டைரக்டர் கண்ணா.. இன்னா கண்றாவி இது.? தள்ளிப் போகாதே விமர்சனம் 1.25/5

டைரக்டர் கண்ணா.. இன்னா கண்றாவி இது.? தள்ளிப் போகாதே விமர்சனம் 1.25/5

ஒன்லைன்… நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017ல் தெலுங்கில் வெளியான ‘நின்னுக் கோரி’ பட ரீமேக் இது.

தன் கணவன் அனுமதியுடன் தன் முன்னாள் காதலனை வீட்டிற்கு அழைத்து 10 நாட்கள் தங்க வைக்கும் மனைவி ஏன்..?

இந்தப் படம் டிசம்பர் 24ல் ரிலீசாகிறது என்பதே புரொடியூசர் மற்றும் புரோமோசன் டீமுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்.

கதைக்களம்..

பரதநாட்டியம் பயிற்சி எடுக்கும் அனுபமா பரமேஸ்வரன் ஒரு நாள் அதர்வா போட்ட குத்தாட்டத்தை பார்த்து தான் அவரை டான்ஸ் மாஸ்டராக செலக்ட் செய்து குத்தாட்டம் கற்றுக் கொள்ள நினைக்கிறார்.

பின்னர் என்ன… நாளடையில் அதர்வா அனுபமா காதலிக்கிறார்கள்.

தன் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் எனவே இப்போதே கல்யாணம் செய்துக் கொள் என வற்புறுத்துகிறார் அனு.

ஆனால் தன்னுடைய பி.ஹெச்டி படிப்பு முக்கியம் என கல்யாணத்திற்கு மறுக்கிறார் அதர்வா.

வேறுவழியில்லாமல் அமிதாஷ் பிரதானை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகியார் அனுபமா.

சில மாதங்களுக்கு பிறகு அதர்வாவும், அனுபமாவும் சந்தித்துக் கொள்ள, நீ நடிக்கிறாய்.. உன் கணவனுடன் நீ சந்தோஷமாக இல்லை என அதர்வா சொல்கிறார்.

நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என அனுபமா சொல்கிறார். ஒரு கட்டத்தில் இது விவாதமாகி சவாலாக மாறுகிறது.

என் வீட்டில் வந்து 10 நாட்கள் தங்கி செல்.. என் கணவருடன் நான் சந்தோஷமாக இருப்பது உனக்கு தெரியும் என்கிறார். அதன்படி தன் காதலனை கணவர் அனுமதியுடன் தங்க வைக்கிறார் அனுபமா.

10 நாட்களில் அந்த வீட்டில் என்னென்ன நடந்தது.? சவாலில் வென்றது யார்? என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

ஸ்மார்ட்டாக இருக்கிறார் அதர்வா. ஆனால் நடிக்க வாய்ப்பு தரவில்லையா.? இல்லை இந்த படத்திற்கு இவ்வளவு நடிப்பு போதும் என நினைத்துவிட்டாரோ என்னவோ..? எக்ஸ்பிரசன்ஸ் பெரிதாக இல்லை. அதுவும் ஒரு காட்சியில் அழும்போது நமக்கு சிரிப்பு வருகிறது.

கண்களில் மை பூசி வண்ண வண்ண உடைகளில் வந்து கவர்கிறார் அனுபமா. ஆனால் காதலனை பிரியும் போது பெரிதாக உணர்வு இல்லை.

அனுபமாவின் கணவராக அமிதாஷ் பிரதான். வழக்கமான பாரீன் மாப்பிள்ளை கேரக்டர்.

ஆடுகளம் நரேன், காளிவெங்கட், வித்யூலேகா ராமன், RS சிவாஜி, என பலர் இருந்தும் காமெடி காட்சிகளோ..சென்டிமெண்ட காட்சிகளோ இல்லை. படத்தில் ஜெகன் இருந்தார்.. இருந்தும் காமெடி காணல.. பின்னர் அவரையும் காணல.

அதர்வா அண்ட் அனுபமா.? ஆல் யூ ஆல்ரைட்.. எப்படி இந்த கதைக்கு ஓகே சொன்னீங்க..

டெக்னீஷியன்கள்…

கோபி சுந்தர் இசையில் ஓரிரு பாடல் ஓகே. பின்னணி இசை கவரவில்லை.

ஒளிப்பதிவாளர் சண்முகம் சுந்தரம் தான் இந்த படத்தை பார்க்க நம்மை வைத்துள்ளார். இந்தியா மற்றும் வெளிநாட்டு காட்சிகளில் நம்மை கவர்கிறார். தயாரிப்பு – மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷனஸ்

டைரக்டர் கண்ணா.. இன்னா கண்றாவி இது.?

புருசன் சரியில்லை என்றால் அந்த பெண் மீண்டும் காதலருடன் போகலாம். அதில் கூட ஒரு லாஜிக் இருக்கு. ஆனால் தன் மகள் கல்யாணத்திற்கு முன்பு ஒருவனை காதலித்தாள் என்பதை இப்போது அறியும் தந்தை கணவனை விட்டு விடு.. காதலனுடன் சேர்த்து வைக்கிறேன் என முயல்வது எல்லாம் இன்னா கண்றாவியா இது..?

ஒருவேளை இவரின் மனைவி கல்யாணத்திற்கு முன் ஒருவனை காதலித்து இருந்தால் இவரு தன் மனைவியை அவளின் காதலனுடன் சேர்த்து வைப்பாரா.?

அதுபோல் தன் மனைவியின் முன்னாள் காதலனை தன் வீட்டில் ஒரு கணவர் அனுமதிப்பாரா.? இன்னய்யா படம் எடுக்கிறீங்க..? இந்த காட்சிகளை இந்தியாவில் எடுத்தால் சரியிருக்காது என்பதால் அந்த காட்சிகளை மட்டும் வெளிநாட்டில் சூட்டிங் வைத்துவிட்டீர்கள்.. இது தமிழ் படம் தானே..??

இந்த படம் டிசம்பர் 24 ரிலீஸ் ஆகுதுன்னு புரொடியூசருக்கு மட்டும் தெரிந்தால் போதுமா..? மீடியாக்களுக்கே தெரியலையே… சூப்பர்
புரோமோசன்.. வச்சி செஞ்சிருக்காங்க சாரே…

ஆக.. தள்ளிப்போகாதே.. தயவு செஞ்சு தள்ளிப் போய்டுங்க…

Thalli Pogathey review rating

குடும்ப பாசமும். வெண்பா பிரசவமும்..; ஆனந்தம் விளையாடும் வீடு விமர்சனம் 3.25/5

குடும்ப பாசமும். வெண்பா பிரசவமும்..; ஆனந்தம் விளையாடும் வீடு விமர்சனம் 3.25/5

ஒன்லைன்… அண்ணன் தம்பி பாசக்கதையை ஆனந்தமாக சொல்ல வந்துள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.

கதைக்களம்..

திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பெரிய குடும்பம். இதில் பெரிய ஆம்பளை (ஜோ மல்லூரி). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சரவணன், விக்னேஷ், சினேகன் உள்ளிட்ட மகன்கள்.

இதில் சரவணன் மகன் கௌதம் கார்த்திக், மகள் வெண்பா.

இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, செளந்தரராஜா உள்ளிட்ட மகன்கள். தன் அண்ணன் சரவணன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்துள்ளார் சேரன்.

இந்த குடும்பத்தின் மூத்த பெண் வெண்பாவுக்கு திருமணம் நடக்கிறது. சில மாதங்களில் கர்ப்பமாகிறார் வெண்பா.

வெண்பாவின் குழந்தை தங்கள் புதிய வீட்டில் பிறக்க வேண்டும் என நினைக்கிறார் சரவணன்.

எனவே தன் அண்ணனுக்காக தங்கள் குடும்ப நிலத்தை கொடுக்கிறார் சேரன்.

சரி.. நிலம் உன்னோடது. வீடு நான் கட்டுகிறேன். நாம் அனைவரும் இங்கேயே பெரிய வீடு கட்டி வசிக்கலாம் என்கிறார் சரவணன். அதன்படி வீடு கட்டும் பணி நடக்கிறது.

இந்த கட்டத்தில் குடிக்காரன்களான செல்லா மற்றும் சௌந்தர்ராஜா மூலம் அந்த குடும்பத்தை பிரிக்க நினைக்கிறார் வில்லன் டேனியல் பாலாஜி.

அதன்படி குடும்பத்தில் சண்டை பிறக்கிறது. சொத்தை பிரிக்க சொல்கின்றனர். வீடு கட்டும் பணி நிற்கிறது.

டேனியல் போட்ட திட்டம் என்ன..? அண்ணன் தம்பி சண்டை என்னாச்சு.? வீடு கட்டும் பணி நிறைவடைந்ததா.? வெண்பா பிரசவம் எங்கு நடந்தது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கௌதம் மற்றும் சேரனை படத்தின் 2 நாயகர்கள் எனலாம். ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் கௌதம் பாஸ் மார்க் பெறுகிறார். ஆனால் சென்டிமெண்ட் காட்சிகளில் சொதப்பல். முகபாவனைகளே இல்லை.

மாபெரும் இயக்குனர் சேரன் இதில் முத்துப்பாண்டியாக நடித்திருக்கிறார். எதற்காகவும் அண்ணனை விட்டுக் கொடுக்காத இவரை பார்க்கும்போது இப்படி ஒருவர் கிடைக்கமாட்டாரா? என ஏங்க வைக்கிறார். அண்ணனுக்காக தன் மனைவியை அதட்டுவதும் ரசிக்க வைக்கிறது.

சேரனின் மனைவியாக சூசன். (மைனா புகழ்).. முதலில் அமைதியான சூசன் பின்னர் கணவனை மிரட்டுவதில் சூறாவளி சூசன்தான். (மைனா முதல் ஆனந்தம் விளையாடும் வீடு வரை..)

நாயகர்களை போல படத்தில் 2 நாயகிகள் எனலாம். ஷிவாத்மிகா மற்றும் வெண்பா…

நல்ல உயரம்.. நல்ல உடல்வாகு.. நல்ல நடனம் என ஷிவாத்மிகா கவர்கிறார்.

இந்த படத்தின் கதையே வெண்பாவின் பிரசவத்தை மையப்படுத்தியே நகர்ந்துள்ளது. எனவே செல்வி கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார் வெண்பா. தாவணியிலும் சரி.. சேலையிலும் சரி.. அம்புட்டு அழகு.

எல்லா பிரச்சினைக்கு நான்தான் காரணம் என வெண்பா அழும்போது நம்மையும் அழவைத்துவிடுகிறார்.

சௌந்தர்ராஜா மற்றும் செல்லா (அழகர்) அண்ணன் கேரக்டர் சூப்பர். இருவரும் ரியல் குடிகாரர்களாக அசத்தியுள்ளனர். பணத்திற்காக ஆசைப்பட்டு குடும்பத்தை பிரிப்பதில் வல்லவர்களாக தெரிகின்றனர்.

பல படங்களில் மிரட்டலாக பார்த்துள்ள சரவணன் இதில் சாந்த சொரூபியாக அசத்தியிருக்கிறார். இவரின் மனைவியாக மௌனிகா நடிப்பில் கச்சிதம்.

ஜோ மல்லுரி மற்றும் நக்கலைட் தனம் இருவரும் தங்கள் அனுபவ நடிப்பில் ஓகே.

டேனியல் பாலாஜி மற்றும் நமோ நாராயணன். திட்டம் போடுவதில் கில்லாடிகள். சிங்கம் புலி காமெடி பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை. இவரும் மொட்டை ராஜேந்திரன் செய்யும் டபுள் மீனிங் காமெடி தேவையில்லை.

மொட்டை ராஜேந்திரன் மதுமிதா மற்றும் டபுள் பொண்டாட்டி காட்சிகளை வெட்டியிருக்கலாம் எடிட்டர் ஸ்ரீகாந்த்.

மற்றொரு அழகு சித்தியாக சிந்துஜா.. அளவான நடிப்பு. மேஸ்திரியாக சூப்பர் குட் சுப்ரமணி. வாய்பேச முடியாத முனீஷ்ராஜ் நடிப்பு அருமை. இவரின் மனைவி சுபாதினி நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

ஸ்ரீபிரியங்காவை நாம் பார்ப்பதற்குள் மின்னல்போல காணாமல் போகிறார். பின்னர் வருகிறார். ஆனால் படம் முழுக்க பெரும்பாலும் ஆரஞ்ச் கலர் தாவணியில் வருகிறார் ஏனோ..? இவரின் அம்மாவாக சுஜாதா.

வெளிநாட்டில் வேலை செய்யும் ஐடி அண்ணனாக சினேகன். சித்தப்பா விக்னேஷ்க்கு பெரிதாக வேலையில்லை.

டெக்னீஷியன்கள்…

ஹரி தினேஷின் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது. பொர்ரா பாலபரணியின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமளிக்கிறது. கிராமத்து பசுமையை ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்.

சித்துகுமாரின் இசையில் பாடல்கள் பெரிய பலம். அதிலும் “சொந்தமுள்ள வாழ்க்கை…” பாடல் குடும்பங்களின் பேவேரைட் பாடலாக மாறும்.. ஆனால் இதே பாடல் 2-3 முறை வருவது தேவையா? சந்தோஷமான பாடல் சோகமான காட்சிகளிலும் வருகிறது. வரிகளை மாற்றி இன்னும் சோகமாக கொடுத்திருக்கலாம்.

ஜிவி பிரகாஷ் மற்றும் ஷிவாங்கி பாடியுள்ள.. என் உசுருப்புள்ள பாடல்.. அழகான மெலோடி.. இருவரின் குரல்கள் நல்ல தேர்வு.

கட்டி கரும்பே… சாங் டான்ஸ் சூப்பர். (தினேஷ் ராதிகா மாஸ்டர்ஸ் செம…)

இயக்கம் பற்றிய அலசல்…

இன்றைய நவீன காலத்தில் பல குடும்பங்களில் ஒரு குழந்தையே உள்ளது. எனவே பலருக்கு அண்ணன் தம்பி உறவுகளின் அருமை தெரிவது இல்லை. இந்த படத்தை பார்த்தால் பலருக்கு அதுபுரியும்.

இவ்வளவு ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை முழுவதுமாக காட்டியிருக்கலாம். சரவணன் விபத்து… கௌதம் சண்டை.. வெண்பா பிரசவம்.. என திடீரென முடித்திருப்பது கொஞ்சம் வருத்தம் தான்.

அதே சமயம் கூடி வாழ்ந்தால் நம்மை யாரும் பிரிக்க முடியாது என்பதையும் படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளுக்குள் விளக்கியுள்ளார் இயக்குனர். நந்தா பெரியசாமி.

படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிகிறது. பத்திர பதிவு… வலது கை விரல் சாட்சி கையெழுத்து ஆகியவை மட்டுமே ரசிக்க வைக்கிறது.

சிங்கம் புலி மொட்டை ராஜேந்திரனுக்கு ஆகியோர் இருப்பதால் படத்தில் கொஞ்சம் நகைக்சுவையை வைத்திருந்தால் குடும்ப சுவை கூடியிருக்கும்.

ஆக.. இந்த ஆனந்தம் விளையாடும் வீட்டில் என்றும் பேரின்பமே..

Anandham Vilaiyadum Veedu movie review and rating in Tamil

ராங் ரூட் போலீசுக்கு ரைட் பாடம்..; ரைட்டர் விமர்சனம் 4.25/5

ராங் ரூட் போலீசுக்கு ரைட் பாடம்..; ரைட்டர் விமர்சனம் 4.25/5

ஒன்லைன்.. அதிகார வர்க்கத்தில் சிக்கிக் கொண்ட ஒரு நேர்மையான போலீஸ் ரைட்டரின் வாழ்க்கை பதிவு.

கதைக்களம்..

தங்கதுரை (சமுத்திரக்கனி) ஒரு போலீஸ் ஸ்டேசனில் ஒரு ரைட்டர். இவர் ரெண்டு பொண்டாட்டி போலீஸ்காரர். தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். ரிட்டையர் ஆகும் வரையில் இதே பாணியை கடைப்பிடிக்கிறார்.

அதே சமயம் காவலர்களுக்கென ஒரு யூனியன் வேண்டும் என பலமுறை கோர்ட் படிகளில் ஏறி நிற்கிறார். இதனால் இவருக்கு சக காவலர்களின் ஆதரவு உண்டு.

ஆனால் இவரின் நடவடிக்கையால் சிலர் உயரதிகாரிகள் இவரை திட்டி தீர்க்கின்றனர். அதன் உச்சக்கட்டமாக போலீஸ் போஸ் வெங்கட் இவரை அடித்து சென்னைக்கு பணி மாற்றம் செய்துவிடுகிறார்.

சென்னை போலீஸ் ஸ்டேசனில் இவருக்கு ஒரு பொய் வழக்கு குற்றவாளியான ஹரியை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதாவது சிறைச்சாலையில் இல்லாமல் ஒரு லாட்ஜில் குற்றவாளியை தங்க வைக்கிறார் டெபூடி கமிஷ்னர்.

இதனை அறிந்துக் கொள்ளும் சமுத்திரக்கனி ஸ்டேசனில் பணிபுரியும் ஒரு திருடன் (ஆன்டனி) உதவியுடன் ஹரியை காப்பாற்ற நினைக்கிறார்.

ஹரி மீது போலீஸ் பொய் வழக்கு போட என்ன காரணம்..? ஹரிக்கு எப்படி உதவினார் ரைட்டர் சமுத்திரக்கனி. இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

சமுத்திரக்கனி படங்கள் என்றாலே அட்வைஸ் மழைதான்… எனவே நீங்கள் அதிகம் பேச வேண்டாம். உங்கள் நடிப்பு அதிகம் பேசட்டும் என சமுத்திரக்கனிக்கு இயக்குனர் பிராங்க்ளின் சொல்லி வேலை வாங்கியிருக்கிறார்.

இன்னும் சில மாதங்களில் ரிட்டையர் ஆக போகிற ஒரு கேரக்டர். அப்படியே பாடிலாங்குவேஜில் அதை உணர்ந்து நடித்திருக்கிறார். சபாஷ் சமுத்திரக்கனி.

ரெண்டு பொண்டாட்டிகாரர்.. லேட்டாக குழந்தை பிறந்தல்… தினமும் இரவில் சரக்கு… போனில் பொண்டாட்டி தொல்லை.. தொப்பை தள்ளிய போலீஸ்.. படிக்கும்போது கண்ணாடி.. என தன் நடிப்பில் அடுத்த பரிமாணத்தை காட்டியிருக்கிறார்.

இனியா சில காட்சிகளிலே வந்தாலும் இளமை.. இனிமை என காட்டி நடித்திருக்கிறார்.

பொய் குற்றவாளியாக ஹரி கிருஷ்ணன்.. என் கௌண்டரில் இவரை போலீஸ் நிறுத்தும்போது இவர் கதறும் நடிப்பு அக்மார்க் உயிர்பிச்சை கேட்கும் தருணம்.. (மெட்ராஸ் படத்தில் ஜானியாக நடித்தவர் தான் இவர்)

ஹரியின் அண்ணனாக திருடா திருடி பட இயக்குனர் சுப்ரமணிய சிவா நடித்திருக்கிறார்.. அடடா.. இன்னா நடிப்புய்யா.. சூப்பர் சுபு.. தன் தம்பி மேல் தவறு இல்லை என தெரிந்தாலும் அதிகாரவர்க்கத்திடம் இவர் காட்டும் பவ்யம்… சாமானிய மனிதர்களை கண்முன் நிறுத்துகிறது.

வக்கீலாக வரும் ஜிஎம் சுந்தர்.. வக்கீலுக்கு மட்டும்தான் போலீஸ் பயப்படுவார்கள். எனவே அதற்கேற்ப கெத்து காட்டியிருக்கிறார் ஜிஎம் சுந்தர். போலீஸ் ஸ்டேசனில் இவர் கால் மேல் கால் போட்டு நடந்துக் கொள்ளும் விதம் அருமை.

திருந்திய குற்றவாளி.. போலீஸ் ஸ்டேசனில் உதவி செய்யும் ஆன்டனி.. அமர்க்களப்படுத்தியிருக்கிறார். (இவர் மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் நாயகன்).

உங்ககிட்ட வேலை செய்றதுக்கு ஜெயில்ல இருந்திருக்கலாம்…. என்பதாகட்டும்.. போலீஸ்ல நல்லவங்க இருக்காங்க ஆனா இப்போ அவங்கல்லாம் இறந்துட்டாங்க… என இவர் பேசும் வசனங்கள் கைத்தட்ட வைக்கிறது.

சமுத்திரக்கனியின் ரெண்டு பொண்டாட்டிகளும் கொடுக்கபட்ட கேரக்டரில் கச்சிதம். இன்ஸ்பெக்டராக கவிதா பாரதி.. தினமும் போலீஸ் ஸ்டேசனுக்கு லேட்டாக வந்து வாங்கி கட்டிக் கொள்வது ரசிக்க வைக்கிறது.

டெபூடி கமிஷ்னராக (வில்லனாக) வடநாட்டு போலீஸ் கேரக்டரில் நடித்தவர் மிரட்டல் நடிப்பு. இவர் ப்ளான் போடும் அனைத்தும் வேறலெவல். தங்கோதுரை என இவர் பேசும் தமிழும் ரசிக்க வைக்கிறது. இவரை பார்க்கும் ரசிகர்கள் இவர் மேல் நிச்சயம் எரிச்சல் அடைவார்கள். அப்படியொரு மிகையில்லாத நடிப்பை கொடுத்துள்ளார்.

டெக்னிஷியன்கள்..

96 படப்புகழ் கோவிந்த வசந்தா இந்த படத்திற்கு இசையைமத்துள்ளார். தேவைக்கேற்ப பின்னனி இசையை கொடுத்து பாடல்களையும் ரசிக்க வைத்துள்ளார்.

பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படத்தினை தாங்கி நிற்கிறது. திருச்சி மற்றும் சென்னை காட்சிகளை நம் கண்முன் கொடுத்துள்ளார்.

ஒரு போலீஸ் ஸ்டேசன் மற்றும் ஜெயில் எப்படி இருக்கும் என்பதை கலை இயக்குனர் ராஜா அழகாக வடிவமைத்துள்ளார்.

மணிகண்டன் சிவக்குமாரின் எடிட்டிங் கச்சிதம். படத்தின் கதைக்கேற்ப காட்சிகள் இருப்பதால் எங்கும் வெட்டிவிடவில்லை.

போலீஸ் ஸ்டேசனில் க்ரைம் ரேட்டை குறைக்க போலீஸ் போடும் திட்டங்கள் வேற லெவல்… டிவிஎஸ் 50 காணவில்லை என புகார் அளித்தவருக்கு வேறு ஒரு பைக் கொடுப்பது.. 6 பவுன் நகை காணவில்லை என புகார் அளித்தவருக்கு 3 பவுன் நகை கொடுத்து அவர்களின் வழக்குகளை வாபஸ் வாங்க வைப்பது என போலீஸ் ஸ்டேசனின் பொய்களை தோலுரித்துள்ளார் இயக்குனர்.

இவையில்லாமல் அப்பாவிகளை குற்றவாளிகளாக்கும் காவல் கயவர்களை அடையாளம் காட்டியிருக்கிறார் இயக்குனர் ப்ராங்ளின் ஜேக்கப்.

க்ளைமாக்ஸ் சமயத்தின் 10 நிமிட காட்சிகள் நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து கைத்தட்ட வைத்தும் விட்டார் டைரக்டர்.

ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன் என்ன? அது இருந்தும் அதனால் பெரும் பயனில்லை என்பதையும் RTI என்றாலே பயமே உள்ளது என்பதையும் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

ஒரு போலீஸ் ரைட்டரின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்துள்ளனர்.

அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி, யு எம் ராவ் உள்ளிட்டோருடன் இணைந்து படத்தை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்.

பரியேறும் பெருமாள்.. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என இரண்டு வெற்றிகளை தொடர்ந்து ரைட்டர் படத்தின் மூலம் தன் ஹாட்ரிக் வெற்றி அடித்துள்ளார் ரஞ்சித்.

ஆக… ராங் ரூட் போலீசுக்கு ரைட்டான பாடம் இந்த ரைட்டர்.

Writer movie review and rating in Tamil

இதயத்தின் பக்கம்.. இறுதி பக்கம் விமர்சனம் 4/5

இதயத்தின் பக்கம்.. இறுதி பக்கம் விமர்சனம் 4/5

ஒன்லைன்.. நாவல் கதை பாணியில் ஒரு த்ரில்லர் பயணம்.

மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன், விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் சிலம்பரசன், கிருபாகர், செல்வி வெங்கடாசலம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

கதைக்களம்..

கதையின் நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசன். இவர் பிரபல எழுத்தாளர். இயல் என்ற பெயரில் தான் சந்தித்த அனுபவங்களை மிகவும் சுவாரஸ்யமாக நாவலாக எழுதுபவர்.

ஒரு நாவல் எழுதவேண்டும் என்றால் தானே அந்த கேரக்டராக நம் நிஜவாழ்வில் மாற வேண்டும் என நினைப்பவர்.

இவர் தன் வீட்டில் தனியாக இருக்கும் போது உதவி கேட்டு ஒரு நபர் வருகிறார். இவரும் உள்ளே அனுமதிக்க திடீரென அந்த மர்ம நபர் அம்ருதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுகிறார்.

எனவே இந்த கொலை வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரன்.

இது கூலிக்காக கொலை செய்யும் கூட்டம் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார் ராஜேஷ். ஆனால் கொலைக்கான நோக்கம் என்ன? யார் கொலை செய்தார்கள்..? அப்படி என்ன குற்றம் செய்தார் நாவலாசிரியர்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

இயல் என்றால் இயற்கை என்ற பொருள் உண்டு. எனவே தன் எழுத்துக்களை இயற்கையாகவே காட்டியுள்ளார். அதாவது செயற்கையாக இல்லாமல் வாழ்ந்திருக்கிறார் அம்ருதா.

இவரின் குரல் படத்தின் பெரிய பலம். வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுத்தம் திருத்தமாக அழகான உச்சரிப்புடன் உள்ளது. அப்படியொரு வாய்ஸ் ஓவரில் படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

நல்ல கதையாக இருந்தால் அந்த வாய்ப்புகள் இனி இவரைத் தேடி வரும்.

இன்ஸ்பெக்டராக ராஜேஷ். நான் ஓவர் திங்கிங் ஆள் கிடையாது. என் அப்பா போலீஸ். அவர் இறந்துவிட்டதால் எனக்கு இந்த வேலை கிடைத்துவிட்டது. அதில் என்னால் முடிந்தவரை நேர்மையாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறேன் என இவர் ஜெனிபரிடம் சொல்லும்போது யதார்த்தமாக இருக்கிறது.

காதலனாக வரும் விக்னேஷ் சண்முகம் சரியான தேர்வு. காதலியை துரத்துவதும். பின்னர் விலகுவதும்.. அதன்பின்னர் கூடுவதும் என யதார்த்த நாயகனாக தெரிகிறார்.

காமமா? காதலா? என்ற தவிப்பில் இவர் காதலியை கைவிடும் காட்சிகளில் ஆண்கள் பெருமைப்பட்டு கொள்ளலாம். (சில ஆண்கள்.. ஹிஹிஹி)

இவரைப்போல மற்ற கேரக்டர்களில் வரும் நபர்களும் சரியான நடிப்பை கொடுத்துள்ளனர். எங்குமே மிகைப்படுத்தப்படாத நடிப்பை காணலாம்.

டெக்னிஷியன்கள்..

படத்தின் பின்னணி இசையும் வசனங்களும் பாராட்டும் வகையில் உள்ளது. ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை நன்றாக உள்ளது. கூடுதல் கவனத்தை பெறும்.

பிரவின் பாலுவின் ஒளிப்பதிவு நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. காட்சிகளின் லைட்டிங் சென்ஸ் நன்றாக உள்ளது.

இதுபோன்ற திரைக்கதைகள் நம்மை சில நேரத்தில் குழப்பி விடலாம். அண்மையில் க் என்ற படம் கொஞ்சம் அதுமாதிரிதான். ஆனால் 2 முறை பார்த்தால் படம் புரியலாம்.

இந்த படத்தில் கதையை பாமர ரசிகனுக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன்.

இயக்குனர் மனோ வெ கண்ணதாசன் என்பவருக்கு இது முதல் படம் என அவரே சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்.. யதார்த்த கதை.. அதில் நாவல்… என அழகாக திரைக்கதை அமைத்துள்ளார்.

படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் இருப்பதால் எதையும் சொல்ல இயலாது. அதுவும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

கொலைக்கான காரணத்தில் ஒரு மைனஸ் ஒன்று உள்ளது என்றாலும் அதை சொன்னாலும் படத்தின் ட்விஸ்ட் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் அதை விட்டு விடுகிறோம்.

கொலையாளி என்றாலும் அவனுக்கு ஒரு காரணம் இருக்கும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறோம்.

ஆக.. சில படங்கள் நம் இதயத்திற்கு நெருக்கமான பக்கத்தில் இருக்கும். அந்த வகையில் இறுதிபக்கம்.. நம் இதயத்தின் பக்கம் எனலாம்.

Iruthi Pakkam movie review and rating in tamil

கொக்கியில் சிக்கியதா..? வரிசி விமர்சனம்

கொக்கியில் சிக்கியதா..? வரிசி விமர்சனம்

ஒன்லைன்.. வரிசி என்றால் கொக்கி என பொருள்

படத்தின் இயக்குனர் கார்த்திக் தாஸே கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

கார்த்திக் தாஸ், சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா, மனோஜ், ஜெயஸ்ரீ, கணேஷ், பாலாஜி ராஜசேகர், மதுமிதா, அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்..

ஐடி கம்பெனியில் பணிபுரியும் பெண் ஒருவரை ஒரு நபர் கடத்தி கற்பழித்து கொலை செய்துவிடுகிறான். இந்த வழக்கை விசாரிக்கிறார் சிபிஐ கிருஷ்ணா.

அனுபமா தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அதில் உள்ள 4 பிள்ளைகளை தன் பிள்ளை போல வளர்க்கிறார். நாயகன் கார்த்திக் தாஸ், சப்னா, மனோஜ், மற்றும் கார்த்தி ஆகியோரே.

இவர்கள் ஐடி துறையில் சிறந்த வல்லுனர்களாக விளங்குகிறார்கள். இதனால் இவர்களால் ஒரு சில விஷயங்களை முன்கூட்டியே கணிக்க இயல்கிறது.

இதில் கார்த்திக் தாஸும் சப்னாவும் அனுபமாவுக்கு தெரிந்தே காதலிக்கிறர்கள். இவர்களின் பக்கத்து வீட்டு திருமணமான மதுமிதாவுக்கு கார்த்திக் மீது ஒரு கண்.

விரைவில் கார்த்திக் மற்றும் ஷப்னா திருமணம் செய்ய நினைக்கிறார்கள். அந்த கட்டத்தில் சப்னாவும் கடத்தப்படுகிறார்.

சப்னாவை கடத்தியவர் யார்.? சிபிஐ கிருஷ்ணா இந்த வழக்கை எப்படி கண்டுபிடித்து முடித்தார்.? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

நாயகன் இயக்குனர் இருவரும் ஒருவரே கார்த்திக் தாஸ். தன் முதல் படத்திலேயே இந்த ரிஸ்க் தேவையா? ஆக்சனில் நன்றாக நடித்தாலும் இன்னும் போதுமான முகபாவனைகள் இல்லை. ரொமான்ஸ் காட்சியும் சிறப்பாக இல்லை.

ஆனால் ஒரு இயக்குனராக ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ள கார்த்திக் தாஸை நிச்சயம் பாராட்ட வேண்டும். தன் மேல் பழிவிழாமல் இவர் செய்யும் திட்டங்கள் பலே ஐடியா.

நாயகி சப்னா தாஸ் நடிப்பிலும் அழகிலும் தன்னை இன்னும் மெருகென்ற வேண்டும். சிபிஐ அதிகாரி கிருஷ்ணா கொடுத்த கேரக்டரில் கச்சிதம். ஆனால் இன்னும் கம்பீரம் போதவில்லை.

நண்பனாக மனோஜ் மற்றும் இவரின் காதலி ஜெயஸ்ரீ ஆகியோர் ஓகே.

மதுமிதா ஏன் படத்தில் நடித்தார்? என்பது அவருக்கே வெளிச்சம். இவரின் காட்சிகளை தாராளமாக வெட்டியிருந்தால் படத்தின் நீளம் குறைந்திருக்கும்.

முதல் பாதியில் தேவையில்லாத ஏகப்பட்ட பாடல்களை கொடுத்துள்ளார் இயக்குனர். எனவே இரண்டாம் பாதியில் கதை சொல்கிறார். அதுவும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு ப்ளாஷ்பேக் வேற.

பாலியல் குற்றங்கள்.. காவல்துறை விசாரணை என வழக்கமான கதைக்களமாக இருந்தாலும் அதை ஐடி தொழில்நுட்ப உதவியுடன் கிராபிக்ஸ் காட்சிகளுடன் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. எனவே எடுத்த முயற்சியை பாராட்டலாம்.

மிதுன் மோகன் தன் ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம். லைட்டிங் சரியில்லையோ என்னவோ? படத்துடன் ஒன்ற முடியவில்லை.

நந்தாவின் இசையில் ஒரு பாடல் ஓகே. மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசை சில இடங்களில் நம்மை நிமிர வைக்கிறது.

பெண்களை காம பொருளாக பார்க்கும் சில கொடூரர்களின் முகத்திரைகளை இந்த படத்தில் கிழித்திருக்கிறார் இயக்குனர். அதிலும் காவல்துறைக்கே சவால் விடும் விதத்தில் படத்தை கார்த்திக் தாஸ் முடித்திருப்பது சபாஷ் ரகம்.

Varisi movie review and rating in tamil

உ(ரு)த்ர தாண்டவம்..; உத்ரா விமர்சனம்

உ(ரு)த்ர தாண்டவம்..; உத்ரா விமர்சனம்

ஒன்லைன்.. நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் தரிசிக்க அம்மன் படம் வந்துள்ளது. இனி அம்மன் திருவிழா தியேட்டர்களில் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை.

இந்த படம் இந்த மாதம் டிசம்பர் 10ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.

கதைக்களம்..

வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை. அங்கு திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது.

அப்படியே, அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள். இதன் பின்னணி என்ன-? என்பதே இந்த உத்ரா.

கேரக்டர்கள்..

கல்லூரி ஜோடிகள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். ஆக்சன் காட்சிகளில் ஓகே ரகம்தான்.

இதில் நடிகை கௌசல்யா அம்மனாக நடித்துள்ளார். அமைதியான அழகான அம்மனாக வந்து செல்கிறார். சில அட்வைஸ்களும் செய்கிறார்.

கதையின் நாயகி உத்ராவாக ரக்ஷா நடித்துள்ளார். ரக்ஷாவை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

ப்ளாஷ்பேக்கில் அம்மனுக்காக உருகுவது முதல் பேயான பின்னர் அம்மனுடன் மோதுவது என தன் நடிப்பை அழகாக காட்டியுள்ளார். காதல் காட்சிகள் செயற்கைத்தனமாக உள்ளது.

அதுபோல் தன் காதலுக்காக ஊர் பெரியவர்களை எதிர்ப்பதாகட்டும் அதே காதலனுக்காக ஊர் மக்களிடம் கெஞ்சுவதாகட்டும் இரண்டிலும் ரசிக்க வைக்கிறார் ரக்ஷா. ஹீரோவுக்கு பெரிதாக வேலையில்லை. பாவம்.

வில்லனாக வரும் மாசி தன் நடிப்பில் மிரட்ட முயற்சித்துள்ளார். ஆனால் இவர் ப்ளாஷ்பேக்கிலும் அதே போல உள்ளார். பின்னர் வரும் காட்சியிலும் அதே இளமையுடன் உள்ளார். அதுஎப்படி..? மற்றவர்களுக்கு மட்டும் வயதாகிவிட்டதோ…??

இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரிக்க நவீன் கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். சாய்தேவ் இசை அமைக்க, ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக உள்ளது. இரண்டாம் பாதியில்தான் படமே தொடங்குகிறது எனலாம். பாடல்களும் பின்னணி இசையும் ஓகே.

காஞ்சனா போன்ற நிறைய படங்களில் காட்டப்பட்ட காட்சி இதிலும் உள்ளது. வில்லன் கோயில் எல்லைக்குள் ஒளிந்துக் கொள்வார். அங்கே பேய் (தீய) சக்தியால் வரமுடியாது. அப்படி என்றால் கடவுளின் எல்லை கோயில் அளவுதானா..? பேய்களுக்கான எல்லைதான் மிகப்பெரியதா.? இவை எல்லாம் பேய் பட இயக்குனர்களுக்கே வெளிச்சம்..

லோ பட்ஜெட்டில் படம் என்றாலும் அதற்கேற்ப கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்துள்ள இயக்குனர் நவீன் கிருஷ்ணாவை பாராட்டலாம்.

முன்னாள் பத்திரிகையாளரான நவீன் ஏற்கெனவே நெல்லை சந்திப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக இந்த உத்ரா… உ(ரு)த்ர தாண்டவம்

Uthra movie review and rating in tamil

More Articles
Follows