பிச்சுவாகத்தி விமர்சனம்

பிச்சுவாகத்தி  விமர்சனம்

நடிகர்கள் : இனிகோ பிரபாகர், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனிஷா, யோகிபாபு, ரமேஷ்திலக், பாலசரவணன், காளிவெங்கட், மொட்டை ராஜேந்திரன், ஆர்என்ஆர் மனோகர், சேரன்ராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : ஐயப்பன்
இசை : என்ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு: K.G.வெங்கடேஷ்
எடிட்டர்: ராஜாசேதுபதி
பி.ஆர்.ஓ. : வின்சன்
தயாரிப்பு : மாதையன் ஸ்ரீஅண்ணாமலையார் மூவீஸ்

???????????????????????????????????????

கதைக்களம்…

தஞ்சாவூரில் ஜாலியாக சுற்றித்திரியும் நண்பர்கள் இனிகோ பிரபாகர், யோகிபாவு, ரமேஷ்திலக். இதில் இனிகோவின் காதலி ஸ்ரீபிரியங்கா. இவர்களின் கதை ஒருபக்கம்.

அடுத்த ஹீரோ செங்குட்டுவன், காதலி அனிஷா மற்றும் நண்பன் பாலசரவணன் மற்றொரு பக்கம்.

இனிகோ, யோகி, ரமேஷ்திலக் மூவரும் ஊர் ஆட்டை திருடிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படுகின்றனர். மேலும் அருகிலுள்ள கும்பகோணம் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று ஒரு மாதம் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கிறது கோர்ட்.

அவர்கள் ஸ்டேஷனுக்கு செல்ல, அங்குள்ள இன்ஸ்பெக்டர் இவர்களை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார். இல்லையென்றால் பணம் கேட்டு மிரட்டுகிறார்.

பணத்திற்காக அனிஷாவின் செயினை பறிக்க மேலும் ஒரு குற்றம் இவர்கள் மீது விழுகிறது.

இந்த குற்றத்தை பதிவு செய்யாமல் இருக்கவேண்டுமென்றால் வைரம் கடத்த பணிக்கப்படுகிறார்.

இதனால் குற்றம் மேல் குற்றம் செய்யும் இவர்கள், மிகப்பெயரி ஆளாகுகின்றனர்.

இதற்கு எல்லாம் காரணமான அனிஷாவை கொல்ல திட்டமிடுகின்றனர்.

இதனிடையில் ஸ்ரீபிரியங்காவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.

எனவே, இவர்கள் என்ன செய்தார்கள்? ஊர் திரும்பினார்களா? குற்றமே இவர்களுக்கு வாழ்க்கையானதா? அனிஷா கொன்றார்களா? என இரண்டு கதைகளை இணைத்து பிச்சுவாகத்திக்கு பட்டை தீட்டியிருக்கிறார் ஐயப்பன்.

Pichuva Kathi yogibabu

கேரக்டர்கள்…

இதுநாள் வரை ஹீரோக்களின் நண்பராக வந்த இனிகோ பிரபாகர் இதில் தன் ஹீரோ கேரக்டரில் முத்திரை பதிக்கிறார்.

ஸ்ரீபிரியங்காவிடம் காதலை சொல்லுவதில் தொடங்கி, நண்பர்களிடம் ஜாலியாக திரிவதும், போலீசிடம் மாட்டி அவஸ்தைப்படுவதும் என அனைத்திலும் இனிமை சேர்கிறார் இனிகோ.

மற்றொரு நாயகன் செங்குட்டுவன் யதார்த்த நாயகனாக வருகிறார். க்ளைமாக்ஸில் இவரின் முடிவு எதிர்பாராத திருப்பம்.

ஸ்ரீபிரியங்கா துறுதுறுப்பு என்றால் அனிஷா அமைதி. இரு நாயகிகளும் தங்கள் கேரக்டர்களுக்கு அழுத்தம் கொண்டு நடிப்பில் தேர்ச்சில் பெறுகிறார்கள்.

சீரியஸ் படத்தில் யோகிபாபுவின் காமெடி படத்திற்கு பலம். அவர் கொடுக்கும் கவுண்டர் காமெடிகள் கச்சிதம்.

தமிழ்நாட்டுக்கே தலதான். திலோத்தமா எனத் தொடங்கி, அர்னால்ட் பைட் என பன்ச் பேசுவது,கிரிக்கெட் மேட்ச் சீன், சரக்கு சீன் என அப்ளாஸ்களை அள்ளுகிறார் யோகிபாபு.

இதில் சீரியஸ் ரோலில் ரமேஷ் திலக். கேரக்டரை உணர்ந்த நடிப்பு பளிச்சிடுகிறார்.

பாலசரவணன் மற்றும் கோலி சோடா சீதா ரொமான்ஸ் ரசிக்கும் ரகம்.

மன்னார் அண்ட் கம்பெனி காளிவெங்கட் கேரக்டர் எம்எல்எம் பெயரில் போலித்தனம் செய்பவர்களை போட்டுத் தாக்குகிறது.

மொட்டை ராஜேந்திரன், ஆர்என்ஆர் மனோகர், சேரன் ராஜ், கூல் சுரேஷ் ஆகியோர் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

????????????????????????????????????????????????????????

தொழில்நுட்ப கலைஞர்கள்…

என் ஆர் ரகுநந்தன் இசையில் யுக பாரதி வரிகளில் பாடல்கள் அனைத்தும் அருமை.

யே சிறுக்கி, என்ன சொல்ல, மிருகம் மிருகம், அடியே அடியே என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரகுநந்தன் இசையில் இனிமை சேர்கிறது.

பாடலும் பாடலை படமாக்கிய விதங்களும் அருமை.

க்ளைமாக்சில் அனிஷாவை பழிவாங்கும் வரும்போது எழும் பாடல் அருமை. ஆனால் அதை திடீரென கட்டாக்கி வேறு திசையில் மாற்றியது ஏனோ?

ஒளிப்பதிவாளர் கைவண்ணத்தில் பகல், இரவு காட்சிகளும் கிராமத்து அழகும் கூடுதல் பலம்.

இனிகோவின் காட்சிகள் விறுவிறுப்பாக செல்லும்போது, செங்குட்டுவின் காதல் காட்சிகளில் கத்திரி போட்டு இருக்கலாம் எடிட்டர் ராஜாசேதுபதி. படத்தின் விறுவிறுப்பதை அதை குறைக்கிறது.

??????????????????????????????????????????????????

இயக்கம் பற்றிய அலசல்…

தனிதனியாக இரண்டு ட்ராக்கை கொண்டு சென்று அதில் சின்ன டச் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

எம்எல்எம் மார்கெட்டிங்டில் நடைபெறும் தில்லுமுல்லுகளை சொன்ன விசயத்தில் ஐயப்பன் அப்ளாஸ் வாங்குகிறார்.

விறுவிறுப்பான திரைக்கதையில் ரொமான்ஸை  குறைத்திருந்தால் கூடுதல் கவனம் பெறும் இந்த கத்தி.

பிச்சுவாகத்தி… வீச்சு கத்தி

Comments are closed.