தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த படம் அவள். ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த திகில் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியிருந்தார்.
முதலில் தமிழில் வெளியான இப்படம் பின்னர் ஹிந்தி, தெலுங்கிலும் வெளியானது.
தற்போது இதன் 2ம் பாகத்தை உருவாக்கவுள்ளனர்.
கதை, திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் ராவ் எழுத மீண்டும் சித்தார்த்தே தயாரித்து, நடிக்கவுள்ளார். நாயகியாக ஆண்ட்ரியாவே தொடரவுள்ளார்.
தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை இயக்கி வருகிறார் மிலிந்த் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா படத்தை முடித்துவிட்டு தான் சித்தார்த் படத்தை இயக்கவிருக்கிறாராம் மிலிந்த் ராவ்.
Actor Siddharth plans to produce Aval 2