தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரயில் விமர்சனம் 3.25/5.. வடக்கனை வாழவைக்கும்
ஸ்டோரி…
தமிழகத்திற்கு பிடிப்பு தேடி வந்த ஒரு வடக்கன் பற்றிய கதையாகும்.. இந்த படத்திற்கு வடக்கன் என்ற தலைப்பு வைக்கப்பட்ட நிலையில் சென்சாரில் எதிர்ப்பு வந்த ரயில் என்று மாற்றப்பட்டு பின்பு வெளியானது.
வடக்கன் பர்வேஸ் மெஹ்ரூ தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் குங்குமராஜ் & வைரமாலா வசிக்கும் ஒரே காம்பவுண்டில் மற்றொரு வாடகை வீட்டில் வசிக்கிறார்..
தமிழ்நாட்டில் நேர்மையாக உழைத்து சிறுக சிறுக பணத்தை சேர்த்து மும்பையில் உள்ள குடும்பத்திற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் இவரது எதிர் வீட்டில் இருக்கும் குங்குமராஜா தன் நண்பர் ரமேஷ் வைத்தியாவுடன் இணைந்து வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி சண்டை இடுகிறார்.
வைரமாலாவும் வடக்கனும் அக்கா தம்பியாக பழகி வந்தாலும் இவர்களின் உறவு குங்குமராஜாவுக்கு வெறுப்பை உண்டாக்குகிறது..
எனவே வடக்கனை கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
ஹீரோ – குங்குமராஜ்
ஹீரோயின் – வைரமாலா
வடக்கன் – பர்வேஸ் மெஹ்ரூ
வரதன் – ரமேஷ்வைத்யா
ஹீரோயின் அப்பா – செந்தில் கோச்சடை
குங்குமராஜ் ஊரில் சுற்றித் திரியும் ஊதாரி மருமனாகவே வாழ்ந்திருக்கிறார் பரட்டை தலை நரைத்த முடி அழுக்கு சட்டை லுங்கி என கிராமத்து குடிகாரனை பிரதிபலிக்கிறார்..
இவரது மனைவி வைரமாலா இந்த படத்தின் வைரம் என்றே சொல்லலாம்.. ஒரு கிராமத்து மனைவி குடிகார கணவனிடம் சிக்கிக் கொண்டு படும் அவஸ்தைகளை அப்படியே பிரதிபலிக்கிறார்..
என்னதான் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருந்தாலும் தன் குடிகார கணவனுடன் எப்படி குடும்பம் நடத்த முடியும் என எண்ணும் இல்லத்தரசிகளின் உணர்வுகளை நடிப்பில் உணர வைத்துள்ளார்.
தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என கலங்கும் ஓர் தந்தையை தன் நடிப்பில் உணர வைத்திருக்கிறார் செந்தில்.. மருமகனிடம் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் மகளுக்காக இவர் ஒவ்வொன்றாக செய்யும் செயல்கள் தந்தையை போற்றக்கூடிய நடிப்பாகும்..
வடக்கன் பர்வேஸ் மெஹ்ரூ.. தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்திருக்கிறார்.. வடக்கனை இளக்காரமாக நினைக்கும் தமிழர்கள் மத்தியில் உயர நினைக்கும் இவரது உழைப்பு பாராட்டுக்குரியது.
குங்குமராஜா உடன் சுற்றும் வரதனாக ரமேஷ் வைத்திய.. சீரியஸான படத்தில் இவரது நடிப்பு கலகலப்பு ஊட்டுகிறது.. இவரே படத்தின் பாடல் ஆசிரியரும் கூட
இவர்களுடன்.. டிம்பிள் – ஷமீரா
வடக்கன் அப்பா – பிண்ட்டூ
வடக்கன் அம்மா – வந்தனா
குழந்தை – பேபி தனிஷா
திருப்புளி – சுபாஷ்
இன்ஸ்பெக்டர் – தங்கமணி பிரபு
மில் மேனேஜர் – ரமேஷ் யந்த்ரா
அக்கவுண்டண்ட் – சாம் டேனியல்
வடக்கன் ஃப்ரெண்ட் – ராஜேஷ்
கான்ஸ்டபிள் – ராமையா.. ஆகியோரின் பங்களிப்பு கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது.
டெக்னீசியன்ஸ்…
இயக்குநர் – பாஸ்கர் சக்தி
DOP – தேனி ஈஸ்வர்
இசையமைப்பாளர் – S.J. ஜனனி
எடிட்டர் – நாகூரான் இராமச்சந்திரன்
சவுண்ட் – ராஜேஷ் சசீந்திரன்
பாடலாசிரியர் – ரமேஷ் வைத்யா
தயாரிப்பாளர் – வேடியப்பன்
பெண் இசையமைப்பாளர் ஜனனியின் இசை வசீகரம் செய்கிறது.. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசை அமைத்திருப்பது சிறப்பு. தேவா பாடியுள்ள கானா மெலோடி தாளம் போட வைக்கிறது..
தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவு யதார்த்தம். சினிமா லைட்டிங் இல்லாமல் கிராமத்து வீடுகளில் காணப்படும் விளக்குகளை வைத்து காட்சிகளை நகர்த்தி இருப்பது சிறப்பு.. அதுபோல லைவ் சவுண்டிங் கொடுத்து படமாக்கி இருப்பது சினிமா தனம் இல்லாத ஒன்றாகும்..
இடைவேளைக்கு முன்பு வரை வடக்கன் தமிழன் மோதலை காட்டிய இந்த படம் இரண்டாம் பாதியில் தமிழரின் மனிதநேயத்தை காட்டும் வகையில் படத்தை இயக்கி இருக்கிறார்.. முக்கியமாக வந்தாரை மட்டுமல்ல இறந்தோரையும் கௌரவிக்கும் தமிழ் மண் என காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
பிழைப்புத் தேடி தமிழக வரும் வடக்கன்கள் இந்த படத்தை பார்த்தால் தமிழர்களை நிச்சயம் போற்றுவார்கள்.. இரண்டாம் பாதியில் அயோத்தி பட சாயல் தெரிகிறது. அதே சமயம் தமிழர்கள் கண்மூடித்தனமான நம்பும் சத்தியத்தை வித்தியாசமாக பொய் சத்தியமாக காட்டியிருப்பது யதார்த்தம்.
பஞ்சம் பிழைக்க வடக்கன்கள் தமிழகத்திற்கு வருவது போல தமிழர்கள் மும்பை கொல்கத்தா மற்றும் துபாய் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதும் வழக்கமான ஒன்றாகும்.
நிச்சயம் நம் உறவினர்கள் எவராவது ஏதோ ஒரு நாட்டில் பிழைப்பு தேடி உழைத்துக் கொண்டிருப்பார்கள்.. அவர்களின் உழைப்பை போற்ற வேண்டுமே தவிர அவர்களை உதாசீனப்படுத்த கூடாது என ரயில் படத்தை நகர்த்து இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி.
ஆக.. ரயில்.. வடக்கனை வாழவைக்கும்
Rail movie review