A1 விசாரணை… V1 Murder Case விமர்சனம் 3.75/5

A1 விசாரணை… V1 Murder Case விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

’மெட்ராஸ்’, ‘வட சென்னை’, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து நம்மை கவனிக்க வைத்தவர் பாவெல் நவகீதன். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.

நடிகர் ராம் அருண் கேஸ்ட்ரோ ஹீரோவாக நடித்துள்ளார்.

‘V1’ என்ற ஒரு வீட்டில் லிஜேஷும், காயத்ரியும் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்கிறார்கள்.

இவர்களுக்குள் காலையிலேயே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. அதன்பின்னர் வேலைக்கு செல்கிறார் காயத்ரி.

இரவு காயத்ரி லேட்டாக வர மர்ம நபர் ஒருவர் இவரை கொல்கிறார். அந்த சமயத்தில் மழை பெய்வதால் குற்றவாளியின் தடயங்கள் அழிகிறது.

இதனை விசாரிக்க தடயவியல் (FORENSIC) துறை போலீஸ் அதிகாரியான ராம் அருண் கேஸ்ட்ரோ வருகிறார்.

எந்த தடயமும் கிடைக்காமல் இருக்கவே இந்த கொலையை மறைக்க முயல்கிறது போலீஸ்.

ஆனால் இவரோ எப்படியாவது கண்டு பிடித்தே தீருவேன் என தன் துறை தோழி லுனாவுடன் களத்தில் இறங்குகிறார்.

இறுதியில் கொலையாளியை எப்படி கண்டு பிடித்தார்.? கொலையாளி யார்? அவர் கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக மட்டும் இல்லாமல் க்ளைமாக்ஸில் , சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு படமாக முடித்துள்ளார் இயக்குநர் பாவெல் நவகீதன். முதலில் அவரை பாராட்டிவிட்டு மற்றதை பார்ப்போம்.

இது போலீஸ் துறை என்றாலும் தடயவியல் துறை என்பதால் கலர் சட்டைகளில் வருகிறார் ஹீரோ ராம் அருண் கேஸ்ட்ரோ. அவரின் கேரக்டரை மிக அசால்லட்டாக செய்துள்ளார்.

நாயகி விஷ்னுபிரியா பிள்ளையை பாராட்டியே ஆக வேண்டும். அழகு கம்பீரம் என வெளுத்து கட்டியிருக்கிறார். இவரின் அழகான கண்களை பார்த்தால் குற்றவாளியே சரணடைந்துவிடுவார்.

காயத்ரியின் காதலனாக வரும் லிஜேஷ் சில காட்சிகள் வந்தாலும் ஸ்கோர் செய்துவிடுகிறார். சமீபத்தில் கூட குண்டு படத்தில் இவரின் போலீஸ் கேரக்டர் அருமையாக இருந்தது.

ஓரிரு காட்சியில் வந்தாலும் காயத்ரி செம. இவரை ஒரு தலையாக காதலிக்கும் லிங்கா, காயத்ரியின் பெற்றோர் என அனைவரும் நல்ல தேர்வு.

புள்ளிங்கோ ஸ்டைலில் வரும் லிங்காவின் நடிப்பு சிரிப்பை வர வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரோனி ரெபேலின் பின்னணி இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் கதைக்கு சரியாக பொருந்தியுள்ளது.

அதுபோல் சி.எஸ்.பிரேம்குமாரின் எடிட்டிங் பணிகள் கச்சிதம்.

படத்தின் முதல் காட்சியிலேயே கொலை… அதனை அடுத்து நிறைய திருப்பங்கள்… யார் கொலையாளி? இவரா? அவரா? என நம்மை திகைக்க வைத்துள்ளார்.

யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரைக்கதையை கொடுத்து இறுதியில் இட இவரா? என திடீர் ட்விஸ்ட் நம்மை சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார்.

கொலையாளி இவர் தான் என ஒரு சின்ன க்ளு கொடுத்துள்ளார். அதை சிலர் கவனித்திருந்தால் அவர் புத்திசாலி என்று பொருள்.

சில நேரங்களில் மெதுவாக நகரும் காட்சிகள் நம்மை சோதிக்கிறது. இத்தனைக்கும் படம் நீளம் 2 மணி நேரம் கூட இல்லை என்பபது குறிப்பிடத்தக்கது.

ஆக.. இந்த வி1 படம் ஏ1 வரிசையில் சேரும்.

V1 Murder Case review rating

POSITIVE PATH… பஞ்சராக்‌ஷரம் விமர்சனம்

POSITIVE PATH… பஞ்சராக்‌ஷரம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பஞ்சராக்‌ஷரம் என்றால் நமசிவாய என்று பொருள். எனவே சிவனை சுற்றி ஒரு கதைக்களத்தை அமைத்துள்ளார் டைரக்டர்.

அதாவது நிலம், நீர், காற்று, தீ, வானம் ஆகிய இயற்கையின் 5 வகையானவைகளை வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பாலாஜி வைரமுத்து.

சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் ஆகிய 5 பேர் ஒரு பார்ட்டியில் சந்திக்கின்றனர். அதுவரை இவர்களுக்கு யாரையும் தெரியாது.

இவர்கள் ஐவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள்.

அன்று தொடங்கும் நட்பை கொண்டாட எங்கேயாவது சுற்றுலா செல்லலாம் என தீர்மானித்து செல்கின்றனர்.

ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கும்போது இவர்களுக்கு பஞ்சராக்‌ஷரம் என்ற புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தில் உள்ள சில வாசங்களை தனித்தனியாக படிக்கின்றனர்.

அதன்பின் அவர்கள் வாழ்வில் அதுவே பல பிரச்சினைகளை கொண்டு வருகிறது. இறுதியாக ஐந்து பேரும் சேர்ந்து அதை எப்படி சமாளித்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சந்தோஷ் பிரதாப் (வானம்) ஆராய்ச்சியாளராகவும், கோகுல் (தீ) இசைக்கலைஞராகவும், அஸ்வின் ஜெரோமி (பூமி) பந்தய வீரராகவும் நடித்துள்ளனர். தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கலாம்.

நாயகியாக வரும் மதுஷாலினி (காற்று) எழுத்தாளராக நடித்துள்ளார்.

சனா அல்டாப் (நீர்) மனிதநேயமிக்க பெண்ணாக நடித்துள்ளார். இவர் பாசிட்டிவ்வாக நினைக்கிறார். ஆனால் இவர்தான் படத்தில் அதிக பிரச்சினைகளை சந்திக்கிறார்.

சாலையில் சென்றால் விபத்து வரும் என நினைக்காமல் நம் பயணத்தை தொடங்க வேண்டும். அதை விட்டு விபத்து நடந்துடுமோ என்று பயணித்தால் அது நடக்கும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் டைரக்டர்.

சுந்தர மூர்த்தியின் இசை ஓகே. யுவாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதம்.

திரில்லிங்கான உணர்வை கொடுக்க நினைத்துள்ளார் இயக்குனர். ஆனால் அதற்கு பொருத்தமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

படத்தின் ஆரம்ப கட்டத்தில் இதிகாச கதைகளை சொல்கிறார்கள். அதன் பின்னர் நவீன காலத்தில் கதையை சொல்லியிருக்கிறார்.

இதிகாச கதையை இதில் கொஞ்சம் காட்டியிருந்தால் அதற்கான உயிரோட்டம் கிடைத்திருக்கும்.

பாசிட்டிவ் எண்ணங்களே நம்மை நன்றாக வாழவைக்கும் என சொல்லியிருந்தாலும் அனைவருக்குமே அவர்களின் எண்ணங்கள் படி நெகட்டிவ்வாகவே நடக்கிறது.

மனிதநேய மிக்க அந்த ஒரு கேரக்டருக்காவது பாசிட்டிவ் பாதையை காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆக மொத்தத்தில் ‘பஞ்சராக்‌ஷரம்’ பாசிட்டிவ் பாதை

Pancharaaksharam review

சந்திப்பும் சங்கடமும்… நான் அவளை சந்தித்த போது விமர்சனம்

சந்திப்பும் சங்கடமும்… நான் அவளை சந்தித்த போது விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

1990களில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அதற்கேற்ப கேரக்டர்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எல்ஜி. ரவிச்சந்திரன்.

சென்னையில் சினிமா துறையில் உதவி இயக்குநராக பணி புரிகிறார் ஹீரோ சந்தோஷ். அப்போது சென்னைக்கு வரும் சாந்தினி தன் உறவினர் முகவரியை தவறவிட்டதால் அங்கு தவிக்கிறார்.

அவர் மீது இரக்கப்படும் சந்தோஷ் அவருக்கு உதவிட நினைத்து அவரை அவளது கிராமத்திற்கே சென்று விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.

ஆனால் அங்கு சென்ற பின் இவர்களை தவறாக புரிந்துக் கொண்ட ஊர் பஞ்சாயத்து இவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறது.

இதனால் இருவரின் வாழ்க்கையும் மாறுகிறது. உன்னோடு வாழ முடியாது என ஊரை விட்டு ஓடி விடுகிறார் சந்தோஷ்.

அதன்பின்னர் சாந்தினியின் வாழ்க்கை என்ன ஆனது? சந்தோஷ் என்ன செய்தார்? மனைவியை தேடி மீண்டும் வந்தாரா? இயக்குநர் ஆனாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

உதவி இயக்குநர்கள் படும் கஷ்டங்களை காட்சிகளாக அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால் ஹீரோ சந்தோஷிடம் அதற்கேற்ப முக பாவனைகள் இல்லை.

தனக்கு திருமணமானதை குடும்பத்திற்கு சொல்லாமல் தவிக்கும் காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டு நடித்திருக்கலாம். ஆனால் இல்லை.

கிராமத்து பாவப்பட்ட பெண்ணாக சாந்தினி சபாஷ். பெற்றொர் ஆதரவும் இல்லை கணவரின் கைவிடப்பட்ட நேரத்தில் அவர் தவிக்கும் காட்சிகள் யதார்த்தம்.

சில காட்சிகளில் வந்தாலும் எல்லார் கேரக்டரையும் அடித்து செல்கிறார் மலையாள நடிகர் இன்னசண்ட். ஆபாச படம் எடுக்கும் தயாரிப்பாளராக இவர் செய்யும் சேட்டைகள் செம. ஆக இந்த சேட்டனின் சேட்டைகளை ரசிக்காமல் இருக்க மாட்டீர்கள்.

இவரின் மனைவி, மகள் காட்சிகள் செயற்கையாக உள்ளது. அந்த நாடகத்தனத்தை தவிர்த்திருக்கலாம்.

பருத்திவீரன் சுஜாதா, ஜி.எம்.குமார், சந்தோஷின் நண்பர்களாக நடித்திருக்கும் கோவிந்த் மூர்த்தி, சாம்ஸ் உள்ளிட்ட அனைவரும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஆர்,எஸ்,செல்வாவின் ஒளிப்பதிவு ஓகே ரகம். ஹித்தேஷ் முருகவேலின் இசையில் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.

படத்தின் மொத்த கதையுமே 1990களில் நடப்பதாக உள்ளது. அப்படி என்றால் அதற்குகேற்ப பின்னணிகளை அமைத்திருக்க வேண்டும். பாட்ஷா பட சூட்டிங்கை பத்தி பேசுகிறார்கள். ஆனால் அங்கே 1996 காலண்டர் உள்ளது.

அதுபோல் விஜய் பட போஸ்டரை காட்டும்போது திருமலை பட போஸ்டரை காட்டுகிறார்கள். இதுபோல் விஷயங்களை சரியாக செய்திருக்கலாம்.

படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று. அம்மாவின் ஆசையை மகன் நிறைவேற்ற படும் கஷ்டங்களும் அந்த தியேட்டர் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது.

Naan Avalai Sandhitha Pothu review

First on Net நச்சுன்னு நாலு காதல்.. சில்லுக்கருப்பட்டி விமர்சனம் 3.75/5

First on Net நச்சுன்னு நாலு காதல்.. சில்லுக்கருப்பட்டி விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

இந்த படத்தை 4 விதமாக காதல் கதையாக பிரிந்து தந்திருக்கிறார்.

இடைவேளைக்கு முன்னர் 2 காதல்.. இடைவேளைக்கு பின்னர் 2 காதல்..

15 வயது காதல்… 25 வயது காதல்… 40 வயது காதல்…. 60 வயது காதல்…

முதல் அத்தியாயம் பிங்க் பேக்’

2வது அத்தியாயம் ‘காக்கா கடி’

3வது அத்தியாயம் ‘டர்ட்டிள் வாக்’

4வது அத்தியாயம் ‘ஹே அம்மு’

முதல் கதையில்…

குப்பை கிடங்கில் குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கும் பிங்க் ப்ளாஸ்டிக் பையில் குப்பைகளை போடும் ஒரு சிறுமிக்கும் உள்ள ஈர்ப்பு.

தந்தை அன்பாக கொடுத்த காஸ்ட்லியான மோதிரத்தை தவறவிடும் அந்த சிறுமி தவிக்க, குப்பை பொறுக்கும் அந்த பையன் எப்படி அதை அவளிடம் சேர்த்தான் என்பதே கதை.

2வது கதையில்…

வாடகை காரில் பயணம் செய்யும் கேன்சர் இளைஞன் மற்றொரு பயணி பெண் இடையே உண்டான உணர்வுபூர்வமான கவிதை இது.

3வது கதையில்…

திருமணமே செய்துக் கொள்ளாமல் காலத்தை கடந்த கன்னிக்கும்…. பேரன் பேத்திகளை பார்த்த மனைவியை இழந்த ஒருவருக்கும் இடையே உருவான முதிர்ந்த காதல் கதை இது.

4வது கதையில்…

வீடே சொர்க்கம் என வாழும் ஒரு இல்லத்தரசிக்கும் (சுனைனா) மனைவியுடன் உடலுறவே சொர்க்கம் என வாழும் சமுத்திரக்கனிக்கும் உள்ள கதை இது..

வசனங்கள் அருமை…

நடித்த அனைவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது தான். சின்ன சின்ன உணர்வுகளை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். குப்பை கிடங்கு காதலில் சின்ன சின்ன பசங்களின் டயலாக்குகள் சூப்பர்.

கார் காதலில்…. கட்டி இருக்குறவனுக்கு எப்படி கட்டு கொடுப்பாங்க…

உங்களை சைட் அடித்தவர்கள் கொடுத்த உங்க காதல் பரிசுகளை உங்க புருசனுக்கு கிட்ட காட்டுங்க.. நீங்க எவ்வளவு மதிப்புமிக்கவர் என்பது அவருக்கு தெரியட்டும்.. என்பது போன்ற வசனங்கள் கைத்தட்டல்கள் அள்ளும்.

30 வருச தாம்பத்தியத்தில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாம எதையும் வீசி எறிய மாட்டோம். ஆனால் இப்போ அப்படியில்லை…
இருட்டுல இன்பம.. வெளிச்சத்துல வெறுமை… இப்படி பல வசனங்கள் உள்ளன.

இந்த கேரக்டர்களில் நடித்த சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், லீலா சாம்ஸன், நிவேதிதா சதீஷ், க்ரவ்மகா ஸ்ரீராம், சாரா அர்ஜுன், ராகுல் என அனைவருமே கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

நாலு காதல் நாலு பாட்டு வைக்காமல் ஒரு பாட்டை வைத்த இயக்குனரை பாராட்டலாம்.

அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஞானமூர்த்தி என ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருவர் என நான்கு பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அத்தனையும் அழகு.

இயக்குநர் ஹலிதாவே எடிட்டிங் செய்துள்ளதால் காட்சிகள் அழகு.

இவ்வாறாக 4 தனி கதைகளை படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவை நான்கிலும் அன்பை மையப்படுத்தி எடுத்துள்ளார்.

இதில் வேறு விதமான ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Sillukaruppatti review rating

பழிவாங்கும் பேய்… கைலா விமர்சனம்

பழிவாங்கும் பேய்… கைலா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏதாவது ஒரு அழகான இடத்தை பார்த்துவிட்டால் உடனே அதை போட்டோ எடுப்பதில் ஆர்வம் கொண்டவர் தானா நாயுடு.

இவர் ஒரு பங்களா ஒன்றை போட்டோ எடுக்கிறார். அதனை பார்த்த இவரது தோழிகள் இது பேய் வீடு. இதனை போட்டோ எடுத்தவர்கள் வேண்டுமானால் உயிரோடு இருக்கலாம். ஆனால் அவரது நெருங்கிய உறவுகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கின்றனர்.

இதற்கு பல சம்பவங்களையும் ஆதாரத்துடன் கூறுகின்றனர்.

இதை நிரூபிப்பது போல அந்த வீட்டின் வாசல் நிறைய கொலைகள் நடக்கிறது.

போலீசார் இதனை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள்.

அந்த ஊர்வாசிகளோ அந்த பங்களா பேய் தான் கொல்கிறது என்கின்றனர்.

போலீசால் அந்த கொலைகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்பதால் குழப்பத்தில் உள்ளனர்.

தானா நாயுடுக்கு தான் எழுதும் கதையில் வரும் கேரக்டர்கள் எல்லாம் கொல்லப்படுவதும் அவை ஒரே தேதியில் நடப்பதால் சந்தேகம் ஏற்படுகிறது.

இதனையடுத்து இவரும் சில முயற்சிகளை மேற்கொள்கிறார்.
கொலைக்கான காரணம் என்ன

நாயகியாக தானா நாயுடுவும் வில்லனாக பட இயக்குனர் பாஸ்கர் சீனுவாசனும் நடித்துள்ளனர். இருவருக்கும் படத்தில் நல்ல போட்டி. நாயகி தானா அமைதியாக இருந்து காரியம் சாதிப்பதில் வல்லவராக இருக்கிறார்.
இதற்கு மேல் அவரின் கேரக்டர் குறித்து சொன்னால் ரகசியம் லீக்காகி விடும்.

போலீசாக அன்பாலயா பிரபாரன், கைலாவின் அம்மாவாக கௌசல்யா நடித்துள்ளனர். தங்கள் கேரக்டர்களில் இவர்கள் கச்சிதம்.

பேபி கைலாவும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

பரணி செல்வத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரவனின் இசை பேசப்படும்.

வழக்கமான பேய் கதையாக இல்லாமல் இன்னும் சில திருப்பங்களை கொடுத்திருந்தால் ரசிகர்களுக்கு கைலா விருந்து கிடைத்திருக்கும்.

பாஸ்கர் சீனுவாசன் சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

Kaila aka Kayla aka Khyla review

சிஸ்டம் சரியில்ல… ஹீரோ விமர்சனம் (3/5)

சிஸ்டம் சரியில்ல… ஹீரோ விமர்சனம் (3/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

2006 ஆண்ட நடந்த +2 பொது தேர்வில் 1200க்கு 1156 மார்க் எடுக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனாலும் அந்த மார்க்கை பார்த்தால் அப்பா திட்டுவார் என பயப்படுகிறார்.

அந்த நேரத்தில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஆப்ரேசனுக்காக 1 லட்சம் தேவைப்படுகிறது. அப்பாவின் உயிரை காப்பாற்ற பணத்துக்காக தன் மார்க் ஷீட்டை விற்றுவிடுகிறார்.

உயிர் பிழைத்த அப்பா இவரை திட்டி வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். இதனால் தவறான வழியில் செல்கிறார் சிவகார்த்திகேயன்.

டூப்ளிகேட் மார்க் ஷீட்டுக்களை பிரிண்ட் செய்வதும் பெரிய பெரிய காலேஜ்ஜில் சீட்டுக்களை பெற ப்ராடு செய்வதுமாக இருக்கிறார்.

அப்போது தான் தன் தங்கை போன்ற இவானாவுக்கு உதவ நினைக்கிறார். அவரை ஏரோ நாட்டிக்கல் படிக்க வைக்க நினைக்கிறார். ஆனால் மார்க்கோ குறைவாக எடுத்துள்ளார்.

அந்த சூழ்நிலையில் பெயில் ஆன மாணவர்களை வைத்து அர்ஜீன் நடத்தும் பயிற்சி கூடத்தில் இவானா கண்டுபிடித்த சால்ட் வாட்டரில் ஓடும் மோட்டார் இருப்பது தெரிய வருகிறது.

அதனை வைத்து சீட்டும் வாங்குகிறார் சிவா. ஆனால் இவானா கண்டுபிடிப்பு மெஷின் நிஜமல்ல பொய் என வழக்கு போட அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார்.

இதனால் கடுப்பான சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாற நினைக்கிறார். அப்படி என்ன செய்தார்? அர்ஜீன் யார்? கல்வி சிஸ்டமே சரியில்லாத இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தார் சிவா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வேலைக்காரன் சாயலில் சிவகார்த்திகேயனுக்கு மற்றொரு படம் இது. படம் முழுவதும் சீரியசாகவே இருக்கிறார். முகத்தில் வேற ப்ரெஷ்னஸ் இல்லை. ரொமான்ஸ் சுத்தமாக இல்லை. ஆக்சனும் பெரிதாக இல்லை. அடி வாங்குகிறார்.

திறமை இருக்கும் மாணவர்கள் வெளிநாடு சென்றுவிட்டால் நம் நாட்டின் நிலைமை என்னாகும் என பேசும்போது இளைஞர்களிடம் கைதட்டு வாங்குகிறார். அவரிடம் இருக்கும் கலகலப்பு இதில் மிஸ்ஸிங்.

கல்யாணி பிரியதர்சன் நாயகியாக நடித்துள்ளார். அழகாக அறிமுகம் தமிழில். ஆனால் ரொம்ப சின்ன பெண்ணாக இருப்பதால் சிவாவுக்கு ஜோடியாக செட்டாகவில்லை. அதுபோல் அவரது டப்பிங் குரலும் நான் சிங்கியே செல்கிறது.

ஆக்சன் கிங் அர்ஜீன் அசத்தல். ஒரு மனிதனை அழித்தாலும், அவனுடைய ஐடியாலஜியை அழிக்க முடியாது என அவர் கொடுக்கும் பயிற்சிகள் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டு.

பெயில் ஆன மாணவர்களுக்கு அவர்களின் திறமை அறிந்து பயிற்சி கொடுத்தபின் அவர்களை வெளிநாட்டுக்கு அர்ஜீன் பேக் அப் செய்வது ரொம்ப ஓவர்.

இளைஞர்கள் நம்பும் அவர் இந்தியாவை நம்பவில்லை. அது சிவகார்த்திகேயன் வந்து சொன்ன பின்புதானா அவருக்கு தெரியும்.? சில காட்சிகளை பார்க்கும்போது ஜென்டில்மேன் படம் நினைவுக்கு வருகிறது.

ரோபோ சங்கர் இருந்தும் காமெடி ஒரு துளி கூட இல்லை. இதில் நாங்களே சிரிச்சிக்கிறோம் என அவர்களே சிரித்துக் கொள்கிறார்கள்.

வில்லனாக அபேய் தியோல் மிரட்டலான நடிப்பு. மாணவர்கள் படிக்கலாம். ஆனால் கற்கக்கூடாது என்று இவர் எடுக்கும் முடிவுகள் நாட்டில் கல்வியின் வியாபார ஊழலை காட்டுகிறது.

மதியாக நடித்துள்ள இவானா கண்டிப்பாக ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார். அப்பாவியான முகம். அழகான தேர்வு. அருமையான கண்டுபிடிப்பு.

இவர்களுடன் அழகம் பெருமாள், குமரவேல், நளினா, ரிஷிகாந்த் ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பொன் பார்த்திபன் மற்றும் அந்தோனி பாக்யராஜின் வசனங்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தும்.

யுவனின் பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி பெரிதாக கை கொடுக்கவில்லை. என்னாச்சு ப்ரோ..? க்ளைமாக்ஸ் பாடல் மட்டும் ஓகே.
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.

கலையை செல்வகுமார் செய்துள்ளார். கண்டுபிடிப்புகள் சாதனங்களை அவர் செய்த விதம் பாராட்டுக்குரியது.

இரும்பு திரை படத்தை இயக்கிய மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் செல்போன் ஆபத்தை கூறியிருந்தார்.

இதில் நாம் படிக்கிறோம் ஆனால் கற்கவில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். அவரும் ஓரிரு காட்சியில் நடித்துள்ளார்.

கல்வி ஊழலை ஒழிக்க திறமையானவர்களை அடையாளம் காண வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

மாணவர்களை பெருமளவில் வைத்திருக்கும் இந்தியாவில் வெறும் 12000 கண்டுபிடிப்புகளே உள்ளன. ஆனால் அந்த மாணவர்களை கூட யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பதை முறையாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதை சூப்பர் ஹீரோ கதையாக வைத்து சொல்ல முற்பட்டு கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். இப்படி எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை கூட லாஜிக் இல்லாமல் மேஜிக் போல சொல்லிவிட்டார் என்பது தான் மைனஸ் ஆக அமைந்துவிட்டது.

அதற்கு சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்திருப்பது கூட குறையாகவே உள்ளது. சுயமாக சிந்திப்பவனே சூப்பர் ஹீரோ என சொல்லி முடித்துள்ளார். கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இந்த ஹீரோவை பிடிக்கும்.

மற்றபடி நம்மில் எத்தனை திறமையானவர்கள் இருந்தாலும் நம் சிஸ்டம் சரியாகும் வரை ஒன்றும் நடக்க போவதில்லை.

ஆக இந்த ஹீரோ…. சிஸ்டம் சரியில்ல..

More Articles
Follows