FIRST ON NET ஒலியும் ஒளியும் நடுவே புடவை விளம்பரம்..; சிவகுமாரின் சபதம் விமர்சனம் 1.5/5

FIRST ON NET ஒலியும் ஒளியும் நடுவே புடவை விளம்பரம்..; சிவகுமாரின் சபதம் விமர்சனம் 1.5/5

‘மீசையை முறுக்கு’ படத்தைத் தொடர்ந்து ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’.

TG தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன் ஆகியோர் SathyaJyothi Films சார்பில், ஹிப் ஹாப் தமிழா மற்றும் Indie Rebels உடன் இணைந்து சிவக்குமார் சபதம் படத்தை தயாரித்துள்ளனர்.

ஆதி ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான படம் ‘நான் சிரித்தால்’. அது தோல்வியை தழுவியதால் சபதம் எடுத்து இந்த சிவகுமாரின் சபதம் கொடுத்துள்ளார். படம் எப்படி இருக்கிறது.?

கதைக்களம்…

காஞ்சி பட்டுக்கே உரித்தான காஞ்சிபுரத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக தாத்தா வளர்ப்பில் வளர்கிறார்.

ராஜா காலத்தில் இருந்தே பட்டு நெய்து வரும் பாரம்பரிய வரதராஜன் குடும்பம் இது. ஆதி பிறப்பதற்கு 2-3 வருடங்களுக்கு முன்பு தான் இவரின் பாட்டிக்கு பிறக்கிறார் பிரான்க்ஸ்டர் ராகுல்.

எனவே கதைப்படி பிரான்க்ஸ்டர் ராகுல் ஆதிக்கு சித்தப்பா ஆகிறார்.

ஒரு கட்டத்தில் ஆதியை சென்னை அழைத்து செல்கிறார் சித்தப்பா. அங்கே சித்தப்பா குடும்பத்தில் ஆதியால் பிரச்சினை ஏற்படுகிறது.

இதனால் மீண்டும் தாத்தா வீட்டுக்கு திரும்பும் ஆதி “தான் ஒரே வருடத்தில் பட்டு தொழிலில் பெரிய தொழிலதிபராக உயர்ந்து காட்டி உங்களை வீழ்த்துவேன்..” என சபதம் போடுகிறார்.

இதுவே சிவகுமாரின் சபதம். அந்த சபதம் நிறைவேறியதா.? என்ன செய்தார்.? ஆதி என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

யோகிபாபு கசின் பிரதர் போல அவரது ஹேர் ஸ்டைலில் வருகிறார் ஹிப் ஹாப் ஆதி. ஆடுகிறார் பாடுகிறார் அழுகிறார் ஆனால் பெரிதாக ஈர்ப்பு இல்லை.

படத்தின் முதல் பாதியிலேயே 4 பாடல்கள் ஒலியும் ஒளியும் போல வருகிறது. இதன் நடுவே காஞ்சி பட்டு புடவைகளின் பாரம்பரிய சிறப்பு புராணம் வருகிறது.

அழகான நாயகியாக மாதுரி. சில இடங்களில் பானா காத்தாடி சமந்தாவை நினைவுப்படுத்துகிறார்.

தாத்தா கேரக்டரில் இளங்கோ குமணன். ரசிக்கும்படி செய்திருக்கிறார். ஆனால் இவர் கம்பீர தாத்தாவா? காமெடி தாத்தாவா? என கன்ப்யூஸ் செய்கிறார்.

ஆதியின் நண்பனாக ஆதித்யா கதிர் நடித்துள்ளார். சில இடங்களில் காமெடியில் ஓகே. பல இடங்களில் பேசியே கொல்கிறார்.

தன் முதல் படமான ‘மீசையை முறுக்கு’ படத்தில் ஏகப்பட்ட யூடியூபர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

இந்த சிவகுமாரின் சபதம் படத்தில் யூடியூபில் பிரபலமான பிரான்க்ஸ்டர் ராகுலை நடிக்க வைத்துள்ளார் என்பதை விட அழ வைத்துள்ளார். முருகன் என்ற பெயர் கொண்ட கேரக்டரில் வருகிறார்.

ரசிகர்களை ஒரேடியாக சோதித்து விட்டார் பிரான்க்ஸ்டர் ராகுல். ஓவர் ஆக்ட்டிங்கில் ஓவர் பில்டப்.

சந்திரசேகர் கேரக்டரில் விஜய் கார்த்திக் என்பவர் நடித்துள்ளார். இவர் இந்து படத்தில் பிரபுதேவாவின் நண்பராக நடித்துள்ளார். வில்லனத்தனம் கலந்த நடிப்பில் கலக்கல்.

ஆதியின் சித்தியாக விஜே பார்வதி வருகிறார். அவருக்கும் பெரிதான காட்சிகள் இல்லை. இவர்களுடன் ரஞ்சனா நாச்சியார், மனோஜ் & கோபால் ஆகியோரும் உண்டு. சிலர் நம் கவனம் ஈர்க்கின்றனர்.

டெக்னீஷியன்கள்..

கதை, திரைக்கதை, பாடல்கள், எழுதி படத்தை தயாரித்து ஹீரோவாக ஆதியே நடித்து இயக்கவும் செய்துள்ளார்.

பாடல்கள் ஆட்டம் போட வைத்தாலும் அவரின் முந்தைய பாடல்களை கேட்பது போல தான் உள்ளது. நாயகியுடன் தனியாக டூயட் கூட இல்லை. குரூப் டான்சர்ஸ் ஸ்டைலில் கலர்புல்லாக இருக்கு. அவ்வளவுதான்.

அருண்ராஜா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. ரசிக்கலாம்.. எடிட்டர் முதல் பாதியை முழுவதுமாக கட் செய்திருக்கலாம்.

படம் முடியும் போது 20 நிமிட காட்சிகள் ஓகே. அதற்காக படம் முடியும் வரை ரசிகர்கள் காத்திருப்பார்களா? ஆதி ப்ரோ.?

அடுத்த படமாச்சும் பாத்து பண்ணுங்க ஹிப் ஹாப் ஆதி ப்ரோ..??!!

அருண்ராஜா DF. Tech (ஒளிப்பதிவு), தீபக் S. துவாரகநாத் (படத்தொகுப்பு), சந்தோஷ் (நடன இயக்குனர்), ஸ்ரீஜித் சாரங் (கலரிஸ்ட்), வாசுதேவன் (கலை இயக்குனர்), Nectar Pixels Media (VFX), தபஸ் நாயக் (ஒலி கலவை), நிகில் மேத்யூஸ் (ஒலி பொறியாளர்), , Sync Cinema (SFX), அமுதன் பிரியான் (டிசைன்ஸ்), அஸ்வந்த் ராஜேந்திரன் (நிர்வாக தயாரிப்பாளர்) ஆக பணியாற்றியுள்ளனர்.

SivakumarinSabadham Movie Review and Rating in Tamil

Related Articles