முடிவில்லாத புதையல்.. ழகரம் விமர்சனம்

முடிவில்லாத புதையல்.. ழகரம் விமர்சனம்

நடிகர்கள்: நந்தா, ஈடன் குரைக்கோஸ் மற்றும் பலர்.
இசை – தரண்குமார்
ஒளிப்பதிவு – பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ்
இயக்கம் – கிரிஷ்
பிஆர்ஓ – சக்தி சரவணன்
தயாரிப்பு செலவு – ரூ. 10 லட்சம்

நாயகன் நந்தாவும், நாயகி ஈடன் குரைக்கோசும் லவ்வர்ஸ்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளரான நந்தாவின் தாத்தா ஒரு கட்டத்தில் இறந்துவிடுகிறார்.

சில தினங்களுக்கு பின் தாத்தாவின் நண்பர் ஒருவர் நந்தாவை சந்தித்து, தாத்தாவின் மரணம் கொலை என்றும், அவர் தனது தொல்பொருள் ஆராய்ச்சியில் புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறுகிறார். அவர் ஏதாவது ஒரு பார்சல் கொடுத்தாரா? என்று கேட்கிறார்.

அதில் அந்த இடத்திற்கு செல்வதற்கும் புதையலை அடைவதற்காக விஷயங்களை வைத்துள்ளதாக கூறுகிறார்.

நந்தா புறப்படும் வேளையில் அவரை ஒரு கும்பல் மிரட்டுகிறது. புதையலை தங்களிடம் கொடுக்கவில்லையென்றால் குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மிரட்டுகிறது.
எனவே நந்தா என்ன செய்தார்? அந்த புதையல் என்ன ஆனது? என்பதே மர்மம் நிறைந்த மீதிக்கதை.

அலட்டல் இல்லாத நடிப்பில் நந்தா நடித்துள்ளார். ஆனால் கொஞ்சம் முயற்சித்து மாறுபட்ட முகபாவனைகளை கொடுத்திருக்கலாம். பிடிக்காமல் செய்த கேரக்டர் போல் உள்ளது.

நாயகி ஈடன் குரைக்கோஸ் அழகாக வந்து செல்கிறார். விஷ்ணு பரத், மீனேஷ் கிருஷ்ணா, சந்திர மோகன், சுபாஷ் கண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கச்சிதம்.
புதையலை நெருங்கிய பின்னர் தான் கொஞ்சம் கதை சூடு பிடிக்றிது. தமிழ் மொழியின் பெருமையை அழகாக சொல்லியுள்ளனர்.

முழுப்படத்தையும் 10 லட்சம் செலவில் எடுத்துள்ளதை பாராட்டலாம். டைட்டில் கார்டு முதல் இறுதியாக காட்டப்பட்ட அந்த அருவி புதையல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தரண்குமாரின் பின்னணி இசையும் பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ் ஒளிப்பதிவும் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.

மீதிக்கதை 2ஆம் பாகத்தில் என கதையை முடித்துள்ளார் டைரக்டர் கிரிஷ்.

`ழகரம்’… முடிவில்லாத புதையல்

Comments are closed.