பவர் கட் லவ்… பச்சை விளக்கு விமர்சனம் 2.25/5

பவர் கட் லவ்… பச்சை விளக்கு விமர்சனம் 2.25/5

கதைக்களம்…

பொதுவாக போலீஸ் படம் என்றால் சிவில் அண்ட் லா போலீஸ் பற்றித்தான் படம் இருக்கும். ஆனால் இதில் போக்குவரத்து போலீசார் பற்றி பாடம் எடுத்திருக்கிறார்கள்.

முக்கியமாக அதற்கான படிப்பை தன் நிஜ வாழ்க்கையில் படித்து அதை படமாக்கி இருக்கிறார் டாக்டர் மாறன்.

போக்குவரத்து விதிகள் பட்டயப்படிப்பு படித்திருக்கும் மாறன், டிராபிக் வார்டன் இருக்கிறார். இந்த வார்த்தையே பலருக்கு புதியாகதாக இருக்கும்.

இவர் ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே போக்குவரத்து நெரிசலின் போது போலீஸ் துறைக்கு உதவுகிறார்.

அப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி தீஷா கண்டிக்கிறார். எனவே மாறனை பழி வாங்க நினைக்கிறார்.

மோதலில் உருவான இவர்களின் சாலை சந்திப்பு பின்பு காதல் சந்திப்பாக மாறுகிறது.

இந்த கட்டத்தில் தன் தங்கை தாராவுக்கு ஒரு பிரச்சினை என திடீரென ஊருக்கு கிளம்புகிறார் தீஷா.

அங்கு தன் தங்கை ஆபாச படம் எடுக்கும் கும்பலிடம் சிக்கிய விவரம் இவருக்கு தெரிய வருகிறது.

தன் காதலியை தேடி வரும் மாறனுக்கு இந்த விவரம் தெரிய வருகிறது.

அதன் பின்னர் மாறன் என்ன செய்தார்? தீஷா எப்படி திருமணம் செய்தார்? தாராவை எந்த வழியில் காப்பாற்றினார்? அந்த கும்பலின் நோக்கம் என்ன? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

விதி மீறிய பயணமும் விதி மீறிய காதலும் ஊர் போய் சேராது என்ற கருத்தை மையப்படுத்தி இந்த பச்சை விளக்கி இயக்கி நடித்துள்ளார் மாறன்.

போக்குவரத்து விதிகள் பற்றி ஒரு விரிவான பாடமே எடுத்துள்ளார். மேலும் ஒரு பாடலையும் அதற்கேற்ப கொடுத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இத்தனை செய்ய நினைத்து நடிப்பில் கோட்டை விட்டுள்ளார். கொஞ்சமாவது நடிப்பு பயிற்சி செய்திருக்கலாம்.

பாடம் எடுப்பதை போலவே நடித்துள்ளார். பேச்சிலும் சரி முகபாவனையிலும் சரி நம்மால் படத்தை ரசிக்க முடியவில்லை.

போக்குவரத்து விதிகள், டிராபிக் வார்டன் மற்றும் MSM என்ற புது விதிமுறைகளை சொன்னதற்காக மாறனை பாராட்டலாம்.

காதலியை காணவில்லை என்ற காட்சியில் இவர் அழுகிறார். ஆனால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது.

முதல் பாதியில் இவரை வைத்தை கதையை நகர்த்தியுள்ளார். இரண்டாம் பாதியில் தாராவின் காதலை சொல்லி மற்றொரு ஹீரோவை நடிக்க வைத்துள்ளார்.

இளம் பெண்களை லவ் டார்கெட் செய்து பணம் பறிக்கும் கும்பலை பற்றி சொல்லியுள்ளார். அதில் போஸ்டர் நந்த குமார் அப்பாவாக நடித்துள்ளார். இதுபோன்ற கும்பலை அடையாளம் காட்டியதற்கு நன்றி.

ஆனால் ஏதோ ஒரு நாடகத்தை இயக்கியது போல படத்தை கொண்டு சென்றுள்ளார்.

டிராபிக் போலீசாக வரும் இமான் அண்ணாச்சி அறிவுரை போலீசாக மாறிவிடுகிறார். ஒரே ஆறுதல் இவர் லஞ்சம் வாங்கவில்லை. நல்ல போலீசாக நடித்துள்ளார்.

தீஷா மற்றும் தாரா 2 நாயகிகள் உள்ளனர். இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக தர முயற்சித்துள்ளனர்.

இவர்களுடன் மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வேதம் புதிது தேவேந்திரனின் இசையில் பாடல்களில் கருத்து உள்ளது. ஆனால் காட்சியும் இசையும் ரசிக்கும்படி இல்லை.

பாலாஜி ஒளிப்பதிவில் காட்சிகள் ஓகே.

இயக்குனரே ஹீரோவாக நடித்துள்ளார். எதையாவது ஒன்றை செய்திருக்கலாம். நடித்தும் இயக்கியும் நம்மை வெறுப்பேத்திவிட்டுள்ளார்.
ஆக இந்த பச்சை விளக்கு.. பவர் கட் லவ்

Pachai Vilakku Movie review rating

Comments are closed.

Related News

2020 புத்தாண்டை வரவேற்க உலகமே காத்திருக்கிறது.…
...Read More
நடிகர்கள்: புதுமுகங்கள் டாக்டர் மாறன், ‘அம்மணி’…
...Read More