ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

நடிகர்கள்: டிவைன் ஜான்சன், நீவ் காம்ப்பெல், கோரெஸ் போத்தா மற்றும் பலர்.
இயக்கம் – ராஷன் மார்சல் டர்பர்
ஒளிப்பதிவு – ராபர்ட் எல்ஸ்விட்
இசை – ஸ்டீவ் ஜப்லான்ஸ்கை

கதைக்களம்…

டிவைன் ஜான்சன் ஒரு குண்டு வெடிப்பில் தன்னுடைய ஒரு காலை இழக்கிறார். இதனால் நல்ல வேலையில் இருந்த இவர் செக்யூரிட்டியாக வேலை பார்க்க நேரிடுகிறது.

வேலை செய்யும் ஒரு அப்பார்ட்மெண்டில் அவர் குடும்பத்துடன் குடியேறுகிறார்.

செக்யூரிட்டி என்பதால் எல்லா மாடிகளுக்கும் செல்லக் கூடிய ஆக்சஸ் கார்டு அவருக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வில்லன் கோரெஸ் போத்தா அந்த கட்டிடத்தில் புகுந்து, 96வது தளத்தில் தீ வைக்கிறான். மேலும் அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் நிறுத்திவிடுகிறான்.

அந்த கட்டிடத்தின் தீயை நம்ம ஹீரோ டிவைன் ஜான்சன் எப்படி அணைத்தார்?. தன்னுடைய குடும்பத்தையும் அங்குள்ளவர்களையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

டிவைன் ஜான்சனை சோலோ ஹீரோவாக்கியுள்ளனர். அவரும் கிடைத்த கேப்பில் எல்லாம் ரசிகர்களை உற்சாகப்படுத்த அதிரடி காட்டியுள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். தீ பிடித்த கட்டிடத்தில் டிவைன் ஜான்சன், செய்யும் சாகசங்கள் ரசிகர்களுக்கு செம விருந்து.

பல ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கே வந்துவிடுவார்கள்.

தமிழ் டப்பிங்கை தமிழர்களுக்கு பிடிக்கும் வகையில் ரசிக்கும் படி கொடுத்திருப்பது கூடுதல் சுவை.

ஸ்டீவ் ஜப்லான்ஸ்கை பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ராபர்ட் எல்ஸ்விட்டின் ஒளிப்பதிவு படத்தின் மீதான பிரம்மாண்டத்தை அதிகரித்துள்ளது.

கிராபிக்ஸ் காட்சிகளா? இது என்பதை தெரியாத அளவுக்கு விருந்து படைத்துள்ளார் டைரக்டர் ராஷன் மார்சல் டர்பர்

‘ஸ்கை ஸ்கிராப்பர்’… நிச்சயம் ரசிக்கலாம்.

Comments are closed.