செங்களம் வெப் தொடர் விமர்சனம் 3.25/5.; சதுரங்க அரசியல்

செங்களம் வெப் தொடர் விமர்சனம் 3.25/5.; சதுரங்க அரசியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஆர் பிரபாகரனின் இயக்கத்தில் கலையரசன், வாணி போஜன், ஷாலி, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள செங்களம் தொடர்.

ஜீ5 தளத்தில் வெளியான 9 எபிசோடுகளை கொண்டது செங்களம் தொடர்.

கதைக்களம்…

விருதுநகர் மாவட்ட நகராட்சியின் மன்ற தலைவர் பதவியை 40 ஆண்டுகளாக தக்க வைக்கிறார் சிவஞானம்.

இவருக்கு அடுத்து தொடர்ச்சியாக இவரது குடும்பமே பதவி சுகத்தை அனுபவிக்கிறது.

சிவஞானத்தை அடுத்து, அவரது மூத்த மகன் பவன் (ராஜமாணிக்கம்) நகராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கும் சூர்ய கலாவிற்கும் (வாணி போஜன்) திருமணம் நடக்கிறது.

அதே தொகுதியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வேல ராமமூர்த்திக்கு இல்லாத செல்வாக்கு , நகராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது.

எனவே, எப்படியாவது ‘வாரிசு அரசியல் குடும்பத்தை கலைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

ஒரு கும்பல் கட்டத்தில் ராஜமாணிக்கத்தை போட்டு தள்ளுகிறது. இதனால் வாணி போஜன் பக்கம் பதவி ஆசை திரும்புகிறது. ஆனால் அதே சமயம் குடும்பத்திற்குள்ளும் பதவி ஆசை மோதல் வலுக்கிறது. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு ஏன் ‘வாரிசு – பதவி ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இந்த அரசியல் கதை ஒரு புறம் பயணிக்க… மற்றொரு புறம் தொடர் கொலை கதை பயணிக்கிறது.

தனது 2 தம்பிகளின் துணையுடன் மூன்று கொலைகளை செய்கிறார் கலையரசன்.. மொத்தம் 6 கொலை செய்ய தான் காத்திருப்பதாகவும் சவால் விடுகிறார் கலையரசன்.

கலையரசன் கொலைகளை செய்ய என்ன காரணம்.? இவரின் கொலைக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு.?

வாணி போஜன் அரசியலில் நுழைந்தாரா.? வெற்றி பெற்றாரா.? இந்த இரண்டு கதைகளும் கனெக்ட் ஆகிறதா.? என்பதுதான் இந்த தொடரின் கதை.

கேரக்டர்கள்…

கலையரசன், வாணி போஜன், பவன், சரத் லோகிதஸ்வா, ஷாலி, டேனியல், விஜி சந்திரசேகர், சூப்பர் குட் சுப்ரமணி, அர்ஜெய் போன்ற பல நட்சத்திரங்கள் உள்ளனர்.

முக்கியமான கேரக்டர்களுக்கு சமமான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கலையரசன் நாயகன் என்றாலும் வில்லத்தனம் கலந்த நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.

பல படங்களில் காதல் நாயகியாக வந்த வாணி போஜன் இந்தப் படத்தில் ஒரு அரசியல் கட்சி உறுப்பினராக அசத்தியிருக்கிறார்.

இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் கலையரசனின் தங்கையாக நடித்த ஷாலி வேற லெவல் நடிப்பை கொடுத்துள்ளார். இவரது கேரக்டர் உடன் பிறவா சகோதரி சசியை நினைவுப்படுத்துகிறது.

இவர் ஆடும் அரசியல் சதுரங்கம் ரசிகர்களுக்கு சரவெடி. ஆனால் கொடி படத்தில் நடித்த திரிஷாவின் கேரக்டர் போல இவர் இன்னும் மெனக்கெட்டு நடித்திருக்கலாம்.

டெக்னீஷியன்கள்…

அமைதிப்படை போன்ற முழு நீள அரசியல் படத்தை நாம் இதற்கு முன்பு பார்த்திருந்தாலும் இது போன்ற அரசியல் தொடர் தமிழுக்கு முதல் முறையாகும்.

படத்தின் விறுவிறுப்பான காட்சிகள் குறைவு என்பதால் கதை ஓட்டத்தில் தொய்வு ஏற்படுகிறது.. மேலும் இது ஒரு தொடர் என்பதால் காட்சிகளை நீட்டி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் அதே சமயம் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபாகரன் ஒரு புதிய கதை களத்தை தேர்ந்தெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.

இந்த தொடரின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

அரசியல் படம் என்பதால் நிறைய காட்சிகளில் மக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்.. ஆனால் இன்னும் பிரம்மாண்டமாக கொடுத்திருக்கலாம்.

காரணம் பொதுக்கூட்ட மேடைகளை காட்டும்போது குறைந்தபட்ச மக்களை அங்கு இருக்கின்றனர்.

இந்தத் தொடரில் நகராட்சியின் மன்ற தேர்தல் காட்டப்பட்டாலும் இது கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி.. ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோரின் அரசியல் களத்தை அப்பட்டமாக காட்டுகிறது.. எனவே நீங்கள் அதனுடன் தொடர்புபடுத்தி கூட பார்த்துக் கொள்ளலாம்..

ஆக செங்களம்… சதுரங்க அரசியல் ஆட்டம்

Sengalam web series review and rating in tamil

பருந்தாகுது ஊர் குருவி விமர்சனம் 3/5..; காட்டுக்குள் கண்ணாமூச்சி

பருந்தாகுது ஊர் குருவி விமர்சனம் 3/5..; காட்டுக்குள் கண்ணாமூச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர், வினோத் சாகர் & மற்றும் பலர்.

இயக்குனர் : தனபாலன் கோவிந்தராஜ்

லைட்ஸ் ஆன் மீடியா – EAV சுரேஷ், சுந்தர கிருஷ்ணா .P, வெங்கி சந்திரசேகர் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை ரெஞ்சித்.

கதைக்களம்…

திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் நாயகன் நிஷாந்த். எனவே காவல் நிலைய குற்றவாளி பட்டியலில் இவருக்கு இடமுண்டு.

ஒரு கட்டத்தில் காட்டுக்குள் இளைஞர் ஒருவர் கொலையாகி கிடக்கிறார்.

அப்போது போலீஸ் கோடங்கி வடிவேலுடன் வழிகாட்ட செல்கிறார். அச்சமயத்தில் பிணத்தின் கையோடு, நிஷாந்தின் கையையும் சேர்த்து விலங்கு போட்டுவிட்டு வெகு தூரம் சென்றுவிடுகிறார் போலீஸ்.

அந்த சமயத்தில் அவருக்கு ஒரு போன் வர நிஷாந்த் எடுக்கிறார்.. என் கணவரை காப்பாற்றினால் உனக்கு 10 லட்ச ரூபாய் தருகிறேன் என்கிறார். அந்நேரம் கொலையாகி கிடக்கும் விவேக் பிரசன்னாவுக்கு திடீரென நினைவு வருகிறது.

எனவே விவேக் பிரசன்னாவுடன் நிஷாந்த் அந்த கை விலங்குடன் காட்டுக்குள் ஓடுகின்றனர். எனவே கொலைக்கார கம்பல் இருவரையும் துரத்துகிறது.

இறுதியில் என்ன ஆனது.? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

நாயகன் நிஷாந்த்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் கவர்கிறார்.. பயம் பதட்டம் துணிச்சல் என அனைத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

பன்றிக்கு நன்றி சொல்லி என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

வழக்கம்போல விவேக் பிரசன்னா.. கேரக்டருக்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.

ஆனால் சாகும் தருவாயில் இருந்த இவர் எந்த சிகிச்சையும் இல்லாமல் சாதாரண நிலைக்கு வந்தது எப்படி என்பதற்கான காட்சிகள் விளக்கமும் இல்லை.. அதுபோல விவேக் பிரசன்னாவிற்கு நெருக்கமான ஒருவர் இவரை கொல்ல திட்டமிடுகிறார்.. அதற்கும் ஆணித்தரமான காரணங்கள் சொல்லப்படவில்லை.

கோடாங்கி வடிவேலு ஓகே அவ்வளவுதான். நாயகியாக நடித்த காயத்ரி ஐயர் கச்சிதம்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வினோத் சாகர்.. கொலை செய்ய முயற்சிக்கும் கவுதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

டெக்னீஷியன்கள்…

அஸ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்டுக்குள் இவரின் கேமரா விளையாடி இருக்கிறது. ஒரே சம்பவத்தை வெவ்வேறு கோணங்களில் காட்டியிருக்கிறார்.

ரெஞ்சித்தின் பின்னணி இசை படத்தின் கதை ஓட்டத்துடன் பயணிக்கிறது.

முக்கியமாக இரண்டு கதாபாத்திரங்களை வைத்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி ரசிக்க வைக்கிறார் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ்.

ஆக பருந்தாகுது ஊர் குருவி.. காட்டுக்குள் கண்ணாமூச்சி

Parundhaguthu Oor Kuruvi movie review and rating in Tamil

D3 விமர்சனம் 3/5.; முதல் 2 பாகம் எப்போ.?

D3 விமர்சனம் 3/5.; முதல் 2 பாகம் எப்போ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரஜின், சார்லி, வித்யா பிரதீப், ராகுல் மாதவ், காயத்ரி யுவராஜ், மேத்யூ வர்கீஸ் மற்றும் பலர்.

இயக்கம்: பாலாஜி
தயாரிப்பு: பிமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ்

பாலாஜி இயக்கத்தில் ப்ரஜின், வித்யா பிரதீப், சார்லி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் D3.

கதைக்களம்…

ப்ரஜின் ஒரு போலீஸ் அதிகாரி. இவரது மனைவி வித்யா பிரதீப். குற்றாலத்திற்கு டிரான்ஸ்பர் ஆகி வருகிறார்.

அப்போது ஒரு விபத்து நடக்கிறது. ஒரு பெண் இறக்கிறார். சில தினங்களில் மற்றொரு பெண் ஒருவர் இறக்கிறார்.

இந்த இரண்டு விபத்துகளும் ஒரே போல நடந்துள்ளதால் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறார் பிரஜின்.

இதனையடுத்து விசாரணையில் இறங்க அவரது மனைவியை வித்யாவை கொல்கிறது அந்த கும்பல்.

அவர்கள் தொடர்ந்து கொலைகளை செய்ய என்ன காரணம்.? அவர்கள் யார்.? அதனை போலீஸ் ப்ரஜின் கண்டுபிடித்தாரா.? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

இதற்கு முன் சில படங்களில் நாயகனாக நடித்த பிரஜின் டி3 படத்திற்காக முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். போலீஸ் கேரக்டருக்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலையும் உடல் மொழியையும் மாற்றி இருக்கிறார். ஆக்சனில் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.

வித்யா பிரதீப்புக்கு இந்த படத்தில் பெரிதாக காட்சிகள் இல்லை. ஒரு வேளை இந்த படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெளியானால் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என தெரியலாம்.

டாக்டராக நடித்திருக்கும் ராகுல் மாதவ் செம ஸ்டைலிஷாக வந்து மிரட்டியிருக்கிறார். ஒரு பணக்காரனுக்கு உரிய கெத்தாக தன்னுடைய கேரக்டரை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்ற நடிகர்களான சார்லி, காயத்ரி யுவராஜ், அபிஷேக் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

தொடர் கொலைகள்.. போலீஸ் விசாரணை.. திரில்லர் கதை என பாலாஜி தன் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.. முதல் இரண்டு பாகங்கள் வெளியானால் மட்டுமே மூன்றாம் பாகத்தின் கதை புரியும் போல.

இடைவேளை முன்பு இருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. ஒரு திரில்லர் கதையை நேர்க்கோட்டில் பயணிக்கச் செய்யாமல் மாற்றுப் பாதையில் பயணிக்க செய்திருப்பதால் சற்று தொய்வு ஏற்படுகிறது.

ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பணி நேர்த்தியாக உள்ளது. இரவு நேர காட்சிகளுக்கு தன் கேமராவினால் உயிரூட்டியிருக்கிறார்.

இசையமைப்பாளரின் பின்னணி இசை சிறப்பு. ராஜா ஆறுமுகத்தின் எடிட்டிங் ஓகே.

ஒரு மாதிரி போனாங்க.. ஒரு மாதிரி போனாங்க.. என்ற வாக்கியம் அடிக்கடி வருகிறது.. அதனை தொடர்புப்படுத்தியே காவல்துறை விசாரணை நடக்கிறது.

ஆக… டி3 படமும் ஒரு மாதிரி போகுது.. முதல் 2 பாகங்கள் வரட்டும். பார்ப்போம்..

D3 movie review and rating in tamil

கண்ணை நம்பாதே 3.25/5.; பிரகாசிக்கும் பிரசன்னா.. உதயநிதி.??

கண்ணை நம்பாதே 3.25/5.; பிரகாசிக்கும் பிரசன்னா.. உதயநிதி.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

வாடகை வீட்டில் வசிக்கிறார் உதயநிதி. அந்த வீட்டின் ஓனர் மகள் ஆத்மிகாவை காதலிக்க பிரச்சனை வருகிறது.. உடனே வீட்டை காலி செய்ய சொல்கிறார் ஓனர்.

இதனால் அவசரத்திற்காக வேறு வழியில்லாமல் புரோக்கர் மூலமாக பிரசன்னா வீட்டில் தங்குகிறார். ஒருநாள் இவர்கள் தண்ணி அடித்து விட்டு வரும்போது காரை ஓட்டி வரும் பூமிகாவிற்கு உதவ செல்கிறார் உதயநிதி.

அதன் பின்னர் மர்மமான முறையில் இறக்கிறார் பூமிகா. இந்த கொலையை மறைக்க உதயநிதியும் பிரசன்னாவும் பயணிக்கும் பாதையில் அடுத்தடுத்து ஓரிரு கொலைகள் நடக்கின்றன.

போலீஸிடம் இருந்து தப்பிக்கவும் தங்களை நிரபராதி என் நிரூபிக்கவும் இவர்கள் போடும் திட்டங்கள்தான் இந்த படத்தின் கதை.

கண்ணை நம்பாதே

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் என்னவோ உதயநிதி தான்.. ஆனால் தன் கேரக்டரில் அதிகம் பிரகாசிப்பவர் பிரசன்னா.. படத்தின் ஆரம்ப முதல் இறுதி காட்சி வரை பயணம் செய்கிறார்.. பயம் பதட்டம்.. மிரட்டல் என அனைத்தையும் திறம்பட செய்துள்ளார்.

நாயகன் உதயநிதி.. பயம்.. பதட்டம்.. நடுக்கம்.. ரொமான்ஸ்.. என அனைத்திலும் ஒரே முக பாவனை தான்.. என்ன நினைத்து நடித்தாரோ அல்லது இது போதும் என நினைத்தாரோ.?!

ஆத்மிகா மற்றும் சுபிக்ஷா நடித்துள்ளனர். ஆத்மிகா நாயகி என்பதால் ஒரு பாடலைக் கொடுத்து சில காட்சிகளையும் கொடுத்துள்ளனர்..

இவர்களது கேரக்டர் கதைக்கு உதவினாலும் ஓரிரு காட்சிகளிலேயே இவர்கள் வந்து செல்கிறார்கள்

ரோஜாக்கூட்டம் படத்தில் நாம் பார்த்த ஸ்ரீகாந்த் – பூமிகா இருவரும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் ஜோடி இல்லை என்றாலும் கதையில் திருப்புமுனையை கொண்டு வருகிறார்கள்.

வசுந்தரா மாரிமுத்து இருவரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.. வசுந்தராவின் கேரக்டரில் ட்விஸ்ட் கொடுத்திருப்பது சிறப்பு.

சதீஷ் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். பிறகு காணாமல் போய்விடுகிறார். காமெடிக்காக வந்தாரோ.? கால்ஷீட் இருக்கு என கொடுத்தாரோ தெரியவில்லை..

ஞானசம்பந்தம், பழ.கருப்பையா, சென்ராயன், ஆதிரா என அனைவரும் படத்தில் இருக்கிறார்கள். அவ்ளோதான்.

டெக்னீஷியன்கள்…

படத்தின் முதல் பாதி வேகமாக செல்கிறது. கொலைகாரன் யார்.? கொலை நடந்தது எப்படி.? என்ற எதிர்பார்ப்புகளுடன் படத்தை ரசிக்க முடிகிறது.

ஒரு கட்டத்தில் அந்த த்ரில்லர் முடிச்சி அவிழும்போது அட இவ்வளவுதானா.? என எண்ணமே தோன்றுகிறது.

அதிலும் பூமிகா – ஸ்ரீகாந்த் பிளாஷ் பேக் காட்சிகள் பெரிதாக கவனம் பெவில்லை வழக்கம்போல நாம் ஏற்கனவே பார்த்த கதையாகவே உள்ளது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.. விறுவிறுப்பாக ஒரு திரில்லர் கதையை கொடுக்கு முயற்சித்துள்ளார்.

சித்து குமாரின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இதனால் படத்துடன் நாம் ஒன்ற முடிகிறது.

ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன்..: முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டப்படும் வகையில் உள்ளது.

இரண்டாம் பாதியின் நீளத்தை குறைத்து இருக்கலாம். லாஜிக் மீறல்கள் உள்ளன.

ஆக இந்த கண்ணை நம்பாதே.. த்ரில்லர்..

Kannai nambathe movie review and rating in tamil

கப்ஜா விமர்சனம் 2.75/5.; KGF Copy.. But Paste.?

கப்ஜா விமர்சனம் 2.75/5.; KGF Copy.. But Paste.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சுதந்திர காலக்கட்டத்தில் நடக்கும் கதை இது. கர்நாடகாவில் உள்ள அமராபுரத்தின் மகாராஜா, வீர பகதூர்.

இவரது மகள் மதுமதியும் (ஸ்ரேயா) ஆர்கா என்ற ஆர்கேஷ்வரனும் (உபேந்திரா) காதலிக்கிறார்கள். தந்தை எதிர்ப்பை மீறி காதலனை மணக்கிறார் ஷ்ரேயா.

இதற்கு முன்பே விமானப் படை பயிற்சியில் இருந்து விடுப்பில் ஊருக்கு வருகிறார் ஆர்கா. ஒரு நாள் இவரது அண்ணன் அராஜகத்தை தட்டி கேட்டு ரவுடியை கொலை செய்தமையால் கைது செய்யப்படுகிறார்.

போலீஸ் இவரை கைது செய்து சில ரவுடிகளின் துணையால் கொலை செய்கின்றனர். இதனால் கத்தி எடுக்கும் உபேந்திரா வளர்ந்து ஆர்காபுரத்துக்கே மிகப்பெரிய டானாக வளர்ந்து நிற்கிறார்

இதனால் மாநில அரசும் துணை ராணுவப் படையும் உபேந்திராவை சுற்றி வளைக்கிறது.

இதையெல்லாம் மீறி உபேந்திரா என்ன செய்தார்.? என்பதுதான் இந்த கப்ஜா படத்தின் முதல் பாக கதை.

இதன் முதல் பாகம் முடிவில் கிச்சா சுதீப் மற்றும் சிவராஜ்குமார் வருகின்றனர்.. இரண்டாம் பாதியில் இவர்கள் மூவருக்கும் நடக்கும் போராட்டமே கதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கேரக்டர்கள்…

உபேந்திராவின் உயரம் அவரது கம்பீரம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.. எதிரிகளை அடித்து வீசுவதும் அநியாயத்தை தட்டி கேட்பதும் என வெளுத்து கட்டியிருக்கிறார்.

ஸ்ரேயா சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனக்கு கொடுத்த பாத்திரத்தை அழகாக்கி இருக்கிறார்.

உபேந்திராவின் அம்மா ஸ்ரேயாவின் தந்தை உள்ளிட்டோரும் கதைக்கு துணைப் பாத்திரங்களாக வலு சேர்த்து உள்ளனர்.

அதுபோல படத்தில் நிறைய தாதாக்கள் காட்டப்படுகின்றனர்.. ஒவ்வொருவரும் தங்கள் தோற்றத்தில் மிரட்டலாகவே உள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

இயக்கம் – சந்துரு.; இசை – ரவி பர்சூர் (KGF)

முக்கியமாக கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். 1950 – 60களில் உள்ள காலகட்டத்தை அப்படியே கலை நுணுக்கத்தோடு வடிவமைத்து உள்ளார்.

உபேந்திரா டானாக உயர்ந்த கதையை ‘கேஜிஎப்’ பாணியில் சுதீப் சொல்கிறார்.

கே ஜி எஃப் என்ற படத்தை நம்பி அதற்கு நிகராக ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என இயக்குனர் சந்துரு முயற்சி செய்து இருக்கிறார். அதில் பாதி அளவு மட்டுமே அவர் கொடுத்துள்ளார் எனலாம்.

முக்கியமாக ஓவர் பில்டப் வசனங்கள் திகட்டும் அளவுக்கு உள்ளது.. பல இடங்களில் பின்னணி இசை வசனங்களை புரியவிடாமல் செய்கிறது.

கேஜிஎப் படத்தில் கோலார் தங்க வயலை காட்டியிருப்பதால் அதில் கருப்பு மண் காட்டப்பட்டிருக்கும்.. ஆனால் இந்தப் படத்தில் நிறைய காட்சிகளில் கருப்பு மண் மட்டுமே காட்டப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் எதுவுமில்லை.

அதுபோல ஒளிப்பதிவும் நிறைய காட்சிகளில் இருட்டாகவே உள்ளது. இதனால் படத்தின் காட்சிகள் தெளிவாக இல்லை.

பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக இருந்தாலும் அது வசனங்களை ஓவர் லேப் செய்வதால் எரிச்சலை தருகிறது.

ஆக இந்த கப்ஜா.. KGF Copy.. But Paste missing..

Kabzaa movie review and rating in tamil

ராஜா மகள் விமர்சனம் 3.5/5.; குறை தெரியாத குட்டீஸ்

ராஜா மகள் விமர்சனம் 3.5/5.; குறை தெரியாத குட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஆடுகளம் முருகதாஸ் – வெலீனா தம்பதிகளுக்கு பிரதிக்ஷா என்ற 8 வயது மகள்.. செல்போன் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கிறார் முருகதாஸ்.

தன் மகள் மீது கொள்ளை பாசம் வைத்திருக்கிறார். மகள் எதை கேட்டாலும் உடனே வாங்கி கொடுத்துவிடும் சுபாவம்.

ஒரு நாள் தன் பள்ளி தோழன் வீட்டு விழாவுக்கு செல்கிறார் பிரதிக்ஷா. அப்போது சொந்த வீடு.. பங்களா.. வாடகை வீடு உள்ளிட்டவைகளை பற்றி அறிகிறார்.

எனவே தனக்கும் ஒரு சொந்த வீடு வேண்டும் என அப்பாவிடம் கேட்கிறார். மகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் அப்பா சரி வாங்கி தரேன் என்கிறார்.

ஆனால் உடனே வேண்டும் என அடம் பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் வீடு வாங்கியாச்சு என பொய் சொல்கிறார்.

இதன்பிறகு என்னாச்சு.? தந்தை மீது மகள் வைத்த நம்பிக்கை என்ன ஆனது.? பொய்யே சொல்லாத தந்தை பின்னர் என்ன செய்தார்.? தன்னுடைய அப்பா தான் ஹீரோ என்று நினைக்கும் மகள் என்ன செய்தார்? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகன் ஆடுகளம் முருகதாஸ். நாயகி வெலீனா.. ஆனால் இவர்கள் இருவரையும் தன் நடிப்பில் முந்திவிட்டார் குட்டி பெண் பிரதிக்ஷா. அவரின் முகபாவனைகளும் அவர் பேச்சும் வேற லெவல்.. பள்ளியில் அவர் செய்யும் அலப்பறைகளும் சூப்பர்.. நிச்சயமாக விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதுவரை பல படங்களை காமெடி செய்து வந்த ஆடுகளம் முருகதாஸ் ஓர் யதார்த்த தந்தையாக வாழ்ந்திருக்கிறார்.

அதுபோல இளம் வயதிலேயே ஒரு மெச்சூரிட்டியான கேரக்டரை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் வெலீனா.. மகளிடம் அதிக செல்லம் காட்டும் கணவனை கண்டிக்கும் மனைவியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடித்துள்ள பக்ஸ் பகவதி உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் பள்ளி மாணவர்களும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

நிக்கி கண்ணனின் கேமரா கதைக்கு துணை புரிந்துள்ளது. சங்கர் ரங்கராஜணனின் பின்னணி இசையை விட பாடல்கள் அதிக கவனம் பெறுகிறது.

குழந்தைகளிடம் பொய் சொல்லி வளர்ப்பதை விட தங்களின் இயலாமையை பெற்றோர்கள் சொல்லி வளர்ப்பது நல்லது என்பதை இயக்குனர் ஹென்றி புரிய வைத்திருக்கிறார்.

ஏழையாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு அப்பனும் ராஜா தான். அதே சமயம் தங்கள் கஷ்டங்களை சொல்லி வளர்க்கும் தந்தையே உண்மையான ராஜா என்பதையும் உணர வைத்திருக்கிறார் இயக்குனர் ஹென்றி.

ஆக ராஜா மகள்.. குறை தெரியாத குட்டீஸ்

Raja Magal movie review and rating in Tamil

More Articles
Follows