தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தலைமை செயலகம் வெப்சீரிஸ் விமர்சனம்
தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் இந்த தலைமை செயலகம் வலைத்தொடர் சுமார் 8 பகுதிகளாக கொண்டு வெளிவரவுள்ளது.
2024 மே 17 ஆம் தேதி அன்று ZEE5 இணையத்தில் வெளியானது..
ஸ்டோரி…
மேற்கு வங்கத்தில் ஒரு இளம் பெண் சித்திரவதை செய்யப்படுகிறார்.. இந்த சம்பவத்திற்கு காரணமான பலரையும் வெட்டி சாய்கிறார் அந்த பெண்..
இதன் பிறகு 15 வருடங்களுக்குப் பிறகு கதை நகர்கிறது.. இங்கு தமிழக முதல்வராக கிஷோர் இருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளில் இவர் சிக்கியதால் இவரது பதவி பறிபோகும் நிலை ஏற்படுகிறது.. இதனால் தன் பதவியில் யாரை அமர்த்தலாம்? யார் விசுவாசி என்ற சிந்தனையில் இருக்கிறார் கிஷோர்..
இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அந்த கொலை சம்பவத்தில் வெட்டி சாய்த்த பின் என்ன ஆனார் அந்த பெண் என்ற விசாரணையை தொடங்குகிறது சிபிஐ..
இந்த இரண்டு கதைகளையும் இணைக்கும் விதமாக திரைக்கதை அமைத்து மீதி கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்..
கேரக்டர்ஸ்…
கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒ ஜி மகேந்திரன், சந்தான பாரதி, கவிதா பாரதி, மற்றும் பலர்.
கிஷோரின் மகளாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பரத் மற்றும் தர்ஷா குப்தா இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர்..
கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி மகேந்திரன், சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்டோர் வாழ்ந்திருக்கிறார்கள்.
முதல்வர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தன் கேரக்டரை உயர்த்தும் அளவிற்கு கெத்து காட்டி மிரட்டி இருக்கிறார் கிஷோர்..
டெக்னீசியன்ஸ்…
எழுத்து & இயக்கம் :- ஜி.வசந்தபாலன்.
ஒளிப்பதிவாளர் :- வைட் ஆங்கிள் ரவிசங்கர்.
படத்தொகுப்பாளர் :- ரவிக்குமார்.
இசையமைப்பாளர் :- ஜிப்ரான், சைமன் கே கிங்.
ஒளிப்பதிவாளர் வொய்டு ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை அருமை.. வலைதொடர் கதை ஓட்டத்திற்கு பொருத்தமாக பயணிக்கிறது..
ஜெயமோகனின் வசனங்கள் வெப்சீரிஸுக்கு பலமாக உள்ளது.
தமிழக மற்றும் ஆந்திர அரசியல் இரண்டையும் இணைத்து புதுவிதமான கதையை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்..
வெப் சீரிஸ் என்பதால் நீளத்தை நீட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் & எடிட்டர்.. 8 எபிசோடு பதிலாக 6 எபிசொட்டில் முடித்து இருக்கலாம்..
தயாரிப்பு நிறுவனம் :- ராடான் மீடியா பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர்கள் :- சரத்குமார், ராதிகா சரத்குமார்.
Thalaimai Seyalagam web series review