தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வாழை விமர்சனம் 4.25/5.. மாரியின் மாறாத மண்வாசனை
ஸ்டோரி…
1990-களில் நடந்த காலகட்ட கதை இது.
பொன்வேல் மற்றும் ராகுல் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பு தோழர்கள்.. இதில் பொன்வேல் ரஜினி ரசிகன். ராகுல் கமல் ரசிகன்..
இவர்களின் பள்ளி டீச்சர் பூங்கொடி நிகிலா மீது கதையின் நாயகன் பொன்வேல் இனம் புரியாத நேசம் கொள்கிறான்..
டீச்சரை எங்கு பார்த்தாலும் இவன் மனதிற்குள் சந்தோஷம் தொற்றிக் கொள்கிறது.. எனவே விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குள் ஏற்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில் பள்ளி இல்லாத நாட்களில் வாழை தார்களை சுமக்கும் வேலைக்கு அனுப்பி வைக்கிறார் இவனது தாய்..
வாழைத் தார்களை சுமப்பது கடினமாக இருப்பதால் ஒரு நாள் காலில் முள் குத்தி விட்டதாக பொய் சொல்லிவிட்டு மாடு மேய்க்க செல்கிறான் பொன்வேல்.
பொன்வேல் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக செல்லும் டீச்சருடன் பைக்கில் செல்கிறான்.. மாலையில் திரும்பி பார்க்கும் போது மாடு காணாமல் போய்விடுகிறது..
அதன் பிறகு என்ன நடந்தது.? கண்டிப்பான அம்மாவிடம் என்ன சொன்னான்.? டீச்சர் மீது கொண்ட நேசம் என்னாச்சு.? வாழை தார் சுமக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
Ponvel as Sivanaindhaan
Raghul as Sekar
Janaki as Sivanaindhaan’s Mother
Dhivya Duraisamy as Vembu
Kalaiyarasan as Kani
Nikhila Vimal as Poongodi
Padhman as Broker
J. SathishKumar as Trader
கலையரசன் நிகிலா திவ்யா என நமக்கு அறிமுகமான நடிகர்கள் இருந்தாலும் அவர்களை விட நம்மை அதிகம் கவர்ந்தவன் இந்த பொன்வேல்.
பொன்வேல் ரஜினி ரசிகனாகவும் ராகுல் கமல் ரசிகனாகவும் செய்யும் ஒவ்வொரு சேட்டைகளும் இன்றைய இளம் நடிகர் ரசிகர்களின் கவனத்தை கவரும்.
பொன்வேல் தன் டீச்சர் பூங்கொடி (நிகிலாவை) பார்த்து.. டீச்சர் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்லும்போது.. ஏன் நேத்து நான் அழகா இல்லையா? என்று அவர் கேட்கும் போது.. நேத்து நீங்க எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க.. இன்னைக்கு எங்க அக்கா மாதிரி அழகா இருக்கீங்க என்று அவன் சொல்லும் அந்த காட்சி.. டீச்சரை சைட் அடித்த பல மாணவர்களுக்கு அர்ப்பணிப்பாகும்..
நண்பனாக வரும் சேகர் (ராகுல்) கமல் ரசிகனாகவும் கவருகிறான்.. நானெல்லாம் கமல் ரசிகன்.. முள்ளு குத்தாமலேயே நடிப்பேன் என்று சொல்லும்போது நீங்கள் கை தட்டாமல் இருக்க மாட்டீர்கள்.. இங்க கமல் படத்தை விட ரஜினி படம் தானே ஓடுகிறது என ராகுல் சொல்லும்போதும் தியேட்டரில் கைத்தட்டல் அள்ளுகிறது..
நிஜ வாழ்க்கையில் கமல் ரஜினியை போல இவர்களின் நட்பை மாரி செல்வராஜ் வைத்திருப்பது பாராட்டுக்குரியது..
பொன்வேலின் அம்மா ஜானகி.. வெண்ணிலா கபடி குழு’ தொடங்கி ‘ரகு தாத்தா’ வரை பல படங்களில் நடித்தவர்.. இதில் (பொன்வேல்) சிவநைந்தணின் தாயாக வருகிறார். ஒரு விபத்தில் தன் உறவுகளை இழந்த பின் இவர் அழும் காட்சி நம் மனங்களை ரணமாக்குகிறது.
பொன்வேலின் அக்காவாக வரும் திவ்யா துரைசாமி.. அழகான முகத்தை அழுக்கு படிந்த முகமாக மாற்றி.. ஆண்கள் சட்டை அணிந்து இவர் ஏற்ற வேடம் வேம்பு என்ற பெண்ணாகவே தெரிகிறார்.. அம்மாவின் அதட்டலுக்கு பயந்து தம்பியின் பாசத்திற்கு ஏங்கி கலையரசனின் கண் பார்வைக்கு தயங்கி என ஒவ்வொரு சீனிலும் அசத்தியிருக்கிறார் திவ்யா..
தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் கெத்து வாலிபனாக கலையரசன்.. இவரது வீரத்தை கண்டு அக்கா நீ கனி அண்ணனை கல்யாணம் பண்ணிக்கோ என சொல்லும் போது திவ்யா காட்டும் வெட்கமும் ரசிக்க வைக்கிறது.
ஜெனிபர் டீச்சர், மலர் டீச்சர், பவி டீச்சர் வரிசையில் இனி பூங்கொடி டீச்சரும் இணைவார்.. இப்படி அழகான அன்பான டீச்சர் இருந்தால் மாணவன் ஏன் பள்ளிக்கு லீவு போட போறான்.??!! டீச்சராக இருந்தாலும் வீட்டில் டெய்லர் வேலை பார்த்து சம்பாதிப்பதும்.. பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு நிகிலா ஆடும் ஆட்டமும் நம்மை என்றென்றும் ரசிக்க வைக்கிறது..
புரோக்கர் பத்மன்.. வியாபாரி ஜெ சதீஷ் உள்ளிட்டோரும் தங்களது நடிப்பில் தாக்கம் கொடுத்திருக்கின்றனர்.
டெக்னீசியன்ஸ்…
Director: Mari Selvaraj
Music : Santhosh Narayanan
Lyricist: Yugabharathi, Vivek, Mari Selvaraj
Produced by Divya Mari Selvaraj, Mari Selvaraj
DOP : Theni Eswar
Art Director: Kumar Gangappan
Editor : Suriya Pradhaman
Banner : Disney+ Hotstar, Navvi Studios, Farmer’s Master Plan Production
PRO : Sathish (AIM)
Executive Producer : Venkat Arumugam
ஒரு திரைக்கதை என்பது ஒரு இயக்குனரின் வாழ்வியலோடு இணைந்திருந்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்.. இப்படியாக பல படங்களை பல வெற்றிகளை நாம் பார்த்திருக்கிறோம்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக மாறி செல்வராஜ் அறியப்பட்டாலும் அறிமுகமானாலும் அவர் முதலில் எடுக்கவிருந்த திரைப்படம் தான் இந்த வாழை.. இது தற்போது அவருக்கு 4வது திரைப்படமாக அமைந்திருந்தாலும் தனது வாழ்வியலை உணர்வுபூர்வமாக மண்வாசனை மாறாமல் அவர் சொல்லி இருப்பது பலம்.
மற்ற மரங்களை விட வாழை மரத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.. காரணம் வாழைப்பூ வாழைத்தண்டு வாழை இலை வாழைக்காய் வாழைப்பழம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி என்று சொல்லலாம்.. அது போல வாழைப் படத்தில் வைக்கப்பட்ட பள்ளி பருவ டீச்சர் மீது நேசம், கமல் – ரஜினி ரசிகர்களின் நட்பு, வாழைத்தார் தொழிலாளர்களின் வாழ்வியல், அக்கா தங்கை பாசம், கூலி உயர்வு கேட்கும் தொழிலாளி, முதலாளியின் வியாபார தந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் வாழை இலையில் விருந்து படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்..
இந்த படத்தை மாரி இவரது மனைவி திவ்யாவுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
மாரி செல்வராஜின் மாறாத பள்ளிப் பருவ காயத்திற்கு மருத்துவர்களாக ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உறுதுணையாக இருந்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொரு காட்சியும் உணர வைக்கின்றனர்..
பல தேசியத் தலைவர்கள் இருந்தாலும் எப்பொழுதும் அம்பேத்கரை மட்டுமே தன்னுடைய ஜாதித் தலைவர் போல மாரி செல்வராஜ் சித்தரிப்பது கொஞ்சம் குறைத்து கொள்ளலாம்.
1980 & 90களில் மக்களின் வாழ்வியலை இன்றைய இளம் தலைமுறைக்கு வாழையில் வைத்து காவிய விருந்து படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
தன்னுடைய திரைக்கதைக்கு தேவையான சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுத்து வேலை வாங்கி எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் மாறி செல்வராஜ் இயக்கி இருப்பது அவர் ஒரு நிகரற்ற கலைஞன் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஆக இந்த வாழை… மாரி செல்வராஜின் மாறாத மண்வாசனையை ரசிகர்களுக்கு தரும்.
Vaazhai movie review