ஒன்லைன்..
அதிசயமிக்க பன்றி சிலை ஒன்று பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது தற்போது யார் கையில் உள்ளது. அதனால் அவர்கள் அடைந்த லாபம் என்ன?
கதைக்களம்
மிகப்பழமை வாய்ந்த சின்ன சிறிய பன்றி சிலை ஒன்றை சீன நாட்டிலிருந்து கைப்பற்றிய ஒருவர் தமிழகத்திற்கு வருகிறார்.
ஒரு கட்டத்தில் தொல்லியல் துறை ஆய்வாளர் ஒருவர் அதை எடுத்துச் செல்ல அவர்களிடமிருந்து மற்றொரு கும்பல் அதைப் பிடுங்கி செல்கிறது.
இதன் பின்னர் ஓரிரு இளைஞர்கள் அதன் ரகசியத்தை அறிந்து திருடி சென்று மறைத்து வைக்கிறார்கள். அதன் பலனை அனுபவிக்கும் முன்பே அவர்கள் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள்.
இந்த நிலையில் போலீஸ் பாலாஜி ரத்தினம் மற்றும் ரவுடி விஜய் சத்யா ஆகியோர் பன்றி சிலையை பறிக்க போராடுகிறார்கள்.
இதே சமயத்தில் சினிமா டைரக்டராக போராடும் நிஷாந்தும் இந்த பன்றி கதைக்குள் வருகிறார். இவரிடம் தயாரிப்பாளர் ஒருவர் கதையை தனக்கு ஒரு நல்ல தொகைக்கு விற்கும்படி கேட்கிறார். இதனை ஒப்புக்கொள்ளாத இயக்குனர் (இவர்தான் நாயகன்) வேறு தயாரிப்பாளரை தேடி நகர்கிறார்.
இறுதியில் அந்த பன்றி சிலையை யார் கைப்பற்றினார்கள் என்பதுதான் மீதிக் கதை.
கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் பெண் கேரக்டர்கள் எவரும் இல்லை என்பது பெரிய விஷயம்.
இதில் நாயகன் இவர்தான் என யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது.
நிஷாந்த், விஜய் சத்யா, பாலாஜி ரத்னம், செல்லா, வியன், பாஸ்கர் மற்றும் ஜீ நண்பர் ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இவர்கள் நடிப்பை மீறி யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
பாழடைந்த கம்பெனி ஒன்றில் படமாக்கப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் செல்வராஜின் பணிகள் பாராட்டும் படி உள்ளது.
சுரேன் விகாஷின் பின்னணி இசை சிறப்பு. முக்கியமாக பன்றிக்கு… என்ற பாடல் ரசிக்கும்படியாக உள்ளது.
எடிட்டர்கள் ராம் சதீஷ் இருவரையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு மணி நேரம் 42 நிமிடத்திற்குள் படத்தை எடிட்டிங் செய்துள்ளனர்.
கிரைம் காமெடியாக சொல்லப்பட்ட திரைக்கதையில் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குனர் பாலா அரன். சில திருப்பங்களும் விறுவிறுப்பை கொடுத்துள்ளன.
ப்ளாக் காமெடி படம் என்றால் இன்னும் பல நகைச்சுவைகளை ஆங்காங்கே அளித்து தெளித்திருக்கலாம். ஆனால் காமெடி கொஞ்சம் கம்மிதான்.
இளைஞர்களின் இந்த வித்தியாசமான முயற்சியை நிச்சயம் பாராட்டலாம்.
ஆக.. இந்த பன்றிக்கு நன்றி சொல்லி… பவர்புஃல் பன்றி
Pandrikku Nandri Solli Review rating