தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உயிர் தமிழுக்கு விமர்சனம்.. 3.5/5.. அரசியல் அலப்பறை
சத்யராஜ் நடித்த தாய் மாமன் மற்றும் அமைதிப்படை என இரண்டும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. காதலிக்காக அரசியல் களத்தில் இறங்குவது.. பின்னர் அரசியலில் படிப்படியாக முன்னேறுவது என இரண்டையும் கலந்து தான் இந்த ‘உயிர் தமிழுக்கு’ படத்தை கொடுத்திருக்கிறார் அமீர்.
ஸ்டோரி…
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தன் மாமன் இமான் அண்ணாச்சியுடன் தேர்தல் அலுவலகத்திற்கு செல்கிறார் அமீர்.. அங்கு மற்றொரு கட்சி சார்பாக போட்டியிட வந்திருக்கும் ஆனந்தராஜ் மகள் சாந்தினி ஸ்ரீதரனை பார்க்கிறார்..
பார்த்தவுடனே அவள் மேல் காதல்.. எனவே சாந்தினி போல தானும் தேர்தல் களத்தில் இறங்குவது என அந்த சமயத்திலேயே முடிவெடுத்து தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் அமீர்..
மெல்ல மெல்ல அரசியலில் முன்னேறும் போது சாந்தினிக்கும் அமீர் மீது காதல் வருகிறது.. இப்படியாக காதலும் அரசியலும் கலந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் ஆனந்தராஜ் கொல்லப்படுகிறார். அந்த கொலைப்பழி அமீர் மீது விழுகிறது. இதனால் காதலர்கள் இருவருக்கும் பிரச்சனை முற்றுகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது? ஆனந்தராஜை கொலை செய்தது அமிர்தானா? இதனிடையில் என்ன நடந்தது? அரசியலில் வென்று வந்தாரா அமீர்? காதலியை கரம் பிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்….
மக்கள் போராளி அமீர் என பெயர் வேற வைத்து விட்டார்கள்.. அதற்கு ஏற்ப அரசியலை ஒரு கை பார்த்து விட்டார் அமீர்.. காதலிக்காக தேர்தல் களத்தில் இறங்கி கவுன்சிலர் முதல் மாவட்ட செயலாளர் வரை அலப்பறை செய்திருக்கிறார் அமீர்.
அரசியல் நையாண்டி.. தமிழ் இலக்கிய வசனங்கள்.. காதலியை ஓர கண்ணால் சைட் அடிப்பது.. என அனைத்திலும் ஸ்கோர் செய்து விட்டார் அமீர்.. முக்கியமாக சீரியஸான அமீராக இல்லாமல் ஜாலியான பேர் வழியாக நடித்திருக்கிறார்..
நாயகி சாந்தினி ஸ்ரீதரன்.. சேலையில் ஒல்லியாகவும் டீ சர்ட்டில் குண்டாகவும் காணப்படுகிறார்.. அதற்கு ஏற்ப 6 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு காட்சிகள் காட்டப்படுகிறது.. ஒருவேளை அவர் நிஜத்திலேயே குண்டாகி விட்டாரா அல்லது படத்திற்காக உடலை ஏற்றினார்? என்பது சாந்தினிக்கே வெளிச்சம்.. வெட்கப்படும்போதும் தலையை கோதும் போதும் ரசிக்க வைக்கிறார் சாந்தினி ஸ்ரீதரன்.
நாயகி அப்பாவாக ஆனந்தராஜ்.. இவரை சுற்றி தான் கதை நகர்கிறது ஆனால் இவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.. இவரின் வீட்டுக்கே வந்து அமீர் தேர்தல் பிரச்சாரம் செய்ய காட்சி ரசிகர்களுக்கு சம விருந்து அதிலும் அந்த காட்சி அமீர் பேசும் தமிழ் இலக்கிய வசனங்கள் நம்மை மெய்மறந்து கைதட்ட வைக்கும்..
இதர அரசியல்வாதிகளாக இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், குட்டிபுலி சரவணசக்தி உள்ளிட்டோரும் உண்டு..
டெக்னீசியன்ஸ்…
கேட்ட மெட்டையே கேட்க விடாமல் புதிதாக வித்தியாசமாக கொடுக்கும் இசை அமைப்பாளர்களில் ஒருவர் வித்யாசாகர். அவர்தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்
இதில் அமீர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் என்பதால் புரட்சித் தலைவர் பாணியில் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு.. என்ற பாடலுக்கு மெட்டு அமைத்திருக்கிறார். அந்தப் பாடல் நிச்சயம் எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.. இது மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் ஆகும்.. இவை இல்லாமல் அரசியல் நையாண்டி பாடலும் காதல் பாடலும் சிறப்பு..
ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணிகளில் நேர்த்தி… ஒரு அரசியல் நையாண்டி படத்தை எப்படி கலகலப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தை அறிந்து அதற்கு ஏற்ப உழைத்திருக்கின்றனர்..
அரசியலுக்கு வந்த நடிகர்கள் வர ஆசைப்படும் நடிகர்கள் என அனைவரையும் கலாய்த்து வசனங்களை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா. அதுபோல அரசியலுக்கு வர மாட்டேன் என்ற ரஜினியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.. ஆன்மீக அரசியல் இருக்கும்போது ஆன்மா அரசியல் இருக்காதா? என்பதையும் கிண்டல் அடித்திருக்கிறார்..
சரி அரசியல்வாதிகளை தான் கிண்டல் அடித்திருக்கிறார் என்றால் தேர்தல் ஆணையத்தையும் விட்டு வைக்கவில்லை.. ஆனால் அந்த காட்சிகளை சென்சாரி மியூட் செய்து இருக்கின்றனர்.. பாஜக திமுக அதிமுக காங்கிரஸ் என பல கட்சிகளை கிண்டல் அடித்தாலும் எம்ஜிஆரை மட்டுமே புகழ்ந்து காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா.
சரி.. தமிழ் மொழிக்காக தான் இந்த அரசியல் அலப்பறை என்று நீங்கள் நினைத்தால் ஏமாற்றப்படுவீர்கள்.. முழுக்க முழுக்க காதலிக்காகவே இந்த உயிர் தமிழுக்கு.. (ஆதம்பாவா.. உங்கள் லந்து தாங்கலய்யா..??!!!)
அரசியல் படம் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் 100க்கும் மேற்பட்ட நடிகர்களை நடிக்க வைத்து பிரம்மாண்டம் காட்டி இருக்கின்றனர்..
ஆக இந்த.. உயிர் தமிழுக்கு.. அரசியல் அலப்பறை
Uyir Tamilzhuku movie review