ஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்

ஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்

கதைக்களம்..

நாயகன் கௌசிக். இவர் போலீஸ் அதிகாரியின் மகன். தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி உற்சாகமாக இருக்கிறார்.

அப்போது ஒரு பிரச்னையில் இருக்கும் நாயகி அக்னி பவருக்கு உதவ நேரிடுகிறது.

என்ன காரணம் என்பதை கூட அறியாமல் அக்னி பவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு நண்பர்களுடன் ஆந்திரா வரை பயணிக்கிறார்.

அக்னி பவரை கொல்ல கராத்தே கோபால் கும்பல் இந்த காரை துரத்துகிறது.

பின்னர் தான் காரணம் தெரிகிறது. அதன்பின்னர் என்ன ஆனது? நாயகியை காப்பாற்றினாரா? என்ன பிரச்சினை அது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஆக்சன், டான்ஸ் மட்டுமே போதும் என நினைத்துவிட்டார் போல நாயகன் கௌசிக்.படம் முழுவதும் முகத்தை கோபமாகவே வைத்துள்ளார். குளிர்ச்சியான நாயகி இருந்தும் அவரிடம் ஒரு ரொமான்ஸ் கூட இல்லை. முடி மற்றும் தாடியை குறைத்து கொள்வது நல்லது.

அக்னி பவர் நாயகியின் ஆடை போலவே அவரது நடிப்பும் அரை குறைதான்.

கொல்ல திட்டமிடும் தலைவனாக நாசர் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பெரிதாக வேலையில்லை. இதுபோன்ற படங்களில் அவர் நடிப்பதை தவிர்க்கலாம்.

வில்லத்தனத்தில் நம்மையும் பயப்படும் வகையில் கத்து கத்து என்று மிரட்டி இருக்கிறார் கராத்தே கோபால். இவர் நிஜத்தில் நாயகன் கௌசிக்கின் தந்தையாவார். ஆனால் பார்ப்பதற்கு அண்ணன் போலவே இருக்கிறார். இவரது இன்னொரு மகனும் படத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் சரவணன், சங்கிலி முருகன் ஆகியோரும் உள்ளனர்.

கார் சேசிங் இடையில் காதல் மற்றும் பைட் என விறுவிறுப்பான திரைக்கதையை படமாக்க முயற்சித்துள்ளார் டைரக்டர் விஆர்ஆர். இவரே தான் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

படத்தில் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. லாங் சாட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

விஜய் சங்கர் இசையில் தாஜ்மஹால் பாடல் தாளம் போட வைக்கிறது. மோகன் ராஜ்ஜின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

மொத்தத்தில் ‘ஸ்பாட்’… ஓவர் ஸ்பீடு

Spot movie review rating

Comments are closed.