ஆட்சியாளர்கள் மக்களுக்கு நல்லது செய்யனும்… வடிவேலு பேட்டி

ஆட்சியாளர்கள் மக்களுக்கு நல்லது செய்யனும்… வடிவேலு பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu talks about Govt ruling party after electionசென்னை சாலிகிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார் நடிகர் வடிவேலு.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது…

இன்றைக்கு ஒவ்வொரு பிள்ளைகளின் கையிலும் செல்போன் இருக்கிறது.

யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. பிள்ளைகளே யாருக்கு ஓட்டு போட வேண்டும் என பெரியவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறாங்க.

இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு நல்ல விடிவுகாலம் வரும். யார் ஆட்சிக்கு வந்தாலும் கண்ணீர் சிந்த விடாமல் மக்களை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” என பேசினார் வடிவேலு.

Vadivelu talks about Govt ruling party after election

சிவகார்த்திகேயனின் Mr லோக்கல் ரிலீஸ் தள்ளிப் போனது

சிவகார்த்திகேயனின் Mr லோக்கல் ரிலீஸ் தள்ளிப் போனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans Mr Local movie release postponedஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் ‘மிஸ்டர் லோக்கல்’.

இதில் சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ராதிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம் பெறும் ‘டக்குனு டக்குனு…’ என்று துவங்கும் பாடல் ஏற்கெனவே வெளியானது.

தற்போது சிவகார்த்திகேயன் பாடியுள்ள ‘கலக்கலு…’ என்ற பாடலின் லிரிக் வீடியோவும் வெளியானது.

இப்படத்தை மே 1-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் இரண்டுவாரங்கள் கழித்து அதாவது மே 17 ஆம் படம் ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர்.

Sivakarthikeyans Mr Local movie release postponed

ஹரீஷ் கல்யாண் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஜெர்சி

ஹரீஷ் கல்யாண் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஜெர்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)வாழ்க்கையின் பெரும்பாலான ஆச்சர்யங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தான் வரும். குறிப்பாக, சினிமாவில், சிவப்பு கம்பளங்கள் தன்னிச்சையாக விரிக்கப்படும். அப்படி தான் தெலுங்கு சினிமாவில் ஹரீஷ் கல்யாணுக்கும் ஒருவித வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை கவர்ந்த ஹரீஷ் கல்யாண், தெலுங்கு சினிமாவிலும் நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பெரும் அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களிலும், விமர்சனங்களிலும் அவர் நடித்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

“இது முற்றிலும் நானே எதிர்பாராதது, என் கதாபாத்திரத்தை கவனித்து, இந்த அளவிற்கு என்னை பாராட்டுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. தெலுங்கு ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்கு என்னை நடிக்க கேட்டபோதே அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன், ஆனால் இந்த அளவுக்கு மக்களை சென்று சேரும் என்று நினைக்கவில்லை. இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், புகழ்பெற்ற இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் எனக்கு ஃபோன் செய்து என்னை பாராட்டுவது தான். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஒவ்வொருவருக்கும், குறிப்பாக என் நண்பர் நானிக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் ஹரிஷ் கல்யாண்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படமான ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22, 2019 முதல் தொடங்குகிறது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலன் கோபாலன் தயாரிக்க, சஞ்சய் பாரதி இயக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “

ஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)கண்ணன் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக K.தங்கவேலு தயாரித்திருக்கும் படம் “ கள்ளத்தனம் “இந்த படத்தின் யுகன், வினோ இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.கதாநாயகிகளாக சொப்னா நகினா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் மணிகண்ணன், முல்லை, அம்மு மார்டின்,அல்வாவாசு, கோவைசெந்தில், கிச்சி மார்டின் இவர்களுடன் ஏராளமான கூத்துப்பட்டறை நடிகர்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எடிசன் M.S. அமர்நாத்

இசை – ரவிகிரண்

எடிட்டிங் – லட்சுமணன்

நடனம் – ராஜு

தயாரிப்பு – K.தங்கவேலு

இணை தயாரிப்பு – T.R.கார்த்திக் தங்கவேலு

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – C.தண்டபாணி

படம் பற்றி இயக்குனர் C.தண்டபாணி கூறியது..

ஹீரோ கிராமத்தில் வேளாண்மை படிப்பு படித்துவிட்டு அங்குள்ள விவசாய மக்களுக்கு மண் ஆராய்ச்சி செய்து உதவி வருகிறார். அந்த சமயத்தில் ஊரில் வில்லன் பல வகையில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறான். எதிர்பாரா விதமாக ஹீரோ வீட்டில் புதையல் சம்மந்தமாக ஒரு ஓலைச் சுவடி இருப்பதும் அதில் பல ரகசியங்கள் அடங்கி இருப்பதை எப்படியோ தெரிந்துகொண்டு வில்லன் அந்த ஓலைச் சுவடியை கைப்பற்ற நினைக்கிறான். இதனால் நாயகனுக்கும் வில்லன் கும்பலுக்கும் சண்டை நடக்கிறது. இறுதியில் ஓலைச்சுவடியை வில்லன் கைபற்றினானா இல்லை நாயகன் அதை தடுத்தாரா புதையல் யாருக்கு கிடைத்தது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்லுகிறோம்.

படப்பிடிப்பு செங்கம் சாத்தனூர், செஞ்சி, வேலூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் C.தண்டபாணி.

முன்னாள் மிஸ் இந்தியாவை கரம் பிடிக்கவுள்ளார் நடிகர் மஹத்

முன்னாள் மிஸ் இந்தியாவை கரம் பிடிக்கவுள்ளார் நடிகர் மஹத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)சிம்புவின் நண்பரும் நடிகருமான மகத் திருமணம் செய்யவுள்ளார்.

இவர் அஜித்துடன் மங்காத்தாவில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பிரியாணி, வடகறி, சென்னை 28, அன்பானவன் அடங்காதன் அசராதவன் படங்களில் நடித்திருந்தார்.

தற்போது வந்தா ராஜாவாத்தான் வருவேன், யாகன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் 2012ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ராவை காதலித்துள்ளார்.

விரைவில் இவர்கள் திருமணம் செய்யவுள்ளனர்.

அடிக்கடி அரசியல் பேசும் சிம்பு ஏன் ஓட்டு போடவில்லை தெரியுமா..?

அடிக்கடி அரசியல் பேசும் சிம்பு ஏன் ஓட்டு போடவில்லை தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)நாடாளுமன்றத் தேர்தல் தமிழக வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

தி.நகர் பகுதி வாக்குச் சாவடியில் தான் சிம்புவும் ஓட்டு போடுவார் என செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

இதற்கு அவர் தந்தையும், நடிகரும், அரசியல் தலைவருமான டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

சிம்பு எப்போதும் வாக்களிக்க தவறியதில்லை. ஆனால், தற்போது அவர் லண்டனில் இருக்கிறார். அவரால் வர முடியாத சூழ்நிலை. என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows