சத்திய சோதனை விமர்சனம்..; நேர்மைக்கு சோதனை

சத்திய சோதனை விமர்சனம்..; நேர்மைக்கு சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்….

அடர்ந்த ஒரு காட்டுப் பகுதியில் நிறைய நகைகள் அணிந்து சென்ற ஒரு செல்வந்தரை 4 பேர் கொண்ட கும்பல் போட்டு தள்ளுகிறது. அவர்களே ஒரு போலீஸ் நிலையத்திலும் சரண் அடைந்து விடுகிறார்கள்.

மறுநாள் காலை அவ்வழியே செல்லும் பிரேம்ஜி பிணம் கிடப்பதை பார்த்து அதை ஓரமாக மரத்தடி நிழலில் போட்டுவிட்டு பிணத்தின் செல்போன் வாட்ச்சை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்.

அதன் பின்னர் தான் போலீசுக்கு மற்றொரு பிரச்சினை உருவாகிறது. கொலை செய்யப்பட்ட இடம் ஒரு இடம்.. பிரேம்ஜி பிணத்தை தள்ளி வைத்ததால் அது மற்றொரு காவல் எல்லையில் உட்பட்டது என இரு போலீசுக்கும் பிரச்சனை உருவாகிறது.

அவர்களுக்கு அந்த பிணத்தின் மேல் கிடந்த லட்சக்கணக்கான நகைகள் எங்கே சென்றது? நமக்கு கிடைத்தால் நாம் பங்கு போட்டுக் கொள்ளலாமே என போலீஸ் தரப்பில் மோதல் வெடிக்கிறது.

இதனிடையில் பிரேம்ஜியை துன்புறுத்தி நகைகள் எங்கே.? என்று விசாரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்செல்லும் பிரேம்ஜி வாக்கி டாக்கியை எடுத்துச் செல்கிறார். இதனால் போலீசுக்கு மேலும் பிரச்சினை உருவாகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது.? வழக்கு கோர்ட்டுக்கு செல்கிறது. நீதிபதி என்ன தீர்ப்பளித்தார்.? பிரேம்ஜியை போலீஸ் கண்டுபிடித்தார்களா? நகையை எடுத்தது யார் ? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது இந்த சத்திய சோதனை.

கேரக்டர்கள்…

பிரேம்ஜி இதில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஒரு கிராமத்து இளைஞன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாமல் தன்னுடைய வழக்கமான நடிப்பை அவர் செய்திருப்பது தான் நமக்கு வந்த சத்திய சோதனை. ஒரு நாயகன் வேடம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தியிருக்கலாமே பிரேம்ஜி.?!

படத்தில் கதாநாயகி ஒருவர் ஏன் வந்தார் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்?

‘சுப்ரமணியபுரம்’ படத்தில் சித்தனாக நடித்தவர் கே.ஜி.மோகன். இதில் விரைவில் ரிட்டையர்டு ஆகப்போகும் காவல்துறை அதிகாரி குபேரனாக நடித்துள்ளார். அப்பாவி போலீசாக இவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் சிரிப்பலை. இவருக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தரும்.

நேர்மையான நீதிபதியாக பேச்சாளர் கு. ஞானசம்பந்தன். போலீசை இவர் கிடுக்கி புடி போட்டும் கேட்கும் கேள்விகள் கைத்தட்டல் ரகம்.

பொய் பேசும் போலீஸ்.. நகைக்கு ஆசைப்படும் போலீஸ்.. என அனைத்தையும் நீதிமன்றம் கண்டிப்பதை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா.

படத்தில் பிரேம்ஜியின் அக்கா மாமாவாக வரும் கருணா ராஜா மற்றும் ரேஷ்மா ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. அதிலும் தன் மனைவியின் தம்பிக்காக கருணா ராஜா பரிந்து பேசும் காட்சிகள் மச்சான் உறவு முறையை அழகாக சொல்கிறது.

லந்து செய்யும் பாட்டி… போலீஸ் இன்பார்மர் குள்ளன் ஆகியோர் படத்தில் அதிகமாக கவனம் பெறுகின்றனர்

டெக்னீஷியன்கள்…

படத்தொகுப்பாளர் – வெங்கட் ராஜன்.

இயக்குநர் – சுரேஷ் சங்கையா.

ஒளிப்பதிவாளர் – ஆர்.வி சரண்.

பாடல் இசையமைப்பாளர் – ரகுராம்.

பின்னணி இசை – தீபன் சக்கரவர்த்தி

கலை இயக்குநர் – வாசுதேவன்.

ஐயப்ப சாமி பாடலும், கங்கை அமரன் குரலில் வரும் பாடலும் ரசிக்க வைக்கின்றன.

படத்தில் —-யோலி என்ற வார்த்தைகள் அடிக்கடி இடம் பெறுகிறது. சத்திய சோதனை என்ற இந்த படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகள் தேவையா.? அது கிராமத்தில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளாக இருந்தாலுமே அதை தவிர்த்து இருக்கலாம்.

ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை கொடுத்த சுரேஷ் சங்கையா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். திறமையற்ற போலீசால் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்பதை தன்னுடைய திரை கதையால் சொல்லி இருக்கிறார்.

இந்த காலத்தில் நேர்மையாக இருக்கும் ஒருவனுக்கு ஏற்படும் அவஸ்தைகளையும் சொல்லி இருக்கிறார்.

அதே சமயத்தில் நல்லவர்களிடம் மட்டும் நல்லவிதமாக நடந்து கொள். கெட்டவர்களிடம் அவர்கள் போக்கிலேயே சென்றுவிடு என்பதையும் அந்த பாட்டி மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஆக சத்திய சோதனை.. நேர்மைக்கு வந்த சோதனை

Sathiya Sothanai movie review and rating in tamil

அவள் அப்படித்தான் 2 விமர்சனம்.; சுதந்திரப் பறவை

அவள் அப்படித்தான் 2 விமர்சனம்.; சுதந்திரப் பறவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1978 ஆண்டில் திரைப்படக் கல்லூரி மாணவர் ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ வெளியானது. பெண் என்பவள் யாருடைய வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்ற சிந்தனையை விதைத்தது அந்தப் படம் .

அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் தான் அவள் அப்படித்தான் 2.

இப்படத்தை இரா.மு. சிதம்பரம் எழுதி இயக்க அபுதாஹிர், சினேகா பார்த்திபராஜா, ராஜேஸ்வரி, சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன், தனபால், சிறுமி கார்த்திகா ஆகியோர் நடித்துள்ளனர்.

வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார் . அரவிந்த் சித்தார்த் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு அகமது கலை- டி.பாலசுப்பிரமணியன்.

யுன் ப்ளிக்ஸ் (Yun Flicks) சார்பில் செய்யது அபுதாஹிர் தயாரித்துள்ளார்.

அவள் அப்படித்தான் 2

கதைக்களம்…

நாயகன் – நாயகி இடையில் நடக்கும் ஈகோ யுத்தம் தான் படம்.

மஞ்சு ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. அறிவும் துணிவும் நிறைந்தவர். பிறருக்கு உதவுவது, தவறுகளைத் தட்டிக் கேட்பது என இருப்பவள்.

அவளது கணவன் ராம் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறான். கண்டிப்பானவர். இவர்களுக்குப் பள்ளி செல்லும் ஒரே மகள்.

ஆணும் பெண்ணும் எப்படிப் பாலினத்தில் தனியாக இருக்கிறார்களோ அப்படித்தான் குணத்திலும் தனித்தனியானவர்கள் என்பது அவளது நம்பிக்கை.

அவள் அப்படித்தான் 2

அடிக்கடி அவர்களுக்குள் கருத்து மோதலாக மாறுவது உண்டு. ஆனாலும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் பள்ளி வேலைக்குச் சென்ற மஞ்சு இரவு வீடு வந்து சேரவில்லை. எனவே கணவர் முதல் உறவினர் வரை அனைவரும் பதற்றம் அடைகிறார்கள்.

தன் நண்பனுடன் இணைந்து கொண்டு வெளியே தேடுகிறான் நாயகன். அடுத்த நாள் காலை பொழுது விடிந்துதான் மஞ்சு வீடு வந்து சேர்கிறாள்.

“நேற்று ராத்திரி எங்கே போயிருந்தாய்?” என்று அவள் கணவன் கோபமாக கேட்க, அவளோ “ராத்திரி நான் எங்கே போயிருந்தேன்னு தெரியணுமா? இல்ல என்ன நடந்துச்சுன்னு தெரியணுமா?” என்கிறாள்.

இதனால் பிரச்சனை பெரிதாக மோதல் வெடிக்கிறது. முடிவு என்ன என்பதுதான் ‘அவள் அப்படித்தான் 2 ‘படத்தின் கதை.

அவள் அப்படித்தான் 2

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள் பார்வை..

மஞ்சுவை தேடுகின்ற காட்சிகளில் அவர் சார்ந்த காட்சிகள் வருவதால் அவரின் கேரக்டரின் குணாதிசயத்தை நம் கண் முன்னே வர வைத்துள்ளார் இயக்குநர்.

கணவன் மனைவிக்குள் நடக்கும் ஆண் பெண் சார்ந்த விவாதங்கள் கூட அர்த்தமுள்ளதாக உள்ளன.

நாயகியாக மஞ்சு கதாபாத்திரம் ஏற்றுள்ள சினேகா பார்த்திபராஜாவின் அழகும், உடல் மொழியும் சிறப்பு.

மஞ்சுவின் கணவனாக அபுதாஹிர். நடுத்தர வயது.. யதார்த்த குடும்ப தலைவன் என கணவருக்குரிய உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அவள் அப்படித்தான் 2

கணவன் ராமின் அம்மாவாக வரும் ராஜேஸ்வரி, மஞ்சுவின் அம்மாவாக அனிதா ஸ்ரீ, ஆச்சியாக வரும் சுமித்ரா, மகள் சிறுமி கார்த்திகா, மஞ்சுவின் அப்பா இயக்குநர் வெங்கட்ரமணன் ஆகியோரின் பங்களிப்பு கச்சிதம்.

ஒரு பெண் / கல்யாணமானவள் ஓர் இரவு வீட்டிற்கு வரவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் நடக்கும்? என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். அப்போது கணவனிடம் எழும் சந்தேகங்களை அப்பட்டமாக சொல்லி இருக்கிறார்.

கணவன் வெளியே சென்று திரும்பாவிட்டால் என்ன நடக்கும்.? மனைவி வெளியே சென்று திரும்பாவிட்டால் என்ன நடக்கும் என்பதை இன்றைய தலைமுறைக்கும் உணரும் வகையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் இரா.மு. சிதம்பரம்.

அவள் அப்படித்தான் 2

ஆனால் இது ஒரு சினிமாவாக நினைக்காமல் சீரியல் போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பதால் சில காட்சிகள் போர் அடிக்கிறது. எடிட்டர் இதை சீரியல் என நினைத்து விட்டாரோ.?

கதையின் பெரும்பகுதி ஒரு வீட்டுக்குள் நடப்பதால் இந்த எண்ணம் அடிக்கடி சீரியல் சிந்தனையை தூண்டுகிறது.

ரசிகனின் பார்வைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்றபடி ஒளிப்பதிவாளர் வேதா செல்வம் தன் பணியை செய்திருக்கிறார்.

இதுபோன்ற படங்களுக்கு நிச்சயமாக பாடல்கள் வேண்டும்.. ஆனால் பாடல்களை இல்லாமல் படத்தை இயக்குனர் ஏன் கொடுத்தார்? என்பது கேள்விக்குறி. ஆனாலும் தனது பங்களிப்பை பின்னணி இசையில் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்.

அவள் அப்படித்தான் 2

ஒரு முக்கிய காட்சியில் வயலினின் ரீங்காரம் உணர்வு அழுத்தம் கூட்டுகின்றன.

வசனங்களுக்கு மெனக்கெட்டு இருப்பது போல் காட்சிகளை சினிமாவாக சுவாரஸ்யமாக கொடுத்து இருக்கலாம்.

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு நேர் எதிரானது அல்ல. நம் நாட்டின் கலாச்சாரம் குடும்பம் குழந்தை நலன்களைக் காப்பாற்ற பெண் மீது அதிகாரத்தை செலுத்துவதே தவறு என்கிறது கதை.

ஒரு பெண்ணாக இந்த படத்தை நீங்கள் பார்த்தால் நிச்சயம் மஞ்சு செய்வது சரிதான்.. ஒரு ஆணாக நீங்கள் இந்த படத்தை பார்த்தால் நாயகன் செய்வது சரிதான் என நிச்சயம் தோன்றும்.

ஆக.. ‘அவள் அப்படித்தான் 2’… சுதந்திரப் பறவை

அவள் அப்படித்தான் 2

Aval Appadithan 2 movie review and rating in tamil

கொலை விமர்சனம் 3.25/5.. டெக்னிக்கல் த்ரில்லர்

கொலை விமர்சனம் 3.25/5.. டெக்னிக்கல் த்ரில்லர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1923 ஆண்டில் துப்பு துலங்காத ஒரு கொலையை அடிப்படையாகக் கொண்ட கதை என டைட்டில் கார்டில் வாசகம்.

கதைக்களம்…

ஒரு மாடல் அழகி மீனாட்சி சவுத்ரி தன்னுடைய அப்பார்ட்மெண்டில் கொல்லப்படுகிறார். இந்த கொலை வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் ரித்திகா சிங்.

தன்னுடைய பயிற்சியாளரு முன்னாள் போலீஸ் அதிகாரியுமான விஜய் ஆண்டனியை உதவிக்கு அழைத்துக் கொள்கிறார் ரித்திகா சிங்.

விஜய் ஆண்டனி & ரித்திகா இருவரும் இணைந்து கொலையாளியை கண்டுபிடித்தார்களா என்பது தான் படத்தின் கதை.

மாடல் அழகி கொல்லப்பட்டது ஏன்.? அவரை கொன்றவர் யார்? அவரது நோக்கம் என்ன.? என்பதை ஹாலிவுட் பாணியில் கோலிவுட் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி குமார்.

கேரக்டர்கள்…

கொஞ்சம் வயதான தோற்றத்தில் தலைக்கு வெள்ளை கலர் அடித்து இறங்கி இருக்கிறார் விஜய் ஆண்டனி. அவரது பேச்சில் அதே நிதானம்.

இது போன்ற திரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு கொஞ்சம் வேகம் கூட்டி இருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும்.

அலட்டிக் கொள்ளாத நிதான நடிப்பில் ரித்திகா சிங். மாடல் அழகியாக மீனாட்சி சவுத்ரி. கொஞ்ச நேரம் என்றாலும் நம் மனதில் தங்கி விடுகிறார். இவரது தேர்வு இயக்குநர் பாலாஜியின் பலே ஐடியா.

இதில் ஜான்விஜய் & ராதிகா சரத்குமார் ஏன் நடித்தார்கள்.? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கதை.

மாடல் போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜன்ட் முரளி சர்மா, மீனாட்சியின் நண்பர் சித்தார்த்தா சங்கர், மேனேஜர் என சொல்லும் கிஷோர் குமார் ஆகியோர் கவனிக்க வைக்கின்றனர்.

விஜய் ஆண்டனி மனைவி.. கல்லூரிக்கு செல்லும் மகள்.. அவளுக்கு நேர்ந்த விபத்து ஆகியவை தேவையில்லாத ஒன்று.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், எடிட்டர் ஆர்கே செல்வா ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ‘கொலை’ படத்தின் மேக்கிங்.. கலை வடிவமைப்பு, பின்னணி இசை அனைத்தும் நேர்த்தி.

கொலையாளி யார்.? அவரா.? இவரா.? இவரா.? அவரா.? என பல கோணங்களில் விசாரிக்கும் அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது.

கொலையாளியை கண்டு பிடிக்கும் வரை நிச்சயமாக இடைவேளை வரை நம்மால் செல்போனை தொட முடியாது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு சிலவற்றை யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் இல்லை. போலீஸ் பேசிக் கொண்டே.. கதை நீண்டு கொண்டே இருப்பதால் போரடிக்கிறது.

ஒரு அப்பார்ட்மெண்டுக்குள் கதைக்களம் சொல்லப்பட்டாலும் கேமரா கோணங்கள் அனைத்தும் பாராட்டுக்குரியது.

டெக்னிக்கலாக ஒரு திரில்லர் கதையை இப்படி கூட சொல்லலாம் என உணர்த்தி இருக்கிறார் பாலாஜி குமார். இவர் ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்தவர் என்பதால் அந்த சாயலில் சொல்லி இருப்பது சிறப்பு.

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

ஆக கொலை… டெக்னிக்கல் த்ரில்லர்

Kolai movie review and rating in tamil

அநீதி விமர்சனம் 3.75/5.. காதலின் நிறம் சிகப்பு

அநீதி விமர்சனம் 3.75/5.. காதலின் நிறம் சிகப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்….

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்கிறார் அர்ஜுன் தாஸ்.

இவரிடம் யாராவது கேள்வி கேட்டால் அவர்களை கொலை செய்யும் அளவுக்கு சைக்கோ எண்ணம் வருகிறது. இதனால் அவ்வப்போது டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.

ஒரு நாள் இரவு நேரத்தில் துஷாரா இருக்கும் வீட்டில் உணவு டெலிவரி செய்ய செல்கிறார் அர்ஜூன்தாஸ். தொடர்ந்து தினமும் செல்லும் போது இருவருக்கும் காதல் மலர்கிறது.

ஒரு கட்டத்தில் பிரச்சினையில் சிக்கிய துஷாரா விஜயனுக்கு உதவ செல்கிறார் அர்ஜுன் தாஸ். அப்போது எதிர்பாராத விதமாக பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

அது என்ன பிரச்சனை.? துஷாரா விஜயன் யார்.? அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்.? இவருக்கு யாரைப் பார்த்தாலும் கொலை செய்ய தூண்டுவது என்ன .? அது ஏன்.? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த ‘அநீதி’.

கேரக்டர்கள்…

அர்ஜுன் தாஸ் என்ற வில்லனிடம் ஒரு சாக்லேட் பாயை வரவழைத்து அதில் கொஞ்சம் சைக்கோத்தனமூட்டி ஒரு முழு நாயகனாக அவரை நிறுத்தி இருக்கிறார். முக்கியமாக அர்ஜுன் தாஸ் – துஷாரா காட்சிகள் நிச்சயம் காதலர்களை கவரும்.

1980-களில் நாயகியை படத்தில் அறிமுகப்படுத்தும் போது சில நிமிடங்கள் ஆகும். அதே போல ஒரு கவிதையாக துஷாராவை அறிமுகம் செய்திருக்கிறார்.

டூயட்டுக்கு மட்டுமே நாயகி என்று இல்லாமல் கதை ஓட்டத்திற்கு முழுவதுமாக உயிரூட்டி இருக்கிறார் துஷாரா விஜயன். இவரது அறிமுக காட்சி முதல் அனைத்தும் அழகு. பணக்கார வீட்டில் ஏழை பெண் படும் கஷ்டங்களை தன்னுடைய உணர்ச்சி பூர்வமான நடிப்பால் அள்ளி வழங்கி இருக்கிறார் துஷாரா.

ஒரு ஆணுக்கு பிரச்சனை என்றால் காதலி கூட ஒதுங்கி விடுவாள். அதே சமயம் காதலிக்கு பிரச்சனை என்றால் காதலன் வருவான் என்ற பெண்களின் மனநிலையும் அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.

பாட்டி அம்மாவை வில்லி போல காட்டி அந்த உயில் மேட்டரில் உயர்த்தி காட்டி இருக்கிறார் இயக்குனர்.

அர்ஜுன் சிதம்பரம் மற்றும் வனிதா படத்தில் என்ட்ரி ஆன பிறகு படத்தின் கதை சூடு பிடிக்கிறது. வனிதா ஒரு மிரட்டல் வில்லியாகவே வரிந்து கட்டி செய்திருக்கிறார்.

கொஞ்சம் தமிழ் மலையாளம் கலந்து அழகாக பேசியிருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி தாத்தா. நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

அர்ஜுன் சிதம்பரமும் தன்னுடைய பங்களிப்பில் கச்சிதம். போலீஸ் அதிகாரியாக வரும் JSK ஜே எஸ் கே கொஞ்ச நேரம் தான் என்றாலும் அவரது விசாரணை அணுகுமுறை ரசிக்க வைக்கிறது.

ஃப்ளாஷ் பேக்கில் வரும் காளி வெங்கட் மற்றும் அவரது மகன் ஆகியோரின் நடிப்புக்கு பாராட்டுகள்.

தங்கப் புள்ள.. தங்க புள்ள.. என்று காளி வெங்கட் அழும் காட்சிகளில் கண்டிப்பாக நீங்களும் அழுவீர்கள். காளி வெங்கட்டின் மளிகை கடை முதலாளியாக வரும் டி சிவா கொஞ்ச நேரம் என்றாலும் அவரது நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

அறந்தாங்கி நிஷா மற்றும் பாவா லட்சுமணன் இருவரும் ஒரே காட்சியில் வந்து கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர். நண்பனாக வரும் பரணியும் கொஞ்ச நேரம் என்றாலும் அவரது நடிப்பு சிறப்பு.

டெக்னீஷியன்கள்..

கலை இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். துஷாரா வேலை செய்யும் அந்தப் பாட்டி அம்மா வீட்டின் கதவு கூட அத்தனை அழகு. நவரசங்களை காட்டி இருக்கிறார்.

இரவு நேர டெலிவரி செய்யும் காட்சிகள் முதல் அந்த ஆடம்பர வீடு என அனைத்தையும் ஒளிப்பதிவாளர் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார்.

வசனங்கள் படத்திற்கு பலம்..

உணவு டெலிவரி செய்த பின் மழை வரும் ஒரு காட்சியில்… “மழைக்காக ஒதுங்க சொன்ன போதும்.. தலை துவட்ட துணி கொடுத்தபோதும்.. நீ ஒரு முதலாளி இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் என் நாயகன் பேசும் அந்த காட்சி ரசிகர்களை கைதட்ட வைக்கும்.

நான் மன நோயாளி என தெரிந்தால் நீ வெறுத்து விடுவாயா? என காதலி கேட்கும் போது கண் சிமிட்டலில் பதில் சொல்லும் அர்ஜுன் தாஸ் காதலனை சிக்ஸர் அடிக்க வைத்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையில் ‘பூ நாழி பொன் நாழி’ பாடல் இனிமை. பின்னணி இசையில் நிறையவே நிறைவாக மிரட்டி இருக்கிறார்.

வெயில் அங்காடித்தெரு காவியத்தலைவன் ஆகிய படங்களை கொடுத்த வசந்த பாலனை இதில் நிச்சயம் நீங்கள் பார்க்க முடியாது. ஒருவேளை அதேபோல படம் கொடுத்தால் நாம் இவருக்கு வேற கதை தெரியாதா.? என சொல்லி இருப்போம்.

எனவே அங்காடித்தெரு கதையில் தொடங்கி சைக்கோ கதையில் படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

தொழிலாளிகளை மனிதர்களாக நினைக்காமல் அடிமைகளாக நினைக்கும் முதலாளிகளுக்கு இந்த படம் ஒரு சமர்ப்பணம். அதே சமயம் *அன்பு மட்டுமே உலகத்தை ஆளும்.. மன்னிப்பது மனித குணம்…* என்ற கருத்தை அநீதி வலியுறுத்தி இருந்தாலும் இத்தனை வன்முறை தேவையா? என எண்ண வைக்கிறது.

தன்னுடைய ரூம் மேட் சாராவை கூட இப்படிக் கொல்ல வேண்டுமா.? என எண்ண வைக்கிறார் அர்ஜுன் தாஸ். ஓவர் வன்முறை ஆகாது என்பது என்பது போல கிளைமாக்ஸ் காட்சிகள் இருப்பது வருத்தமே.

ஆக அநீதி… காதலின் நிறம் சிகப்பு

Aneethi movie review and rating in tamil

சக்ரவியூஹம் விமர்சனம் 3/5..; த்ரில்லர் சக்கரம்

சக்ரவியூஹம் விமர்சனம் 3/5..; த்ரில்லர் சக்கரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரில்லர் கதைகள் என்றாலே எப்போதும் ரசிகர்களுக்கு சுவாரசியம் தான்.. அதிலும் கொலை கொள்ளை போலீஸ் விசாரணை என்றால் ரசிகர்களுக்கு பேரார்வம் இருக்கும். அந்த வரிசையில் இணைந்துள்ள படம் சக்ரவியூஹம்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.

கதைக்களம்…

சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி சிரி (ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார். மேலும் வீட்டில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள பணம் மற்றும் தங்கமும் காணாமல் போகிறது.

இதனால் போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்) தனது விசாரணையை முறுக்குகிறார்.

இந்த விசாரணையில் முதலில் சஞ்சய் தான் குற்றவாளி என நினைக்கிறார். ஒரு கட்டத்தில் விசாரணை சூடுபிடிக்க சஞ்சய் ராவின் நெருங்கிய நண்பரும், பிசினஸ் பார்ட்னர் ஷரத்தை சந்தேகிக்கிறார்.

இத்துடன் நகை காணாமல் போனதால் சத்யா சிரியின் வீட்டு வேலைக்காரி மீதும் சந்தேகம் கொள்கிறார்.

எந்த தடயமும் கிடைக்காமல் தவிக்கிறார் போலீஸ் அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்).

ஸ்ரீயை உண்மையில் கொன்றது யார்? அவரை கொலை செய்ய என்ன காரணம்.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

அஜய், ஞானேஸ்வரி, விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு

கதையின் நாயகனாக அஜய் கம்பீரமான லுக்கில் வருகிறார். விசாரணை நடவடிக்கைகள் ரசிக்க வைக்கிறது.

இவருடன் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளன.

முக்கிய கேரக்டர்களில் ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோரும் உண்டு்.

டெக்னீசியன்கள்…

இயக்குனர்: சேத்குரி மதுசூதன்
தயாரிப்பாளர்கள்: சஹஸ்ரா கிரியேஷன்ஸ்
இசையமைப்பாளர்: பாரத் மஞ்சிராஜு
ஒளிப்பதிவு: ஜி.வி.அஜய் குமார்
எடிட்டர்: ஜெஸ்வின் பிரபு

எதிர்பாராத ட்விஸ்ட் திருப்பங்கள், அதிரடி ஆக்சன் என படம் வேகமெடுக்கிறது.

விறுவிறுப்பான த்ரில்லர் கதையால் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறார் இயக்குனர்.

இசையும், ஒளிப்பதிவும் ஓகே ரகம். சில சீன்களில் கூடுதல் பலம் கொடுக்கிறது.

வெறுமனே க்ரைம் த்ரில்லராக இல்லாமல் , நல்ல கருத்தை சொல்லும் விதமான படமாக உருவாகியுள்ளது.

ஆசை இருக்கலாம். ஆனால் பேராசை ஆபத்து என்பதே மையப்படுத்தி சக்ரவியூகத்தை கொடுத்துள்ளார்.

ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது இந்த சக்ரவியூகம்.

சக்ரவியூஹம்

Chakravyuham movie review and rating in tamil

பாபா ப்ளாக் ஷீப் விமர்சனம் 1.5/5.; பார்வேட் மெசேஜ்.. ஆவ்ரேஜ் ஸ்டூடண்ஸ்

பாபா ப்ளாக் ஷீப் விமர்சனம் 1.5/5.; பார்வேட் மெசேஜ்.. ஆவ்ரேஜ் ஸ்டூடண்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல யூடியுப் மற்றும் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்கி உள்ள முதல் படம் ‘பாபா பிளாக் ஷீப்’. இன்றைய கல்வி முறையை மாணவர் சேட்டைகளுடன் சொல்ல முயற்சித்துள்ளார்.. படம் எப்படி இருக்கிறது.?

இதில், ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், சேட்டை ஷெரீஃப், விருமாண்டி அபிராமி, அம்மு அபிராமி, வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு கல்வியாளர். இவருக்கு பாய்ஸ் ஸ்கூல் மற்றும் கோ-எட் ஸ்கூல் என்று இரு பள்ளிகள் சொந்தமாக உள்ளன.

ஒரு பெரிய காம்பவுண்டில் இருக்கும் இந்த இரு பள்ளிகளில் சில சேட்டை பிடித்த மாணவர்கள் உள்ளனர்.

ஒரு கட்டத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி இறந்து விடவே இவரது மகன்கள் இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக இணைத்து விடுகின்றனர். இதனால் சேட்டை பிடித்த மாணவர்களின் சேட்டை ரொம்பவே அதிகமாகிறது.

இரண்டு கேங்க்கும் (சிலர்) கடைசி பெஞ்சுக்காக போட்டி போட்டு மோதிக் கொள்கின்றனர்.

இரண்டு கோஷ்டிக்கும் பொது தோழியான அம்மு அபிராமி, அந்தப் பள்ளி மாணவர்களில் ஒருவர் எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அந்த கடிதத்தை எழுதியவர் யார்? அவருக்கு என்ன பிரச்சனை.? யாரை கண்டுபிடித்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பிரபலமான பல யூடியுபர்களை இந்த படத்தில் கூட்டணி சேர்த்துள்ளார் ராஜ்மோகன்.

ஆர்ஜே விக்னேஷ்காந்த், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், அதிர்ச்சி அருண், விவேக் போன்ற யூடியூப்ர்களே இதில் மாணவர்கள்.

ஒரு சிலர் சில காட்சிகளில் ஸ்கோர் செய்தாலும் பல காட்சிகளில் ஃபெயில் மார்க்கை பெறுகின்றனர்.

ஆசிரியர்களாக விருமாண்டி அபிராமி, சுப்பு பஞ்சு, வினோதினி, போஸ் வெங்கட், இளவரசு உள்ளிட்டோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. ஆனால் பெரிய வேலையில்லை.

கண்களால் நம்மை அம்மு அபிராமி கவர்ந்தாலும் நடிப்பில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் தான். ஆர் ஜே விக்னேஷ் நடிப்பு செயற்கைத்தனமாக உள்ளது.

மதுரை முத்து – ஜிபி முத்து என இரண்டு முத்துக்கள் இருந்தும் வேதனை தான்.

டெக்னீசியன்கள்…

ஒளிப்பதிவு : சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு : வேலு குட்டி
இசை : சந்தோஷ் தயாநிதி.

ஸ்கூல் பற்றிய படம் தானே அதில் மாணவர்களின் ஆட்டம் பாட்டம் ரகளை என நிறைய கொடுக்க வேண்டும் என இயக்குனர் நினைத்தாரே என்னவோ.? ஓவர் டோஸ் ஆக கொடுத்து கதையில் கோட்டை விட்டுள்ளார்.

இடைவேளை முடிந்து சில நிமிடங்களுக்கு பிறகு தான் கதையின் வேகமும் ஓட்டமும் புரிகிறது.

பாடல்களும் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. கண்களுக்கு குளிர்ச்சி. படத்தொகுப்பாளர் தான் தன் பணியை இன்னும் மெனக்கெட்டு செய்திருக்கலாம்.

முக்கியமாக யூடியூபில் பிரபலமான மொக்க ஜோக்குகள்.. 80ஸ் கிட்ஸ்.. 90ஸ் கிட்ஸ் மீஸ்கள் 2k கிட்ஸ் அலப்பறைகள்.. ஸ்டாண்ட் அப் காமெடி ஆகியவற்றை தொகுத்து ஒரு யூடியூப் வீடியோ போல படமாக கொடுக்க முயற்சித்துள்ளார் ராஜ்மோகன்.

பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும்.? ஆசிரியர்கள் எப்படி கையாள வேண்டும்? பெற்றோர்களிடத்தில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.? என்பதை சொல்ல முயற்சித்த இயக்குனர் ராஜமோகனுக்கு பாராட்டுக்கள்.

ஆக… பாபா ப்ளாக் ஷீப் விமர்சனம் 1.5/5.; பார்வேட் மெசேஜ்.. ஆவ்ரேஜ் ஸ்டூடண்ஸ்

Baba Black Sheep movie review and rating in tamil

More Articles
Follows