தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நானும் ஒரு அழகி… மலர்ந்த பெண்மை
ஸ்டோரி…
நாயகி மேக்னா.. இவர் வயதில் உள்ள பெண்கள் எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை குட்டி என பெற்று விட்டாலும் இன்றும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.. அப்படியான மகளை நன்றாக படித்து வைக்க வேண்டும் என அம்மா ஆசைப்படுகிறார்.. இதற்காக தன் அண்ணன் மகன் டியூஷனில் சேர சொல்கிறார்.. வேறு வழியின்றி நாயகி மேக்னா அருண் நடத்தும் டியூஷனில் சேர்கிறார்..
இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறை என்றாலும் சில தயக்கங்களால் தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.. இந்த சூழ்நிலையில் நாயகன் அருண் வெளியூர் செல்கிறார்..
அந்த நேரத்தில் திடீரென ஒரு ஐடி மாப்பிள்ளைக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கிறார் அம்மா.. தன் காதலை மறக்கவும் முடியாமல் ஐடி மாப்பிள்ளை உடன் சந்தோஷமாக வாழவும் முடியாமல் தவிக்கிறார் நாயகி.
இப்படியான சூழ்நிலையில் திருமணம் ஆகி 5 வருடம் ஆனபோதிலும் குழந்தை இல்லை என்பதால் மலடி என்ற அவமானத்துடன் வாழ்கிறார்..
தன் கணவனால் தனக்கு குழந்தை கொடுக்க முடியாது என்பதை அறிகிறார். தான் மலடி இல்லை என்பதை ஊருக்கு நிரூபித்து காட்ட நினைக்கிறார்.. அதன்பிறகு என்ன நடந்தது? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
கிருஷ்ணம்மாள் என்ற கேரக்டரில் நாயகி மேக்னா.. இவர் டிவி சீரியல் நடிகை என்பதால் ஒவ்வொரு ரியாக்ஷனும் தாமதமாகவே வருகிறது.
மலடி இல்லை என்பது நிரூபிப்பதற்காக இவர் சில முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த காட்சிகளில் வலுவில்லை.. மேலும் படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் ஏதோ பேருக்கு டயலாக் பேசி நடித்திருப்பதாகவே தெரிகிறது.. நிறைய காட்சிகளில் உதட்டு அசைவம் வசனங்களும் ஒட்டவில்லை..
கதைக்கு ஏற்ப காட்சிக்கு ஏற்ப உணர்வுபூர்வமாக வசனங்களை ஏற்றி இறக்கி பேச வேண்டும்.. ஆனால் ஏதோ மனப்பாடம் செய்துவிட்டு அனைவரும் மைக் முன்னாடி பேசியதாக தெரிகிறது..
நாயகனாக அருண்.. எதற்காக தன் மாமன் மகளுடன் பேச மறுக்கிறார் என்பதற்கான ஒரு காரணம் கூட இல்லை..
நாயகியின் கணவராக ராஜதுரை.. இவர் ஐடி துறையில் பணியாற்றினாலும், வேஷ்டி, முறுக்கு மீசை என்று திருநெல்வேலி மாப்பிள்ளைக்கு கெத்து காட்டி இருக்கிறார்.
சிவசக்தி, சுபராமன், ஸ்டெல்லா ஆகியோரும் உண்டு.. கதையை ஓட்ட நடிக்க முயற்சித்து இருக்கின்றனர்..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் மகிபாலன்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்திருப்பதுடன் இசையும் அமைத்திருக்கிறார் பொழிக்கரையான்.க.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கிருஷ்ணம்மாள்.. அவரின் பெயரை நாயகி கேரக்டருக்கு வைத்து வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார்.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் எந்த ஒரு தாக்கமும் ஏற்படவில்லை..
Naanum oru Azhagi movie review





