தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்டோரி…
கோயம்புத்தூரில் உள்ள துப்பறியும் (டிடெக்டிவ்) ஏஜெண்டாக பணிபுரிகிறார் நாயகன் நவீன்.. இவர் சாதரியமாக பல வழக்குகளை கண்டுபிடித்து தருவதால் இவருக்கு பாப்புலாரிட்டி அதிகம்.
இந்த சூழ்நிலையில் தேனி முருகன், தன்னுடைய மகள் அஞ்சனா பாபு காதலன் குறித்து துப்பறிய சொல்கிறார். அவன் தன் மகளுக்கு ஏற்றவனா? எப்படிப்பட்டவன்? என்பதை குறித்து விசாரிக்க சொல்கிறார்.
ஒரு நாள் நவீன் இரவில் வெளியே சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒருவரை விபத்தில் கொன்று விடுகிறார். அவர் யார் என்றால் அஞ்சனாவின் காதலன்.
என்ன செய்வது என்று தெரியாத நவீன் அந்த சடலத்தை காரில் எடுத்து யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுகிறார்.
மறுநாள் நவீனுக்கு ஒரு போன் வருகிறது. அதில் புதைத்த சடலத்தை எடுத்து வர சொல்லி சொல்கிறார்.
வேறு வழியில்லாமல் நாயகன் நவீனும் அந்த சடலத்தை எடுத்து அவரை சோதனை செய்கிறார். அப்போது அவரிடம் ஒரு மெமரி கார்டு இருப்பது தெரிய வருகிறது. அதில் என்ன இருக்கிறது என்பதை விசாரிக்க்கிறார்.
போனில் மிரட்டிய அந்த மர்ம நபர் யார்? அந்த மெமரி கார்டில் அப்படி என்ன இருக்கிறது? ஏற்கனவே துப்பறியும் அறிவு கொண்ட நவீன் என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதி கதை..
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்
நாயகன் நவீன் தான் படத்தின் ஹீரோ மற்றும் டைரக்டர்.. ஆனாலும் ஆர்ப்பாட்டம் இல்லாத அலட்டிக் கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு வழக்கை விசாரிக்கும் ரகம். அதை துப்பறியும் முயற்சி என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
இவரே நாயகன் இவரே இயக்குனர் என்பதால் படத்தில் சொல்ல வந்த விஷயத்தை எடுத்த வேகத்திலேயே ஆரம்பித்து விட்டார். ஒரு க்ரைம் திர்ல்லர் பானியில் கதையை நகர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் குறைத்துவிட்டார். அதே வேகத்துடன் சென்று இருந்தால் இந்த நியதி இன்னும் கொஞ்சம் நீட்டாகவே இருந்திருக்கும்..
நாயகி அஞ்சனா பாபு.. எதார்த்தம் கலந்த உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்றொரு நாயகி கோபிகா சுரேஷ்.. மிகையில்லாத நடிப்பை கொடுத்து கவனிக்க வைக்கிறார்.
அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தேனி முருகன். இவரும் அஞ்சனாவும் பேசும் காட்சிகள் எமோஷனல கனெக்ட் ஆகிறது.
பிரபு கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்சிகளில் நம்மை ஒன்ற வைக்கிறார்.. அஜு வில்பரின் படத்தொகுப்பும் சிறப்பு.
கிரைம் திரில்லர் படத்திற்க்கான பின்னணி இசையை கச்சிதமாக கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜாக் வாரியர். சில இடங்களில் மட்டும் கொஞ்சம் இரைச்சலை குறைத்து இருக்கலாம்..
சின்ன பட்ஜெட் படம் என்பதால் சில குறைகள் இருந்தாலும் தன்னால் முடிந்தவரை இந்த நியதி-க்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நவீன்..
Naveen starring Niyathi movie review