ரசூல் ராக்ஸ்… ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

ரசூல் ராக்ஸ்… ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

பிரபல சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

அண்மையில் வெளியான 2.0 படத்தில் இவரது பணி அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவர் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார்.

இவரின் லட்சிய கனவு கேரளாவின் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவை நேரிடையாக ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். அதை ஒரு படமாக எடுத்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்பதையும் அதில் உள்ள சிரமங்களையும் அழகாக படமாக்கியுள்ளார்.

நண்பர் ஒருவர் மூலமாக பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்து அதை ஆவண படமாக உருவாக்க நினைக்கிறார்.

அப்போது நண்பருக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அந்த ஆவண படம் தயாரிப்பது கைவிடப்படுகிறது.

ஆனால் கண் பார்வை இல்லாத சிலர் இவரை சந்தித்து உங்கள் தயவால் அந்த ஒலியை ரசிக்க நினைத்தோம் என்று தங்கள் வருத்த்தை தெரிவிக்கின்றனர்.

எனவே அவர்களின் ஆசைப்படி தானே அந்த ஒலியை படமாக்க முடிவு செய்கிறார். ஆனால் ஏற்கெனவே போட்ட ஒப்பந்தம் அதற்கு தடையாக உள்ளது.

அதன்பின்னர் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சவுண்ட் டிசைனராக நமக்கு அறிமுகமான ரசூல் பூக்குட்டி, இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

நல்ல தொழில்நுட்பங்கள் நிறைந்த தியேட்டரில் இப்படத்தை பார்த்தால் மட்டுமே அந்த இசையை ரசிக்க முடியும்.

உலக புகழ்பெற்ற பூரம் திருவிழாவை பார்க்க முடியவில்லை என்றால் இந்த படத்தை பாருங்கள்.

அனியன் சித்ரஷாலா மற்றும் நீல் டி குஹன்னாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஒரு கதை சொல்லட்டுமா’.. ரசூல் ராக்ஸ்

Oru Kadhai Sollatuma aka The Sound Story review

Comments are closed.