தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்..
நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமம். அதில் தன் அம்மா மனைவி பிரியங்கா தங்கை தீபிஷ்கா ஆகியோருடன் வாழ்கிறார் சேரன். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர்.
இவர் கழுதை மேய்ப்பதால் இவரது குடும்பத்தை எவரும் மதிப்பதில்லை. எனவே பால் வியாபாரம் செய்கிறார். ஆனால் அதையும் சாதி பெயரை குறிப்பிட்டு எவரும் பால் வாங்க மறுக்கின்றனர்.
இந்த நிலையில் சேரனின் தங்கைக்கும் மேல்ஜாதியை சேர்ந்த மேல் லால் மகன் துருவாக்கும் காதல் வளர்கிறது.
இதனையறிந்த லால் மற்றும் அருள்தாஸ் இருவரும் தீபக்ஷிகாவை அடித்து துவைத்து விடுகின்றனர். இதனால் தவிக்கிறார் சேரன்.
இந்த சூழ்நிலையில் லால் தந்தை ஊர் பெரியவர் மரணம் அடைகிறார். அவருக்கு இறுதி சடங்கு செய்ய சேரனை அழைக்கவே அவர் மறுக்கிறார். எனவே அவரது குடும்பத்தை துன்புறுத்துகின்றனர்.
அதன் பிறகு என்ன நடந்தது.? மேல் சாதி மிரட்டலுக்கு அடிபணிந்தாரா சேரன்.? கீழ் சாதி – மேல் சாதிக்கு நடக்கும் பிரச்சனைக்கு முடிவு எப்படி கிடைத்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
அழகான குடும்பம்.. நேர்மையான மனிதர் என கட்டுப்பாட்டில் வாழ்கிறார் சேரன். எங்களது முன்னோர்கள் இந்த குலத் தொழிலை செய்து வந்தாலும் தனக்கு துளியும் விருப்பமில்லை என சேரன் பேசும் ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பு.
ஒரு தொழிலை செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என போலீஸ் அதிகாரி சுரேஷ் காமாட்சி பேசும் போது அடடா இப்படி ஒரு அதிகாரியை நாம் சந்திக்க மாட்டோமா? என நினைக்க வைக்கிறார்.
சேரன் மனைவி ஸ்ரீ பிரியங்கா.. தங்கை தீபிகா இருவரும் கொள்ளை அழகு.. இருவரின் கண்களுமே அவர்களின் உணர்வுகளை சொல்லி விடுகிறது. ஆனால் இருவருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை என்பது வருத்தம்.
மற்றொரு நாயகனாக துருவா நடித்துள்ளார். அவரும் அப்பாவுக்கு பயந்த பிள்ளையாகவே காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.
லால் மற்றும் அருள் தாஸ் ஆகிய இருவரின் நடிப்பு மிரட்டல்.. சாதிவெறி தலைக்கேறி அவர்களின் ஆட்டம் கவனிக்க வைக்கிறது.
ஆணவப்படுகொலை செய்த வேல ராமமூர்த்தியும் தன்னுடைய கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
டெக்னீசியன்கள்…
சாம் சி.எஸ்.. பின்னணி இசையும் பாடல்களும் ஒன்ற வைக்கிறது.. பாடல் வரிகளும் பாடலுக்கு அழகு சேர்க்கிறது.
திருநெல்வேலி மாவட்ட பகுதிகளை நமக்கு நேர்த்தியாக கொடுத்துள்ளார்.
முதல் பாதி ஏனோ தானோ என்று செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில்தான் சூடு பிடிக்கிறது. கோயில் கொடை நிகழ்ச்சி படத்துடன் பெரிதாக ஒன்றவில்லை. இதுபோன்ற சில காட்சிகளை வெட்டி எறிந்து இருக்கலாம் எடிட்டர்.
மேலும் முதல் பாதியில் எந்த விறுவிறுப்பும் இல்லை என்பதால் டிவி சீரியல் போலவே உள்ளது.
இதுபோன்ற பல சாதி படங்களை நாம் ஏற்கனவே பார்த்து இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் இந்த வன்முறைக்கு ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் இசக்கி கார்வண்ணன்.
ஒரு படத்தின் இரண்டாம் பாதியை பார்க்க வைப்பதற்கு இடைவேளை காட்சி மிக முக்கியம். ஆனால் சர்வ சாதாரணமான ஒரு காட்சியாகவே அது உள்ளது.
ஆக தமிழ் குடிமகன்.. சாதிகள் இல்லாத தமிழன்
Tamilkudimagan movie review and rating in tamil