தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பார்க் விமர்சனம் 2.5/5.. பேய் காதலர்கள்
ஸ்டோரி…
திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடந்த கதையை பார்க் என்ற பெயரில் இயக்கி இருக்கிறார் படத்தின் இயக்குனர்.
நாயகன் தமன் நாயகி ஸ்வேதா ஒரே ஊரில் இருக்கும் போது அடிக்கடி சந்தித்துக் கொள்ள அதுவே அவர்களுக்குள் நெருக்கமாகி காதலாக மாறுகிறது..
பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.. அப்போது ஒரு கட்டத்தில் இவர்களுக்கு வில்லனால் பிரச்சனை ஏற்படும் போது ஓடிப்போய் அருகே உள்ள பூங்காவில் தஞ்சம் அடைகின்றனர்.
அப்போது அந்த பூங்காவில் உலாவி வரும் இரண்டு பேய்கள் இவர்களின் உடலில் புகுந்து விடுகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது? அந்தப் பேய்கள் இவர்களை குறி வைப்பது ஏன்.? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
‘ஒரு நொடி’ பட நாயகன் தமன் குமார் நடித்துள்ளார். நாயகியாக ஸ்வேதா டோரதி நடிக்க வில்லனாக யோகிராம் நடித்துள்ளார். பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான ஒரு நொடி படத்தில் கம்பீர போலீசாக நடித்திருந்தார் தமன் குமார்.. ஆனால் இந்த படத்தில் வழக்கம் போல தமிழ் சினிமா நாயகனாக மாறி இருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை ரொமாண்டிக் ஹீரோ இடைவேளைக்கு பின்பு பேய் பிடித்த ஹீரோ என ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார் தமன்..
அழகான நாயகியாக ஸ்வேதா.. இவரது கண்களும் உதடுகளும் ரசிக்க வைக்கிறது.. கவர்ச்சியில்லாத நேர்த்தியான உடைகளை உடுத்தி இறப்பது சிறப்பு..
பேய் என்பதால் முகத்தில் மட்டும் கொஞ்சம் மேக்கப் போட்டு உடம்பில் எந்த விதமான மாற்றமும் காட்டாமல் தன் வேலையை குறைத்துக் கொண்டிருக்கிறார்.
காமெடி செய்கிறேன் என்ற பெயரில் கடுப்பேத்தி இருக்கிறார் நடிகர் பிளாக் பாண்டி.. இவர்களுடன் ரஞ்சனா நாச்சியார் அழகிலும் நடிப்பிலும் மிரட்டி இருக்கிறார்.. வில்லன்களுக்கு வேலையில்லை..
டெக்னீசியன்ஸ்…
பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்ய ஹமரா சி.வி. என்பவர் இசையமைத்திருக்கிறார்.
கோயில் நகரம் என்று அழைக்கப்படும் திருவண்ணாமலையில் கோயில் அல்லாது கிராமத்து அழகை தன் கேமராவில் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..
பேய்க்கு ஏற்ற பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஆனால் பேய் வரும் போதெல்லாம் இருவரும் மூச்சு வாங்கும் அந்த வேகம் கொஞ்சம் செயற்கை தனமாக இருப்பதை தவிர்த்து இருக்கலாம்..
எடிட்டிங் குரு சூர்யா.. கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ்.. சுசித்ரா குரலில் ராபர்ட் மாஸ்டர் நடனமைத்த குத்தாட்ட பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
ஈ.கே.முருகன் இயக்கியுள்ளார் . இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்தவர். எனவே பல இடங்களில் வெங்கடேஷின் டைரக்டர் டச் தெரிகிறது..
அக்சயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் நடராஜ் ‘பார்க்’ படத்தை தயாரித்துள்ளார். நாயகி ஸ்வேதானவின் தந்தையாக நடித்தவர் தான் தயாரிப்பாளர் ஈ.நடராஜ்..
இடைவேளைக்கு முன்பு வரை காதல்.. இடைவேளைக்கு பின்பு பேயாட்டம் என இரண்டு கதைகளை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.. பேய் பழிவாங்கல் கதை இருந்தால் நிச்சயமாக ஒரு பிளாஷ்பேக் இருக்கும் தானே.. இந்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்ல
ஆனா ஃப்ளாஷ்பேக்கில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் பேய் படத்திற்கு பெரும் மதிப்பெண் கிடைத்திருக்கும்.
அடுத்து என்ன காட்சி நடக்கும் என நம்மால் முன்பு யூ கிக்க முடிவதால் பெரிதான சுவாரசியம் இல்லை.. ஆனால் ஒரு வித்தியாசம்.. பொதுவாக பேய் படங்களில் ஒன்று ஹீரோ பேயாக இருப்பார் அல்லது ஹீரோயின் பேயாக இருப்பார்.. இந்த படத்தில் இருவரையும் பேயாட்டம் ஆடி இருப்பது வித்தியாசமான ஒன்றுதான்.
வழக்கமான காதல்.. வழக்கமான பேய் பட வரிசையில் இந்த பார்க் இணையும்..!
Thaman Swetha starring Park review