தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தங்கலான் பட விமர்சனம் 4/5… தமிழர்களின் தங்கமகன்
அடிமைப்பட்டுக் கிடக்கும் தன் மக்களை மீட்டெடுக்க தங்கவேட்டைக்கு புறப்பட்ட தங்க மகன் இவன்..
ஸ்டோரி…
1850 இந்தியாவில் தங்கத்தை தேடி புறப்பட்ட தமிழர்களின் கதை இது..
இந்தியர்களை அடிமைப்படுத்தி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆண்டு கொண்டு இருந்த காலம் அது.. பல சூழ்ச்சிகளால் தங்கள் நிலத்தை இழக்கிறார் தங்கலான் (விக்ரம்)…
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலும் இந்தியாவில் உயர் சாதி பிரிவினரால் தங்கலான் சாதியினர்
இந்த சூழ்நிலையில் யானை மலை அருகே தங்கப் புதையல் மலை இருப்பதை அறிகின்றனர் பிரிட்டிஷ்காரர்கள்.. பாம்புகள் தேள்கள் என ஆபத்து நிறைந்த அந்த பகுதியில் தங்கத்தை எடுக்க தங்கலான் உதவியை நாடுகின்றனர்..
சதியால் பறிகொடுத்த தன் நிலத்தை மீட்டெடுக்க வேறு வழியின்றி பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவுகிறார் விக்ரம்.. இதனால் ஆங்கிலேயர் போல ஆடைகளை உடுத்து அனுமதியும் கிடைக்கிறது வாழ்க்கை தரமும் உயருகிறது..
தன் சாதியினர் தன்னை போல உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என அவர்களுக்கும் அங்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார் விக்ரம். இந்த சூழ்நிலையில் பிரிட்டிஷ்காரர்களின் சதித்திட்டம் தெரிய வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
தங்கலான் விக்ரம் எங்கள் சொத்து.. என பெருமைப்பட்டுக் கொள்ளலாம் கோலிவுட் திரையுலகம்.. ஒரு சினிமாவுக்காக இப்படி எல்லாம் ஒரு நடிகனால்அர்ப்பணித்துக் கொள்ள முடியுமா? என ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார் விக்ரம்
கண்கள் உதடுகள் கைகள் கால்கள் தலைமுடி என ஒட்டுமொத்த உடலையும் நடிக்க வைத்திருக்கிறார் விக்ரம்.. இந்தப் படத்திற்காக பல விருதுகளை வெல்வார் விக்ரம் என உறுதியாக சொல்லலாம்..
விக்ரம் மனைவி கங்கம்மாவாக பார்வதி.. தமிழ் சினிமாவில் ஜாக்கெட் போடாமல் ஏதாவது ஒரு நாயகி நடிப்பாரா என்று கேட்டால் சந்தேகம்தான்.. கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என வைராக்கியம் கொண்ட பூ பார்வதி இதில் புயலாகவும் மாறி அசத்தியிருக்கிறார்.. முதன்முறையாக ஜாக்கெட் போடும் பெண்களின் மனநிலையை தன் நடிப்பில் உணர்த்திருக்கிறார்.. ஜாக்கெட் போடும் காட்சியில் விக்ரம் & பார்வதி பேசும் வசனங்கள் பாலுணர்வை தூண்டும்..
சூனியக்காரி ஆராத்தியாக மாளவிகா மோகனன்… இவருக்கு மட்டுமே மேக்கப் போட எத்தனை மணி நேரமானது தெரியவில்லை.. அலங்காரத்தில் அலற விட்டிருக்கிறார் ஆராத்தி மாளவிகா..
நாராயணதாசனாக பசுபதி.. இவர் தங்கலான் சாதியை சேர்ந்திருந்தாலும் பூணூல் போட்டு பிராமணர்களை கிண்டல் அடிக்கும் நபராக வந்திருக்கிறார்.. ரஞ்சித் இந்த போக்கை மாற்றிக் கொள்வாரா?
ஹாலிவுட் நடிகர் டேனியலும் தன் பங்குக்கு அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
டெக்னீசியன்ஸ்…
அட்டக்கத்தி மெட்ராஸ் கபாலி காலா சார்பட்டா பரம்பரை என வித்தியாசமான அரசியல் படங்களை கொடுத்த ரஞ்சித்திடம் இருந்து இப்படி ஒரு படமா என வேக வைத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்?
இந்தப் படத்தின் வெற்றிக்கு பாதி நடிகர்கள் என்றால் மீதி பாதி தொழில்நுட்ப கலைஞர்கள் தான் என அடித்து சொல்லலாம்.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.. ஒளிப்பதிவாளர் கிஷோர் கலை இயக்குனர் மூர்த்தி என திறமையான கலைஞர்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய திரைக்கதைக்கும் பாலம் அமைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
பதினெட்டாம் நூற்றாண்டில் காணப்பட்ட அரசியல், பீரியட் டிராமா என பூர்வக்குடி மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கி ஆவணப்படம் போலவும் கொடுத்திருக்கிறார் ரஞ்சித்.. நாளை வரும் இயக்குனர்கள் இந்தப் படத்தை பார்த்து பதினெட்டாம் நூற்றாண்டு வாழ்வியலை தெரிந்து கொள்ளலாம்..
அறுவடை & மினுக்கி பாடல்கள் பட்டைய கிளப்பும்… படையெடுத்து சீறும் பாம்புகள்.. கருஞ்சிறுத்தை.. காட்டெருமை காட்சிகள் என ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மிரள வைக்கும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் ஜீவி பிரகாஷ்..
கலை இயக்குனரும் காஸ்ட்யூம் டிசைனரும் பணியை அர்ப்பணிப்புடன் செய்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.. ஒவ்வொரு காட்சியிலும் 100 நடிகர்கள் இருப்பதால் அவர்களுக்கான ஒப்பனைகளை செய்யவே சில மணி நேரங்கள் ஆகியிருக்கும்.. அதை ஒவ்வொரு நாளும் செய்திருப்பது பெரும் சாதனை தான்…
லைவ் சவுண்ட் என்பதால் படங்களில் நிறைய காட்சிகளில் வசனங்கள் புரியவில்லை.. பிளாஷ்பேக்கில் வரும் விக்ரம் மற்றும் பசுபதியின் ஏகப்பட்ட வசனங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன..
பிரம்மாண்ட படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவுடன் இணைந்து தயாரித்திருக்கிறார் நீலம் புரொடக்ஷன் சார்பாக இயக்குனர் பா ரஞ்சித்..
இடைவேளைக்கு முன்பு வரை இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைவு.. முக்கியமாக ஃபிளாஷ்பேக் காட்சிகள் தேவையற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படைப்பு வந்து நமக்கெல்லாம் பெருமை.. இதுவே ஹாலிவுட் அல்லது மலையாள படமாக இருந்தால் இதை இன்னும் கொண்டாடி இருப்பார்கள் ரசிகர்கள்.. ஆனால் தமிழர்களை தான் பாராட்ட மாட்டார்களே..
ஆக தங்கலான்.. தமிழனின் தங்க தம்பி
Thangalaan movie review