தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தண்டுபாளையம் விமர்சனம்..- உதவி கேட்டால் உஷார்.!
டைகர் வெங்கட், சுமா ரங்கநாத், பூஜா காந்தி, சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், முமைத்கான், பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்ரமணி நடிப்பில் உருவான ‘தண்டுபாளையம்’..
டைகர் வெங்கட் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி தயாரித்து இருப்பதோடு, கே டி நாயக் என்பவருடன் இணைந்து இயக்கி இருக்கிறார்..
ஒன்லைன்…
தெருவில் போகும்போது வீடுகளை நோட்டமிட்டு வீட்டிற்கு வந்து தண்ணி கேட்பது போல கேட்டு திடீரென வீட்டுக்குள் நுழைந்து பெண்களை பலாத்காரம் செய்து நகை பணத்தை கொள்ளை அடிப்பது தான் கதை..
கன்னட மொழியில் 3 கோடி பட்ஜெட்டில் உருவாகி 2012 ஆண்டு வெளியான ‘தண்டுபால்யா’ படம் 42+ கோடி வசூல் செய்தது.. இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்றன. கன்னடத்தில் பூஜா காந்தி ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஸ்டோரி…
100+ கொலைகளுக்கு மேல் செய்த ‘தண்டுபாளையம்’ கும்பல் சம்பவத்தை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது..
வாழ வழி இல்லை என்று வேலை கேட்பது.. கையில் இருக்கும் கைக்குழந்தையை அழ வைத்து பால் கேட்பது… உதவி கேட்பது.. உணவு தண்ணீர் கேட்பது.. என வீட்டுக்குள் நுழைந்து பெண்களை பலாத்காரம் செய்து கொலை கொள்ளை அடித்து கொடூரமாக பதற வைக்கும் பின்னணி கொண்ட கும்பலை பிடிக்க போலீஸ் டைகர் வெங்கட் வருகிறார்.
அவர் இந்த கொடூர கொலை கும்பலை பிடித்தாரா? இறுதியில் என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை.
கேரக்டர்ஸ்….
கொடூரப் பெண்களாக சுமா ரங்கநாத், பூஜா காந்தி ஆகியோர் நடிப்பில் மிரள வைத்திருக்கின்றனர்.. இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கழுத்தை அறுத்து கொலை செய்யும் கொடூர காரிகளாக சோனியாவும் வனிதாவும் மாறி இருப்பது ஆச்சரியம்தான்.. இருவரும் குடிப்பது , சுருட்டு பிடிப்பது என வித்தியாசமான வேடத்தில்.. நடிப்பில் குறையில்லை.
இவர்களுடன் டைகர் வெங்கட்டும் மிரட்டி இருக்கிறார்.. சில இடங்களில் ஓவர் ஆக்டிங் கொடுத்திருக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
பலாத்காரம் மற்றும் கொடூரக் கொலைகளை செய்யும் கொள்ளைக்கார கும்பலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது..
கன்னடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை தமிழில் இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டம் கொடுத்திருக்கலாம்.
சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் படத்தின் தரம் குறைவாகவே தெரிகிறது.
ஜித்தின் கே ரோஷனின் இசையில் ஒரு பாடல் ஆட்டம் போட வைக்கும்.. இந்த கொடூர படத்திற்கு பின்னணி இசை பக்க பலமாக அமைந்திருக்கிறது..
ஆக நம் வீட்டிற்கு உதவி கேட்க வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மிகப்பெரிய எச்சரிக்கையை பதிவு செய்திருக்கிறது இந்த தண்டுபாளையம்.
Thandupalaiyam movie review