காதலிக்க ஆசை தான்..; நானும் சிங்கிள் தான் விமர்சனம்
Published by: cineadmin on February 14, 2021

நடிப்பு – தினேஷ், தீப்தி
இயக்கம் – கோபி
இசை – ஹிதேஷ் மஞ்சுநாத்
தயாரிப்பு – த்ரி இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்
கதைக்களம்…
90s கிட்ஸ் தினேஷ். இவர் டாட்டூ போடும் கடை நடத்தி வருகிறார். நயன்தாராவை போல ஒரு சூப்பர் ஃபிகரை திருமணம் செய்ய காத்திருக்கிறார்.
தினேஷின் நண்பர்கள் ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத் & செல்வேந்திரன். இவர்கள் எல்லோரும் சிங்கிள்ஸ்.
ஹீரோயின் தீப்தி சதி. பாரீனில் வேலை பார்த்து செட்டிலாக ஆசைப்படுபவர் இவர்.
நாயகியை பார்த்ததும் தினேஷ் காதலிக்கிறார்.
இதன் பின்னர் லண்டனில் வேலைக்கு செல்கிறார் தீப்தி. அப்போது தினேஷ் & நண்பர்களும் லண்டன் செல்கின்றனர்.
அங்கு நடந்த ஒரு பிரச்சினையால் தினேஷை வெறுக்கிறார் தீப்தி.
இறுதியாக சிங்கிள் கமிட் ஆனாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
கேரக்டர்கள்…
தினேஷ் வழக்கம் போல் நடிக்க முயற்சித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்.
நாயகி தீப்தி தனக்கான பணியை சிறப்பாக செய்துள்ளார்..
ஆனாலும் தினேஷிடம் இருந்து தப்பிக்க கடைசியாக அவர் எடுக்கும் முடிவுகள் எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருக்கும்.
நாயகனின் நண்பனாக வரும் ஆதித்யா கதிரின் கவுண்டர் காமெடிகள் பல இடங்களில் சிரிப்பை வர வைத்தாலும் டபுள் மீனிங் காமெடிகள் முகம் சுழிக்க வைக்கிறது.
லண்டன் பட காட்சிகளை மிக அழகாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தராஜ்.
ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையில் பின்னனி இசை ஓகே ரகம் தான். பாடல்கள் எடுபடவில்லை. இன்று பாடல் ரசிக்கலாம்
ஆண்டனியின் படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது.
இரட்டை அர்த்த வசனங்களுடன் படம் எடுத்தால் அது சூப்பர் ஹிட் என சில இயக்குனர்கள் நினைப்பது தவறு.
காம நெடி இல்லாமல் காமெடியாக கொடுத்தால் இன்னும் நல்ல பெயர் எடுக்கலாம்.
சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சிங்கிள்ஸ் ரசிக்க நிறைய காட்சிகள் உள்ளன.
ஆக ‘நானும் சிங்கிள் தான்’… காதலிக்க ஆசை தான்
Naanum Single than review rating