தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
23 மணி 23 நிமிடங்களில் உருவான பிதா விமர்சனம்..
தமிழ் சினிமாவில் கின்னெஸ் சாதனை முயற்சியாக 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் ‘சுயம்வரம்’.. இந்தப் படத்தில் ரஜினி – கமல் தவிர 90களில் பிரபல நட்சத்திரங்கள் பிரபு, சத்யராஜ் கார்த்தி, பார்த்திபன், பாண்டியராஜன், விஜயகுமார், சுவலட்சுமி, ரோஜா, ஐஸ்வர்யா ரம்பா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்த படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் 23 மணி நேரம் 23 நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ள சாதனை படம் தான் ‘பிதா’.
இந்தப் படத்தின் ஷூட்டிங் மட்டுமல்லாமல் படத்தின் போஸ்ட் ப்ரடக்சன் பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்த நேரத்திற்குள் படக்குழுவினர் முடித்திருப்பது பெரும் சாதனை தான். முக்கியமாக படத்தின் டப்பிங் இல்லாமல் லைவ் ஆடியோவில் ரெக்கார்டிங் செய்திருப்பது சிறப்பம்சமாகும்.
ஸ்டோரி…
ஆதேஷ் பாலா, சாம்ஸ் மற்றும் மாரிஸ் ராஜா ஆகிய மூவரும் ஒரு தொழில் அதிபரை கடத்துகின்றனர். அவரது கார் டிரைவரையும் கடத்துகின்றனர்.
ரூபாய் 25 கோடி பணம் கேட்டு தொழில் அதிபரின் மனைவியை மிரட்டுகின்றனர்.. கடத்தியவர்களை ஒரு பங்களாவில் அடைத்து வைத்திருக்கும் சூழ்நிலையில் அந்த வழியாக செல்லும் நாயகி அனுவையும் கடத்துகின்றனர்.
தன் அக்கா அனுவை தொலைத்துவிட்ட மாஸ்டர் ஹர்ஷித்.. அப்போது கடத்தல்காரர்கள் அக்காவை கடத்தியது தெரிந்து அவர்களை பின் தொடருகிறான். அதன் பிறகு என்ன நடந்தது?
வாய் பேச முடியாத காது கேளாத இந்த மாஸ்டர் ஹர்ஷித் தன் அக்காவை எப்படி காப்பாற்றினான்.? தொழிலதிபரை மீட்டது எப்படி என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சினிமா கலைஞர்கள் என்றாலும் ஒரே நாளில் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் அனைத்து வசனங்களையும் மனப்பாடம் செய்து கிட்டத்தட்ட நாடக கலைஞர்களைப் போல இந்த சாதனை படத்தை முடிக்க உதவி புரிந்துள்ளனர்..
கதையின் நாயகன் ஆதேஷ் பாலா படத்தில் ஹீரோவும் நானே வில்லனும் நானே என்பது போல இரண்டையும் சரிசமமாக செய்திருக்கிறார்.. தொழிலதிபர் மனைவி ரெஹ்னாவை மிரட்டும் காட்சிகளில் அதிர வைக்கிறார்..
ஆனால் 25 கோடி 25 கோடி என்று அடிக்கடி சொல்வதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்..
சாம்ஸ் மற்றும் மாரிஸ் ராஜா இருவரும் கலகலப்புக்கு உதவி இருக்கின்றனர்.. கிடைக்கும் சில நொடிகளில் கூட தன்னுடைய காமெடி பஞ்ச் டயலாக்கைகளை தூவி விட்டிருக்கிறார் சாம்ஸ்.
பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட அம்மா.. வாய் பேச முடியாத தம்பி என இருவரையும் பார்த்துக் கொண்டு தன் காதலைக் கூட தியாகம் செய்யும் அனுவாக அசத்தியிருக்கிறார் நாயகி அனுகிருஷ்ணா.
பல டிவி சீரியல்களில் பார்த்து ரசித்த ரெஹனா இதில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.. முக்கியமாக இவரது கேரக்டர் படத்திற்கு பெரும் திருப்புமுனை.. அழகிலும் நடிப்பிலும் ரெஹனா செம சூப்பர்.
டெக்னீசியன்ஸ்…
மதியம் 2 மணி அளவில் ஷூட்டிங்கை தொடங்கி அடுத்த நாள் மதியம் 1 மணி அளவில் படத்தை முடித்து இருப்பது நிச்சயமாக ஆச்சரியமாக இருக்கிறது.. முக்கியமாக திருவிழா கூட்டத்தில் படத்தை படமாக்கி இருப்பதும் சிறப்பு..
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.
இயக்குனர் எஸ்.சுகன்… இந்தப் பிதா படத்தை 23 மணி நேரம் 23 நிமிடங்களில் இயக்கி போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளையும் முடித்திருக்கிறார் இயக்குனர் சுகன்.. இந்த சாதனையை முறியடித்து 23 மணி நேரத்தில் கலைஞர் நகர் என்ற ஒரு படத்தையும் இவர் இயக்கியிருப்பது கூடுதல் தகவல்.
ஒரே நாளில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழில் அதிபர் கடத்தல் என, குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார் எஸ்.சுகன்.
இடைவேளைக்கு முன்பு வரை சாதாரணமாக செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாகிறது.. கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து சுவாரசியமாக இருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பலம்..
வசனம் – பாபா கென்னடி,
ஒளிப்பதிவு – இளையராஜா..
இசை – நரேஷ்
எடிட்டர் – ஸ்ரீவர்சன்
கலை -:கே.பி.நந்து
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்,
தயாரிப்பு எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ்,
விநியோகம் – ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ ஜெனீஷ், பிதா படத்தை ஜூலை 26’ம் தேதி உலகெங்கும் வெளியிடுகிறார்..
Record movie Pitha 23 : 23 review





