தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெப்பன் விமர்சனம்.. சூப்பர் ஹியூமன் சூப்பரா..?
சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம். சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’..
ஸ்டோரி…
Youtuber வசந்த் ரவி தனது வித்தியாசமான படைப்புக்காக ஓர் இடத்திற்கு செல்கிறார். அங்கு ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கிறது.. இதனை அடுத்து அந்த இடத்தில் இருக்கும் இவர் மீது சந்தேகம் எழவே போலீசார் இவரை விசாரிக்கின்றனர்.
இவர் மேல் தீராத சந்தேகத்தில் இருக்கும் போலீசார் இவரை துருவித் துருவி விசாரிக்க இவர் எந்த பதிலும் சொல்லாமல் அனுப்புகிறார். இதனை எடுத்து மாஸ்க் அணிந்த ஒருவர் விசாரிக்கிறார்.
ஒரு கட்டத்தில் இவர் சூப்பர் ஹியூமன் ஒருவர் இருக்கிறார். அவரை உங்களால் அழிக்க முடியாது என்கிறார்.
மேலும் விசாரணையில் பல சம்பவங்கள் தெரிய வருகிறது.. வசந்த ரவி உண்மையில் யார்.? அவருக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு என்பதே மீதிக்கதை.
கேரக்டர்ஸ் …
சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை மற்றும் பலர்.
சத்யராஜ் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இதுவரை ஏற்காத சூப்பர் ஹியூமனை சிறப்பாக செய்து இருக்கிறார்.. இவரும் வசந்த ரவியும் மோதும் அந்த கிளைமாக்ஸ் ஃபைட் அதிர வைக்கிறது..
ஜெயிலரில் சாந்தமாக வந்து கடைசியாக மிரட்டிய வசந்த் ரவி இந்த படத்தில் ஆரம்பம் முதலே மிரட்டி இருக்கிறார்.. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் வசந்த் ரவியின் இரட்டை வேடம் செம.. சில நேரங்களில் கத்தி ஓவர் ஆக்டிங் செய்தாலும் அந்த கேரக்டருக்கு இது தேவை தான் என்பதை உணர வைத்திருக்கிறார்.
வழக்கமாக வந்து செல்லும் நாயகியாக தான்யா ஹோப்.. அவரது தடித்த உதடுகளும் உருளைக் கண்களும் கவிதை பேசுகிறது..
மாஸ்க் போட்டு பேசும் விசாரணை அதிகாரி கொஞ்சமாவது வாயை திறந்து பேசி இருக்கலாம்.. டப்பிங் பிரச்சினை வரும் என்று நினைத்து விட்டார் என்னவோ அவர் பேசும் குரல் சுத்தமாக புரியவில்லை..
யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன்,
வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் இப்படியாக பல நட்சத்திரங்கள் வந்து சென்றாலும் இவர்கள் கதைக்கு ஒத்துழைத்திருக்கின்றனர்..
டெக்னீசியன்ஸ்…
ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய கலை சுபேந்தர்.. ஆக்ஷன் – சுதீஷ்.
மில்லியன் ஸ்டுடியோ புரொடக்ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கிறார்..
கலை இயக்குனரும் VFX கலைஞர்களும் முழு உழைப்பை கொடுத்திருக்கின்றனர். இவர்கள் இல்லாவிட்டால் இந்த படத்தை ரசிக்க முடியாது கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது..
பாடல்களுக்கு நிறைய இசையமைப்பாளர்கள் இருந்தாலும் பின்னணி இசைக்கு இளையராஜா யுவன் ஜிப்ரன் உள்ளிட்ட ஒரு சிலரையே சொல்லலாம்.. இதில் ஜிப்ரனின் இசை மிகப்பெரிய பலத்தை சேர்த்துள்ளது. தெறிக்கும் இசையை கொடுத்து படத்தில் திரில்லருக்கு ஏற்ப நம்மை படபடக்க வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது.. முக்கியமாக படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிளாக் அண்ட் ஒயிட்டில் படமாக்கப்பட்டு இருக்கிறது.. இது ஆங்கில படத்திற்கு நிகராக இருக்கிறது.
வித்தியாசமான இந்த சயின்ஸ் பிக்சன் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை கதை எதை நோக்கி நகர்கிறது என்ற குழப்பத்தில் நாம் இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு முக்கியமாக சத்யராஜ் வந்த பிறகு கதையின் வேகம் சூடு பிடிக்கிறது கிளைமாக்ஸ் வரை அது நீடிக்கிறது.
சத்யராஜுக்கும் வசந்த ரவிக்கும் என்ன தொடர்பு என்பதும் மாஸ்க் மனிதனின் உண்மையான முகம் என்ன என்ற காட்சிகள் அதிர வைக்கிறது.
அதிலும் சூப்பர் ஹியூமன் கதையை சுதந்திரப் போராட்ட காலத்தில் தொடங்கி ஹிட்லர் நேதாஜி வரை கொண்டு சென்று கதையாக விவரித்து இருப்பது குகன் சென்னியப்பனின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது..
ஆனால் ஒரு திரைக்கதையை வடிவமைக்கு போது பாமர மக்களுக்கும் புரியும் வகையில் கொடுத்திருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். டெக்னிக்கிலாக படம் வலுவாக இருந்த போதிலும் திரைக்கதையில் கொஞ்சம் வலு சேர்த்து இருக்கலாம்.
அதற்கு அழகான படங்களுடன் விளக்கமும் கொடுத்து படமாக்கி இருப்பது இந்த ‘வெப்பன்’ படத்திற்கு புகழ் சேர்க்கிறது..
Weapon Tamil movie review