விசிறி விமர்சனம்

விசிறி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராம் சரவணா, ராஜ்சூர்யா, ரெமோனா ஸ்டெஃபனி மற்றும் பலர்
இயக்கம் : வெற்றி மகாலிங்கம்
இசை : தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் சங்கர்
பி.ஆர்.ஓ. : குமரேசன்
தயாரிப்பு: ஜமீல் சகீப், ஜாபர் சாதிக்

கதைக்களம்…

தல தளபதி ரசிகர்களும் அவர்களின் சண்டையும் அதன்பின்னர் சமாதானமும் இது படத்தின் ஒன்லைன் கதை.
விஜய் அஜித் ரசிகர்கள் இருவர் ஃபேஸ்புக்கில் விரோதியாக உள்ளனர்.

இதில் விஜய் ரசிகரின் தங்கையை காதலிக்கும் அஜித் ரசிகர் அந்த பெண்ணிடம் தான் ஒரு விஜய் ரசிகர் என்று கூறிவிடுகிறார்.

அதன்பின்னர்தான் தன் அண்ணனின் விரோதியே அந்த அஜித் ரசிகர்தான் என தெரிய வருகிறது.

நீ எங்களையும் போல் விஜய் ரசிகராக மாறிவிடு. அப்படியென்றால் உன்னை திருமணம் செய்துக் கொள்கிறேன் என நாயகி சவால் விடுகிறாள்.

இதனிடையில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருந்த படங்களை ஒரு கும்பல் வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுகிறது.

அதன்பின்னர் என்ன நடந்தது? அந்த கும்பலை கண்டுபிடித்தார்களா? அஜித் ரசிகர் விஜய் ரசிகராக மாறினாரா? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

visiri rival song

கேரக்டர்கள்…

‘தல வெறியன்’ சிவாவாக நடித்திருக்கும் ராம் சரவணாதான் படத்தின் நாயகன். ஒரு பொண்ணை “வால்ட்டு” (மேட்டர்) அடிக்க வேண்டுமென அவர் காதலிப்பது ரொம்ப ஓவர்தான்.

‘தளபதி ரசிகன்’ கில்லி சூர்யாவாக ராஜ் சூர்யா நடித்துள்ளார். இவர் படத்தின் 2வது நாயகன் என்றாலும் இவரை வில்லன் போல காட்டியிருக்கிறார்கள்.

ரெமோனா ஸ்டெஃபனி நாயகியாக நடித்துள்ளார். சில காட்சிகளில் தேர்ச்சி பெறுகிறார்.

அஜித் ரசிகரின் நண்பர்களாக வரும் ஒரு நபர் கவனிக்க வைக்கிறார்.

இவர்களைத் தவிர படத்தில் ஒரு சில கேரக்டர்கள் இருந்தாலும் யாரும் மனதில் ஒட்டவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தன்ராஜ் மாணிக்கம் இசையில் தல தளபதி போட்டி பாட்டு ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு கச்சிதம்.

அறிமுக நடிகர்கள், பட்ஜெட் ஆகியவையால் சிறு குறைபாடுகள் இருந்தாலும், இயக்குநர் தான் சொல்ல வந்ததை ரொம்ப நீடிக்காமல் சொல்லிவிட்டார்.

டைட்டில் கார்டூ போடும்போது விஜய் அஜீத்தின் படங்களில் இருந்து ‘மாஸ் சீன்’களை பக்காவாக தொகுத்து மாஸ் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஆனால் படம் முழுவதும் ஹீரோ வாய்ஸ் ஓவரில் பேரில் ஓவராக பேசிக் கொண்டே இருக்கிறார். குறைத்திருக்கலாம்.

பெரும்பாலான காட்சிகளில் டயலாக்குகளை விட பினன்னி இசை காதை கிழிக்கிறது. சில இடங்களில் பில்டப் மட்டுமே உள்ளது.

விசிறி… தல தளபதிக்காக பேசும்

படைவீரன் விமர்சனம்

படைவீரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஹீரோ விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.

இதனிடையில் நாயகி அம்ரிதாவை காதலிக்கிறார்.

இவர்கள் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை பல காலமாக இருக்கிறது.

ஆனால் மாமன் மச்சான் என அன்போடு வாழ நினைக்கின்றனர்.

ஒரு சூழ்நிலையில் போலீஸ் ஸ்டேசன் செல்கிறார் நாயகன்.

அங்கு சென்றபின்தான் சரக்கு, சாப்பாடு, அதிகாரம் என ஜாலியாக வாழ வேண்டுமென்றால் போலீஸ் ஆக வேண்டும் என தீர்மானிக்கிறார்.

அதற்காக தனது உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார்.

அதன்பின்னர் லஞ்சம் கொடுத்து போலீஸ் ஆகிறார்.

போலீஸ் பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பும் போது, இரு ஊர்களுக்கும் இடையேயான ஜாதி பிரச்சனை கலவரமாக மாறி விடுகிறது.

அதன்பின்னர் என்ன செய்தார்? ஜாதி கலவரத்தை முற்றிலும் அழித்தாரா? ஜாதியை ஒழிக்க என்ன செய்தார் இந்த படை வீரன் என்பதே மீதிக்கதை.

DVAnL8iVwAAWO2_

கேரக்டர்கள்..

வேலை வெட்டி இல்லாத கிராம இளைஞர் மற்றும் போலீஸ் கேரக்டர் என இரண்டிற்கும் செம பிட்டாய் வாழ்ந்துள்ளார் விஜய் யேசுதாஸ்.

மாரி படத்தை விட இதில் பல மடங்கு நடிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

எக்ஸ் மிலிட்டர் மேனாக வருகிறார் பாரதிராஜா. சில காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் இவரது கேரக்டரில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

ஜாதியை ஒழிக்க இவர் சொல்லும் வசனங்கள் நன்றாக உள்ளது.

துணிச்சலான பெண்ணாக அம்ரிதா. அழகாக நடித்து நம் மனதில் நிற்கிறார்.

சிங்கம் புலி, மனோஜ் குமார் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர். சிங்கம்புலி மற்றும் மகாநதி சங்கருக்கு இன்னும் சில காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

DVAnOlSVQAAJh4S

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்திற்கு பெரிய பலம் கார்த்திக் ராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அருமை. உள்ளது. ராஜா வேல் மோகனின் ஒளிப்பதிவும் ரசிக்கும்படி உள்ளது.

முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு துறுதுறுப்பு 2ஆம் பாதியில் இல்லை. ஜாதி பிரச்சினை, போலீஸ் என எங்கோ செல்கிறது.

ஆனால் கிளைமாக்ஸ் சற்றும் எதிர்பாராத ஒன்று. இயக்குனர் தனாவை இறுதிக்காட்சிக்காகவே பாராட்டலாம்.

படைவீரன்… ஜாதியை ஒழிக்கும் வீரன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிகாரிகா, ரமேஷ்திலக், டேனி, ராஜ்குமார், விஜி சந்திரசேகர் மற்றும் பலர்
இயக்கம் : ஆறுமுககுமார்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு: ஸ்ரீ சரவணன்
படத்தொகுப்பு – ஆர். கோவிந்தராஜ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: 7சி எண்டர்டெய்ன்மெண்ட்

கதைக்களம்…

எமசிங்கபுரம் என்ற ஒரு ஊரின் இளவரசர் விஜய் சேதுபதி. கிராமத்து மற்றும் நகர மனிதர்களையே பார்க்காத ஒரு இடத்தில் இவர்களின் ராஜாங்கம் நடக்கிறது.

ஒரு சூழ்நிலையில் தன் சபதத்தை நிறைவேற்ற நண்பர்களுடன் சிட்டிக்கு பயணிக்க வேண்டிய சூழ்நிலை இவருக்கு ஏற்படுகிறது.

எனவே அங்கு வித்தியாசமான வேடங்களை ஏற்று அந்த காரியங்களை சாதிக்க நினைக்கிறார்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாயகி நிகாரிகாவை கடத்தி தன் எல்லைக்கு கொண்டு வந்து விடுகிறார்.

இதனால் தன் தோழியை தேடி காட்டுக்கு வருகிறார்கள் கவுதம் மற்றும் அவரது நண்பர் டேனி.

அதன்பின்னர் என்ன நடந்தது? தோழியை விஜய்சேதுபதியிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

DVAuqqfV4AEUHZb

கேரக்டர்கள்..

எந்த கேரக்டர் கொடுத்தாலும் வெளுத்துக்கட்டும் விஜய்சேதுபதி இதில் எத்தனை கேரக்டர்கள் கொடுத்த போதிலும் அனைத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

பேச்சு முதல் பாடி லாங்குவேஜ் வரை அனைத்திலும் காமெடி அதகளம் செய்திருக்கிறார் மக்கள் செல்வன்.

விஜய் சேதுபதியின் அம்மாவாக விஜி சந்திரசேகர். இந்த உறவையும் சற்று வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

கௌதம் கார்த்திக் கேரியரில் இது ஒரு முக்கியமான படம். காமெடி எனக்கு கைவந்த கலை என டேனியுடன் சேர்ந்து செமயாய் ஸ்கோர் செய்துள்ளார்.

இவர்கள் வாண்டட்டாக வந்து விஜய்சேதுபதியிடம் மாட்டி கொள்ளும் காட்சிகள் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும்.

விஜய்சேதுபதியின் நண்பர்களாக ரமேஷ் திலக், ராஜ்குமார்.. இவர்களும் தங்கள் பங்குக்கு காமெடி கலாட்டா செய்துள்ளனர்.

நாயகி நிகாரிகாவுக்கு நிறைவான கேரக்டர்.

இன்னொரு ஹீரோயின் காயத்ரி. அவருக்கும் ஒரு ஃபிளாஷ் பேக் கொடுத்திருப்பது ரசிக்கலாம்.

Captures

தொழில்நுட்ப கலைஞர்கள்..

ஜஸ்டின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் படி உள்ளது. லம்பா லம்பா பாடல் குழந்தைகளை கவரும்.

விஜய்சேதுபதியை நம்பி குடும்பத்துடன் படத்திற்கு போகலாம் என்பதை மையக்கருவாக வைத்து அதை திறம்பட செய்திருக்கிறார் டைரக்டர் ஆறுமுககுமார்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.. ஜாலியாக ரசிக்கலாம்

மதுரவீரன் விமர்சனம்

மதுரவீரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சண்முகபாண்டியன், சமுத்திரக்கனி, மீனாட்சி, மைம் கோபி, வேல ராமமூர்த்தி, பாலசரவணன் மற்றும் பலர்
இயக்கம் : பிஜி. முத்தையா
இசை : சந்தோஷ் தயாநிதி
ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா
படத்தொகுப்பு – பிரவீன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: பி.ஜி மீடியா ஒர்க்ஸ்

கதைக்களம்…

படத்தின் தலைப்பே சொல்லும் மதுரையில் நடக்கும் கதைக்களம் இப்படம்.

மதுரையில் இருந்து ஒரு தன் சின்ன வயதிலேயே மலேசியாவிற்கு செல்கிறார் சண்முகபாண்டியன்.

பெரியவன் ஆனதும் தனது சொந்த கிராமத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று தனது அம்மாவுடன் அங்கு வருகிறார்.

ஆனால், தன் தந்தை சமுத்திரக்கனியை கொன்றது யார்? என்ற உண்மையை தெரிந்துக் கொள்ளவே அங்கு வருகிறார்.
அத்துடன் தன் தந்தை உயிரை விட்டதும் நின்ற ஜல்லிக்கட்டையும் தன் தலைமையில் நடத்த முயற்சிக்கிறார்.

இதனிடையில் ஜாதியின் பெயரால் ஊரில் இரு தலைகள் மோதிக் கொள்கின்றனர். ஒருவர் வேலாராமமூர்த்தி. மற்றொருவர் மைம் கோபி.

இவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தினால் பல ஜாதி பிரச்சினைகள் உருவாகும் என தடுக்கின்றனர்.

இந்த பிரச்சினைகளை சண்முக பாண்டியன் எப்படி எதிர் கொண்டார்-? தந்தையை கொன்றவரை கண்டு பிடித்தாரா? ஆகியவையே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

சண்முகபாண்டியன் படத்தின் ஹீரோ இல்லை. கதையின் நாயகன். எனவே கதைக்கு எது தேவையோ? அதை செய்து இருக்கிறார்.

அவரின் உயரத்திற்கு ஏற்ற வகையில் அடிதடி என துவம்சம் செய்கிறார்.

ஆனால் டான்ஸ், ரொமான்ஸ், காமெடி ஆகியவற்றிலும் இன்னும் கவனம் தேவை.

சமுத்திரக்கனியும் சரி. அவரது வசனங்களும் சரி செம கம்பீரம். ஜல்லிக்கட்டுக்காகவும் விவசாயத்திற்காகவும் ஊரின் ஒற்றுமைக்காகவும் இவர் பேசும் வசனங்கள் சாட்டையடி.

கதைநாயகியாக மீனாட்சி. கதை தேவைக்கு ஏற்ப அழகாக நடித்திருக்கிறார்.

பாலசரவணனனின் டைமிங் காமெடி நன்றாகவே கைகொடுக்கிறது.

இவர்களுடன் மாரிமுத்து, பி.எல். தேனப்பன், வேல ராமமூர்த்தி, மைம் கோபி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

மொட்ட ராஜேந்திரன் இருந்தும் காமெடியில்லை. அவர் கபாலியை கலாய்ப்பதை மட்டுமே செய்துள்ளார்.

சண்முக பாண்டியனின் நண்பர்களாக வரும் அருண்ராஜா மற்றவர்களும் சிறப்பு.

சண்முக பாண்டியனின் தாய் மாமனாக வரும் யோகேஷ் கிருஷ்ணா நம் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு முதல் படம் என்றாலும் நடிப்பில் தேர்ச்சி தெரிகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் கிராமத்து மண்வாசனை ரகம்.

பின்னணி இசை ஜல்லிக்கட்டு காளைக்கு கொம்பு சீவியது போன்ற ஒரு ஈர்ப்பு.

படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் பி.ஜி முத்தையா தான்.
எனவே தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டங்களை காட்டி இரண்டாம் பாதியை ஓட்டி விட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தின் போது விஜயகாந்த், விஜய் கொடுத்த வீடியோக்கள் ஒரு பாடலில் வருகிறது.

முதல்பாதியில் இருந்த சுவாரஸ்யம் பின்பாதியில் குறைகிறது.

சமுத்திரக்கனியை கொன்றது யார்? என்ற ட்விஸ்ட் நன்றாக உள்ளது. ஆனால் அந்த வில்லன் முடிவு ரசிக்கும்படியாக இல்லை. அதிரடியாக கொடுத்திருக்கலாம்.

மதுரவீரன்.. ஜல்லிக்கட்டு காளை

மன்னர் வகையறா விமர்சனம்

மன்னர் வகையறா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விமல், ஆனந்தி, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி மற்றும் பலர்
இயக்கம் : பூபதிபாண்டியன்
இசை : ஜாக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி
படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ. : KSK செல்வா
தயாரிப்பு: A3V சினிமாஸ் (விமல்)

Mannar Vagaiyara Movie Stills 042

கதைக்களம்…

ஊரில் முக்கியமான தலைவர் பிரபு. இவரின் மனைவி மீரா கிருஷ்ணன். கார்த்திக்குமார், விமல் என இரு ஆண் பிள்ளைகள்.

சட்டம் படிப்பு படித்து வருகிறார் ஹீரோ விமல்.

விமல் நிச்சயம் வக்கீலாகிவிடுவார் என்ற தைரியத்தில் ஊருக்குக்குள் சேட்டை செய்து வருகிறார் அவரது மாமன் ரோபோ சங்கர்.

அதே ஊரில் மற்றொரு பெரிய குடும்பம் வம்சி கிருஷ்ணா உடையது. இவருக்கு சாந்தினி, கயல் ஆனந்தி என இரு தங்கைகள். இவர்களின் அம்மா, அப்பாவாக சரண்யா மற்றும் ஜெயபிரகாஷ்.

தன் மகள் சாந்தினியை தன் அண்ணன் பையனுக்கு திருமணம் செய்து வைத்து குடும்ப பகையை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார் சரண்யா.

இதனிடையில் விமலுக்கும் ஆனந்திக்கும் காதல் வருகிறது.

ஒரு சூழ்நிலையில் கார்த்திக் காதலித்த சாந்தினியை மணமேடையில் இருந்து தூக்கி வந்து கல்யாணம் செய்து வைக்கிறார் விமல்.

சாந்தினி இப்படி ஓடி போய் கல்யாணம் செய்துக் கொண்டதால், தான் நிச்சயம் செய்த மாப்பிள்ளையை ஆனந்திக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துகிறார் வம்சிகிருஷ்ணா (சரண்யாவின் பையன்).

இதன்பின்னர் என்ன ஆனது? காதலியை கரம்பிடித்தாரா விமல்? குடும்பம் ஒன்று சேர்ந்தா? என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்லும்.

Mannar Vagaiyara Movie Stills 020

கேரக்டர்கள்..

படத்தின் முதல் காட்சியிலேயே அதிரடி ஆக்சனில் இறங்கியுள்ளார் விமல். அந்த விவேகத்தை படத்தின் க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருக்கிறார்.

இதில் கிராமத்து அருவா முறுக்கு மீசை வெள்ளை வேஷ்டி என வெளுத்து கட்டியிருக்கிறார்.

இதுவரை பார்க்காத கலர்புல் ஆன்ந்தியை மன்னர் வகையறாவில் பார்க்கலாம். துறுதுறு பெண்ணாக ஜொலிக்கிறார். சில நேரம் ஓவர் பேச்சாக தெரிகிறது.

ஒரு காட்சியில் கல்யாணம் நின்னுட்டு என்று ஆனந்தியிடம் சொன்னதும் போனில் அழுது கொண்டே நேரில் ஆட்டம்போடுவது என அமர்க்களம் படுத்தியிருக்கிறார்.

சாந்தினி சாந்தமாக வந்து போகிறார். வடிவேலு பாணியில் ரோபோ சங்கர் ஒரு காட்சியில் தனியாக முயற்சித்திருப்பது ரசிக்க வைக்கிறது. ஜாதி பெயர் கொண்ட நடிகைகள் கலாய்த்திருப்பது அருமை.

ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி இருந்தும் காமெடிக்கு கொஞ்சம் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மைதான்.

யோகிபாபு நிஜமாலுமே ஒரு யோகக்காரன்.. அவர் திரையில் தோன்றினாலே பேசினால எல்லாம் சிரித்துவிடுகிறார்கள். ஒரு காட்சியில் மட்டுமே வருகிறார்.

இவர்களுடன் குடும்ப வகையறாக்கள் நிறைய பேர் உள்ளனர். பிரபு, சரண்யா, வம்சி கிருஷ்ணா, ஜெயப்பிரகாஷ், மீராகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு.

IMG_1355

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் கைவண்ணத்தில் லாங் ஷாட் மற்றும் பைட் காட்சிகள் அனல் பறக்கிறது.

ஜாக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஆனால் சில பாடல்களை தவிர்த்து இருக்கலாம்.

கட்டாய கவிஞர் பூபதி பாண்டியன் எழுதிய அண்ணன பத்தி கவலையில்லை பாடல் ரசிக்கலாம்.

எந்த வகையான படம் என்றாலும் நண்பர்களுடன் பார்த்து விடலாம். ஆனால் ஒரு சில படங்களை மட்டுமே குடும்பத்துடன் பார்க்க முடியும். அதை அழகாக பூபதி பாண்டியன் கொடுத்திருக்கிறார்.

ஒரு காட்சியில் மாட்டுக்கு வச்ச தண்ணிய நீ குடிச்சிட்டியா? உன்கிட்ட கரக்குறேன் பார் என சிங்கம்புலியிடம் ஒருவர் சொல்ல, எடுக்கிறது குடும்ப படம்? இதுல டபுள் மீனிங்கா? என்று அவரே கேட்கும் வகையில் ஒரு காட்சியை மட்டுமே வைத்துள்ளார்.

முதல்பாதியில் நிறைய காட்சிகளை வெட்டியிருக்கலாம் எடிட்டர். இரண்டாம் பாதியில் படம் ரசிக்கும்படி கொடுத்திருப்பது ரசிக்கலாம்.

அடிக்கடி அண்ணன் அண்ணன் என சரண்யா சொல்கிறார். அவர் யார்? என்றே காட்டவில்லையே சார்?

மன்னர் வகையறா.. ரசிகர் வகையறா

நிமிர் விமர்சனம்

நிமிர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : உதயநிதி, பார்வதிநாயர், நமீதாபிரமோத், கருணாகரன், எம்ஸ்பாஸ்கர், மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் பலர்
இயக்கம் : பிரியதர்ஷன்
இசை : தர்புகா சிவா மற்றும் அஜனீஷ்
ஒளிப்பதிவு: என்.கே.ஏகாம்பரம்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு: ரெட் ஜெயண்ட் மற்றும் மூன்சாட்

கதைக்களம்…

மலையாளத்தில் பகத் பாசில் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘நிமிர்’.

கேரளா எல்லையான தமிழகத்தின் ஒரு பகுதியில் உதயநிதி ‘நேஷ்னல்’ என்ற ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். அவரது தந்தை மகேந்திரன்.

தன் உறவுக்கார பெண்ணான பார்வதி நாயரை காதலிக்கிறார் உதயநிதி. ஆனால் இந்த காதல் கைகூடாமல் போகிறது.

உதயநிதி கடை அருகில் ஒரு போட்டோ ப்ரேம் செய்யும் கடை வைத்திருக்கிறார் எம்எஸ்.பாஸ்கர். இவருக்கு ஒரு பெண். இந்த கடையில் கருணாகரன் வேலை பார்க்கிறார்.

ஒருமுறை ஒரு பிரச்சினையில் உதயநிதியை ஊர் மக்கள் முன்னிலையில் அடித்து விடுகிறார் சமுத்திரக்கனி.

எனவே அவரை திருப்பி அடிக்கும் வரை நான் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுக்கிறார் உதயநிதி.

சமுத்திரக்கனியை அடிக்க நினைக்கும்போது அவர் பாரீன் சென்று விடுகிறார்.

இதனிடையில் உதயநிதிக்கு மற்றொரு நாயகியான நமீதாபிரமோத் மீது காதல் வருகிறது. இவர் சமுத்திரக்கனியின் தங்கை.

அதன்பின்னர் என்ன ஆனது? செருப்பு போட்டாரா? இந்த காதலாவது கை கூடியதா? சமுத்திரக்கனியை அடித்தாரா? ஆகியவைகளுக்கு விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.
nimir and mannar 1600 x 800 -2a

கேரக்டர்கள்…

யதார்த்தமான நடிப்பில் நிமிர வைத்துள்ளார் உதயநிதி. மனிதன் படத்திற்கு பிறகு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். வேஷ்டி கட்டி கிராமத்து நாயகனாக பளிச்சிடுகிறார்.

இவரின் தந்தையாக மகேந்திரன். சில காட்சிகளில் வந்தாலும் தொழிலை நேசிக்க சொல்லும் தந்தையாக அசத்துகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர நடிப்பிலும் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். இவரின் மகளாக வரும் அந்த பெண் கொள்ளை அழகு.

தன் அளவான நடிப்பில் கருணாகரன் கச்சிதம்.

உதயநிதியை கல்யாணம் செய்ய முடியாத பார்வதி நாயர் சில பெண்களை நினைவுப்படுத்துகிறார். காதல் வேற கல்யாணம் வேற என தன் நடிப்பில் தத்துவம் பேசியிருக்கிறார்.

ஒரு இழவு (மரணம்) வீட்டில் உதயநிதியுடன் கண்களால் பேசி ரசிக்க வைக்கிறார் பார்வதி.

நமீதா புரமோத் கண்களிலும் நம் மனதிலும் நின்று விடுகிறார். அவரின் பெரிய விழிகளை கொண்டு நம்மை சில நேரம் விழுங்கிவிடுகிறார்.

கஞ்சாகருப்பு, சண்முகராஜன், அருள்தாஸ் ஆகியோர் அளவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

படத்திற்கு வசனம் எழுதி நடித்துள்ளார் சமுத்திரக்கனி. வசனங்கள் ப்ளஸ். நடிப்புக்கு அவ்வளவு ஸ்பேஸ் கொடுக்கவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவளார் என்.கே.ஏகாம்பரம் அவர்கள்தான்.

ஒவ்வொரு ப்ரேமையும் நாம் ப்ரேம் போட்டு வைத்துக் கொள்ளலாம். ரசித்து ரசித்து எடுத்து செதுக்கியிருக்கிறார்.

ஒருவேளை உங்களுக்கு இந்தப் படத்தில் கதை, நடிகர்கள் பிடிக்கவில்லை என்றாலும் படத்தை பார்க்க வைத்துவிடுவார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.

தர்புகா சிவா 4 பாடல்களும், அஜ்னீஷ் லோக்நாத் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்து உள்ளனர். நெஞ்சில் மாமழை என்றும் நம்மை நெஞ்சை விட்டு போகாது.

இயக்கம் பற்றிய அலசல்…

ஒரு யதார்த்தமான கதையை அனைவரும் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளார். ஒவ்வொரு கேரக்டருக்கும் அர்த்தம் சொல்லியிருக்கிறார்.

உதயநிதி போட்டோ கிராபர் என்றாலும் அவர் வேலையை சரியாக செய்யவில்லை என்பதை காட்சியில் உணர்த்தி, பிறகு அவர் எப்படி கற்றுக் கொள்கிறார் என தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆண் பெண் பழகினாலே அது காதல்தான் என முடிவு எடுக்கும் அப்பாவாக எம்எஸ்.பாஸ்கரை காட்டியிருக்கிறார்.

உதயநிதியிடம் நமீதா காதலை சொல்லும்போது என் அண்ணன் அடிப்பியா? உனக்கு தைரியம் இருக்கா? என அழகாக தெளிவுப்படுத்தி காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இப்படியாக கேரக்டர்கள் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.

அதிலும் இறுதியாக பார்வதியின் கணவர் கேரக்டரை ட்விஸ்ட் வைத்து கொடுத்திருப்பது நச்.

இருந்தாலும் செருப்பு போடும் சபதம் கொஞ்சல் நெருடல்தான்.

நிமிர்… இமைக்காமல் ரசிக்கலாம்.

More Articles
Follows