உச்சம் தொட்டதா..? உச்சக்கட்டம் விமர்சனம்

உச்சம் தொட்டதா..? உச்சக்கட்டம் விமர்சனம்

நடிகர்கள்.. தாகூர் அனூப் சிங் – ஆதித்யா, சாய் தன்ஷிகா – ரேஷ்மி, தன்யா ஹோப் – கரிஷ்மா, கபீர் துஹான் சிங் – தர்மேந்திரா, கிஷோர், ஷ்ரத்தா தாஸ் – கிருத்திகா, பிரபாகர், வம்சி கிருஷ்ணா, ஷ்ரவன் ராகவேந்திரா
கதை மற்றும் இயக்கம் – சுனில் குமார் தேசாய்
தயாரிப்பாளர் – தேவராஜ் ஆர்
பின்னணி இசை – சஞ்ஜோய் சவுத்ரி
ஒளிப்பதிவு – ராஜன், விஷ்ணு வர்தன்
படத்தொகுப்பு – பி எஸ் கெம்பராஜூ
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

கதைக்களம்..

சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங் தான் இப்படத்தின் நாயகன்.

படத்தில் 2 நாயகிகள் உள்ளனர். ஒருவர் தன்ஷிகா மற்றொருவர் தடம் பட நாயகி தன்யா ஹோப்.

தன்ஷிகாவை காதலிக்கிறார் ஹீரோ தாகூர் அனூப் சிங். இவர்கள் இருவரும் காதலர்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு விடுதிக்கு செல்கின்றனர்.

அங்கு, ஒரு நபரை ஒரு கும்பல் கொலை செய்கிறது. இந்த கொலையை தன்ஷிகா வீடியோ எடுத்து விடுகிறார்.
இதனை பார்த்த அந்த கும்பல் தன்ஷிகாவை துரத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு கார் டிக்கியில் ஒளிந்து கொள்கிறார் தன்ஷிகா.

கார் டிக்கி மூடிவிடுகிறது. பின்னர் என்ன ஆனது? தன்ஷிகா என்ன ஆனார்? தன் காதலியை அனூப் சிங் காப்பாற்றினாரா? கொலையாளிகள் யார்? கொலைக்கு என்ன காரணம்.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹீரோ தாகூர் அனூப் சிங் செம உடற்கட்டோடு வருகிறார். ஆக்சனில் அசத்தல். அதகளம் செய்து மிரட்டியிருக்கிறார். இவரது உடற்கட்டுக்கு ரொமான்ஸ் வராது போல. முகத்தை இறுக்கமாகவே வைத்துள்ளார்.

ரெளடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் ஆக்சனிலும் ஸ்கோர் செய்துள்ளார் தன்ஷிகா.

தடம் படத்தில் தடம் பதித்த இரண்டாவது நாயகி தன்யா ஹோப் இதில் பைட்டில் நம்மை கவர்கிறார்.

‘வேதாளம்’ புகழ் கபீர் துஹான் சிங் வில்லனாக நடித்துள்ளார். தன் கண்களிலேயே மிரட்டியுள்ளார்.

‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன், ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு சஞ்ஜோய் சவுத்ரி இசை அமைத்திருக்கிறார்.

பின்னணி இசை ஓகே. பெரிதாக மிரட்டவில்லை. த்ரில்லர் படத்திற்கு இது போதாது.

பி.ராஜன், விஷ்ணுவர்த்தன் ஒளிப்பதிவில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

த்ரில்லர் கதையாக இருந்தாலும் நமக்கு அப்படி ஒரு அனுபவம் கிடைக்கவில்லை.

Uchakattam review rating

Comments are closed.