THUGS விமர்சனம் 3.5/5..; பராசக்தி பருத்திவீரன் வரிசையில் தக்ஸ்

THUGS விமர்சனம் 3.5/5..; பராசக்தி பருத்திவீரன் வரிசையில் தக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

சிறை கைதிகள் பாதாள குகை அமைத்து தப்பிக்கும் கதை தான் இதன் ஒன்லைன்

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 2வது திரைப்படம் ‘தக்ஸ்’.

இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். இதில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

ஒரு சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கதை தான் இந்த தக்ஸ்.

ஆர் கே சுரேஷ் போலீஸ் அதிகாரி.. நாயகன் ஹிருது மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் சிறை கைதிகள்..

ஒரு கட்டத்தில் சிறையில் இருந்து தப்பிக்க இவர்கள் போடும் திட்டம் தான் இந்தப் படத்தின் கதைக்களம்.

கேரக்டர்கள்…

பொதுவாகவே குற்றவாளிகள் சிறையில் இருந்தால் அவர்கள் தப்பிச் செல்லக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கும்.. ஆனால் இதில் குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது.. அதற்கு காரணம் அந்த படத்தின் நாயகன் மேற்கொள்ளும் முயற்சிகள் தான்.

முதல் படத்தில் இப்படி ஒரு நடிப்பா? என்றளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் நாயகன் ஹிருது. இவர் தயாரிப்பாளர் சிபு தமின்ஷின் மகன் என்பது கூடுதல்.

எதையும் அசால்டாக செய்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். சிவாஜி அறிமுகமான படம் பராசக்தி.. கார்த்தி அறிமுகமான படம் பருத்திவீரன்.. தங்கள் முதல் படத்திலேயே இருவரும் தங்கள் நடிப்பு முத்திரையை பதித்திருந்தனர்.. அது போல தான் தக்ஸ் படத்தில் தன் முத்திரையை பதித்துள்ளார் ஹிருது ஹரூன்.

இதுவரை ஏற்காத கைதி கேரக்டரில் முனீஸ் காந்த் .. அவரும் கொஞ்சம் சிரிக்க வைத்து நம்மை ரசிக்க வைத்துள்ளார்..

மிரட்டலான போலீஸ் அதிகாரி வேடத்தில் ஆர் கே சுரேஷ்.. சிறை கைதியாக பாபி சிம்ஹா. இருவரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

படத்தின் நாயகி மற்றும் இதர கைதிகள் என அனைவரும் ஒவ்வொரு பரிமாணத்தை காட்டியுள்ளனர்.. ஜெயில் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என்று நாம் எண்ணும் அளவிற்கு ஜெயிலுக்குள் நம்மை அழைத்துச் சென்றுள்ளார் இயக்குனர்..

டெக்னீஷியன்கள்…

முதல் படத்தில் நாயகன் ரொமான்ஸ் செய்து.. டூயட் பாடி.. நாலு ஆக்ஷன் செய்து இப்படி தான் காட்சிகள் அமைக்கப்படும். ஆனால் இதில் பிருந்தா நாயகனின் மேல் முழு நம்பிக்கை வைத்து தக்ஸ் படத்தை தரமாக கொடுத்துள்ளார்.

சாம்.சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார்.

படத்தின் பின்னணி இசை தெறிக்க விட்டுள்ளது எனலாம் அப்படி ஒரு மிரட்டலான இசையை கொடுத்துள்ளார் சாம் சி எஸ். படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.

முக்கியமாக நாயகன் நாயகி குளிக்கும் ஒரு டூயட் காட்சி ரசிக்கப்படும் வகையில் உள்ளது. கேரளாவின் அழகையும் சிறை கைதிகளின் சிக்கல்களையும் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

ஒரு சின்ன கதைக்களம் என்றாலும் அதனை தன்னுடைய மேக்கிங் என்ற கை வண்ணத்தால் அருமையான பதிவாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிருந்தா.

ஆக இந்த தக்ஸ்.. தரம்

Thugs movie review and rating in tamil

வாத்தி விமர்சனம் 3.25/5..; பவர்ஃபுல் பாடம்.!

வாத்தி விமர்சனம் 3.25/5..; பவர்ஃபுல் பாடம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கல்வியின் அவசியத்தையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அரசியலையும் தோலுரிக்கும் ‘வாத்தி’.. 1990 களில் தனியார் பள்ளிகள் அதிகளவில் தொடங்கப்பட்டபோது நடந்த உண்மைச் சம்பவத்தை சொல்ல வந்திருக்கிறார் ‘வாத்தி’.

கதைக்களம்

மிகப்பெரிய தனியார் பள்ளிகளின் உரிமையாளர் சமுத்திரக்கனி. இவர் தன்னிடம் வேலை பார்க்கும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு ( அரசுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில்) அனுப்பி வைக்கிறார்.

சாதாரண ஆசிரியர்களால் பாடம் நடத்தப்படும் போது.. மாணவர்கள் மதிப்பெண் குறையும்.. எனவே அரசு பள்ளிகளின் தரம் குறையும்.. மாணவர்கள் சேர்க்கை குறையும்.. இதனால் தன் பள்ளிக்கு மாணவர்கள் வருவார்கள்.. பெருமை கிடைக்கும்.. அதிக கட்டணம் வசூலாகும் என பல திட்டங்களை போட்டு அரசியல் நடத்துகிறார் சமுத்திரக்கனி.

ஆனால் ஆசிரியர் பணியை மகத்தானதாக நினைக்கும் தனுஷ் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்கிறார். மேலும் அரசு பணிக்கும் தேர்வு எழுத வைக்கிறார்.

இதன் பிறகு என்ன ஆனது.? தனுஷை என்ன செய்தார் சமுத்திரக்கனி? அவரின் திட்டம் என்ன ஆச்சு? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்….

இதுவரை ஏற்காத ஆசிரியர் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார்.. ஆனால் பார்ப்பதற்கு மாணவன் போலவே உள்ளார்.

ஓர் ஆசிரியருக்கே உரித்தான நிதானம் கலந்த பேச்சில் நம்மை ரசிக்க வைக்கிறார் தனுஷ். அப்துல் கலாமை குறிப்பிட்டு கல்வி அவசியத்தை சொல்லும் காட்சி கைத்தட்டல் பெறுகிறது.

சாந்தமாக வந்து சபாஷ் பெறுகிறார் சம்யுக்தா.. அழகான ஆசிரியையாக வந்து நம்மை கவர்ந்து விடுகிறார்.

சாய்குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி, ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆனால் இவர்களுக்கான கேரக்டரில் முக்கியத்துவம் இல்லை.. அனைத்து கேரக்டர்களும் வீணடிக்கப்பட்டுள்ளது.

டெக்னீஷியன்கள்…

பணத்தைவிட படிப்புக்கு கிடைக்கும் கௌரவம் மரியாதை வேற லெவல் என்பதை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் வெங்கி.

ஜிவி பிரகாஷம் இசையில் பின்னணி இசை கதையுடன் பயணிப்பது ரசிக்க வைக்கிறது.. ஆனால் பாடல்கள் பெரிதாக கவரவில்லை..

முக்கியமாக காதலிக்க கைடு தேவையில்லை சொல்லித்தர வா வாத்தி என்ற பாடல் ரசிக்க வைக்கிறது.

கல்வியின் அவசியத்தையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மோதலையும் அப்பட்டமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

1998 இல் நடக்கும் கதை.. ஆனால் ஒரு காட்சியில் ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட் தற்போதையதாக உள்ளது அதை இயக்குனர் கவனித்திருக்கலாம்.

அதே சமயத்தில் கமர்சியலுக்காக சேர்க்கப்பட்ட விஷயங்கள் நாடகத் தன்மை கலந்து உள்ளதால் நம்மால் கதையுடன் ஒன்ற முடியவில்லை.. மகாகவி பாரதியாராக தனுஷ் வரும் காட்சிகள் கவனத்தை ஈர்க்கவில்லை.

மேலும் இளமையான தனுஷ் ஒரு காட்சியில் நரைத்த தாடியுடன் வருவதை யாருமே கவனிக்கவில்லையா.? 1990களில் நீளமாக முடி வளர்ப்பது அப்போதைய ட்ரெண்டாக இருந்தாலும் ஒரு ஆசிரியர் இவ்வளவு முடி வளர்ப்பது சரியா.?

தனியார் பள்ளிகள் எப்படி எல்லாம் அரசியல் செய்து அரசு பள்ளிகளின் தரத்தை குறைக்கின்றன.. மேலும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் அலட்சியத்தால் மாணவர்கள் எதிர்காலம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் சொல்லி பாடம் நடத்தி இருக்கிறார் ‘வாத்தி..

ஆக வாத்தி.. பவர்ஃபுல் பாடம்..

Vaathi movie review and rating in tamil

பகாசூரன் விமர்சனம் 3.25/5..; ஆன்ட்ராய்ட் அரக்கன்

பகாசூரன் விமர்சனம் 3.25/5..; ஆன்ட்ராய்ட் அரக்கன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு கும்பல்… பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தகப்பனின் பழிவாங்கும் கதை..

கதைக்களம்…

கோயிலில் வேலை செய்து பிரசாதம் உண்டு பரதேசியாக வாழ்கிறார் செல்வராகவன். இதன் இடையில் சில கொலைகளையும் செய்கிறார் இவர். கொலைகளை தொடர்ந்து செய்ய என்ன காரணம் என்பது ஒரு பக்கம்.

மற்றொருபுறம் தன் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொள்ள அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க புறப்படுகிறார். முன்னாள் ராணுவ அதிகாரி நட்டி…

இவர்கள் சந்தித்த பின் நடக்கும் கதையே இந்த பகாசூரன்.

கேரக்டர்கள்…

தெருக்கூத்து கலைஞராக பீமராசு (செல்வராகவன்). ஒரு யதார்த்த பாசக்கார தந்தையாக காணப்பட்டாலும் பல காட்சிகளில் செல்வராகவனின் நடிப்பு செயற்கைத் தனமாக உள்ளது. முக்கியமாக தெருக்கூத்து கலைஞராக இவர் ஆடும் ஆட்டங்கள் ரசிக்க முடியவில்லை.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நட்டி.. யூடியூப்பில் தன் கிரைம் ஆராய்ச்சிகளை போட்டு வைரலாக்கி வருகிறார்.. இவரை சந்திக்கும் சிலர் இவர் யார் என்று தெரியவில்லை என்கிறார்கள்.. அதன் பிறகு உங்க யூடியுப் வீடியோக்களை பார்த்து இருக்கிறோம் என்கிறார்கள்.. அது என்ன லாஜிக் என்று புரியவில்லை.

செல்வராகவனின் மகளாக நடித்தவர் மனதில் நிற்கிறார்.. எந்த பாவமும் செய்யாத ஒரு நடுத்தர குடும்பத்து பெண்களின் உணர்வை காட்டியிருக்கிறார்.

செல்வராகவனின் மகளின் காதலனாக குணாநிதி நடித்துள்ளார்.. சில காட்சியே என்றாலும் குற்ற உணர்வு மிக்க வாலிபராக தன் கேரக்டரை நிலை நிறுத்தியுள்ளார்.

பாலியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை காட்டும் போது நம் கண்களில் கண்ணீர் வருவது நிச்சயம்.

பெண் புரோக்கராக கூல் சுரேஷ்.. அவர் வரும் காட்சிகள் தியேட்டரில் சிரிப்பலை.. ஆனால் திடீரென படத்தில் காணாமல் போய்விடுகிறார்.

செல்வராகவனின் தந்தையாக கே ராஜன். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.. யூடியுப் பிரபலம் லயா வித்தியாசமான வேடம் ஏற்று கவர்ச்சியில் இளைஞர்களை சூடேற்றுகிறார்.

ஓரிரு காட்சியில் வந்து.. அடடா இந்த பொண்ணா? என நம்மை கவனிக்க வைக்கிறார் விஜய் டிவி புகழ் ரோஜா ஸ்ரீ.

டெக்னீஷியன்கள்…

சாம் இசையில் பின்னணி இசை மிரட்டல்.. ஆனால் பாடல் பெரிதாக கை கொடுக்கவில்லை.. அப்பன் அல்லவா என்ற ஆன்மிக பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் சுத்தமாக தேவையே இல்லை என்னும் அளவுக்கு வெறுப்பேற்றுகிறது.

பகாசூரன் படத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

செல்போனை அதிகமாக பயன்படுத்தும் பிள்ளைகள் தங்கள் அறைகளில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர் கவனிக்க வேண்டும் என்பதையும் ஆன்லைனில் விபச்சாரம் பெருகிவிட்டது என்பதையும் எச்சரிக்கையாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

ஆக எப்போதும் உள்ளது போல சாதி கதைகளை கொடுக்காமல் சமூக சிந்தனையை கொடுத்திருப்பது பாராட்க்குரியது.

கல்வி என்ற பெயரில் கல்லூரியில் நடக்கும் கலவிகளை களைய வேண்டும் என சொல்லி எச்சரித்துள்ளார் மோகன் ஜீ.

சில வசனங்கள் அப்ளாஸ் பெறுகின்றன.. “நம்ம புள்ளைங்க ரூமுக்குள்ள என்ன பண்ணுறாங்கன்னு பெத்தவங்க கண்காணிக்கனும்..”

லாஜீக் மீறல்கள்…

ஓய்வுபெற்ற மேஜராக நட்டி ஒரு பக்கம் ஓட.. செல்வராகவன் அசால்ட்டாக பல கொலைகள் செய்கிறார். என்ன செய்கிறது காவல்துறை? என்பது கேள்விக்குறி.?!

நாம் கையில் வைத்திருக்கும் செல்போன் தான் இன்றைய நவீன பகாசூரன் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

ஆக… பகாசூரன்… ஆன்ட்ராய்ட் அரக்கன்

Bakasuran movie review and rating in tamil

FIRST ON NET டாடா DADA விமர்சனம் 4.25/5 .. Sema DA Super DA

FIRST ON NET டாடா DADA விமர்சனம் 4.25/5 .. Sema DA Super DA

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

அம்மா இல்லாமல் அப்பா அரவணைப்பில் வளரும் ஒரு ஆண் குழந்தை பற்றிய கதை.. டாடி என்று அழைக்காமல் டாடா என்று அழைக்கிறார்.. எனவே அதுவே படத்தின் தலைப்பு.

கதைக்களம்..

கல்லூரியில் படிக்கின்றனர் கவின் மற்றும் அபர்ணா படிக்கும்போதே இவர்களுக்கு நெருக்கம் ஏற்பட கர்ப்பமாகிறார் அபர்ணா.

இதனால் இருவர் குடும்பத்திலும் பிரச்சினை உருவாக இருவரும் தனியே வீடு எடுத்து தங்குகின்றனர்.

எனவே சின்ன சின்ன வேலைகள் செய்து குடும்பத்தை கவனிக்க ஆரம்பிக்கிறார் கவின்.. குடும்பத்திற்கே செலவுக்கு பணம் இல்லாத நிலையில் குடிக்க ஆரம்பிக்கிறார் கவின்.

இதனால் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்படுகிறது.. ஒரு நாள் பிரச்சனை அதிகமாகவே கோபித்துக் கொண்டு வேலைக்கு சென்று விடுகிறார் செல்போனை ஆஃப் செய்து விடுகிறார் கவின்..

அந்த சமயத்தில் பிரசவ வலி ஏற்பட அக்கம் பக்கத்தினர் அபர்ணாவை மருத்துவமனையில் சேர்க்க அபர்ணா பெற்றோரும் உதவிக்கு வருகின்றனர்.

ஆண் குழந்தை பிறக்கிறது.. குழந்தையை மருத்துவமனையில் விட்டு விட்டு சென்று விடுகிறார் அபர்ணா.

கவின் தேடியும் அபர்ணா கிடைக்கவில்லை.. அதன்பிறகு கை குழந்தையுடன் கவின் என்ன செய்தார்? குழந்தைக்கு அம்மா கிடைத்தாரா? கவின் அபர்ணா இணைந்தார்களா என்பதை படத்தின் கதை.

கேரக்டர்கள்…

இளம் வயதில் இப்படி ஒரு கேரக்டரை தேர்ந்தெடுத்த கவினுக்கு வாழ்த்து மழை பொழியலாம்.

அலட்டிக் கொள்ளாத அளவான நடிப்பில் இளைஞர்களை கவர்ந்துள்ளார் கவின். அதேசமயம் தாய் குலங்களையும் கவரும் வகையில் நடிப்பை கொடுத்துள்ளார்.

பாவப்பட்ட பெண்ணாக அபர்ணா முதல் பாதியிலும் இரண்டாம் பாதியில் திமிர் பிடித்த பெண்ணாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார் அபர்ணா.

கவின் நண்பர் மற்றும் ஐடி ஆபீஸ் ஊழியர்கள் என அனைவரும் நடிப்பில் சபாஷ் பெறுகின்றனர்.

கவின் பெற்றோர்களா வருகின்றனர் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா. வி டிவி கணேஷ் வந்த பிறகு படத்தின் கதை கலகலப்பான பாதையில் பயணிக்கிறது.

கவினின் மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் அழகு குட்டி பையன்..

நண்பர்களாக வரும் பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் ஆகியோர் நிறைவு.

டெக்னீஷியன்கள்..

படத்தில் எந்த ஒரு கேரக்டரையும் குறை சொல்லாத முடியாத அளவுக்கு வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் கே பாபு.

ஒரு குடிகார பாடலுக்கு.. திடீரென காலேஜ் பாடல் உள்ளே வருவது போல உள்ளது.. அதற்கு பதிலாக காலேஜ் காட்சிகளை சற்று கூட்டி இருக்கலாம்..

படத்திற்கு ஜென் மார்ட்டின் இசை பெரிய பலம்.. முக்கியமாக தாலாட்டு பாடல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.. தமிழ் படம் என்றாலும் மலையாள பாடல் வரிகளை கொடுத்து வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார்.

தன் நண்பரின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் கே பாபு.

அதே சமயம் படத்தை கலகலப்பாகவும் கொடுத்துள்ளார்.. படத்தின் காமெடி காட்சிகளும் கதையுடன் பயணிப்பது சிறப்பு.

படத்தின் வசனங்களும் சூப்பர்.. ஒரு காட்சியில் கவினுக்கு வேலைக்கு சிபாரிசு செய்வார் அவரது தோழி.. ஆனால் அந்த வேலை வேறு ஒருவருக்கு சென்று விடும்..

அப்போது… உங்களுக்கெல்லாம் நாங்க நல்லா இருக்கணும்.. ஆனா உங்களை விட நல்லா இருக்க கூடாது அதானே.. என கவின் பேசுவார்..

இதுபோல பல வசனங்கள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.

படம் மிகவும் யதார்த்தமாக உள்ளது.. எனவே கதையை முன்னரே யூகிக்க முடிகிறது.. சில ட்விஸ்ட் கொடுத்து இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்..

ஆக… டாடா.. Sema DA Super DA

DADA movie review and rating in tamil

ரன் பேபி ரன் விமர்சனம்.; வின்னரா.? ரன்னரா.?

ரன் பேபி ரன் விமர்சனம்.; வின்னரா.? ரன்னரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

அறிமுகமில்லாத ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உதவ போய் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் ஆர் ஜே பாலாஜி. மர்மமான முறையில் பாலாஜி வீட்டில் ஐஸ்வர்யா மரணமடைகிறார். அதிலிருந்து எப்படி பாலாஜி தப்பித்தார் என்பதே கதை.

கதைக்களம்…

முன்பின் பழக்கம் இல்லாத ஐஸ்வர்யா ஒரு நாள் ஆர்.ஜே பாலாஜியிடம் உதவி கேட்கிறார். பாலாஜி வீட்டிற்குள் வந்து செல்போன் சார்ஜ் போட்டு சில மணி நேரம் தங்குகிறார்.

பாலாஜி அசதியில் உறங்கிவிட காலையில் ஐஸ்வர்யா திடீரென மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.

உடனே தனது போலீஸ் நண்பர் விவேக்கிடம் ஐடியா கேட்கிறார் பாலாஜி..

பிணத்தை எங்கேயாவது வீசி விடு என்கிறார் விவேக் பிரசன்னா. எனவே பிணத்தை சூட்கேஸில் மறைத்து பயணிக்கிறார் பாலாஜி.. அதன் பின்னர் என்ன நடந்தது.? என்பதே ரன் பேபி ரன்..

கேரக்டர்கள்…

எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டே இருக்கும் ஆர் ஜே பாலாஜி இதில் திருதிருவென முழிக்கிறார். அவர் பேசாமல் தன் நடிப்பை பேச வைத்திருக்கிறார்.

ஐஸ்வர்யாவுக்கு சின்ன கேரக்டர் என்றாலும் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஆனால் கேரக்டர் வலுவானதாக இல்லை.

நாயகனின் நண்பராக வரும் விவேக் பிரசன்னா நடிப்பு ஓகே.

ஸ்மிருதி வெங்கட், ராஜ் ஐயப்பன், பக்ஸ் , ஜோ மல்லூரி என திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு பெரிதாக வேலை கொடுக்கப்படவில்லை.

டெக்னீஷியன்கள்…

தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் இயக்கம் – ஜியென் கிருஷ்ணகுமார் இசை – சாம் சிஎஸ் .

படத்தின் இடைவேளை வரை காட்சி நகர்வதே தெரியவில்லை.. அப்படி விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து நம் செல்போனை கையில் எடுக்காத படி சீட் நுனியில் அமர வைத்து விட்டார் இயக்குனர்.

ஆனால் இரண்டாம் பாதியில் வழக்கமான சில காட்சிகளை கத்தரி போட்டிருக்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு திறமையான நடிகை. அவர் சின்ன கேரக்டருக்கு ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம்.. அவரை இன்னும் கூடுதலாக பயன்படுத்தி இருக்கலாம்.. அதுபோல ஸ்மிருதி வெங்கட்.. பக்ஸ் ஜோ மல்லூரி உள்ளிட்ட பலரது கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது.

படத்தில் முக்கியமாக ஒரு பெரிய லாஜிக் ஓட்டை உள்ளது.. ஐஸ்வர்யாவின் பிணத்தை எப்படியோ எங்கோ வீச வேண்டும் என்பது தான் ஆர்.ஜே பாலாஜியின் நோக்கம்.. அந்த பிணம் வைத்த சூட்கேஸ் தவறுதலாக எங்கோ சென்று விட்டது. மீண்டும் அதன் பின்னாடி தொடர்வது ஏன்.? இதுவே பெரிய லாஜிக் ஓட்டையாக உள்ளது.

ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார் ஐஸ்வர்யா.. என்ன பிரச்சனை என்று சொல்லவே மறுக்கிறார்.. அப்படி இருக்கும் ஒரு நபருக்கு யாராவது உதவி செய்வார்களா.?

ஷாம் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.. ஒரு தில்லர் கதைக்கு ஏற்ப தன் இசையை பயணம் செய்ய வைத்துள்ளார்..

ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.. படத்தின் கருவை 10 நிமிடம் மட்டுமே சொல்லி வேறு கதைகளை சொல்ல முற்பட்டு இருக்கிறார்..

கதையின் கருவை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருந்தால் இந்த ரன் பேபி ரன் ரசிகர்களை கம் பேபி கம் என்று சொல்லியிருக்கும்..

Run Baby Run movie review and rating in tamil

தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்.; மலையாள மசாலா.? கிச்சன் கிளிகள்.!

தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்.; மலையாள மசாலா.? கிச்சன் கிளிகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

அடுப்படியில் தினந்தோறும் வேர்வை சொட்ட சொட்ட குடும்பத்திற்காகவே வாழும் பல பெண்களின் கண்ணீர் கதை..

கதைக்களம்…

ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது கணவர் ராகுல் ரவி.. மாமனார் மாமியார் என ஒரு குடும்பம். இந்த குடும்பத்திற்கு வகை வகையாக சமைப்பது.. வீட்டை துடைப்பது.. பாத்திரம் கழுவுவது என தினசரி வாழ்க்கையில் தன் கனவுகளை துறந்து வேலை செய்கிறார் ஐஸ்வர்யா.

ஆனால் கணவரிடம் இருந்து எந்த ஒரு உதவியும் படுக்கை அறையிலும் சமையலறையிலும் கிடைக்காத போது வெறுத்துப் போகும் ஐஸ்வர்யா என்ன செய்தார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நாயகிக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நவரசம் காட்டி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தன் கனவுகளை புதைத்து கணவனுக்காகவே வாழும் பல பெண்களை பிரதிபலிக்கிறார் ஐஸ்வர்யா.

காய்கறி வெட்டுவது.. காலை டிபன் சமைப்பது.. பாத்திரம் கழுவுவது.. பின்னர் காய் வெட்டுவது.. மதியம் சாப்பாடு சமைப்பது.. பாத்திரம் கழுவுவது.. பின்னர் காய்கறி வெட்டுவது… என காட்சிகளை திரும்ப திரும்ப வைப்பது சோர்வடைய வைக்கிறது.

கணவர் ராகுல் ரவிந்தர் பள்ளிக்கூட ஆசிரியர் என்ற காட்சியை காட்டியிருப்பது சிறப்பு..

இரவில்.. லைட்டை அணைக்கவா.?. லைட்டை அணைக்கவா.? என்ற வசனங்களை நாயகன் பேசும்போது சில ஆணாதிக்க நபர்களை அப்பட்டமாக காட்டி இருக்கிறார்.. முக்கியமாக படுக்கையில் தொடுதல்.. தடவல் (FOREPLAY) வேண்டாம்.. அது மட்டுமே வேண்டும் என்ற சில கணவன்மார்களின் ரசனையையும் காட்டி இருக்கிறார்.

மாமனாராக போஸ்டர் நந்தகுமார். வாஷிங்மெஷினில் துவைக்க கூடாது.. விறகு அடுப்பில் தான் சமைக்க வேண்டும் என கண்டிஷன்கள் போடும் மாமனராக நடித்திருக்கிறார்..

மற்றபடி மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமையல் அறைக்கு வரக்கூடாது என்ற காட்சிகள் இன்றைய ட்ரெண்டுக்கு நம்பும்படியாக இல்லை..

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிந்து கவனிக்கப்பட வைக்கிறார்.. ராகுலின் தங்கையாக வரும் சிந்துவுக்கு இன்னும் கூடுதல் காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

டெக்னீஷியன்கள்…

படத்தை இயக்கியிருப்பவர் ஆர். கண்ணன்.

மலையாள சினிமாவில் மிகவும் நடுத்தர குடும்பமாக வீடு அமைக்கப்பட்டு இருக்கும். அதற்கு ஏற்ப விறகு அடுப்பு… கையால் துணி துவைத்தல் போன்ற காட்சிகள் இருக்கும்..

ஆனால் தமிழில் ஒரு பணக்கார குடும்பமாக காட்டப்பட்டுள்ளது.. அப்படி இருக்கையில் விறகு அடுப்பு காட்சிகள் ஏற்புடையதாக இல்லை.. மேலும் பணக்கார குடும்பத்தில் பெரும்பாலும் யாரும் கையால் துணிகளை துவைப்பது இல்லை..

குடும்பத்தில் மொத்தமே ஒரு தம்பதி அவரது மகன் மருமகள் ஆகிய 4 பேரை மட்டுமே காட்டுகிறார்கள்.. ஆனால் வசனங்களில்.. ஐஸ்வர்யாவின் அம்மா.. “அது பெரிய குடும்பம்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…” என சொல்கிறார்..

நான்கு பேர் பெரிய குடும்பமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.. மலையாளத்தில் இருந்த உணர்வு இந்தப் படத்தில் துளி கூட இல்லை..

ஐஸ்வர்யாவின் தோற்றம் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தாலும் மற்ற கேரக்டர்கள் தேர்வு சரியாக இல்லை..

ஆண்கள் மாறவே மாட்டார்கள்.. பெண்கள் நினைத்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் மாற்றம் வரும் என கிளைமாக்ஸ் காட்சி காட்டப்பட்டுள்ளது..

பெண்களை எப்போதுமே கிச்சனில் வைத்திருக்கும் ஆண்கள் இந்த படத்தை பார்த்து திருந்தினால் அதுவே இந்த படத்தின் வெற்றி.. அந்தப் பெண் தன் அம்மாவாக இருக்கலாம்.. மனைவியாக இருக்கலாம்… சகோதரியாக இருக்கலாம்..

யாராக இருந்தாலும்.. தண்ணி கொண்டு வா… அதை செய்.. இதை செய் என்று வேலை வாங்கும் ஆண்களுக்கு இது ஒரு நெத்தியடி படம்..

படத்தின் கிளைமாக்ஸ் பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது..

கிச்சனில் சிக்கித் தவிக்கும் பெண் கிளிகள் பற்றிய கதைதான் இந்த படம்… ஆக மலையாள மசாலா தமிழுக்கு செட் ஆகல…

The Great Indian Kitchen movie review and rating in tamil

More Articles
Follows