தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வீராயி மக்கள் பட விமர்சனம் 3.75/5.. பாசப் போராட்டம்
ஸ்டோரி…
கணவன் இல்லாமல் தன் மூன்று மகன்கள் ஒரு மகளை வளர்த்து வருகிறார் வீராயி (பாண்டி அக்கா.)
ஒரு கட்டத்தில் மாமியார் – மருமகள் பிரச்சனை.. அண்ணன் தம்பி பிரச்சனை.. பொருளாதார பிரச்சனை.. சொத்து பிரிப்பு உள்ளிட்டவைகளால் குடும்பம் பிரிகிறது..
அம்மா மறைவுக்குப் பின் பாசம் இல்லாமல் கேட்பாரற்று அண்ணன் தம்பி தங்கை உறவுகள் பிரிந்து சிதறுகிறது..
அதன் பிறகு என்ன நடந்தது? அண்ணன் தம்பிகள் இணைந்தார்களா? சொத்து தான் பிரச்சனை என்பதை உணர்ந்து இணைந்தார்களா? இந்த வீராயி மக்கள் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Vela Ramamoorthy
Marimuthu
Deepa Shankar
Suresh nandha
Nandhana
Rama
Senthil kumari
Jerald Milton
Pandi
சுரேஷ் நந்தா மற்றும் நந்தனா ஆகிய இருவரும் படத்தின் காதல் ஜோடிகள் என்றாலும் அவர்களை விட அதிகமாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார்கள் அனுபவமிக்க நடிகர்கள்..
முக்கியமாக வேலராமமூர்த்தி மாரிமுத்து பாண்டியக்கா தீபா ஷங்கர் செந்தி உள்ளிட்ட அனைவரையும் சொல்லலாம்..
தன் அம்மாவை மதிக்காத தம்பி பொண்டாட்டி.. ஓடிப்போய் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பி.. சொத்தைப் பிரிக்க சொல்லும் தம்பி மனைவி என அனைத்தையும் தாங்க முடியாமல் தாங்கி ஆலமர அண்ணனாக வேலராமமூர்த்தி..
மனைவியின் பேச்சைக் கேட்டு வில்லத்தனம் செய்யும் மாரிமுத்து.. *மூத்த மருமகள் ஸ்ரீதேவி.. நான் என்ன மூதேவியா? என் மாமியாரிடம் சண்டை போடும் செந்தி என அனைவரும் அடடா போட வைக்கின்றனர்..
குடும்பம் பிரிந்த சோகத்தில் அழும் வீராயி நம்மையும் அழ அதை வைத்து நடிப்பில் உச்சம் தொடுகிறார்…
என் புருஷன் தப்புதான்.. அவனை வெட்டிப் போட்டாலும் உன் தங்கையாகவே வாழ்ந்து விடுவேன் என பாசத்திற்காக ஏங்கும் தங்கையாக தீபா ஜொலிக்கிறார்.
இவை இல்லாமல் கிராமத்து மனிதர்கள்.. டீ போடும் லேடி.. என ஒவ்வொருவரும் கவனம் ஈர்கின்றனர். *யார் எக்கேடு கெட்டுப்போனால் என நினைக்காமல் பிரிந்த குடும்பம் ஒன்றாக வேண்டும் என நினைக்கும் அந்த தண்டட்டி பாட்டி நிச்சயம் மனதில் நிற்பார்
டெக்னீசியன்ஸ்…
ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கியிருக்கிறார்.
எம்.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். முகன்வேல் எடிட்டிங் செய்திருக்கிறார். இவர்கள் திரைக்கதையுடன் பயணிக்கும் வகையில் தங்கள் பணியை நகர்த்தி இருப்பது சிறப்பு.
இயக்குனருடன் உறுதுணையாக இருந்து இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி தன் பங்கை மன்மனம் மாறாமல் இசை விருந்து படைத்திருக்கிறார்.. ‘செங்கொடி ஊருக்கு… மற்றும் ‘நெஞ்சுக்குள்ள…. ஆகிய பாடல் வரிகள் ரசிக்கும் ரகம்.. சுரேஷ் நந்தா மற்றும் நந்தனாவின் காதல் பாடல்கள் காதலர்களை மட்டுமல்ல அனைவரையும் கவரும்..
புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் இயக்குனர். அங்கு உள்ள மக்களையும் இதில் நடிக்க வைத்து மண் மனம் மாறாத வீராயி மக்கள் படைப்பை கொடுத்திருக்கிறார்.
சுசீந்திரன் மற்றும் ரவி மரியா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நாகராஜ் கருப்பையா தான் இப்பட இயக்குனர்..
நகரத்தின் இயந்திர வாழ்க்கை.. தொழில்நுட்ப வளர்ச்சி.. கிராமத்தில் கூட செல்போன் மற்றும் சமூக வலைத்தள ஆதிக்கம் உள்ளிட்டவைகளால் சிதறி கிடைக்கும் கூட்டுக் குடும்பத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
தன் குடும்ப உறவுகளை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.. அம்மா பாசம்.. அப்பத்தா நேசம் பெரியப்பா சித்தப்பா அத்தாச்சி அத்தை மாமா மச்சான் பங்காளி உள்ளிட்ட உறவுகளை மீண்டும் புதுப்பிக்க இந்த வீராயி மக்கள் வந்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்.
வெட்டு குத்து வன்முறை ரத்தம் போதை கஞ்சா என தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனர்களும் பாதையை மாற்றிக் கொண்டிருக்க கூட்டுக் குடும்பமே சிறந்தது அதில் உள்ள சந்தோஷம் எதிலும் இல்லை என உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா..
Veerayi Makkal movie review