தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
FIRST ON NET படிக்காத பக்கங்கள் பட விமர்சனம் 3.25/5.. பயனுள்ள பக்கங்கள்
செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக கவர்ச்சியாக நடித்துள்ள படம் ‘படிக்காத பக்கங்கள்’.
இதில் பிரஜின், ஜார்ஜ் மரியன், ஆதங்க பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
பெரிய விபத்திற்குப் பிறகு கதையின் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் படம் ‘படிக்காத பக்கங்கள்’ இதில் நடிகையாக ஸ்ரீஜா என்ற பெயர் நடித்திருக்கிறார்.
ஸ்டோரி…
சேலத்தில் ஏற்காடுக்கு ஷூட்டிங் வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.. அப்போது ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அவரைப் பேட்டி எடுக்க லோக்கல் சேனல் ரிப்போர்ட்டர் என்ற பெயரில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு அந்த ஹோட்டலுக்கு வருகிறார் ரிப்போர்ட்டர் (சைக்கோ வில்லன்) முத்துக்குமார்.
நடிகையைபேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போத.. உங்களின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் யாருடன் படுத்தீர்கள்? எவ்வளவு கோடி உங்களிடம் இருக்கிறது? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்.
இதனால் கடுப்பான யாஷிகா அவரை செருப்பால் அடித்து கேமராவை உடைத்து விடுகிறார்.. இதனால் கடுப்பாகும் அந்த ரிப்போர்ட்டர் கேமரா ஸ்டாண்ட் எடுத்து அவரது தலையில் அடித்து யாஷிகாவை நாற்காலியில் கட்டிப்போட்டு துன்புறுத்துகிறார்.
உன்னுடன் நான் படுக்க வேண்டும்.. உன்னுடைய தீவிர ரசிகன் நான்” என்று மிரட்டுகிறார்.
என்னை கொன்று விடாதே.. நான் உன்னுடன் படுக்கிறேன் என சம்மதிக்கிறார் யாஷிகா. இருவரும் காம லீலையில் ஈடுபடும்போது திடீரென ரிப்போர்ட்டரை அடித்து உதைத்து நாற்காலியில் கட்டி போட்டு விடுகிறார் யாஷிகா.
நான் சாதாரண ஆள் இல்லை.. என்னிடம் பெரிய நெட்வொர்க் இருக்கிறது.. உன்னை போன்ற நடிகைகளை பெரிய விஐபிகளுக்கு விருந்தாக்கி பணம் பார்க்கும் கும்பல் நான்.. நான் செல்லவில்லை என்றால் உன்னை கொன்று விடுவார்கள் என மிரட்டுகிறார் அந்த ரிப்போர்ட்டர்.
நீ இங்கு வரவில்லை.. உன்ன வர வைக்க ஸ்கெட்ச் போட்டதே நான் தான் என்கிறார் யாஷிகா.. அப்படி என்றால் உண்மையில் யாஷிகா யார்? அவரது பின்னணி என்ன அந்த ரிப்போர்ட்டர் உண்மையில் யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
இந்த படிக்காத பக்கங்களை பார்க்கத்தக்க வகையிலும் ரசிக்கத் தக்க வகையிலும் கவர்ச்சியாகவும் அழகாகவும் கொடுத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்தியிருக்கிறார்.. முக்கியமாக கவர்ச்சி தூக்கலாகவே இருக்கிறது.. கோடையிலும் சூடேற்றும் இவரது அழகு..
இரண்டு மணி நேர படத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு தான் வருகிறார் நாயகன் பிரஜின். இவரது கேரக்டர் படத்திற்கு திருப்புமுனை..
நாட்டில் ஒரு குற்றம் நடக்கும்போது அதன் பின்னணி என்ன? என்ற படிக்காத பக்கங்களை படிக்க வேண்டும் என்ற வசனங்களை சொல்லி ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் பிரஜின்..
சைக்கோ வில்லன் முத்துக்குமார் மிரட்டி இருக்கிறார்.. இவரது தலைமுடி இவருக்கு செட்டாகவில்லை.. கொஞ்சம் கவனித்து இருக்கலாம்..
அதுபோல ஆதங்க பாலாஜி மற்றும் தன்ஷிகா உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.
டெக்னீசியன்ஸ்…
பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்… பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.. பாடலும் வரிகளும் ரசிக்கும் ரகமே..
இப்படத்திற்கு டாலி ஒளிப்பதிவு செய்ய, மூர்த்தி மற்றும் சரண் ஷண்முகம் எடிட்டிங் செய்துள்ளனர்.
பெரும்பாலும் சமீபத்திய படங்களில் நீளம் பெரும் குறையாக இருக்கிறது.. ஆனால் இந்த படிக்காத பக்கங்களை இரண்டு மணி நேரத்திற்குள் கொடுத்திருப்பது சிறப்பு.
இந்த படத்தை எஸ் மூவி பார்க் & பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன..
நாளிதழ்களில் குற்ற செய்திகளை படிக்கும் போது பெரிய எழுத்துக்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.. ஆனால் அதன் பின்னர் நடந்தது என்ன என்ற செய்திகளுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது.. அதுபோல அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்காது இவைதான் அந்த படிக்காத பக்கங்கள்..
இப்படித்தான் நாட்டில் எந்த ஒரு நிகழ்வுக்கு முக்கியமான நிகழ்வுக்கு படிக்காத பக்கங்கள் நிறைய இருக்கிறது.. நாம் அறிந்திட வேண்டிய பக்கங்கள் நிறைய இருக்கிறது.. அந்த படிக்காத பக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த படத்தை இயக்கியிருக்கிறார் செல்வம் மாதப்பன்.
ஆக இந்த படிக்காத பக்கங்கள்.. பயனுள்ள பக்கங்கள்..
Padikaadha Pakkangal movie review