ஓடு ராஜா ஓடு விமர்சனம்

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேண்டிள் லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மூலன் வழங்கும் படம் `ஓடு ராஜா ஓடு’.

ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமான குரு சோமசுந்தரம் இதில் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தொகுப்பு – நிஷாந்த் ரவிந்திரன்

இசை – தோஷ் நந்தா
ஒளிப்பதிவு – ஜதின் சங்கர் ராஜ் & சுனில் சி.கே.,
தயாரிப்பு – விஜய் மூலன்
இயக்கம் – நிஷாந்த் ரவிந்திரன் & ஜதின் ஷங்கர் ராஜ்.

மக்கள் தொடர்பாளர் : ராஜ்குமார்

பட வெளியீடு : பிடி. செல்வகுமார்

கதைக்களம்..

குருசோமசுந்தரத்தின் மனைவி லட்சுமி ப்ரியா. கணவர் ஒரு எழுத்தாளர். சினிமா வாய்புப்பாக அலைகிறார். வீட்டில் இருக்கும் அவருக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்தால் அவர் எப்படி செய்கிறார்.

பொறுப்பாக இருக்கிறாரா? என்பதற்காக செட்டப் பாக்ஸ் வாங்க அனுப்புகிறார்.

அவரிடமோ பணம் இல்லை. ஆனால் கண்டிப்பாக வாங்கி வந்தால் மட்டுமே வீட்டில் அனுமதி என ஒரு நாள் அவகாசம் தறுகிறார். இல்லையென்றால் தன் தாய் வீட்டுக்குப் போய் விடுவேன் என மிரட்டுகிறார்.

எனவே தனது போதை நண்பர் பீட்டருடன் செட்டாப் பாக்ஸ் வாங்க செல்கிறார் நாயகன்.

அந்த போதை நண்பர் பணத்திற்காக ஒரு ஐடியா தருகிறார். இருவரும் பாஸ் கஜபதி என்பவரிடம் வசமாக சிக்கிக் கொள்ள, அவர்களிடம் ஒரு பொட்டி கொடுத்து போதை மாமி அங்கம்மாளிடம் அனுப்புகின்றனர். (அப்படித்தாங்க பெயர் வெச்சுருக்காங்க).

இதனிடையில் பணம் தொலைகிறது.இது ஒரு பக்கம்.

பழைய தாதா காளிமுத்துவை (நாசர்) லயன் (கால பைரவி) மூலம் கொல்ல திட்டமிடுகிறார் அவரது சொந்த தம்பியும் வீரபத்திரனின் எதிரியுமான செல்லமுத்து. இது அடுத்த கதை.

மற்றொருபுறம் காளிமுத்துவை பழிவாங்குவதற்காக நகுல் (அனந்த் சாமி), அவரது நண்பன் இம்ரான் மற்றும் மனைவி மேரியுடன் (ஆஷிகா)சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். இது 3வது கதை.

குப்பத்தில் வாழும் சிறுமி மலரும் (பேபி ஹரினி), சிறுவன் சத்யாவும் (மாஸ்டர் ராகுல்), காணாமல் போன பணத்தை அடித்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள். இது 4வது கதை.

இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

இந்த கேரக்டர்களின் இன்ட்ரோவே அரை மணி நேரத்திற்கு மேலாக வருகிறது.

இறுதியில் என்ன ஆகிறது? என்பதுதான் படக்கதை.

கேரக்டர்கள்…

குரு சோமசுந்தரம் வழக்கம்போல யதார்த்த நடிப்பில் மிளிர்கிறார். அழகான மனைவிக்கு பயந்து இவர் அவஸ்தை படுவது இயல்பாக இருக்கிறது.

மனைவியாக வரும் லட்சுமி பிரியா, நாசர், ஆஷிகா, பேபி ஹிரினி, மாஸ்டர் ராகுல் என அனைவரும் கச்சிதமான நடிப்பை தந்துள்ளனர்.

கால பைரவி லயன் கேரக்டர் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். யாரும் எதிர்பாராத வித்த்தில் வந்து சிலிர்க்க வைக்கிறார் சிம்ரன்.

அழகான லட்சுமி ப்ரியா நடிப்பிலும் அழகுதான்.

இரண்டு லவ்வருமே தனக்கு வேனும் என ஆகிஷா சொல்லும் போது தியேட்டரில் அலப்பரை தான்.

படத்தில் பெண்களையும் ஆண்களையும் செக்ஸ்க்காக அலைபவர்களாக காட்டியுள்ளனர்.

கஞ்சா புகைக்கும் நண்பன், செக்ஸ்க்காக அலையும் பக்கத்து வீட்டுக்காரன், ஜெயிலில் இருந்த விடுதலையாகும் கணவன், அவன் நண்பன் ரெண்டு பேருமே வேனும் என சொல்வது எல்லாம் ரொம்பவே ஓவர்.

பீட்டருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் சோனா என சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் இரண்டு சிறுவன் சிறுமியர் வேற.

அறுந்தவாலு பேபி ஹரினியும், ரோட்சைட் ரோமியோ மாஸ்டர் ராகும் காதல் போல காட்டியுள்ளது. அதாவது டாவு என்கிறார்கள்,

இதை டைரக்டர்கள் குறைத்திருக்கலாம்.

திரைக்கதை எழுதி படத்தொகுப்பை கவனித்திருக்கிறார் நிஷாந்த்.

தோஷ் நந்தா இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. மனதில் ஒட்டவில்லை.

பின்னணி இசை சில இடங்களில் ஓகே.

இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் நிஷாந்தும், ஜத்தினும் இயக்கியுள்ளனர்.

சூது கவ்வும் பட பாணியில் ப்ளாக் காமெடியை தொட்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் இன்னும் காமெடியை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு பிளாக் காமெடி படத்துக்கு தேவையானதை தர முயற்சித்துள்ளனர்.

பல கதைகள் வருவதால் எல்லாருக்கும் புரியுமா? என்பது சந்தேகம்தான். முக்கியமாக கவனம் சிதறாமல் படத்தை பார்த்தால் இந்த ஓடு ராஜா ஓடு புரிவான்.

ஓடு ராஜா ஓடு… செட்டப் பாக்ஸில் ஒரு ப்ளாக் காமெடி

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: துருவ், ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ராதாரவி, மைம் கோபி, அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர்.
இயக்கம் – ராகேஷ்
ஒளிப்பதிவு – பி.ஜி. முத்தையா
எடிட்டிங் – சான் லோகேஷ்
இசை – அச்சு ராஜமணி
தயாரிப்பு : மதியழகன் ரம்யா
பிஆர்ஓ : அ. ஜான்

பாலியல் தொல்லை செய்திகளை போல செயின் பறிப்பு செய்திகளும் தினம் தவறாமல் செய்தி தாள்களில் இடம் பெற்று வரும் காலம் இது.

நம் வீட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே நாம் அதிர்ச்சியாக துக்கமாக பார்க்கிறோம். இல்லையென்றால் ஜஸ்ட் லைக் தட் என கடந்து செல்கிறோம்.

கதைக்களம்…

செயின் பறிப்பு திருடர்களால், அந்த நிகழ்வில் தன் மனைவியை இழந்து பாதிக்கப்பட்ட தன் அம்மாவுடன் வாழும் ஒரு இளைஞனின் கதைதான் இப்படம்.

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் துருவ்வின் ஆரம்பமே படு ஸ்பீட். அவர் திருடர்களிடம் இருந்து செயினை தட்டி பறிப்பதும் முதலே படம் வேகம் எடுக்கிறது.

கேஸ் சிலிண்டர் போடும் பையனாக வந்தாலும் போலீசுக்கு ஏற்ற கம்பீரத்துடன் காட்சியளிக்கிறார்.

தாய் மீது பாசம், மனைவி மீது அன்பு என யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் 2வில் கலக்கி கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் இன்ட்ரோ சீனுக்கு எத்தனை பேர் துள்ளி குதிப்பார்களோ? எனத் தெரியாது.

அவர் துள்ளி துள்ளி ஓடி வரும் காட்சியை மறைந்திருந்து எத்தனை பேர் பார்ப்போர்களா? அதே சமயத்தில் அவரது நடிப்பும் கச்சிதம்.

ப்ளாஷ் பேக்கில் வரும் அஞ்சனா கீர்த்தியும் அசத்தல். ஆங்கராக வந்து இறுதியில் அனுதாபத்தை பெறுகிறார்.

ரொம்பவே ப்ராடிக்கலான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். கொஞ்சம் நேரமே வந்தாலும் கவர்கிறார்.

இவர்களுடன் மிரட்டல் வில்லன்களாக மைம் கோபி, ராம்ஸ், அருள்தாஸ் அனைவரும் பக்கா.

திறமையான நடிகர் ராதாரவி. அவருக்கான காட்சியை அதிகப்படுத்தியிருக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஜேடி. சக்கரவர்த்தி நல்ல மிடுக்கு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவில் இரவு நேர செயின் பறிப்பு காட்சிகள் அருமை. என்ன நடக்குமோ? என்ற பயம் அடிக்கடி ஒட்டிக் கொள்கிறது.

அச்சு ராஜாமணி இசையில் எனக்கு என்னாச்சு, உருவாஞ்சுறுக்கு பாடலும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
மிரட்டலான பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

என்னடா ஹீரோ இவன்? திருடனிடமிருந்து திருடுகிறானே? எனும்போது படத்தின் மீது ஒரு ஆவல் பற்றிக் கொள்கிறது.

அப்படியென்றால் நிச்சயம் ஒரு ப்ளாஷ்பேக் இருக்கும் என்பதை அப்பட்டமாக காட்டி விட்டார் டைரக்டர் ராகேஷ்.

ராத்திரி 12 மணிக்கு நகை போட்டு பெண் நடந்தால் அன்றே உண்மையான சுதந்திர தினம் என மகாத்மா காந்தி ஜி கூறியிருந்தார்.

ஆனால் இன்று பகல் 12 மணிக்கே அப்படி நகை போட்டு நடக்க முடியவில்லை. ஏனென்றால் கடுமையான தண்டனைகள் வேண்டும் என ஆணித்தரமாக சொல்லியுள்ள ராகேஷை பாராட்டலாம்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.. *தங்க*மான மக்களே உஷார்

Marainthirunthu Paarkkum Marmam Enna movie review rating

கோலமாவு கோகிலா விமர்சனம்

கோலமாவு கோகிலா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: நயன்தாரா, யோகிபாபு, சரண்யா, அறந்தாங்கி நிஷா, விஜே ஜாக்லின், நவீன் குமார் மற்றும் பலர்.
இயக்கம் – நெல்சன்
ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன்
எடிட்டிங் – நிர்மல்
இசை – அனிருத்
தயாரிப்பு : லைகா
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா

ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு நிகராக நயன்தாராவின் படத்திற்கும் அதிகாலை காட்சி வைத்துள்ளனர்.

அப்போதே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது.

கதைக்களம்…

மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் நயன்தாரா. மிகவும் கஷ்டப்படுகிறார். இந்த நிலையில் அவருடைய அம்மா சரண்யாவிற்கு கேன்சர் வருகின்றது.

அவரை குணப்படுத்த பணம் தேவைப்படுவது இயற்கைத்தானே. எனவே சினிமாவில் என்ன செய்வார்கள்.?

எதாவது குறுக்கு வழியில் செல்வார்கள்தானே. அதே தான் இங்கும் நடக்கிறது.

எனவே ஒரு போதைப்பொருள் கும்பலிடம் இவருக்கு தொடர்பு கிடைக்கிறது.

பொதுவாக பெண்கள் கடத்தினால் அதிக சந்தேகம் வராது என்பதால் அந்த போதை பொருளை கடத்த நயன்தாராவை நாடுகின்றனர்.

இதனால் பெரும் பிரச்சனைகளை சந்திக்கிறார் கோகிலா.

அதன் பின்னர் என்ன செய்தார்? பிரச்சினைகளை எப்படி முறியடிக்கின்றார்? அம்மாவை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நானும் ரௌடிதான் காதம்பரி கேரக்டர், அறம் Collector கேரக்டர், டோரா கேரக்டர் உள்ளிட்ட வரிசையில் இப்படம் நயன்தாராவுக்கு சேரும். இவரை நம்பியே கதையை நகர்த்தியுள்ளார் நெல்சன்.

கோகிலாவும் கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்துவிடுகிறார். டாப் ஹீரோக்களுடன் கெமிஸ்டரி எப்படி ஒர்க் அவுட் ஆனதோ? அதுபோல் யோகிபாபு உடனும் பிஸிக்ஸ் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

நயன்தாராவும் யோகிபாபுவும் தான் படமே. யோகிபாபு இனி ஹீரோ கேரக்டர் கொடுத்தாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை.

‘சார் நீங்க அவன சுட்டா தான் இங்க இருந்து போவேன், கொலை பார்க்க பயமா இருக்கு நான் திரும்பி காதை மூடிக்கொள்கின்றேன்’ என சொல்லும் இடமெல்லாம் நயன்தாராவுக்கு கைத்தட்டல் அள்ளுகிறது.

நயன்தாரா தங்கை ஜாக்குலீன், யோகிபாபு கடையில் வேலை பார்க்கும் கண்ணாடி போட்ட பையன், மொட்டை ராஜேந்திரன் அனைவரும் ரசிக்க வைக்கின்றனர்.

டோனி கேரக்டரும் படத்திற்கு கைகொடுத்துள்ளது. ஜாக்லினை காதலிக்கும் அந்த இளைஞர் ஏற்கனவே மீசைய முறுக்கு படத்தில் நடித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்துடன் ஒன்ற வைக்க சிவகுமாரின் ஒளிப்பதிவு உதவியுள்ளது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு வர முக்கிய காரணம் அனிருத் தான்.

பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ஓகே என்றாலும் சில நேரம் டயலாக் புரியாமல் செய்து விடுகிறது.

எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் இருந்தாலும், மேல் உள்ள 10 மாடிக்கு போக 8 வருஷம் ஆகும், பச்சையப்பாவில் படித்தாலும் பச்சை பச்சையாக பேசுவேன் உள்ளிட்ட டயலாக்குகள் அப்ளாஸ்க்கு கேரண்ட்டி.

முதல் பாதி மற்றும் இடைவேளையில் ஸ்கோர் செய்யும் நெல்சன் க்ளைமாக்ஸில் சொதப்பி இருக்கிறார். க்ளைமாக்ஸ் அழுத்தமாக இருந்தால் கோலமாவு கோகிலா நன்றாகவே ஸ்கோர் செய்துவிடுவார்.

விறுவிறுப்பான திரைக்கதையில் ட்விஸ்ட் வைத்து ஜெட் வேகத்தில் கொண்டு போகாமல் ஜவ்வென இழுத்து விட்டுள்ளார்.

கோலமாவு கோகிலா… Just Go and Enjoy Don’t Expect more

விஸ்வரூபம் 2 விமர்சனம்

விஸ்வரூபம் 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், வகீதா ரகுமான், ரகுல் போஸ், தீபக் ஜேத்தி, ஆனந்த் மகாதேவன் மற்றும் பலர்.
இயக்கம் – கமல்ஹாசன்
ஒளிப்பதிவு – சானு வர்கீஸ்
எடிட்டிங் – மகேஷ் நாராயணன், விஜய் சங்கர்
இசை – ஜிப்ரான்
தயாரிப்பு : கமல்ஹாசன் மற்றும் ஆஸ்கர் பிலிம்ஸ்
பிஆர்ஓ : டைமண்ட் பாபு

கதைக்களம்…

இந்த கதைக்கு உள்ளே சென்று அவர்கள் சொன்னப்படி சொன்னால் நிச்சயம் குழம்பித்தான் போவீர்கள். எனவே புரிகிற மாதிரி சொல்கிறேன்.

உளவுத்துறையான ‘ரா’ என்ற அமைப்பின் அதிகாரிகளான கமல்ஹாசன், சேகர் கபூர், ஆண்ட்ரியா ஆகியோர் அமெரிக்காவில் இருந்து தப்பியோடிய உமர் என்ற தீவிரவாதியை தேடி செல்கின்றன.

இவர்களுடன் கமலின் மனைவி பூஜாகுமாரும் வருகிறார். ஒரே சமயத்தில் மனைவி, சைட் அடிக்கும் காதலி என வருகிறார் உலகநாயகன்.

இந்த அதிகாரிகளை கொலை செய்ய பலவித முயற்சி நடக்கிறது.

அப்போது லண்டனில் உள்ள கடலில் செயற்கையாக பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படுத்தி லண்டன் முழுவதையும் அழிக்க உமர் திட்டமிடுகிறார் என்பதை கமல் கண்டு பிடிக்கிறார்.

அதனை இந்த உளவாளிகள் எப்படி தடுக்கின்றனர். அதன்பின்னர் என்ன ஆகிறது என்பதுதான் கதை.

இதன் நடுவில்…

விசாம் (கமல்) பயிற்சி பெறும்போது ஆண்ட்ரியா எப்படி பயிற்சி பெறுகிறார்? என்பதை ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார்.

மேலும் விசாம் எப்படி அல் கொய்தா (Al-Qaeda) அமைப்பில் சேர்ந்தார் போன்ற காட்சிகளையும் காட்டியுள்ளனர்.

கேரக்டர்கள்…

இதுநாள் வரை கமல் ஒரு நடிகராகவே இருந்தார். தற்போதுதான் அரசியல்வாதியாக மாறிவிட்டாரே.

எனவே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சில தீம் பாடல் காட்சிகளையும் வைத்துவிட்டார். படத்தையே அப்படிதான் தொடங்குகிறார்.

கிடைத்த கேப்பில் எல்லாம் அரசியல் & ஆன்மிகம் பேசிவிட்டார். முஸ்லீம் இந்து, ஐயர் என அனைத்தையும் நல்லெண்ண அடிப்படையில் நாசூக்காக வாரியிருக்கிறார்.

படம் முழுக்க முகத்தில் பிளாஸ்த்ரி ஒட்டிக் கொண்டு வருகிறார். அதே சமயம் எல்லா காட்சியிலும் பக்கா க்ளீன் ஷேவ் செய்திருக்கிறார். அது எப்படி?

விசாமின் மனைவியான நிரூபமா. இவர் ஒரு நியூக்ளியர் ஆன்கோலாஜிஸ்ட் என்பதாக சொல்லியிருக்கிறார்.

கடலுக்கு அடியில் இருக்கும் வெடிகுண்டை செயல் இழக்க இவர் பாதுகாப்பான உபகரணங்களுடன் செல்கிறார்.

ஆனால் திடீரென கமல் குதிக்கிறார். கடலுக்கு அடியில் சண்டை போடுகிறார். இறுதியில் சீஸியும் கலந்து இருக்கும் அந்த வெடிகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடுகிறார். அது எப்படி????

கமலின் தாய் உயிருடன் இருக்கிறார் என்பதை காண்பிக்கிறார்கள். கூடவே வெகு நாட்களுக்கு பிறகு கமல் படத்தில் அம்மா சென்டிமெண்ட் இருக்கிறது ஆறுதல்.

கமலின் அம்மா வஹீதா ரஹ்மானுக்கு அல்ஸீமர் நோய் இருப்பதால் அவர் விசாம் தன் மகன் என்று கூட தெரியாமல் இருக்கிறார்.

தன் கணவருடன் தன் மகன் பாகிஸ்தான் சென்று விட்டதாக கூறுகிறார் அவர். ஆனால் எதற்கு அவர்கள் அங்கு சென்றார்கள் ஆகியவற்றை காண்பித்திருந்தால் ரசிகர்களுக்கு புரிந்து இருக்கும்.

ஆக்சனும் சரி. அழகும் சரி. ஆண்ட்ரியா செம கெத்து. கமலையும் பூஜாவையும் ஓட்டிக் கொண்டே இருப்பது ரசிக்க வைக்கிறது.

ஆக்சன் ஹீரோயினுக்கு இனி ஆண்ட்ரியாவுக்கு அப்பாய்மெண்ட் கொடுத்துடலாம்.

கமலுக்கு ஆண்ட்ரியாவுக்கு என்ன உறவு என குழம்பி போகிறார் பூஜாகுமார். சில சமயம் நமக்கும் அந்த குழப்பம் வந்துவிடுவது உண்மைதான்.

ஆனால் ரொமான்ஸில் கமலையும் இளைஞர்களையும் சூடேற்றிவிடுகிறார் ஒரு பாடல் காட்சியில் கமலை தாஜா செய்துவிடுகிறார் இந்த பூஜா.

சேகர் கபூரின் நடிப்பும், உமர் என்ற கேரக்டரில் நடித்துள்ள ராகுல் போஸ் நடிப்பும் கச்சிதம். கமலை வெறுக்கும் அரசு அதிகாரியாக ஆனந்த் மகாதேவன் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைத்து விடுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்களும் இதமான ராகம். இவன் யாரென்று தெரிகிறதா? என் தீம் சாங் கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

ஜிப்ரான் இசையில் ‘நானாகிய நதிமூலமே’ பாடல் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. பின்னணி இசையிலும் ஹாலிவுட் தரத்தில் கொடுத்து கலக்கியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் மூலம் பாமர மக்களையும் சென்றடைகிறார் கமல். ஆனால் இதுபோல் படங்களால் கிராம மக்களிடம் இருந்து விலகியே நிற்கிறார். சி சென்டர்களில் படம் புரியாமல் நிறைய பேர் தவிப்பது நிச்சயம்.

பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் கமல். இதிலும் சின்ன சின்ன விஷயங்களை கையாண்டுள்ள விதம் அருமை. ஆனால் முதல் பாக அளவு இதில் விஷயம் இல்லை என்பதுதான் பெரிய வருத்தம்.

க்ளைமாக்ஸில் முறையான பைட் வைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

விஸ்வரூபம் 2…. கமல் தொண்டர்களுக்கு

Vishwaroopam II review and rating

பியார் பிரேமா காதல் விமர்சனம்

பியார் பிரேமா காதல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஹரிஷ் கல்யாண் (ஸ்ரீகுமார்), ரைசா (சிந்துஜா), ஆனந்த்பாபு (விவேக்), ரேகா (சுதா), ராஜா ராணி பாண்டியன் (கோபி), பஞ்சுசுப்பு, முனீஸ்காந்த் (தங்கராஜ்), தீப்ஸ் (சதீஷ்) மற்றும் பலர்.
இயக்கம் – இளன்
ஒளிப்பதிவு – ராஜா பட்டாச்சார்யா
எடிட்டிங் – மணிக்குமரன் சங்கரா
இசை – யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு : கே புரொடக்‌ஷ்ன்ஸ் S.N.ராஜராஜன், யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ் (பி) லிட்
பிஆர்ஓ : மௌனம் ரவி

கதைக்களம்…

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார் ஹரிஷ் கல்யாண். இவர் வீட்டிற்கு பயந்து வளர்ந்த பையன். தண்ணி, தம்பி என எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.

இவரது கம்பெனிக்கு அடுத்த வேலையில் பார்க்கும் ரைசாவை இவர் ஒரு தலையாக காதலிக்கிறார். சில நாட்களில் அவரும் ஹரிஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்க்கிறார்.

பின்னர் இருவரும் நெருக்கமாகி விடுகிறார்கள். ஒரு முறை அந்த நெருக்கம் செக்ஸ் வரை செல்கிறது.

உடனே தன் காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துக் கொள்ளலாம் என கேட்கிறார். அதற்கு மறுக்கிறார் ரைசா.

செக்ஸ் ஓகே. லிவிங் டுகெதர் கூட ஓகே. ஆனால் காதல், திருமணம் எல்லாம் எனக்கு செட்டாகாது என சொல்லி விடுகிறார் ரைசா.

அதன்பின்னர் ஹரிஷ் என்ன செய்தார்? தன் காதலியை கரம் பிடித்தாரா? இல்ல கழட்டி விடப்பட்டாரா? ரைசா திருமணத்திற்கு மறுக்க என்ன காரணம்? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

அப்பாவி, அழகன் என அசத்தலாக வருகிறார் ஹரிஷ் கல்யாண். ரொமான்ஸ், கெஞ்சல் அதே சமயம் பொறுப்பான பிள்ளை என இன்றைய நவீன காதலனை போல் அசால்லடாக செய்துள்ளார். படத்தில் இவருக்கு ஆக்சன் மட்டும்தான் மிஸ்ஸிங்.

ரைசா.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் எப்படியோ ? ஆனால் இந்த காதல் படத்தில் பின்னி எடுத்துவிட்டார்.

திருமணம் குழந்தை வேண்டாம் என இவர் மறுப்பதற்கு சொல்லும் காரணங்கள் கொஞ்சம் ஓவரா இருந்தாலும் இன்றைய பெண்கள் தங்கள் கனவுகளை தொலைத்து நிற்கும் அவலம் தெரிகிறது.

ரைசாவின் கேரக்டர் தங்கள் லட்சியங்களை கலைத்துவிட்டு குடும்பத்திற்காக வாழும் பெண்களை நினைக்க தோன்றுகிறது. அது நம் சகோதரிகளாக அம்மாவாக கூட இருக்கலாம்.

தன் இளமை துடிப்பான நடிப்பால் நம் மனதை நைசா திருடிவிடுகிறார் ரைசா.

இவர்களுடன் சதீஷ் கேரக்டரில் வரும் தீப்ஸ், சுப்பு பஞ்சு, முனீஷ்காந்த், ரேகா, ராஜா ராணி படப்புகழ் பாண்டியன் ஆகியோரின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ராஜா பட்டச்சார்யாவின் ஒளிப்பதிவில் இந்த காதல் செம கலர்புல்லாய் மாறிவிட்டது. எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

யுவன் இசையில் 12 பாடல்கள். நல்லவேளை பாதி பாடல்கள் படத்தின் காட்சி ஓட்டத்தோடு நகர்த்தியுள்ளார். எனவே காட்சியுடன் நம்மையும் ஒன்ற வைக்கிறது. ஓரிரு பாடல்களை ரீப்பிட் மோடில் கேட்கலாம்.

பின்னணி இசையில் வழக்கம்போல கவர்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆனந்த்பாபுவை ரைசாவின் அப்பாவாக கொண்டு வந்துள்ளார். அவர் ரொம்ப ப்ராடிக்கலாக இருக்கிறாராம். தன் மகள் ஒருவனுடன் படுத்துவிட்டேன் என்கிறார்.

லிவிங் டுகெதர் வாழ வேண்டும் என ஒரு மகள் அப்பாவிடம் எப்படி சொல்வாள்? அதை எப்படி ஈஸியாக எடுத்து கொள்ள முடியும். அப்பாக்களே.. இது ஐயோ அப்ப்ப்பா…

படத்தில் ட்விஸ்ட் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். க்ளைமாக்ஸில் திருமணத்தை வெறுப்பவராகவும் ஹரிஸையும் மேரேஜ் லைப் வேனும் என ரைசாவை மாற்றியிருப்பது ரசிக்க வைக்கிறது. ஆனால் ஜஸ்ட் லைக் தட் என சொல்லிவிட்டதுதான் ஒரு குறை.

இளன் இயக்கத்தில் நவீன காதலர்களுக்கான செம ஸ்பெஷல் படம் இது எனலாம்.

பியார் பிரேமா காதல்.. லவ் இல்லாத லைஃப் வேஸ்ட் சாரே

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜெய்வந்த், ஐரா, ஆடுகளம் நரேன், யோகி தேவராஜ் மற்றும் பலர்.
இயக்கம் – யுரேகா
ஒளிப்பதிவு – மணி பெருமாள்
இசை – விஜய் சங்கர்
தயாரிப்பு : வி.ஜி. ஜெய்வந்த்
பிஆர்ஓ : நிகில் முருகன்

கதைக்களம்…

ஒரு சேட் வட்டி தொழில் செய்கிறார். அவர் நிறுவனத்தின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அவரது ஊழியர்களின் வாகனங்கள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது.

இது தங்களது எதிரி கம்பெனிகளின் சதியாக இருக்கும் என நினைக்கின்றனர்.

ஆனால் இதை ஒரு சைக்கோ ஒருவர்தான் செய்கிறார் என தெரிய வருகிறது. அந்த சைக்கோ யார்? எதற்காக குறிவைத்து ஒரு நிறுவனத்தின் வாகனங்களை எரிக்கிறார்? என்பது புரியாமல் போலீசை நாடுகின்றனர்.

இதை விசாரிக்க ஒரு காட்டுப்பய தான் வேண்டும் என்பதால் காட்டுத்தனமான போலீஸ் காளியை நாடுகிறார் உயர் அதிகாரி ஆடுகளம் நரேன்.

காளி என்ன செய்தார்? எப்படி கண்டு பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போலீஸ்க்கு உரித்தான முரட்டுத்தனமாக இருக்கிறார் நாயகன் ஜெய்வந்த்.

அதிலும் காட்டுத்தனம் என்பதால் ரொம்பவே காட்டியிருக்கிறார். ஆனால் க்ளைமாக்சில் இவர் காட்டும் அந்த 15 நிமிட டயலாக் ரொம்பவே ஓவர்.

ஐரா படத்தின் நாயகி. அனாதை பெண்ணாக வந்து இறுதியில் கம்பீரம் காட்டியிருக்கிறார். படத்தில் இவருக்கான காட்சிகள் குறைவே.

வில்லன்களாக சி.வி.குமார், அபிஷேக், மூணாறு ரமேஷ்,மாரிமுத்து அனைவரும் தங்களது கேரக்டர்களில் கச்சிதம்.

ஒரு சஸ்பென்ஸ் கலந்த திரில்லரை சமூக பொறுப்புடன் கொடுக்க என நினைத்திருக்கிறார் யுரேகா.

இதனால் தேவையில்லாத பாடல்களை இடையில் சொல்லி வெறுப்பேத்தி விட்டார்.

லோன் என்ற பெயரில் அப்பாவிகளிடம் வங்கிகள் செய்யும் மோசடியை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

அதற்காக சேட் லோன் என நீண்ட திரைக்கதையுடன் சொல்லி கொஞ்சம் குழப்பிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் மீது இருக்கும் அன்பு, வடநாட்டினர் மீது இருக்கும் ஆதங்கம் ஆகியவற்றை வலுக்கட்டயமாக திணித்திருக்கிறார் டைரக்டர் யுரேகா.

சொல்லவேண்டிய விஷயத்தை ஆணித்தரமாக சொல்லியிருக்கலாம். ஆனால் வலுவில்லாத திரைக்கதையால் தடுமாற்றத்துடன் சொல்லியிருக்கிறார்.

காட்டுப்பய சார் இந்த காளி… ஆனால் கெட்டிக்காரத்தனம் இல்லையே

Kattu Paiyan Sir Intha Kaali movie review and posting

More Articles
Follows