தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விஜய் சங்கேஷ்வர் என்ற கர்நாடக தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு இது. 1996ல் கர்நாடகாவில் முதல் பாஜக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.
ஒருவன் முன்னேற நினைத்தால்… விடாமல் முயற்சித்தால்… தோல்வி அடைந்தாலும் முயற்சித்துக் கொண்டே இருந்தால் அவன் வாழ்வில் சிகரத்தை தொடுவான்… உண்மையான உழைப்பே உயர்வு தரும்.. என்பதே ஒன்லைன்..
நாயகன் விஜய்யின் அப்பா நடித்திருக்கிறார் ஆனந்த் நாக்…
கதைக்களம்…
அப்பா வழியில் குடும்பத் தொழிலான பிரின்டிங் பிரஸ்சில் பணிபுரிகிறார் ஹீரோ விஜய .
ஒரு கட்டத்தில் லாரி வாங்கி அதை ஓட்டி வியாபாரம் செய்ய நினைக்கிறார். முதலில் அந்த குடும்பம் மறுக்கவே போராடி கடன் வாங்கி லாரி வாங்கி ஓட்டுகிறார்.
இவருக்கு போட்டியாக பிரபல நிறுவனம் பல தடங்கல்களை கொடுக்கிறது. அதனை எல்லாம் முறியடித்து லாரிகளை நிறைய வாங்கி முன்னணி தொழில் அதிபராக உயர்ந்து நிற்கிறார்.
ஆனால் இவரது வியாபாரத்தை சாய்க்க சில மீடியாக்கள் துணை போகின்றன. எனவே அதனை முறியடிக்க தினசரி நாளிதழ் தொடங்குகிறார்.
அதுவும் ஒரு வருடத்திற்குள் பல லட்சம் காப்பி நாளிதழ்களை விநியோகம் செய்வேன் என சவால் விடுகிறார்..
அத்துடன் ஒரு ரூபாயில் நாளிதழை விற்று அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.
இதிலும் சிலர் பிரச்சினை உருவாக விஜய் என்ன செய்தார்? அவர் நினைத்தப்படி சாதித்தாரா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைதான் இந்த விஜயானந்த்.
கேரக்டர்கள்…
விஜய் சங்கேஷ்வர் கேரக்டரில் நிஹால். எங்குமே குறை சொல்ல முடியாத அளவுக்கு நிறைவான தேர்வு. ஒரு பக்கம் திமிராக தோன்றினாலும் தன்னம்பிக்கையின் மறு உருவமாய் ஜொலிக்கிறார் நிஹால்.
மகன் ஆனந்த் சங்கேஷ்வராக பாரத் போபனா, விஜய்யின் மனைவி லலிதாவாக சிரி பிரஹலாத் உள்ளிட்டோர் கச்சிதம்.
கணேஷ் அண்ணாச்சியாக வரும் அந்த நபரும் கெத்தாக நடித்திருக்கிறார் நேர்மையாக உழைப்பவனுக்கு உதவும் உயர்ந்த மனிதராக அடையாளம் காட்டி இருக்கிறார்.
டெக்னீஷியன்கள்..
ரிஷிகா சர்மா என்ற பெண் இயக்குனர் அந்த படத்தை இயக்கியிருக்கிறார் 1960 70 80 90 2000 என பல்வேறு காலங்களுக்கு ஏற்ப படத்தின் கதையையும் ஆடை அலங்காரத்தையும் செட்டு உபகரணங்களையும் அழகாக படம் பிடித்துள்ளார்.
முக்கியமாக படத்தின் ஆடை அலங்காரம் செட் பணிகள் என அனைத்தும் நம்மை 60 வருடங்களுக்கு முன்பு கொண்டு செல்கிறது.
கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு, கோபி சுந்தர் பின்னணி இசை, ஹேமந்த்குமார் படத்தொகுப்பு என அனைத்தும் நேர்த்தி.
இந்தப் படத்தை தமிழில் டப் செய்வது என முன்பே முடிவு செய்து இருந்தால் அதற்கு ஏற்ப காட்சிகளையும் சில விஷயங்களை இணைத்து இருக்கலாம். நிறைய இடங்களில் கன்னட படம் பார்ப்பதை போன்ற ஒரு உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.
உண்மையான உழைப்பு உயர்வு தரும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்
ஆக விஜயானந்த் – உழைப்பின் முகவரி.