தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வாஸ்கோடகாமா விமர்சனம்… WASH OUT GO MA
வாஸ்கோடகாமா… ஏன் இந்த படத்திற்கு இந்த தலைப்பு என்று உங்களுக்கு கேள்விகளும் எழும்.. வாசுதேவன் கோவர்தன் இப்படியான பெயர்களை இணைத்து வாஸ்கோடகாமா என்று தலைப்புக்கு பலம் சேர்த்து இருக்கிறார் இயக்குனர் ஆர் ஜி கே.. தலைப்புக்கே இப்படி எல்லாம் யோசித்தவர் திரைக்கதைக்காக பயங்கரமாக மூளையை கசக்கி பிழிந்து யோசித்து இருக்கிறார்..
நல்லவங்களுக்கு இது காலமில்லை என்ற பேச்சுக்களை நாம் கடந்த சில வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்… ஒருவேளை நல்லவர்களுக்கெல்லாம் நிச்சயமாக காலம் இல்லை என்றால் கெட்டவர்களுக்கான காலம் இது என்றால் நல்லவர்களின் நிலை என்ன? அதாவது கலிகால முத்திப்போச்சு என்ற ஒரு சூழ்நிலை வந்தால் என்னவாகும் என்பதுதான் இந்த படத்தின் கதை கரு.
ஸ்டோரி…
மனிதர்களை பிரித்து.. நாட்டின் அமைதியை குலைப்பேன்..” என்கிற வசனங்களோடு ‘வாஸ்கோடகாமா’ பட டிரெய்லர் வெளியானது.. அதிலிருந்து உங்களுக்கு இந்த படத்தின் கதை மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும்.. அப்படி தான் எங்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்து இந்த படத்தை பார்த்தோம்..
நெகட்டிவ் உலகில் மனிதர்களிடையே நல்லவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் நாயகன் நகுல்.. இவருக்கு திருமணம் ஆகவில்லை.. எனவே ஒரு திட்டம் போடுகிறார் இவரது உறவினர் முனீஷ்காந்த்.
அதன்படி ஆனந்தராஜின் மகள் அர்த்தனா பினுவை பெண்பார்க்க செல்கிறார்.. அப்போது நகுல் அக்மார்க் அயோக்கியன் என்கிறார்.. அதன்படி ஆனந்தமான ஆனந்தராஜ் உடனே தன் மகளை திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார்.
திருமணமும் நெருங்கும் வேளையில் நாயகன் நகுல் நல்லவன் என்று தெரிய வருகிறது.. இதனால் கல்யாணம் நின்று போகிறது.. நல்லவன் சிறைக்குச் செல்கிறான்.. அங்கு காவலர்கள் கயவர்களாகவும் சிறை கைதிகள் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.
இப்படியான சூழ்நிலையில் அங்கு கற்பழிக்கவும் கொள்ளையடிக்கவும் கொலை செய்யவும் கற்றுக் கொடுக்கின்றனர்.. இந்த நெகட்டிவ் உலகில் சிக்கிக் கொண்ட நாயகன் நகுல் என்ன செய்தார்? விடுதலை ஆனாரா என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.
இதெல்லாம் ஒரு கதையா என்று நீங்கள் காரீ துப்புவது தெரிகிறது..
கேரக்டர்ஸ்…
நாயகனாக நகுல் நாயகியாக அர்த்தனா பினு நடித்திருக்கிறார்கள்.. இவர்களுடன் முனீஸ்காந்த், ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்சிலி, படவா கோபி நமோ நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்..
ஏன் இப்படியான ஒரு கதையை தெரிந்து கொண்டு நடித்த நடிகர்களை நாம் என்ன சொல்வது? பல படங்களில் நடித்த இந்த அனுபவமிக்க நடிகர்கள் தங்கள் பெயரை வாஸ்கோடகாமா என்ற படத்தின் மூலம் கெடுத்துக் கொண்டு விட்டார்கள்.. மண்ணை அள்ளித் தங்கள் தலையில் போட்டுக் கொண்ட கதையாகி விட்டது இவர்களின் கதை..
டெக்னீசியன்ஸ்…
அருண் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் எடிட்டிங் செய்திருக்கிறார்..
உறியடி, பைட் கிளப் போன்ற படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.
‘வாஸ்கோடகாமா’ படத்திற்கு சென்சார் ‘யு’ செர்டிபிகேட் வழங்கி உள்ளது.. இந்தபடம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரைக்கு வருகிறது..
அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் (RGK) என்பவர் இந்தப் படத்தை வித்தியாசமான கோணத்தில் இயக்கியுள்ளார்..
கலிகால முத்திப்போச்சு என்ற கருவை கதையாக எடுத்து வித்தியாசமான கோணத்தில் திரைப்படமாக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் ஆர் ஜி கே..
நிச்சயமாக ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்த கதையை அவர் எடுக்க முயற்சித்து அதில் காமெடி கலந்து சொல்லி இருக்கலாம்.. ஆனால் எந்த ஒரு வசனமும் எந்த ஒரு சுவாரசியமும் எங்குமே இல்லை என்பது தான் படத்தின் பலவீனம்..
திரைக்கதை இப்படி பலவீனமாக இருக்கும் நிலையில் நடித்த நடிகர்களும் பணியாற்றிய கலைஞர்களும் என்னதான் தங்களுடைய முழு உழைப்பை கொடுத்திருந்தாலும் அதுவும் பலவீனம் ஆகிவிட்டது..
எல்லாருக்கும் பிடிக்க வேண்டாம்.. நாலு பேருக்கு படம் பிடித்திருந்தால் போதும் என்று இயக்குனர் சொன்னார்.. அந்த நாலு பேர் யார் ? ஒருவேளை இயக்குனரும் அவரது உதவியாளர்களும் தானா?
Nakkuls Vascodagama movie review