தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்டார் விமர்சனம் 3.5/5.. நம்பிக்கையே நட்சத்திரம்
ஸ்டோரி…
சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என நினைக்கும் அப்பா தன்னால் சாதிக்க முடியாததை தன் மகனை வைத்து சாதிக்க நினைக்கிறார். அதற்காக தந்தையும் அவரது குடும்பமும் படும் கஷ்டங்களே இந்த படத்தின் கதை.
சினிமாவில் நடித்து பெரிய நட்சத்திரமாக உயர வேண்டுமென்று ஆசைப்படும் கவின் அதற்காக பல கஷ்டங்களை அனுபவிக்கிறார். இப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் நடிக்க அழைப்பு வரும்போது அவர் காரில் பயணிக்கிறார்.
அப்போது ஒரு பெரிய விபத்து ஏற்படவே அவரது முகம் கோரமாகிறது.. இதனால் அவரது கல்லூரி கால காதலியும் இவரை கைவிட்டு சென்று விடுகிறார்.. இதனால் தன்னால் நடிக்க முடியாது என குற்ற உணர்ச்சியில் வாழ்கிறார்..
அதன் பிறகு என்ன நடந்தது? சினிமாவில் நடித்து ஸ்டார் ஆக முடிந்ததா.? தந்தையின் ஆசை நிறைவேற்றினார்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்..
கவினுடன், லால், அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சினிமாவில் நடிகனாவது சாதாரண விஷயம் இல்லை… அதற்காக ஒவ்வொரு இளைஞனும் படும் கஷ்டங்களை தன் கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் கவின்.
நடிப்பு பயிற்சிக்காக பம்பாய் சென்ற பின் அங்கு தேர்வு ஆகாத நிலையில் படும் கஷ்டங்களையும் கையில் காசு இல்லாமல் படும் அவஸ்தைகளையும் தத்துரூபமாக நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ப்ரீத்தி மற்றும் அதிதி ஆகிய இரு நாயகிகளுடனும் கவினின் கெமிஸ்ட்ரி செம.
பிரீத்தி முகுந்தன் அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார்.. காதலனுக்காக வழிவது பின்னர் காதலனை விட்டு நழுவது என இரண்டிலும் குட் ஸ்கோர்..
2வது நாயகியாக வரும் அதிதியும் அழகான நடிப்பில் கவர்கிறார்.
கவினின் அப்பாவாக லால், அம்மாவாக கீதா கைலாசம். மற்றும் மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், சஞ்சய் ஸ்வரூப், ராஜா ராணி பாண்டியன், தீரஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் தன் தாய் இறந்த தருணம் அதே சமயத்தில் மகனுக்கு சினிமா வாய்ப்பு தருணம் என இரண்டையும் வெளிப்படுத்தும் காட்சியில் சிறந்த நடிகராக தெரிகிறார்.
கவினின் அம்மாவாக கீதா கைலாசம்.. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை அக்காவுக்கு கல்யாணம் வயது.. வீட்டில் பணம் இல்லை என ஒரு எதார்த்த குடும்ப தலைவியாக கீதா உணர்வுடன் எடுத்திருக்கிறார்..
கால்சீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியான நடிகராக இருக்கும் காதல் சுகுமார் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகளை இழந்து தெருவில் ஐஸ் விற்க்கும் நபராக வருவது பல இளைஞர்களின் கனவைக் கேள்விக்குறியாக்கும்.
இயக்குனர் இளனின் தந்தை பாண்டியன் இந்த படத்தில் நாயகி அதிதியின் தந்தையாக வருகிறார்.. மகளைக் கூட பார்த்துக் கொள்ள முடியாத பொறுப்பற்ற தந்தையாக இவர்
ஸ்டார் படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக உயர்ந்து நிற்கிறார் மாறன்.. ஹீரோ ஹீரோ என்று கவினை இவர் அழைக்கும் போது நாயகனாக உயர நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அது ஒரு எனர்ஜி டானிக்
டெக்னீசியன்ஸ்…
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்… ஒளிப்பதிவாளர் – எழில் அரசு..
புதுப்பேட்டைக்கு போட்ட மெட்டை இந்த ஸ்டார் படத்தில் பயன்படுத்தி ஸ்டார் வேல்யூவை ஏத்திவிட்டார் யுவன் சங்கர் ராஜா.. பாடல்கள் அனைத்தும் தாளும் படமும் ரசிக்கவும் வைக்கிறது.. அதே சமயம் திகட்ட திகட்ட பாடல்களை கொடுத்து படத்தின் நீளத்தை அதிகரித்துவிட்டார்.
இடைவேளை இப்போ வந்து விடும் என்று நாம் நினைக்கையில் மீண்டும் 15 நிமிடங்கள் நீண்டு கொண்டிருக்கிறது. அப்படித்தான் கிளைமாக்ஸ் காட்சியும்.?!
ஒளிப்பதிவாளர் எழிலரசு தன் பங்கில் எந்த குறையும் வைக்கவில்லை.. 1980 முதல் 90 2000 2010 ஆண்டுகள் வரை தன் கேமரா கண்களில் அழகாக படம் பிடித்து ரசிகர்களுக்கு ரசனை விருந்து கொடுத்திருக்கிறார்.
அதற்கு ஏற்ப கலை இயக்குனர் மற்றும் காஸ்டியூம் டிசைனர் இருவரும் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப கலை நுட்பங்களை அழகாக வடிவமைத்து இருக்கின்றனர்.
தன் மகனை ஸ்டாராக்க வேண்டும் என பாடுபடும் தந்தையைப் போல தன்னையும் ஒரு ஸ்டார் ஆக்கிக் கொள்ள வேண்டும் என முற்பட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் இளம் இயக்குனர் இளன்.
ஆரம்பப் பள்ளி.. மேல்நிலைப்பள்ளி.. காலேஜ்.. பேமிலி.. சினிமா ஆபீஸ்.. ஐடி ஆபீஸ் என என அனைத்தையும் கலந்து நாயகனின் யதார்த்த வாழ்வை படம் பிடித்திருக்கிறார்.
தான் சொல்ல வந்த விஷயத்தை இரண்டு பாகங்களாக எடுக்க நினைத்து விட்டார் போல இயக்குனர்.. எடிட்டர் ஆவது கொஞ்சம் கட்டிங் செய்து குறைத்து இருக்கலாம்.
தன்நம்பிக்கை மட்டும் தான் நம்மை ஸ்டார் ஆக்கும் என்ற விதையை இளைஞர்கள் மனதில் விதைத்து விட்டார் இயக்குனர் இளன்
ஆக இந்த ஸ்டார்.. நம்பிக்கையே நட்சத்திரம்
Star movie review