தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சாலா விமர்சனம் 3.5/5.. குடிக்காதவர்களையும் நீ குடிச்சி அழிக்காதே
ஸ்டோரி…
நாயகன் – தீரன்.. நாயகி – ரேஷ்மா..
ஒரு நாளும் குடிக்காமல் இருக்க முடியாது என்பது நாயகன் சாலாவின் (தீரன்) முடிவு..
குடிக்காதே.. சமூகத்தை சீரழிக்கும் குடி என்பது நாயகி ரேஷ்மாவின் முடிவு..
நாயகன் விதவிதமாக தள்ளுபடி விலை சரக்குகளை விற்றுக் கொண்டே இருக்க இதை தடுப்பதே நாயகியின் வேலையாக இருக்கிறது.
மற்றொரு பக்கம் நீண்டகாலமாக மூடி கிடக்கும் பார்வதி ஒயின்ஷாப்பிற்காக அடித்துக் கொண்டு நிற்கின்றனர் 2 தாதா கோஷ்டிகள்.. ஒன்று அருள் தாஸ் கோஷ்டி மற்றொன்று சார்லஸ் வினோத் கோஷ்டி.
இதில் நாயகன் சாலா (தீரன்) அருள்தாஸ் கோஷ்டி.. இந்த சாராய மோதல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரு பக்கம் மாமூல் வாங்கிக்கொண்டு பணியை ஓட்டிக் கொண்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர் சம்பத் ராம்..
அதன் பிறகு என்ன நடந்தது.? கோஷ்டி மோதலில் ஜெயித்தது யார்? பார்வதி ஒயின்ஷாப் ஏலத்தை யார் எடுத்தார்கள்?நாயகன் நாயகி நிலை என்ன? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
DHEERAN as SAALA
RESHMA VENKATESH as PUNITHA
CHARLES VINOTH as THANGADURAI
SRINATH as DOSS
ARULDOSS as GUNA
SAMPATH RAM as NAGU INSPECTOR
நீண்ட தலை முடி நீண்ட தாடி.. கம்பீரமான தோற்றம் ஆறடி உயரம் என மிரட்ட நாயகனாக தோற்றத்தில் ஜொலிக்கிறார் தீரன்.. பார் சண்டைக் காட்சியில் 30 ரவுடிகளை அடிப்பதற்காகவே 8 மாதங்கள் பயிற்சி செய்து உடலை மாற்றிக் கொண்டாராம் நாயகன் தீரன்..
படத்தின் முதல் காட்சியிலேயே இரண்டு அன்லிமிடெட் பிரியாணியை தீரன் சாப்பிடும் போது நம்மால் நம்ப முடிகிறது.. ஆக்ஷன் கை கொடுக்கும் அளவிற்கு காதல் ரொமான்ஸ் எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை.. நல்ல வேலை அது போல காட்சி எதையும் இயக்குனர் வைக்கவில்லை..
ரசவாதி படத்தில் குட்டி குட்டி க்யூட் ரியாக்ஷன் மூலம் நம்மை கவர்ந்தவர் ரேஷ்மா வெங்கடேஷ். அவர்தான் இதில் நாயகி.. ஆசிரியை என்பவர் சமூக பொறுப்புள்ளவர் அதற்காக அவர் துணிந்து போராடவும் வேண்டும் என்பதை தன் கேரக்டர் மூலம் உணர்த்தி இருக்கிறார்..
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரீநாத் காமெடியில் கலக்கி இருக்கிறார்.. கொஞ்சம் வில்லத்தனமும் செய்து இருக்கிறார்..
மாமூலான போலீசாக இன்ஸ்பெக்டர் சம்பத் ராம்.. முறுக்கிய மீசை முறுக்கிய உடம்பும் என கம்பீரமான தோற்றத்தில் வலம் வருகிறார்.
ஹீரோவுக்கு இணையாக வேடத்தில் அருள்தாஸ் அசத்தியிருக்கிறார்.. தன் உயிரைக் காப்பாற்றிய சாலாவை வளர்த்து பெரிய ஆளாக்கி அவருக்கு உறுதுணையாக இருக்கும் கேரக்டர்..
சார்லஸ் வினோத் வழக்கம் போல தன் அனுபவ நடிப்பில் கவர்ந்திருக்கிறார்.. பள்ளிக்கு செல்லும் வயதில் மாணவர்கள் சாராயத்தை தேடி செல்வதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.. அதில் திடியன் என்ற குண்டு பையனின் கதாபாத்திரம் பாராட்டுக்குரியது.
டெக்னீசியன்ஸ்…
CINEMOTOGRAPHY – RAVINDRANATH GURU
MUSIC DIRECTOR – THEESON
EDITOR – BUVAN
ART DIRECTOR – VAIRABALAN
DIRECTOR – SD MANIPAUL
STUNT – MAGESH MATHEW & RUGGERRAM
PRO – NIKIL MURUKAN
கலை இயக்குனர் வைரபாலன்.. கிளைமாக்ஸ் காட்சியில் லாரியில் அடிபட்டு இறந்து கிடக்கும் குழந்தைகளை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்.. அந்த காட்சி மனதை உருக்கும் காட்சி என்றாலும் அவரது கலைப்பணி பாராட்டுக்குரியது..
ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.. தீசன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு..
PRODUCTION – PEOPLE MEDIA FACTORY
PRODUCER – T G VISHWA PRASAD
CO PRODUCED BY – VIVEK KUCHIBOTLA
CREATIVE PRODUCER – V. SHREE NATRAJ
EXECUTIVE PRODUCER – VIJAYA RAJESH
போதை கஞ்சா வன்முறை என தமிழ் சினிமா ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க அவையெல்லாம் கூடாது குடியால் நம் குடும்பம் மட்டுமல்ல அடுத்த தலைமுறை சமூகம் அழியும் என நெத்தியடியான கருத்தை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிபால்.
20 வருடங்களுக்கு ஊருக்கு ஒரு சில கருத்தரிப்பு மையங்கள் மட்டுமே இருந்தன.. ஆனால் டாஸ்மாக் ஒயின் ஷாப் கடைகளால் சமூகம் சீரழிந்து கிடப்பதால் தெருவுக்கு தெரு) கருத்தரிப்பு மையங்கள் வளர்ந்திருப்பதை காட்டி இருக்கிறார் இயக்குனர்..
குடியால் குடிகாரர் குடும்பம் மட்டுமே அழியும் என்ற நிலையில் அதனால் சமூகத்தில் நடக்கும் வன்முறை அதனை சுற்றி நடக்கும் அரசியல் கலவரம் என அனைத்தையும் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.
குடித்துவிட்டு பல டிரைவர்கள் வாகனம் ஓட்டுவதால் எத்தனை உயிர்கள் இறந்து கிடக்கின்றன என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்..
இந்தப் படத்தை பார்த்து ஒரு சில குடிகாரர்கள் திருந்தினால் கூட சாலா இயக்குனருக்கு சல்யூட் அடிக்கலாம்..!
Saala movie review