First on Net குடும்ப வாசம்… விஸ்வாசம் விமர்சனம்
Published by: Rajesh G on January 10, 2019

நடிகர்கள்: அஜித்குமார், நயன்தாரா, யோகிபாபு, ஜெகபதிபாபு, பரத் ரெட்டி மற்றும் பலர்
இயக்குனர் – சிவா
இசை – இமான்
ஒளிப்பதிவு – வெற்றி
எடிட்டர் – ரூபன்
பாடல்கள் – விவேக், தாமரை, யுகபாரதி, சிவா
தயாரிப்பு – சத்யஜோதி பிலிம்ஸ்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா
கதைக்களம்…
ஊர் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால்
ஓங்கி அடிக்கும் நபர் தூக்கு துரை அஜித்.
நயன்தாரா ஒரு டாக்டர். கொடுவிலார்பட்டி என்ற கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப்புக்கு வருகிறார்.
இருவருக்கும் இடையே சில மோதல் அதன் பின் காதல் என கதை செல்கிறது.
ஒரு கட்டத்தில் திருமணமும் நடக்கிறது. ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அவர்தான் அனிகா.
பின்னர் கருத்து வேறுபாடால் அஜித் நயன்தாரா பிரிகின்றனர்.
குழந்தையுடன் மும்பை செல்கிறார் நயன்தாரா.
அதன் பின்னர் என்ன ஆனது..? மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் கதை.
கேரக்டர்கள்…
மாஸ், ஆக்சன் என கலக்கிய அஜித் இதில் சென்டிமெண்டிலும் ரசிக்க வைக்கிறார்.
ஹீரோயினாக நயன்தாரா செம நடிப்பு.
அஜித் மகளாக அனிகா. நடிப்பால் கவர்கிறார்.
காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகிறது. ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, விவேக், யோகி பாபு தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
ஜெகபதி பாபு நடிப்பில் நல்ல முதிர்ச்சி.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாடல்கள் நன்றாக இருந்தாலும் தேவையில்லாத இடத்தில் வருகிறது.
முதல் பாதியில் சில காட்சிகள் நாடகம் போல் உள்ளது.
இமான் இசையில் அடிச்சி தூக்கு… பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.
தாமரை வரிகளில் கண்ணான கண்ணே பாடல்கள் தாய்மார்களை கவரும். வேட்டி கட்டு… பாடலும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.
பொதுவாக அஜித் படங்களில் ஆக்சன் இருக்கும். ஆனால் இதில் சென்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கிறார் சிவா.
அஜித்துக்கும் நயன்தாராவுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி தல ரசிகர்களை ஈர்க்கும்.
அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும் வாசம்
Viswasam review rating
-
Movie:
விஸ்வாசம்