தாரா இணைவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Nayanthara joins with Vijay and GV Prakashs new projectகரு படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கப் போகும் புதிய படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இந்தச் செய்தி இன்னும் உறுதியாகவில்லை.

இதற்கு முன் நாச்சியார் படத்தில் ஜோதிகாவுடன் நடித்திருந்தார் ஜி.வி. பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு ‘சர்வம் தாளமயம்’, ‘அடங்காதே’, செம, உள்ளிட்ட படங்கள் ஜிவி. பிரகாஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

Will Nayanthara joins with Vijay and GV Prakashs new project

திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கவுள்ள தமிழக அரசுக்கு விஷால் நன்றி

திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கவுள்ள தமிழக அரசுக்கு விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal said we trust TN government for Cinema industry issueதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

அப்போது அவர் திரைத்துறை வேலை நிறுத்தம் குறித்து பேசினார். அதில்…

““தயாரிப்பாளர்கள் சங்க பிரச்னை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விரைவில் தயாரிப்பாளர்கள் பிரதிநிதிகளுடன், உயர்மட்ட அதிகாரிகள் குழு பேச்சு வார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணப்படும்.

தயாரிப்பாளர்கள் சங்க பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. பேரணியை விஷால் வாபஸ் வாங்கி விட்டார்.

தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது விஷால் மட்டும் கிடையாது. அரசு சில கொள்கை முடிவுகள் அறிவிக்கவுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்களின் பிரச்சினை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிரந்தரத் தீர்வு காணப்படும்.

தேவைப்பட்டால் திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும்” என்றார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Vishal said we trust TN government for Cinema industry issue

5 புதிய ஹீரோஸ்-புரொடியூசர்களை அறிமுகம் செய்வேன்…: சுசீந்திரன்

5 புதிய ஹீரோஸ்-புரொடியூசர்களை அறிமுகம் செய்வேன்…: சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suseenthiranவெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தன் முதல் வெற்றியை கொடுத்து சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுசீந்திரன்.

அதன்பின்னர் பல வெற்றிகளை கொடுத்தாலும் ஒரு சில படங்கள் கவனம் பெறவில்லை.

இறுதியாக வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றுவரை நான் யாரிடமும் வட்டிக்குப் பணம் வாங்கியதும் இல்லை, கொடுத்ததும் இல்லை.

அசோக் அண்ணனின் மரணம் குறித்து நான் பேசியதால், அந்த பைனான்சியரிடம் பணம் வாங்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் என்னுடன் படம் செய்யத் தயங்குகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.

பந்து எவ்வளவு வேகமாக தரையில் எறியப்படுகிறதோ, அவ்வளவு வேகமாகப் பந்து மேலே எழும் என்பது அனைவருக்கும் தெரியும்.

எனது முதல் படத்திலேயே முழுவதும் புது நடிகர்கள், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், புது தயாரிப்பாளர் என்று அனைத்துப் புதியவர்களையும் வைத்து வெற்றி பெற்றவன் நான் ஒருவன் தான், கடந்த 10 ஆண்டுகளில் (கர்வம் அல்ல).

இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்துகிறேன்.

எனது முதல் படம் ‘ஏஞ்சலினா’, இரண்டாவது படம் ‘ஜீனியஸ்’. இரண்டு படங்களும் நிறைவடைந்துள்ளன. எனது மூன்றாவது படம் ‘சாம்பியன்’, ஃபுட்பால் பற்றியது.

ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்தப் படத்தைத் தொடங்க உள்ளேன்.

மற்ற இரண்டு படங்களின் விவரங்களை விரைவில் வெளியிடுவேன்.” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

சிம்பு படத்தால் சுருண்டவர் நயன்தாராவால் எழுந்து விடுவாரா?

சிம்பு படத்தால் சுருண்டவர் நயன்தாராவால் எழுந்து விடுவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director nelson venkatesanஅனிருத் இசையமைப்பில் நயன்தாரா நடித்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள படம் கோலமாவு கோகிலா.

லைக்கா தயாரித்துள்ள இப்படத்தை நெல்சன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தன் திரைப்பயணம் குறித்து கூறியுள்ளதாவது…

நானும் சிம்புவும் ஸ்கூல் மேட். அவருடன் வல்லவன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன்.

பின்னர் சிம்புவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தேன்.

ஆனால் அந்த படம் அப்படியே நின்றுவிட்டது. நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. என் முதல் படம் அப்படி ஆனது வருத்தமாக உள்ளது.

தற்போது நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியுள்ளேன்.

கோலமாவுக்கும் கதைக்கும் சம்பந்தம் உள்ளது. படத்தின் நாயகி பெயர் கோகிலா. கதையை கேட்டவுடனே ஓகே சொன்னார் நயன்தாரா.

படம் ஜாலியாக இருந்தாலும் பெண்கள் படும் கஷ்டங்களை சொல்லியிருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது.

‘கோலமாவு கோகிலா’ என்னைக் கைதூக்கிவிடுவாள் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தத்தை மீறி விஜய்சேதுபதி சூட்டிங்; ஜுங்காவுக்கு வந்த ஆபத்து.?

வேலை நிறுத்தத்தை மீறி விஜய்சேதுபதி சூட்டிங்; ஜுங்காவுக்கு வந்த ஆபத்து.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer council decided to take action on Junga team because of Shoot Conducted during Strike‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மற்றும் காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜுங்கா’.

விஜய்சேதுபதி மற்றும் சாயிஷா ஜோடியாக நடித்து வருகின்றனர்.

விஜய்சேதுபதி இதுவரை நடித்ததிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் அவரே இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

‘ஜுங்கா’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரீஸில் இடம் பெறுவதாக அமைந்துள்ளது.

தற்போது வேலை நிறுத்தம் காரணமாக சூட்டிங் நடத்தக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ள நிலையிலும் ‘ஜுங்கா’ சூட்டிங் பாரீஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறாக தடையை மீறி சூட்டிங் நடைபெற்று வருவதால், அந்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

இதனால் படக்குழுவினர் சென்னை திரும்பியதும் இது பற்றிய பிரச்சினை எழக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Producer council decided to take action on Junga team because of Shoot Conducted during Strike

வசனங்களே இல்லாத மெர்குரி படத்தை ஏப்ரலில் திரையிட திட்டம்

வசனங்களே இல்லாத மெர்குரி படத்தை ஏப்ரலில் திரையிட திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabudevas Mercury does not any dialogue in this movieஸ்டோன் பென்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `மெர்குரி’.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வசனங்களே இல்லாத இப்படத்தை சைலண்ட் த்ரில்லராக உருவாகியுள்ளனர்.

இதில் பிரபுதேவா ஆன்ட்டி ஹீரோவாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான இப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தமிழ் புத்தாண்டை லாஸ் ஏஞ்சல்ஸில் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால், மெர்குரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

Prabudevas Mercury does not any dialogue in this movie

More Articles
Follows