ஜாம்பியே செத்துடும்.; சிக்கனே சாப்பிடமாட்டீங்க.. ஜாம்பி விமர்சனம் (1/5)

ஜாம்பியே செத்துடும்.; சிக்கனே சாப்பிடமாட்டீங்க.. ஜாம்பி விமர்சனம் (1/5)

ஜாம்பி என்றால் என்ன..? தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.. மிருதன் படத்தில் பாத்து இருப்பீங்க. வைரஸ் தாக்கிய அந்த நோய் தான்.

யோகிபாபு ஒரு கேங் லீடர். இவர் தன் செல்போனை தொலைத்துவிடுகிறார். அது பிஜிலி ரமேஷிடம் இருக்கிறது. அவரை தேடி ரிசார்ட்டுக்கு வருகிறார்.

அங்கு ஏற்கெனவே சரக்கு அடித்துவிட்டு ரூம் போட்டுள்ளனர் கோபி, சுதாகர், அன்புதாசன், கார்த்திக் & பிஜிலி ரமேஷ்.

அதுபோல் யாஷிகா ஆனந்த் மற்றும் சக மாணவிகள் ஆகியோரும் அந்த ரிசார்ட்டுக்கு பார்ட்டி வருகின்றனர்.

கூவம் ஆறுகளில் செத்துக் கிடக்கும் கோழிகளை எடுத்து சுத்தம் செய்து, ஸ்டார் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர்.

அந்த சிக்கன்களை சாப்பிடும் சில பெண்களுக்கு அந்த வைரஸ் தாக்குகிறது.

இந்த ஜாம்பிகளிடம் இருந்து படத்தின் நாயகர்கள் மற்றும் நாயகி எப்படி தப்பிக்கின்றனர் என்பது தான் கதை.

கலைஞர்கள்..

அட.. கதை நல்லாயிருக்கே என்று நீங்கள் நினைக்கலாம். அது சரி தான். ஆனால் படமாக்கியிருக்கும் விதம் இருக்கே.. கூவத்தில் கிடந்த சிக்கனை நாம் சாப்பிட்டால் வாந்தி வருமே. அதுதான் படத்தின் ரிசல்ட்.

யோகிபாபு அண்ட் யாஷிகா இருப்பதால் படத்தை கொஞ்சம் பார்க்க முடிகிறது. அரை குரை ஆடைகளில் நம்மை கிறங்கடித்து விட்டு செல்கிறார் யாஷிகா.

யோகிபாபு காமெடி ரசிக்க வைக்கிறது. இவருடன் வரும் அடியாட்கள் ஓகே.

படத்தின் க்ளைமாக்ஸில் யோகிபாபுவிடம் ஒரு கேள்வியை நண்பர்கள் கேட்கின்றனர்.

நீங்க ஏன்னே கல்யாணம் பண்ணிக்கலன்னு… சினிமாக்காரனுக்கு வீடே தர மாட்டுறாங்க. இதுல எங்கடா பெண் தருவாங்க? என்கிறார். ஆனால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கள்ளஉறவு (பொதுமக்களை) தான் காட்டுறாங்க என நக்கல் அடிக்கிறார். இவர் இந்த சினிமாவை பொறுத்தவரை டான் தானே.. பின் ஏன் இந்த தேவையில்லாத டயலாக்.?

பிஜிலி ரமேஷ் தீவிர ரஜினி வெறியர். அதற்காக எப்போதும் அவரைப் போல செய்வது ரஜினி ரசிகர்களையே சலிப்படைய வைக்கிறது.

யூடிப்பில் கலக்கிய பரிதாபங்கள் புகழ் கோபி & சுதாகர் இதில் நடித்துள்ளனர். இனி சினிமா பரிதாபம் என்கிற அளவுக்கு நம்மை சோதிக்கின்றனர்.

வில்லன் ஜான்விஜய் பாவம். அன்புதாசன் யாஷிகாவுடன் சுத்துகிறார். அதை எல்லாம் பார்க்க கூட முடியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நடிகர் பிரேம்ஜி தான் இப்படத்தின் இசையமைப்பாளர். ஒவ்வொரு படத்திற்கும் தன் அடைமொழியை மாற்றிக் கொள்கிறார். இதற்காக இசை காட்டேரி என வைத்துள்ளார். அதற்கு ஏற்ப இசையை கொடூரமாக கொடுத்துள்ளார்.

பேட்ட முதல் விக்ரம் வேதா வரை உள்ள மியூசிக்கை ஓட விட்டுள்ளார். ஆர் யூ ஓகே பேபி பாடல் கூட இரைச்சலாக உள்ளது.

படத்தில் ஒரே ஆறுதல்.. ஒளிப்பதிவாளர் விஷ்னுஸ்ரீ மற்றும் மேக்அப் மாரியப்பன் தான். அவர்கள் நியாயமாக உழைத்துள்ளனர். ஜாம்பி மேக் அப் ஓகே.

ஆனால் ஜாம்பியை போல சுதாகர், கோபி, அன்புதாசன் நடிப்பது மரண கொடூரம்.

புவன் நலன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்த்தால் ஜாம்பியே செத்துடும். மக்களின் நிலை என்னவாகும்? யோசித்து பாருங்கள்.

Comments are closed.

Related News

காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு,…
...Read More
பல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார்…
...Read More
எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த்…
...Read More