தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்… பால்ய நண்பர்களாக வளர்ந்து பகைவர்களாக மாறிய இருவர் பற்றிய கதை.
கதைக்களம்..
தம்பி ராமையா ஒரு மளிகை கடை ஓனர். தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். போலீஸ் சகவாசமே வேண்டாம் என நினைப்பவர். இவரின் ஒரே மகன் விஷால்.
பிரகாஷ் ராஜ் ஒரு போலீஸ் ஆபிசர். இவரின் மகன் ஆர்யா. தன் மகனை தன் துறையிலேயே பெரிய அதிகாரியாக ஆக்க வேண்டும் என அதற்கான பயிற்சிகளை சிறுவயதிலேயே கொடுக்க துவங்குகிறார்.
இருவரின் வீடுகள் அருகருகே உள்ளதால் விஷால் ஆர்யா நட்பு வளர்கிறது.
பிரகாஷ் ராஜ் கொடுக்கும் பயிற்சிகளை பார்த்து பார்த்து அதனால் ஈர்க்கப்படுகிறார் விஷால்.. எனவே இருவருக்கும் பயிற்சி கொடுக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஒரு கட்டத்தில் பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுவதால் இரு குடும்பங்களும் பிரிய நேரிடுகிறது.
தம்பி ராமையா தன் மகனுடன் சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி செட்டில் ஆகிறார். விஷாலும் தன் தந்தைக்கு அறியாமல் அங்கே சில துப்பறியும் வேலைகளில் ஈடுபடுகிறார்.
ஒரு கட்டத்தில் மினிஸ்டர் ஒருவரை கொலை ஒருவர் திட்டமிடுகிறார். அதில் ஈடுப்படுபர் ஆர்யா என விஷாலுக்கு தெரிய வருகிறது.
அப்போது சந்திக்கும் நண்பர்கள் என்ன செய்தார்கள்..? பகைவர்களா மாறினார்களா? ஆர்யா சிங்கப்பூரில் யாரூய்யா? பிரகாஷ் ராஜின் கொலை பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
விஷால் & ஆர்யா இருவரும் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது வரும் அந்த சிறுவர்கள் இருவருமே செம ஆக்ட்டிங்.. படம் தொடங்கிய அந்த 15 நிமிடங்கள் தங்கள் நடிப்பால் கவர்ந்து விடுகிறார்கள்.
விஷால் ஸ்மார்ட்டாக வருகிறார். மிருளாணியுடன் கொஞ்சம் ரொமான்ஸ் செய்கிறார். ஆக்சன் காட்சிகளில் பட்டைய கிளப்புகிறார்.
மிர்ணாளிணிக்கு விஷால் நிச்சயத்தார்த்தம் சர்ப்ரைஸ் கொடுப்பது ஓகே. ஆனால் தந்தைக்கு முன்னாடியே சொல்லாமல் இருப்பது ஏன்? என தெரியவில்லை.
வில்லனாக ஆர்யா. படு மிரட்டல் என சொல்வதற்கில்லை. ஆனால் ஸ்டைலி வில்லனாக வருகிறார். எமோஷ்னல், கோபம், என சைலண்ட் ஆக்ஷனில் அசத்தியிருக்கிறார். இவருக்கும் மம்தாவுக்கு நல்ல கெமிஸ்ட்ரி.
நாயகியாக மிர்ணாளினி மற்றும் மம்தா மோகன்தாஸ். இரண்டு பாடலுக்கு நடனம் கொஞ்சம் பேசி கொஞ்சம் ரசிக்க வைக்கிறார் மிர்ணாளினி. மம்தா கொஞ்சம் நேரமே வந்தாலும் கவர்ந்துவிடுகிறார். மம்தாவின் சிறுமி பருவத்தில் வரும் அந்த பெண்னும் ரசிக்க வைக்கிறார். இவரின் மாமாவாக வரும் ஜான்விஜய் காட்சிகள் கச்சிதம். இவரின் காட்சிகளை அதிகரித்திருக்கலாம்.
ஹீரோவின் நண்பனாக கருணாகரன். காமெடி பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் நிறைய காமெடி செய்தார் என படக்குழுவினர் பிரஸ்மீட்டில் தெரிவித்தனர். அதை கொஞ்சமாச்சும் படத்தில் செய்திருந்தால் ரசிகர்கள் சிரித்திருப்பார்கள்.
பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா இருவரும் அசத்தல். தம்பி ராமையா சில நேரங்களில் தனி ஒருவன் பட அப்பா கேரக்டரை நினைவுப்படுத்துகிறார். அந்த அப்பாவித்தனம். அதுவும் ரசிக்க வைக்கிறது எனலாம்.
தமன் இசையில் பத்தல பத்தல பாட்டு நம்மையும் பாட வைக்கிறது.
பின்னனி இசையில் இசையமைப்பாளர் சாம் சி எஸ்.. மிரட்டலான இசையை தெறிக்கவிட்டுள்ளார். இவரது பின்னணி இசை பல படங்களில் பேசப்பட்டுள்ளது.
படத்தில் பாரட்டப்பட வேண்டிய ஒன்று. ஒளிப்பதிவும் அதன் மேக்கிங்கும் எனலாம். ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை. சிங்கப்பூரின் அழகை மேலும் அழகாக்கி தந்துள்ளார்.
விஷால் ஆர்யா இருவரும் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்கள். அப்படியிருக்கையில் இவர்கள் எனிமியானது எப்படி? என்ற ஆர்வம் முதலிலேயே வருகிறது.
அதன்படி திரைக்கதையும் அமைத்தும் இருக்கிறார் ஆனந்த் சங்கர். ஆனால் அதை படமாக்கியதில் தான் சறுக்கியிருக்கிறார் டைரக்டர்.
திரைக்கதையை இன்னும் பலப்படுத்தி இருக்கலாம் இயக்குனர். விஷாலும் பேசிக் கொண்டே இருக்கிறார். ஆர்யாவும் பேசிக் கொண்டே இருக்கிறார். இதுவே நம்மை சோதிக்கிறது.
சிறுவன்களை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் அளவுக்கு கூட விஷால் ஆர்யா காட்சிகள் சுவாரஸ்யம் தரவில்லை.
விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி, விக்ரம் நடித்த இருமுகன் படங்களில் இருந்த கதைக்கான வலு இந்த படத்தில் இல்லை. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிவிட்டார் எனலாம்.