தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நண்பன் ஒருவன் வந்த பிறகு பட விமர்சனம் 3.5/5.. நண்பன்னா நன்மையே
ஸ்டோரி…
தன் சிறு வயது முதலே ஆனந்தம் காலனி என்ற ஒரு காலனியில் வளர்ந்து வருகிறாr நாயகன் ஆனந்த்.. அந்தக் காலணியில் உள்ள நண்பர்களும் இவர் வகுப்பிலேயே படிப்பதால் இவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகிறது.
மேலும் கல்லூரியில் அனைவரும் ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கின்றனர்.. இதனால் இவர்களின் நட்பில் கூடுதல் நெருக்கம்..
இவர்கள் காலனியில் இவர்கள் வகுப்பிலேயே இணைகிறார் நாயகி பவானி ஸ்ரீ.. நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் மலர்கிறது..
கல்லூரி முடித்த பின் இவர்கள் வேலை தேடும் சமயத்தில் நாம் அனைவரும் இணைந்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என திட்டமிடுகின்றனர்.. அதன்படி NOVP (நண்பன் ஒருவன் வந்த பிறகு) என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும் ஆரம்பிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் போதிய வருமானம் இல்லாததால் ஒவ்வொருவரும் வேறு வேலை தேடலாம் என குடும்ப சூழ்நிலை காரணமாக முடிவெடுக்கின்றனர்.
இந்தக் கட்டத்தில் நாயகனின் காதலி பவானியும் வீட்டில் வரன் பார்க்கிறார்கள் என்ன செய்வது என்று குழம்பி நிற்கிறார்.
நண்பர்களும் காதலியும் பிரிந்து போன சோகத்தில் இருக்கும் நாயகன் ஆனந்த் என்ன செய்தார்? நண்பர்கள் ஒன்றிணைந்தியார்களா? காதலியை கரம்பிடித்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
இயக்குனர் அனந்த் ராம் இயக்கத்தில் பவானி ஸ்ரீ, இர்பான், வெங்கட் பிரபு, KPY பாலா, இளங்கோ குமரவேல், ஆர்.ஜே. அனந்தி, ஆர்.ஜே. விஜய், ஐஸ்வர்யா, மதன் கௌரி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..
முதல் படத்திலேயே கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் அனந்த் ராம்.
இவரே நாயகன் இவரே இயக்குனர் என்பதால் தனக்கான முக்கியத்துவத்தை ஒவ்வொரு காட்சியிலும் ஏற்படுத்தி காட்சிகள் அமைத்திருக்கிறார்.. அழுகின்ற காட்சிகளில் கூடுதல் மெனக்கெட்டு நடித்திருக்கலாம்.. அதுபோல ரொமான்ஸ் போதவில்லை..
விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த பவானி ஸ்ரீ தான் இப்பட நாயகி.. இவரது அறிமுக காட்சியில் தாஜ்மஹால் உள்ளே இருந்து வருவது போல காட்சி அழகு.. அதுபோல மாடர்ன் உடையிலும் சேலையிலும் கவர்கிறார்.
இந்த படத்தை நடிகை ஐஸ்வர்யா தயாரித்து மாயா என்ற ஆசிரியராகவும் நடித்திருக்கிறார்..
மாயா டீச்சராக வரும் ஐஸ்வர்யா அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. இவருக்கும் ஒரு ஜோடி வைத்திருக்கலாம்.. இது போல ஒரு ஆசிரியை இருந்தால் எந்த மாணவனும் கிளாசுக்கு ஆப்சென்ட் ஆக மாட்டார்கள்..
தனக்குத் தெரிந்த மக்களுக்குத் தெரிந்த youtube பிரபலங்கள் பலரை நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர்.. youtube தகுதி மட்டும் இருந்தால் போதுமா என்ன.?
அஜித் ரசிகராக வரும் அழகர் வினோத் கெத்து.. இவரது முடிவும் உருக வைக்கிறது
டெக்னீசியன்ஸ் …
தமிழ் செல்வனின் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவரின் எடிட்டிங் ஆகியவை நம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறது..
நண்பர்கள் இணைந்தாலே ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.. அதுபோல காட்சிகளில் விறுவிறுப்பும் நிறைந்திருக்கிறது.. அதற்கு ஏற்ப இசையை கொடுத்து இருக்கிறார்
ஏ.ஹெச்.ஹாசிப்.. இவரின் இசையில் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
வாழ்க்கையில் எந்த உயரத்திற்கு சென்றாலும் நண்பர்கள் ஈகோ இல்லாமல் பழகினால் மட்டுமே நட்பு நீடிக்கும் இல்லையேல் பிரேக் அப் தான்.. அது காதல் ஆனாலும் நட்பு ஆனாலும் இந்த நிலைதான்..
நாம் செய்ய நினைத்ததை விடாமல் செய்தால் மட்டுமே விஸ்வரூப வெற்றி பெற முடியும்.. அதுவும் நண்பர்களுடன் இணைந்து போராடினால் எளிதாகும் என்கிறார் இயக்குனர் அனந்த் ராம்..
வேலை காரணமாக குடும்ப சூழ்நிலை காரணமாக நண்பர்களை பிரிந்த ஒவ்வொருவருக்கும் இந்த படம் கனெக்ட் ஆகும்.. ஒரு படம் நம் வாழ்வியலுடன் கனெக்ட்டாகி விட்டால் அந்த படம் வெற்றி தான்..
இந்தப் படத்தை பல பாகங்களாக ரகுமான் வரிகளில் பாடல்களை பயன்படுத்தி இருப்பது இயக்குனரின் சாங் டச்..
அந்த வகையில் நண்பன் ஒருவன் வந்த பிறகு.. வெற்றி வரிசையில் சேரும்..!
Nanban Oruvan Vandha Piragu movie review