FIRST ON NET பவுடர் விமர்சனம் ; பட்டை தீட்டிய பரட்டை (4.25/5)

FIRST ON NET பவுடர் விமர்சனம் ; பட்டை தீட்டிய பரட்டை (4.25/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன் லைன்…

பவுடர் பூசிக்கொண்டு தன் முகத்தை மறைக்கும் மனிதர்களின் ஒரிஜினல் முகத்தை காட்டி இருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

கதைக்களம்…

1) தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்எல்ஏ-வை ஒரு கும்பல் போட்டு தள்ளுகிறது. இது ஒரு கதை.

2) கமிஷனர் வீட்டில் ஒருவர் தொலைந்து போக அதைப்பற்றி விசாரிக்க நிகில் முருகனை இரவில் அழைக்கிறார் கமிஷனர் ரயில் ரவி.

3) சினிமாவில் பணிபுரியும் விஜய்ஸ்ரீ தன் மகன் ஆன்லைன் வகுப்புக்காக கேட்ட செல்போனுக்காக வேறுவழி இல்லாமல் ஒரு கொலை பழிக்கு ஆளாகிறார்.

4) தன் மகள் அனித்ராவை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலனிடம் நியாயம் கேட்கிறார் தந்தை வையாபுரி.

5) காதலித்தபோது தன்னை நெருக்கமாக படம் எடுத்து மிரட்டும் காதலனிடம் பணம் கொடுக்க வருகிறார் வித்யா பிரதீப். அதிகாலை இவருக்கு திருமணம்.

6) இதனிடையில் சென்னையில் மனிதக்கறி வேட்டை.. இரவில் திருடும் கும்பல்… காதலர்களின் ரொமான்ஸ்.. என திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்.

இந்தக் குட்டி குட்டிக் கதைகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்து இறுதியில் வித்தியாசமான க்ளைமாக்‌ஸ் ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் டைரக்டர் விஜய்ஸ்ரீ.

கேரக்டர்கள்…

சீரியஸ் ரோலில் விஜய் ஸ்ரீ காணப்பட்டாலும் கிளைமாக்ஸ்சில் அவரது செய்கை சபாஷ் போட வைக்கும். பரட்டை என்ற கேரக்டரை பட்டை தீட்டியிருக்கிறார்.

பிஆர்ஓ நிகில் முருகன் முதல்முறையாக கதை நாயகனாக நடித்துள்ளார். தன்னால் முடிந்தவரை ராகவன் கேரக்டரை கொடுத்துள்ளார். இவரது குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட்.

இதுவரை ஏற்காத ஒரு சீரியஸ் கேரக்டரில் வையாபுரி. இனி இவருக்கு தந்தை வேடங்கள் அதிகமாக வரும்.

நாயகியாக அனித்ரா. அழகான நடிகை. ஒரு பக்கம் காதல்.. ஒரு பக்கம் குடும்பம்.. என தன் தவிப்பை நடிப்பில் காட்டியிருக்கிறார்.

அதிகாலை திருமணத்தை வைத்துக் கொண்டு தன் முன்னால் காதலனிடம் சிக்ககிய பறவையாக வித்யா பிரதீப்.

இளையா வரும் காட்சிகள் இளைஞர்களுக்கு இன்பமயமே. மியாவ் மியாவ் என்ற பூனை சத்தம் பூரிப்பு. சாந்தினி ஹாட்..

வித்யா பிரதீப்பின் காதலன் ராணவ் ஆகியோரும் கவனம் வைக்கின்றனர்.

சின்ன சின்ன கேரக்டரில் வரும் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பில் கச்சிதம்.

முக்கியமாக வையாபுரியுடன் வரும் விக்கி தன் பயந்த சுபாவத்தால் நம்மை கவர்கிறார்.

இவர்களுடன் ஆதவன் மற்றும் சில்மிஷம் சிவா இருவரின் காமெடி (காம நெடி) உச்சகட்டம். ஆதவன் அரசாங்கத்தை கிண்டல் அடிக்கும் காட்சிகள் சிறப்பு. அதுபோல சில்மிஷம் சிவா பேசும் இங்கிலீஷ் வார்த்தைகள் ரசிக்கும் ரகம்.

எம்எல்ஏ நமஸ்காரம், மொட்ட ராஜேந்திரன்.. சிங்கம் புலி.. செக்யூரிட்டி தர்மா.. அடியாள் சதீஷ் முத்து போலீஸ்காரர்கள் ஒற்றன் துரை, ராமராஜ் அர்ஜுன், ராயல் பிரபாகர் உள்ளிட்டோரும் கவனம் பெறுகின்றனர்.

டெக்னீஷியன்கள்…

படத்திற்கு இசையமைத்துள்ளார் லியாண்டர் லீ மார்ட்டி. பின்னணி இசை பெரிதாக பேசப்படும்.

மேலும் சாயம் போன வெண்ணிலவே.. நோ சூடு நோ சொரணை ஆகிய பாடல்கள் ரசிக்கும் ரகம். படத்தின் ஒளிப்பதிவை ராஜா பாண்டி மற்றும் பிரஹத் என்பவர் செய்திருக்கின்றனர். இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.

இரவு நேர காட்சி என்றாலும் ஒவ்வொரு கதைக்கும் ஏற்ப லைட்டிங் கொடுத்து செய்து இருப்பது சிறப்பு.

படத்தை நீண்ட நேரம் இழுக்காமல் சிறப்பாக கட்டிங் செய்திருக்கிறார் எடிட்டர் குணா.

படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் விஜய்ஸ்ரீ.

படத்தின் வசனங்கள் பலம்..

முக்கியமாக மின்சார ஒயர்களை அணில் கடிப்பது… போலீஸ் வரும்போது சைரன் அடித்துக் கொண்டே வருவது.. இதனால் திருடர்கள் உஷாராவது என்பதையும் கிண்டல் அடித்துள்ளார்.

இரவு நேரத்தில் கூட காவல்துறை அதிகாரிகள் அவர்களது உயர் அதிகாரிகளால் எப்படி எல்லாம் அலைக் கழிக்கப்படுகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

அதுபோல மக்கள் நினைத்தால் எம்எல்ஏ-களுக்கு மரண பயத்தை உண்டாக்கலாம் என்பதையும் தன் பாணியில் சொல்லி இருக்கிறார்.

காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கு பாடம் கற்பித்திருக்கிறார்.

படத்தில் நெருடலான விஷயம்..

மனிதக்கறி என்பது கொலைக்கு நிகரானது.. ஆனால் அகோரிகள் மத்தியில் பிரபலமான மனிதக்கறியை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஒரு காட்சியில் மனிதக் கறி அடங்கிய பெட்டியை HUMAN MEAT ஹியூமன் மீட் என்ற பெயரில் ஒருவர் டெலிவரி செய்வது என்பது பெரும் கேள்விக்குறி??!? அது இயக்குனருக்கே வெளிச்சம்..

ஆக பவுடர்.. பட்டை தீட்டிய பரட்டை

யூகி விமர்சனம் 3.5/5.; யூகி-க்க முடியாத ஸ்க்ரீன் பிளே

யூகி விமர்சனம் 3.5/5.; யூகி-க்க முடியாத ஸ்க்ரீன் பிளே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்….

ஆரம்பக் காட்சியிலே அழுகையுடன் ரோட்டில் நடந்து செல்கிறார் ஆனந்தி. அந்தப் பக்கமாக செல்லும் ஒரு கார் திடீரென ஆனந்தியை கடத்தி செல்கிறது.

ஆனந்தியை கண்டுபிடிக்க இரண்டு பிரிவு குழுவினர் செல்கின்றனர். ஒரு குழுவின் தலைவர் நட்டி நடராஜ். இவர் யார்? இவர் எதற்காக ஆனந்தியை தேடுகிறார்? என்பது படத்தின் ட்விஸ்ட்.

மற்றொரு குழுவில் தலைவர் நரேன். இவருடன் கதிர் மற்றும் ஆத்மியா உள்ளனர். துப்பறியும் நிபுணரான நரேனுக்கு இந்த ப்ராஜெக்ட்டை கொடுத்தவர் ஓய்வு பெற்ற டிஎஸ்பி பிரதாப் போத்தன்.

ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி ஆனந்தியை தேட சொல்வதன் நோக்கம் என்ன? இந்த குழுவினர் கண்டுபிடித்தார்களா? ஆனந்தி யார்.? அவரை இத்தனை பேர் தேடுவதன் நோக்கம் என்ன? கடத்தி சென்றவர் யார்? அவரது நோக்கம் என்ன? என்பதே கதை.

கேரக்டர்கள்…

நட்டி கேரக்டர் என்ன? என்ற கேள்விகள் அடிக்கடி எழும். ஆனால் கிளைமாக்ஸில் தான் அவரின் கேரக்டரே நமக்கு தெரிகிறது. தனக்கே உரித்தான பாணியில் அசால்டாக செய்திருக்கிறார்.

துடிப்பான போலீஸ் அதிகாரியாகவும் பாசமான கணவராகவும் தன் கேரக்டரை வெளிப்படுத்தியுள்ளார் கதிர்.

துப்பறியும் நிபுணராக நரேன். இவர் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளும் விதங்கள் அருமை. பிரதாப் போத்தன் கேரக்டரும் அருமை.

மூன்று நாயகிகள்.. கயல் ஆனந்தி பவித்ரா லட்சுமி ஆத்மியா.. ஆனால் மூன்று பேருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை. ஆனாலும கொடுக்கப்பட்ட கேரக்டரில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டாக்டராக வரும் வினோதினி படத்திற்கு பிளஸ் பாயிண்ட். வாடகைத்தாய் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளார்.

நடிகராக வரும் ஜான்விஜய் சிறப்பான நடிப்பு. இவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனரிடம் கதை கேட்டு அதன் பின் காட்சிகளை மாற்றியமைக்கும் காட்சிகள் சிறப்பு.

டெக்னீசியன்கள்…

வாடகை தாய் படும் வேதனைகள்.. அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் – ஸாக் ஹாரிஸ்.

மானத்தைக் காக்கவும் கௌரவத்திற்காகவும் வாடகை தாய்களை அமர்த்திக் கொள்ளும் பணக்காரர்களையும் அவர்களின் அலட்சியத்தையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

படத்தின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளது. படத்தில் பாடல்கள் இல்லை. ரஞ்சின் ராஜ் பின்னணி இசை.

அடுத்த காட்சி இதுவாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ? என யூகிக்க முடியாமல் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். ஆனால் அதை சொன்ன விதத்தில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். திடீர் திடீரென காட்சிகளை மாற்றி செல்வது படத்தின் விறுவிறுப்பை குறைக்கிறது.

இடைவேளைக்கு முன்பு வரை படம் விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளைக்குப் பிறகுதான் கதையில் பல முடிச்சுகளை அவிழ்கிறார்.

ஆக.. யூகி.; யூகிக்க முடியாத ஸ்கிரீன் ப்ளே

நான் மிருகமாய் மாற விமர்சனம்.; ரத்தக் குளியல்

நான் மிருகமாய் மாற விமர்சனம்.; ரத்தக் குளியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு கொலை கும்பலிடம் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற ஒரு காமன் மேன் போராடும் வாழ்க்கையே ஒன்லைன்..

கதைக்களம்…

சினிமா துறையில் பணிபுரியும் சவுண்ட் இன்ஜினியர் சசிகுமார். இவருக்கு ஒரு அழகான குடும்பம். அம்மா அப்பா தம்பி மாமா தங்கை மனைவி மகள் என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள் மிகப்பெரிய தொழில் அதிபரை கொல்ல திட்டமிடுகிறது ஒரு கும்பல். இதற்காக கோடிக்கணக்கில் அவர்களுக்கு பணம் பேரம் பேசப்படுகிறது.

அதிகாலை நேரத்தில் அந்த தொழிலதிபர் வாக்கிங் போகும் வேளையில் அவரை கொல்ல துரத்துகின்றனர். அப்போது சசிக்குமாரின் சகோதரர் அவரை காப்பாற்றி விடுகிறார். இதனால் அவரது சகோதரரை அந்த கும்பல் கொன்று விடுகிறது.

இதனால் பழிவாங்க அந்த கும்பலை கொன்றுவிடுகிறார் சசிகுமார். இதனால் கும்பலின் தலைவனுக்கு பணம் வரவில்லை.

“நாங்கள் கொல்ல திட்டமிட்டிருந்த ஒரு நபரை உங்கள் சகோதரன் காப்பாற்றி விட்டான்.. எனவே நீங்கள் தான் அவரை கொல்ல வேண்டும்.. இல்லை என்றால் உன் குடும்பத்தை கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர்.

சசிகுமார் அந்த தொழில் அதிபரை கொன்றாரா.? தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? அந்த கும்பலின் தலைவன் யார்? சசிகுமார் அவர்களை கண்டுபிடித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

சசிகுமார் என்றால் கிராமத்துக் கதையே பெரும்பாலும் இருக்கும். இதில் சிட்டி சப்ஜெக்ட்டை தொட்டுள்ளார். அதற்காக சசியை பாராட்டலாம்.

ஆனால் படம் முழுக்க ரத்தம் தெறிப்பதால் சசிக்குமாரின் முகத்தையும் முழுதாக காண முடியவில்லை. ஆல்ரெடி அவர் முகத்தை மறைத்து தாடி வேற இருக்குமே..

நாயகியாக ஹரிப்ரியா நடித்துள்ளார் இடைவேளைக்கு முன் அவர் படத்தில் இருப்பதே தெரியவில்லை. இடைவேளைக்குப் பிறகுதான் சில காட்சிகளில் வருகிறார். அழகு நிறைந்த இல்லத்தரசியாக வருகிறார்.

வில்லனாக விக்ராந்த் நடித்துள்ளார் அவருக்கு யார் டப்பிங் குரல் கொடுத்தார்களோ? ஆனால் அது நன்றாகவே உள்ளது.

டெக்னீஷியன்கள்…

‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை ரத்தம் வாடையே.. ஒரு கட்டத்தில் ரத்தம் கேமராவை தாண்டியும் நம் முகத்தில் தெறிப்பது போல உள்ளது.

ஒரு சாதாரண மனிதன் திடீரென இத்தனை கொலைகளை செய்யும் கொலைகாரனாக மாறுவது சரியாக தோன்றவில்லை. அதற்கான காரணத்தை ஒரு காட்சியில் நீதிமன்றத்தில் காட்டி இருந்தாலும் அது கதைக்கு போதவில்லை.

சசிகுமாரின் குடும்பத்தின் பாசத்தை ஒரு பாடல் வைத்தாவது காட்டி இருக்கலாம். பாடலும் அதற்கான காட்சிகளும் இல்லாததால் குடும்ப செண்டிமெண்டில் நம்மால் ஒன்ற முடியவில்லை.

ஜிப்ரான் பின்னணி இசையில் தெறிக்கவிட்டுள்ளார். கொலைக் காட்சிகளில் சதக் சதக் என்ற சத்தமே நம்மை நிலைகுலையச் செய்கிறது.

படத்தின் கிளைமாக்ஸில் தான் ஹீரோவும் வில்லனும் சந்திக்கிறார்கள். அப்படியான சூழ்நிலையில் அனல் தெறிக்கும் சண்டைக் காட்சி வைத்திருக்கலாம்.? ஒருவேளை எடிட்டர் கட் செய்து விட்டாரோ.?

ஃபைட் இல்லாமல் வில்லனின் கதை முடிவது பெரும் ஏமாற்றமே..

ஆக ஒரு காமன் மேன் இந்த படத்தை பார்க்க சென்றால் ரத்தக் குளியல் தான்.

Naan Mirugamai Maara movie review and rating in tamil

FIRST ON NET கலகத் தலைவன் 4/5.; கார்ப்பரேட் வில்லன்

FIRST ON NET கலகத் தலைவன் 4/5.; கார்ப்பரேட் வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்

கார்ப்பரேட்டை எதிர்த்து போராடும் ஒருவன் இதுவே படத்தின் ஒன்லைன்..

கதைக்களம்..

லாரி போன்ற கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் உதயநிதி வேலை செய்கிறார்.

அந்நிறுவனம் தயாரித்த ஒரு மாடலில் வெளியேறும் புகை காற்று மாசுப்படுதலை அதிகரிக்கிறது.

இந்த ரகசியம் வெளி உலகுக்கு தெரிகிறது. இதனால் ஷேர் மார்கெட்டில் வீழ்ச்சியை சந்திக்கிறது அந்த நிறுவனம்.

வாகனம் வருவதற்கு முன்பே இந்த ரகசியத்தை சொன்ன ஊழியர் யார் என விசாரிக்கிறது நிறுவனம்.. இதற்காக ஆரவ் நியமிக்கப்படுகிறார்.

ரகசிய ஊழியரை கண்டு பிடித்தாரா.? அவர் யார்? அவரின் நோக்கம் என்ன? என்பதே கதை.

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத இறுக்கமான கேரக்டரில் உதயநிதி. சீரியசாக சிறப்பு. அவர் போடும் திட்டங்கள் பலே பலே..

கொஞ்சம் நேரமே வந்தாலும் கலையரசன் கலக்கல்.. கதைக்கு உயிர் கொடுக்கும் தோழனாக வருகிறார். ரயில்வே ஸ்டேசன் காட்சி நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கும்..

பாதி வார்த்தைகளை இதழ்களால் பேசினால் மீதியை அழகான கண்களால் உணர வைத்துள்ளார் நிதி அகர்வால்.. காதல் பிரிவு… ஏக்கம்.. குடும்ப பாசம் ஆகியவற்றை உணர்ந்து மைதிலியாக மனதில் நிறைகிறார்.

எல்லோரையும் அசல்ட்டாக அள்ளி ஸ்கோர் செய்துள்ளார் ஆரவ்.. செம ஸ்மார்ட் வில்லனாக மிரட்டி இருக்கிறார். ஆனால் க்ளைமாக்ஸ் காட்சியில் சட்டையை கழட்டிட்டு பேன்ட் உடன் செல்லும் காட்சி நம்பும்படி இல்லை.. லாஜிக் செட்டாகல..

டெக்னீஷியன்கள்…

ஸ்ரீகாந்த் தேவா இதுவரை இல்லாத மாதிரி புதுமையான இசையை வெளிப்படுத்தி உள்ளார்.. பெரும்பாலும் குத்து பாடல்கள் தான் ஸ்ரீகாந்த் ஸ்பெஷல்.

ஆனால் மெலோடி பாடல்களால் நம்மை வருட வைத்துள்ளார்.. ஹே புயலே பாடல் அருமை.. பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார் அரோல் கெரோலி..

டெல்லி ராஜ் ஒளிப்பதிவு வேற லெவல்.. நிதி அகர்வாலை ரசித்து ரசித்து எடுத்துள்ளார். முக்கியமாக நிதி முகத்தில் வழிந்தோடும் வேர்வைத்துளி சேருமிடம் கவிதை மழை..

தடம் படத்தில் முத்திரை தடத்தை பதித்த மகிழ் திருமேனி இந்த படத்தில் கார்ப்பரேட்டை கதற வைத்துள்ளார்.

மக்கள் உயிருடன் விளையாடும் கார்ப்ரேட்டை தன் மேக்கிங்கில் பிரதிபலித்திருக்கிறார்.

அரசு தன் சொத்தை குறைந்த மதிப்பில் ஒரு தனியார் கார்பரெட் நிறுவனத்திற்கு விற்பதால் மக்கள் எப்படி எல்லாம் பாதிப்பைச் சந்திக்கிறார்கள் என்பதை தன் பாணியில் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

ரொமான்சிலும் தன் கலையை காட்டி இருக்கிறார் இயக்குனர். முக்கியமாக பெண்கள் வைத்திருக்கும் கைப்பையை வைத்தே பெண்களின் குணங்களை சொல்லும் காட்சிகள் சூப்பர்.

ஆக.. கலகத் தலைவன்.. கார்ப்ரேட் வில்லன்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம் (மலையாளம்) 3.75/5

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம் (மலையாளம்) 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிநவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் வினித் ஸ்ரீனிவாசன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’.

இயக்கம் : அபினவ் சுந்தர் நாயக்
இசை : சிபி மேத்யூ அலெக்ஸ்
தயாரிப்பு : டாக்டர் அஜித் ஜாய்

கதைக்களம்…

வாழ்க்கையில் தான் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஒருவன் எத்தனை தில்லுமுல்லுகள் செய்தாலும் அவன் இலக்கை அடைந்து விடுவான்.. அதுவும் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு எளிதான காரியமே.

நாம் பல படங்களில்.. “ஒரு வழக்கு விசாரணைக்காக போலீஸ் எந்த மாதிரியான காரியங்களிலும் இறங்கி தனக்கு சாதகமான விசாரணையை மாற்றி அமைத்துக் கொள்வார்கள் என்பதை பார்த்து இருக்கிறோம்.

அது போல இந்த படத்தில் வக்கீல் ஒருவர் சாதாரணமாக எதிர்பாரா விதமாக நடைபெறும் விபத்துகளை தனக்கு ஏற்றவாறு மாற்றி அதன் மூலம் காப்பீட்டுக்கான தொகையை பெற்று நினைத்ததை சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி அடைவதே இந்த படத்தில் கதை.

அந்த வக்கீல் எந்த மாதிரியான தில்லுமுல்லுகளை செய்தார்.? வாழ்க்கையில் வெற்றி அடைந்தாரா? என்பதே படத்தில் கிளைமாக்ஸ்

கேரக்டர்கள்…

வழக்கறிஞர் கேரக்டர்க்கு வினீத் சீனிவாசன் பொருத்தமானவர் என்பதை காட்சிகள் நிரூபித்திருக்கிறார். ஒரு யதார்த்த வக்கீலாகவும் முன்னேற துடிக்கும் இளைஞனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தன் மனைவி புத்திசாலி என்றால் தன் நண்பன் கட்டிக்க போகும் மனைவி அதி புத்திசாலி என்பதால் அவர் யோசிக்கும் ஒவ்வொரு சிந்தனைகளும் நம்மை அதிர வைக்கின்றன.

அதுபோல அவரது மைண்ட் வாய்ஸ் காட்சிகள் அனைத்தும் காமெடி கலக்கலாக உள்ளது.

மேலும்… சூரஜ்ஜ, வெஞ்சாராமூடு, சுதய்,கோபா, அர்ஷா பைஜு, தன்விராம், ஜார்ஜ்கோரா ஆகியோர் தங்கள் பங்களிப்பை நேர்த்தியாக சேர்த்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டும்படியாக உள்ளது. முக்கியமாக படத்தின் டைட்டில் கார்டிலேயே பேச வைக்கப்படுகிறார்கள்.

உதாரணத்திற்கு இந்த படத்தில் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்று டைட்டில் கார்டு வரும்.. அதற்கும் ஒரு கார்ட்டூன் டிசைன் செய்து கிராபிக்ஸ் செய்துள்ளனர்.

அதுபோல இடைவேளை முடிந்து படம் ஆரம்பிக்கும் போது.. “எல்லாரும் வந்துட்டீங்களா.? வந்தாலும் வரலைன்னாலும் நாங்க ஸ்டார்ட் பண்றோம் என்பது போல காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

அது போல கிளைமேட்சியிலும் கார்ட்டூன் கிராபிக்ஸ் காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. இது போல வித்தியாசமான சிந்தனைகள் தான் ஒரு படைப்பாளியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.

சிபி மேத்யூ அலெக்ஸ் பின்னணி இசையில் கதையுடன் ஒன்ற வைத்துள்ளார்.

ஆக எல்லோரும் விரும்பும் வகையில் ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் அபிநவ் சுந்தர் நாயக்..

Cast and Crew :

Main Lead : Vineeth Srinivasan

Actors : Vineeth Srinivasan, Suraj Venjaramoodu, Sudhy Kopa, Arsha Baiju, Tanvi Ram, George Kora, Riaa Saira, Sudheesh..

Director : Abhinav Sunder Nayak

Writers : Abhinav Sunder Nayak & Vimal Gopalakrishnan

DOP : Viswajith Odukkathil

Music : Sibi Mathew Alex

Executive Producers : Pradeep Menon, Anoop Raj M

Mukundan Unni Associates movie review and rating in tamil

மிரள் விமர்சனம் 3/5.; குலசாமியும்… குற்ற ஆசாமியும்..

மிரள் விமர்சனம் 3/5.; குலசாமியும்… குற்ற ஆசாமியும்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பரத் வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். மனைவி பயந்த சுபாவம் என்பதால் அதை நினைத்து கவலை கொள்கிறார் பரத்.

ஒரு கட்டத்தில் தன் மாமியார் மீராவிடம் இது பற்றி கூறுகையில்..” மாப்ள எங்கள் கிராமத்திற்கு வந்து குல தெய்வத்தை வழிபட்டால் சரியாகும் என்கிறார்.

எனவே கிராமத்திற்கு சென்று குலசாமியை வழிபடுகின்றனர். திடீரென பரத் தொழில் ரீதியாக உடனே திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே தன் மாமனார் கேஎஸ். ரவிக்குமாரிடம் சொல்லி விட்டு நடுராத்திரியில் மனைவி மற்றும் மகனுடன் காரில் பயணிக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக கார் பிரேக் டவுன் ஆகிறது. அந்த சமயத்தில் பரத்தை மர்ம ஆசாமி ஒருவன் அடித்துப் போட்டுவிட்டு வாணியை கடத்திச் செல்கிறார்.

அந்த மர்ம ஆசாமி யார்? பரத்தை அடித்து போட என்ன காரணம்? வாணியை கடத்த என்ன காரணம்? அந்த இரவில் நடந்தது என்ன? என்பதே கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

எந்த ஒரு ஹீரோ பந்தாவும் இல்லாமல் அமைதியாக கேரக்டருக்கு தகுந்தாற்போல் நடித்திருக்கிறார் பரத். இவருக்கு சரியான ஜோடி வாணி.

நாம் காணும் இல்லத்தரசியாக அழகாக வந்து செல்கிறார் வாணி. இவர்களை மிரட்டும் உருவத்தை காணும்போது இருவரும் பயந்து நம்மையும் பயப்பட வைத்துள்ளனர். அடுத்தது என்ன நடக்கும்.? என்ன நடக்கும்? என்ற பரிதவிப்பை தன் கண்களில் காட்டி இருக்கின்றனர்.

வாணியின் பெற்றோர்களாக கேஎஸ் ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள்.

பரத்தின் நண்பராக ராஜ்குமார் நடித்துள்ளார். இவரின் கேரக்டர் ஏனோ தானோ என இருக்கிறதே என நினைக்கையில் ஒரு செம டெஸ்ட் கொடுத்து இருக்கிறார்கள்.. அதை சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா இரவு காட்சிகளில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். எஸ்என் பிரசாத்தின் பின்னணி இசை திடீர் திடீரென பயமுறுத்தி நம்மை பேய் படம் பார்க்கும் எண்ணத்தை கொடுத்துள்ளது.

இதுவும் வழக்கமான பேய் படம் தானா என்று நாம் நினைக்கும் போது கிளைமாக்ஸ் வித்தியாசமான ஒரு விஷயத்தை கொடுத்து மிரள வைத்துள்ளார் இயக்குனர் சக்திவேல்.

ஆனால் முதல் பாதியில் நீளத்தை கொஞ்சம் எடிட்டிங் செய்து இருக்கலாம் எடிட்டர்.

ஆக இந்த மிரள்.. குலசாமியும் குற்ற ஆசாமியும்..

More Articles
Follows