சகதி சாலையில் சாகச சர்க்கஸ்..; மட்டி விமர்சனம்.. 4/5

சகதி சாலையில் சாகச சர்க்கஸ்..; மட்டி விமர்சனம்.. 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. இந்திய சினிமாவில் முதன்முறையாக மண் சாலையில் ஒரு ஜீப் பந்தயம். இந்த படம் இந்தியாவில் மட்டும் ஆறு மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை LOW BUDGET KGF MOVIE என்று சொன்னால் அது மிகையல்ல.

பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் பிரேமா கிருஷ்ணதாஸ் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் “மட்டி”.

கதைக்களம்..

மலையோர காட்டுப்பகுதிகளில் வெட்டப்படும் மரங்களை தனது ஜீப்பில் ஏற்றி மலையடிவாரத்திற்கு கொண்டு செல்பவராக ஹீரோ ரிதன். இவரை அடிக்கடி சவாரிக்கு வரும் நாயகி சைட் அடிக்கிறார்.

அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக நின்று போலீசே ஏதாவது பிரச்சினை கொடுத்தாலும் அதை நேரிடையாக எதிர்க்கும் தைரியம் கொண்டவர் ரிதன். இவர்கள் கதை ஒரு பக்கம்.

மற்றொரு புறத்தில்.. மட்டி ரேஸ் நடக்கிறது. அதாவது மீனவர்களுக்கு படகுபோட்டி போல அந்த மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு நடத்தப்படும் ஒரு வகையான சகதி சாலையில் நடக்கும் ஜீப் பந்தயம் அது.

இந்த போட்டியில் மற்றொரு நாயகன் கார்த்திக்குடன் வில்லனுக்கும் மோதல் நடக்கிறது. அப்போது கார்த்தியின் காலை உடைத்து விடுகிறார் வில்லன்.

எனவே கார்த்திக்கு உதவ போட்டியில் களம் இறங்க வருகிறார் ரிதன். கார்த்திக் யார்? அவருக்கு ரிதன் உதவ என்ன காரணம்..? ஜீப் சவாரி ஓட்டும் அவர் பந்தயத்தில் ஜெயித்தாரா.? வில்லன் கதி என்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

சினிமாவுக்கு நம்பும்படியான ஒரு ஆக்சன் ஹீரோ ரிதன் கிடைத்திருக்கிறார் எனலாம். இவரது பார்வையே மிரட்டலாக உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். மற்றொரு நாயகன் கார்த்தி. இவரும் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். இவர்களுக்கு முதல் படம் என்றால் நம்பமாட்டீர்கள்.

ப்ளாஷ்பேக் காலேஜ் காட்சியில் ரிவர்ஸ் கீரில் ஜீப்பை மலைபடிக்கட்டில் ஓட்டிச் செல்லும் காட்சி பிரமாதம். இப்படியாக கார்த்திக்கும் வில்லனுக்கும் மோதல் ஆரம்பமாகிறது.

நாயகிகளாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் இருவருக்கும் பெரிதாக வேலையில்லை. ஆனால் கொடுத்த கேரக்டரில் கச்சிதம்.

வில்லன்கள் வரும் காட்சிகளில் நமக்கே ஒரு மிரட்டலான தவிப்பு வருகிறது. அதற்கு காரணம் பின்னணி இசைதான்.

படத்தில் ஹீரோ வில்லன், மற்றும் லோகா வரை அனைவரும் முகம் முழுக்க தாடியோடு வருவதால் யாருடைய முகமும் சரியாக தெரியவில்லை. படம் நகர நகர நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

அண்ணன் தம்பி கேரக்டர்களில் நடித்தவர்கள் நிஜத்தில் தம்பி அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னீஷியன்கள்…

கார்களை விட வேகமாக நிலத்தில் எந்த பகுதியானாலும் வேகமாக கடந்து செல்லும் வாகனம் ஜீப். (கூடுதல் தகவல் – JEEP என்றால் JOURNEY ON EVERY EARTH PLACE)

மலைப்பகுதிகளில் தாறுமாறாக செல்லும் ஜீப்களை கேமரா பின்தொடர்ந்து துரத்தித் துரத்திப் படம்பிடித்திருக்கிறது என்றால் அது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான்.

ஜீப்களை இவ்ளோ ரிஸ்க் எடுத்து ஓட்டியதையெல்லாம் பார்த்தால் நமக்கு மெய் சிலிர்க்கும். படம் முடியும் போது போடப்படும் மேக்கிங் வீடியோ நிச்சயம் நம்மை தியேட்டர்களிலேயே நிற்க வைத்திடும்.

ஒவ்வொரு காட்சியையும் லோ பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரகபல்.

தண்ணீரில் மற்றும் சகதியில் ஜீப் பயணிக்கும்போது நம் முகத்தில் சகதி படுவது போல உணர முடிகிறது. அப்படியொரு ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்

கே ஜி ரதீஷ். ஹாலிவுட் தரத்திற்கு நம்மால் பணிபுரிய முடியும் என தன் கேமராவில் நிரூபித்துள்ளார்.

கேஜிஎப் பட இசையமைப்பாளரான ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதில் நாம் கேட்டு பார்த்து மிரண்ட இசையை இதில் கொடுத்திருக்கிறார் எனலாம்.

படத்தின் வசனங்களும் மிரட்டல் எனலாம். புலிமுருகன், மரைக்காயர் படங்களின் தமிழ் வசனகர்த்தா ஆர் பி பாலா தான் இந்த படத்தின் வசனங்களையும் எழுதியிருக்கிறார்.

ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள் சொல்லும் காமெடி டயலாக்குகள் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் 20 நிமிட க்ளைமாக்ஸ் காட்சிகளை தியேட்டர் சீட்டின் நுனியில் தான் அமர்ந்து பார்ப்பீர்கள் எனலாம். கதைக்கான லோக்கேசன் மற்றும் நடிகர்களை தேடவே 2 வருடங்களுக்கு மேலாகிவிட்டதாம். அதை காட்சியில் காட்டியிருக்கிறார் டைரக்டர்.

லோ பட்ஜெட்டில் இப்படியொரு பிரம்மாண்டத்தை கொடுக்க முடியுமா? என வியக்க வைத்துள்ளார். இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு படம் முழுக்க இருந்திருந்தால் இந்த மட்டி பெரும் மகிழ்ச்சிதான்.

ஆக இந்த மட்டி.. லோ பட்ஜெட்டில் ஒரு கேஜிஎஃப் மேக்கிங் எனலாம்.

Muddy movie review rating

TIME KILLS YOU…; 3:33 விமர்சனம்

TIME KILLS YOU…; 3:33 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. ஹீரோ பிறந்த நேரம் 3:33. 30 வருடங்களுக்கு பிறகு அந்த நேரமே அவருக்கு எமனாக மாறுகிறது.

அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்த்ரு இயக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் சான்டி ஹீரோவாக நடித்துள்ள படம் “3:33”. ஸ்ருதி நாயகியாகவும், ரமா, ரேஷ்மா உள்ளிட்டோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். முக்கிய கேரக்டரில் கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். Bamboo Trees ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ளார்.

கதைக்களம்..

தந்தையை இழந்தவர் நாயகன் சாண்டி. தன் அம்மா மற்றும் அக்கா, அக்கா குழந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார். எவ்வளவு வேலை தேடினாலும் சரியான வேலை கிடைக்காமல் அலைகிறார்.

இதற்கெல்லாம் காரணம், நீ பொறந்த நேரம் அப்படி என்பதே இவரின் காதுகளில் ஒலிக்கிறது.

இவர்கள் நால்வரும் ஒரு வீட்டிற்கு குடித்தனம் செல்கின்றனர். அங்கு சென்ற பின்தான் அந்த 3:33 மணி இவரை பாடாய்படுத்துகிறது.

அப்படி என்ன ஆனது? அந்த அமானுஷ்ய சக்தி என்ன செய்யும்? தன் குடும்பத்தை அதனிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக்
கதை..

கேரக்டர்கள்..

பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவருமே தங்கள் படங்களில் ஆட்டம் போட்டு கலக்கியிருப்பார்கள். அதுவும் தேவைக்கு மீறியே பாடல்கள் இருக்கும். ஆனால் சாண்டி தன் முதல் படமாக இருந்தாலும் ஒரு ஆட்டம் பாட்டம் கூட இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளதே பெரிய விஷயம்.

தன் கேரக்டரை புரிந்து அவர் நடித்துள்ளது சிறப்பு. ஆனால் அமானுஷ்ய சக்தி வந்தபின்னர் அவர் ஒரு மாதிரியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் படம் முழுக்கவே ஒரு மாதிரியாகவே இருக்கிறார். அது ஏனோ.?

ஒரே கருப்பு கலர் சட்டை, தலையே சீவாத முகம்… முகம் முழுக்க தாடி என வருகிறார். அதை கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.

வழக்கம்போல இந்த படத்திலும் நாயகி ஸ்ருதிக்கு பெரிதாக வேலையில்லை. சில நேரம் பேய் போலவும் மிரட்ட முயற்சித்துள்ளார்.

அம்மா ரமா, அக்கா ரேஷ்மா இருவரும் கதைக்கு சரியான தேர்வு. கொடுத்த கேரக்டரில் நிறைவான நடிப்பு.

ஆனால் படத்தில் கெளதம் மேனன் எதற்கு வருகிறார்? பெரிய இயக்குனருக்கான மதிப்பு இதில்லை.

டெக்னிஷியன்கள்…

சதீஷ் மனோகரனின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது. ஒரு காட்சியில் டோர் லாக் தானாகவே திறக்க முற்படும். அதற்கேற்ப கேமரா ஆங்கிளை ஆட்டி வைத்திருப்பது நிஜமாலுமே சூப்பர் சார்.

ஹர்ஷவர்தனின் பின்னனி இசை ரசிகர்களை நிச்சயம் மிரட்டும்.

இதுவும் வழக்கமான பேய் பட பாணியில் தான் பயணிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் டைம் கான்செப்ட் வித்தியாசமாக உள்ளது. ஆனால் முதல் பாதிவரை அதே டைம்.. அதே வீடு.. அதே காட்சிகள் திரும்ப திரும்ப வருவதால் போதும்டா சா(மி)ண்டி என சொல்ல வைக்கிறது.

படத்தின் கடைசி 15 நிமிடங்கள் மனதில் நிற்கிறது. முதல்பாதி காட்சிகளை கட் செய்து கொஞ்சம் காதல்.. காமெடி என திருப்பியிருந்தால் போரடிப்பது தெரியாமல் இருந்திருக்கும்.

நாயகன் மேல் நம்பிக்கை வைக்காமல் கதையின் மேல் நம்பிக்கை வைத்து கதையை நகர்த்திய நம்பிக்கை சந்துருக்கு வாழ்த்துக்கள்..

ஆக.. இந்த 3:33 கொல்லும் நேரம்

333 Moonu Muppathi Moonu review rating

அதுல்யா அவிழ்க்க… ஷாந்தனு தவிர்க்க… ரிப்பீட்டு.; முருங்கைக்காய் சிப்ஸ் விமர்சனம்

அதுல்யா அவிழ்க்க… ஷாந்தனு தவிர்க்க… ரிப்பீட்டு.; முருங்கைக்காய் சிப்ஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. முதலிரவில் உடலுறவு இன்று மட்டும் வேண்டாம் என்கிறார் மாப்பிள்ளை. இன்று எப்படியாவது உடலுறவு வேண்டும் என்கிறார் அதுல்யா.. முதலிரவு நடந்ததா? என்பதே கதை.

கதைக்களம்..

ஷாந்தனுவுக்கும் அதுல்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. அந்த திருமண காட்சிகளை கூட பெரிதாக காட்டவில்லை. அன்று இரவு முதலிரவு நடக்கவுள்ளது.

ஷாந்தனுவிடம் அவரது தாத்தா பாக்யராஜ் ஒரு நிபந்தனை விதிக்கிறார் உங்களிருவருக்கும் முதலிரவில் உடலுறவு நடந்தால் பரம்பரைச் சொத்து ரூ 300 கோடியை அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என்கிறார்.

அதற்கு ஒரு காரணம் சொல்கிறார். பக்கத்தில் பொண்டாட்டி இருந்து இன்று மட்டும் நீ அவளுடன் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் நாளை எந்த பெண் உன் வாழ்வில் வந்தாலும் நீ சலனப்படமாட்டாய் என்கிறார்.

மற்றொருபுறம் அதுல்யாவிடம் அவரது அத்தை ஊர்வசி ஒரு நிபந்தனை விதிக்கிறார். இன்று முதலிரவில் உடலுறவு நடைபெறவில்லையென்றால் குழந்தை பிறக்காது என்ற தோஷம் இருப்பதாக சொல்கிறார்.

முதலிரவில் செக்ஸ் வைத்துக் கொண்டார்களா.? என்பதை முழுப்படம்.

சொத்தை அபகரிக்க மனோபாலா, மதுமிதா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் திட்டம் போடுவது அறைக்கு வெளியே நடக்கும் கதை.

கேரக்டர்கள்…

துறுதுறு இளைஞனாக ஷாந்தனு.. இளமை துள்ளலான நடிப்பில் அதுல்யா.. இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாகவே உள்ளது.

நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை எனலாம். ஒருவேளை…ஒரு இரவில் ஒரு அறையில் இவர்களுக்கு நடிக்க தெரியலையோ என்னவோ..? சின்ன சின்ன முகபாவனைகள் மட்டுமே எடுபடுகின்றன.

பாக்யராஜ் ஊர்வசி உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இருந்தும் படத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லை எனலாம்.

என்னடி எத்தனையாவது ரவுண்ட் டீ என அதுல்யா தோழிகள் கேட்கிறார்கள்.. இதுபோல ஷாந்தனு நண்பர்களும்.. பின்னர் அறைக்குள்ளே கபாடி விளையாடுகிறார்கள்… ஜாக்கெட்டில் காய்ன் போட்டு விளையாடுகிறார்கள்.. சூடேற்றும் வகையில் குளிக்கிறார்கள்.. இப்படியே முதலிரவை கழிக்கிறார்கள்..

இவர்களுடன் யோகி பாபு, முனிஷ்காந்த், மனோபாலா, மயில்சாமி, மதுமிதா என ஏகப்பட்ட காமெடியன்கள் உள்ளனர். சில இடங்களில் மட்டும் நம்மை கிச்சு கிச்சு மூட்டுகின்றனர்.

தயாரிப்பாளர் ரவீந்தர் தன் பங்குக்கு நகைச்சுவை செய்ய முயற்சித்துள்ளார். அடல்ட் ஒன்லி படம்தான் என்பது முதலிலே தெரிந்து விடுகிறது- எனவே இன்னும் ரசிக்கத்தக்க வகையில் பாக்யராஜ் பாணியில் இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்திருக்கலாம். ஒரு சில டபுள் மீனிங் ஜோக்குகள் எடுபடுகின்றன.

டெக்னீஷியன்கள்..

ஏதோ சொல்ல மனம் துடிக்குதே.. TALK LESS WORK MORE உள்ளிட்ட பாடல்கள் நிச்சயம் ரசிகர்களை கவரும். பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்தை பார்க்க வைத்துள்ளார் தரண் குமார்.

இவரையும் ஒளிப்பதிவாளரையும் நிச்சயம் பாராட்டலாம். ஓரிரு காட்சிகளை தவிர படம் முழுக்க ஒரே அறையில்தான் கதை தொடர்கிறது. அதை தனது ஒளிப்பதிவால் ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்கரவர்த்தி எனலாம்.

விடிவதற்குள் 108 கன்னி பெண்களை கொண்டு வந்து அதற்கான முதலிரவு தாம்பத்ய பூஜை போடுவது எல்லாம் ரொம்ப ஓவர். நம்பும்படியாக இல்லை. கேட்டால் லாஜிக் வேண்டாம் என்பார்கள்.. சரி அதைவிடுங்க..

2 சாமியாராக வருகிறார் மயில்சாமி.. குயில்சாமி.. (இருவரும் ஒருவரே..) பிரகாஷ்ராஜ் நமஹ… என தமிழ் சினிமா வில்லன் பெயர்களை சொல்கிறார்.. மந்திரம் கூட ஏதாவது ரசிக்கும்படி சொல்ல வேண்டாமா..? டயலாக் கூட எழுத மாட்டீர்களா இயக்குனர் ஸ்ரீஜர்.

5 வயது சிறுவர்கள் விளையாடும் போது கூட வசனம் எழுதி விளையாடுவார்கள் போல.. ஆனால் இவர்கள்…??

கதையே இல்லாமல் ஜாலிக்காக எடுத்து சூப்பர் ஹிட்டான படங்கள் இங்கு எத்தனயோ உள்ளன. படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் புதுமுக இயக்குனர்களே…

Murungaikkai Chips movie review

புளு சட்டையும் புளுகு மூட்டையும்…; ஆன்டி இண்டியன் விமர்சனம்

புளு சட்டையும் புளுகு மூட்டையும்…; ஆன்டி இண்டியன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சி. இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், விஜயா, கர்ணராஜா, பசி சத்யா, ஜெயராஜ்,

கதை, வசனம், இசை, இயக்கம்: சி. இளமாறன்.

முன்கதை…

சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். இவர் ‘ஆன்டி – இண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இவரது விமர்சனங்கள் பெரும்பாலும் நெகட்டிவ்வாகவே இருக்கும். எனவே திரையுலகினரும் ரசிகர்களும் ஒரு திரைப்படம் எடுத்துப் பார்? அப்போதுதான் அந்த கஷ்டம் உனக்கு தெரியும் என்றார்கள்.

எனவே ஆவேசம் கொண்டு இவர் இயக்கியுள்ள படம்தான் ஆன்டி இண்டியன்.

கதைக்களம்..

தென்கச்சி கோ சுவாமிநாதனின் புறாக் கதையில் துவங்குகிறது இந்தபடம்.

சுவர் விளம்பர ஓவியக்கலைஞர் பாட்ஷா (இளமாறன்)வை யாரோ கொலை செய்துவிடுகிறார்கள். (அவர்கள் யார்? என கேட்கக்கூடாது ஏனா அது இயக்குனருக்கே தெரியாது).

பாட்ஷாவின் தந்தை இஸ்லாமியர் (இப்ராஹீம்). தாய் இந்து (சரோஜா). பின்னர் அவர் கிறிஸ்தவராக மேரியாக மதம் மாறியிருக்கிறார். (அதுவேறு கதை).

இதனால் பாட்ஷாவின் உடலை எந்த மதப்படி அடக்கம் செய்வது என குழப்பம் ஏற்படுகிறது. மேலும் அந்தத் தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்த சடல விவகாரத்தைப் அரசியல்வாதிகள் தங்கள் கட்சிகளுக்கு சாதகமாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.

அந்த சடலம் என்ன ஆனது? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்..

ஏழுமலையாக ஜெயராஜ், சரோஜா என்னும் லூர்து மேரியாக – விஜயா மாமி, பள்ளி வாசல் பெரியவராக – நம்பி, காவி பொட்டு வைத்து காவி கட்சி லோக்கல் அரசியல்வாதியாக கர்ணராஜா, கிறிஸ்துவ ஃபாதராக ஸ்னேபா ஆகியோர் நிச்சயம் பாரட்டப்பட வேண்டியவர்கள்.

கருப்பு சட்டை போட்ட (மாறன்) நபர் பேசும் வசனங்கள் சூப்பர்.

படத்தின் நாயகன் ஜெயராஜ் எனலாம். அந்தளவிற்கு அவரே படம் முழுவதும் வருகிறார். ஆனால் இவர் பேசும் கெட்டவார்த்தைகள் மோசமாக உள்ளது. அதை சைலண்ட்டாக (மியூட்டில்) வைத்திருக்கலாம்.

போலீஸ் ஆபிசர்கள் ஆடுகளம் நரேன்.. வழக்கு எண் முத்துராமன், முதல்வராக ராதாரவி, தாசில்தார் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரின் பங்களிப்பு கச்சிதம். அதேபோல் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு சிறப்பு சேர்த்துள்ளது.

இவர்களுடன் பந்தல் போடும் பையனாக விஜய்டிவி பாலா நடித்துள்ளார். இவர் பேசும் வசனங்கள் நச் என்று உள்ளது. அதுவும் பந்தல் போடுவதும் கழட்டுவதும் என செமயாய் கலாய்த்துள்ளார்.

பாட்ஷா என்ற கேரக்டரில் பிணமாக கிடக்கிறார். புளு சட்டை மாறன். வேறு யாரையாவது பிணமாக நடிக்க வைத்திருக்கலாம். எங்கு நாம் நடித்தால் பலரும் கிண்டல் செய்வார்களோ என தெரிந்துவிட்டது போல.

சரி.. இவர் வாழ்ந்த காட்சிகள்.. இவரை கொலை செய்வது யார்? என்பதையாவது காட்டியிருக்கலாம். அப்படியென்றால் படத்தில் நடிக்க வேண்டுமே. அதனால் அந்த காட்சிகளும் இல்லை.

வசனங்கள்..

படத்தின் க்ளைமாக்சில் பேசும் வசனம் நன்றாக உள்ளது. “உங்ககிட்ட ஒரு பொணம் கிடச்சது, அத வச்சு 13 பேர கொன்னீங்க. இப்ப உங்ககிட்ட 13 பொணம் கிடச்சிருக்கு… இத வச்சு என்னல்லாம் பண்ணப் போறானுங்களோ” என ‘பசி’ சத்யா பேசும் வசனம் அப்ளாஸ் அள்ளும்.

இது தூத்துக்குடி ஸ்டெர்ட்லைட் ஆலை கலவரத்தில் நடந்த 13 கொலையை நினைவுப்படுத்துகிறது.

படத்தின் இசையை புளுசட்டை மாறனே செய்துள்ளார்.

நான் தினந்தோறும் ரிக்சா ஓட்டி பிழைக்கிறேன்.. அதுல சம்பாரிச்சதை சாராயத்துல அழிக்கிறேன்… என்ற ஒரு கானா பாடல் வருகிறது. இந்த பாடல் கூட ஏற்கெனவே நாம் கேட்ட பாடல்தான். புதுப்பாடல் போட தெரியலையா?

மேலும் இதுபோன்ற கானா பாடல்கள் படத்தில் சில உள்ளன. அவை காட்சியாகும்போது ஒரே ஆங்கிளில் எடுத்துள்ளார். அதை மேடைக் கச்சேரி பார்ப்பது போல உள்ளது.

முக்கியமாக பின்னணி இசை பற்றி சொல்ல வேண்டும். ஒரு மாதா கோயில் பற்றி காட்டினால் நாம் ஏற்கனவே கேட்ட ஆலய மணி ஓசையை அடிக்கிறார். இழவு வீடு என்பதால் இழவு ஓசையை இசைக்கிறார். அதுசரிதான். ஆனால் இது எல்லாம் ஏற்கெனவே கேட்ட இசையாகவே உள்ளது. நீங்கள் என்ன புதுமையாக செய்துள்ளீர்கள் மாறன்..?

புளு சட்டை மாறனிடம் இன்னும் சில கேள்விகள்…

எல்லாரையும் கதை திருட்டு என வெளுத்துக் கட்டும் ப்ளு சட்டை மாறன் சொந்த கதையை எடுக்காமல் 7 வருடங்களுக்கு முன் ரிலீசான ஒரு வடஇந்திய படத்தை காப்பியடித்துள்ளது ஏனோ.?

ஆர்ட்டிஸ்ட் பாட்ஷா கொல்லப்படுகிறார். அது இயற்கை மரணமாக இருந்தால் அதை யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால் படுகொலை செய்யப்பட என்ன காரணம்? அப்படி படுகொலை செய்யப்படும் அளவுக்கு பாட்ஷாவுக்கு விரோதி யார்? என ஒரு ப்ரேமில் கூட காட்டவில்லையே சார்?

சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்த மாநாடு படத்தை புளு சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்தார். அதில்… முதல்வர் எஸ்ஏசி நல்லவரா? கெட்டவரா? என காட்டவில்லை. எனவே அவரை கொலை செய்தால் என்ன? என ரசிகர்களுக்கே எண்ணம் வருகிறது என்றார்.

சிம்புவின் நோக்கம்.. தன் மதத்திற்கு கெட்ட பெயர் வந்துவிட கூடாது என்பதுதான். மேலும் ஒரு உயிரை கொல்வது அதுவும் ஒரு முதல்வரை கொல்வது சரியான விஷயமா? இதை நியாயப்படுத்தும் விதமாக விமர்சனம் செய்திருந்தார் மாறன்.

அப்படியிருக்கையில் ஆன்டி இண்டியன் படத்தில் பாட்ஷா (மாறன்) உடலை கடலில் வீசி எறிந்தால் என்ன? அவர் உடலை புதைக்க ஏன் இவ்வளவு கஷ்டம்? அவர் என்ன பெரிய..—-? என கேட்கத் தானே தோன்றுகிறது..

ஒரு படத்தின் கதையை கூட சொந்தமாக எடுக்க முயற்சிக்கவில்லை. இதில் பலரை விமர்சனம் செய்கிறார்?

18 நாள்களில் இதை படமாக்கியதாக சொல்கிறார் இயக்குநர். எனவே அவரை பாராட்டலாம்.

அமைதிக் குழுவுடன் தாசில்தார் போலீஸ் பேசும் பேச்சுவார்த்தை காட்சிகள்.. அதன் பிறகு வரும் வன்முறைக்காட்சி நன்றாக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை நடிகர் கபாலி என்ற பெயரில் படம் முழுக்க அழைக்கிறார்கள். அவர் எந்த கட்சிக்கு இடைத்தேர்தலில் ஆதரவளிக்க போகிறார் என்ற காட்சியும் வருகிறது.

அதுபோல் கபாலி நடிகர் 25 வருடங்களாக ரசிகர்களை ஏமாற்றி வருகிறார் என்ற வசனமும் உள்ளது. நிஜத்தில் அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்தார் ரஜினி என்பதால் அந்த படக்காட்சிகளை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் 3 வருடங்களாக தான் அரசியலுக்கு வருவதாக சொன்னார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆக நல்ல நடிகர்கள் துணையுடன் ‘ஆன்டி இண்டியன்’ என்ற படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் மாறன். இது போதாது புளு சட்டை மாறன் சாரே….

Blue Sattai Maran’s Anti Indian movie review and rating in Tamil

திருடன் போலீஸ் ஆட்டம்..; ஜெயில் விமர்சனம் 3/5

திருடன் போலீஸ் ஆட்டம்..; ஜெயில் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. ஈசிஆர் & வட சென்னை பட கதைகள் தமிழ் சினிமாவுக்கு புதிது அல்ல. அந்த வரிசையில் வந்துள்ள மற்றொரு படம்.

கதைக்களம்..

சென்னை காவேரி நகர் பகுதியில் தன் அம்மா ராதிகாவுடன் வசிக்கிறார் ஜிவி பிரகாஷ். இவரது நண்பர் நந்தன் ராம். இவர்களின் தொழிலே பிக்பாக்கெட் தான். அடுத்தவன் உழைப்பை திருடும் திருட்டு கும்பல் இது. மேலும் போதை பொருளை கைமாற்றி விடும் பழக்கமும் உள்ளது.

இதனிடையில் இவர்கள் மீது பொய்வழக்கு போடுவதும் போலீசுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிடுகிறது. மற்றொரு நண்பராக வருகிறார் பசங்க புகழ் பாண்டி.

ஒரு சிலரின் திருட்டு பழக்கத்தால் இந்த ஏரியா பசங்களுக்கு எங்கும் சென்றாலும் வேலை தர மறுக்கின்றனர்.

இந்த நிலையில், ஒரு பிரச்சினையில் நந்தன்ராமை போட்டுத் தள்ளுகிறது மற்றொரு கேங்க் கானா முத்து. அந்த ஆத்திரத்தில் அந்த கானா கேங்க் கலியனை கொன்று விடுகிறார் பாண்டி. இதனால் சிறைக்குச் செல்கிறார் பாண்டி.

தன் 2 நண்பர்கள் இல்லாமல் தவிக்கும் ஜிவி பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார்.

அதன்பிறகு என்ன செய்தார்? நேர்மையாக உழைத்து கொடுத்தாரா? மறுபடியும் திருட ஆரம்பித்தாரா? நண்பனை ஜெயிலில் இருந்து காப்பாற்றினாரா? நண்பர்களுக்காக பழி தீர்த்தாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

நாச்சியார் படத்திற்கு பிறகு அசல் சேரி பகுதி கர்ணாவாக அசத்தியிருக்கிறார் ஜிவி. பிரகாஷ். இவரிடம் உள்ள நடிப்பு திறமையை பாலா, வசந்தபாலன் உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்களே கொண்டு வருகின்றனர். எனவே ஜிவி பிரகாஷ் சரியான இயக்குனர்களை தேர்வு செய்ய வேண்டும்.

வட சென்னை பாஷையில் வெளுத்து கட்டியிருக்கிறார். நண்பர்களுக்காக போலீசிடம் டீல் பேசுவது முதல் காதலியிடம் ரொமான்ஸ் செய்வது என பிரித்து மேய்ந்திருக்கிறார். பேச்சுலர் படத்தை தொடர்ந்து ஜெயில் படத்திலும் முத்த கமல்ஹாசனாக மாறியிருக்கிறார் ஜிவி. பிரகாஷ்.

ராதிகா எவ்வளவு பெரிய நடிகை. அவருக்கு ஏன்? பெரிதாக காட்சிகள் இல்லை என்பது தெரியவில்லை. சமீபகாலமாக ராதிகாவின் படங்களும் இப்படிதான் உள்ளது. கொடுத்த கேரக்டரில் கச்சிதம் அவ்வளவுதான்.

சேரி பகுதியில் பலரை கெட்டவர்களாக சித்தரித்தாலும் ராதிகா, நந்தன் ராம் அக்கா கேரக்டர்கள் நிச்சயம் நல்லவர்களை அடையாளம் காட்டும்.

நாயகனின் நண்பர்களாக நடித்துள்ள நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி இருவரும் அருமையான தேர்வு. எங்கும் மிகைப்படுத்தப்படாத நட்பு & நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஜெயில் நாயகியாக அபர்ணதி… அபாரம். அருமை… என சொல்லிக் கொண்டே போகலாம். ப்பா…. சேரி பகுதி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

காத்தோடு காத்தானேன் பாடலில் ஜிவி பிரகாஷ் மற்றும் அபர்ணதி ரொமான்ஸ் வேற லெவல். உணர்ச்சியின் உச்சக்கட்டம் எனலாம்.

பல படங்களில் காமெடி கேரக்டரில் கலக்கிய வில்லன் ரவிமரியா இதில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். இன்னும் மிரட்டலை கொடுத்திருக்கலாம்.

பாண்டிக்கு ஜோடியாக வந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண்ணாக சரண்யா ரவிச்சந்திரன். இவருக்கு வசனங்கள் குறைவு. ஆனால் கண்களில் பேசியிருக்கிறார். காதல்.. ஏக்கம்.. தவிப்பு… பிரிவு என உணர்ந்து நடித்திருக்கிறார்.

புலி பட தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் இந்த படத்தில் வருகிறார் அவ்வளவுதான்.

டெக்னீஷியன்கள்..

படத்தின் இசை ஜிவி. பிரகாஷ்தான். பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி சிறப்பு. காத்தாடு காத்தானேன் பாடல் ரொமான்டிக் வகை என்றால்.. முட்டை பரோட்டா முத்தம் தரட்டா பாடல் ஆட்டம் போட வைக்கும்.

நடிகர் தனுஷிடம் இருந்து இப்படி ஒரு மெலோடி பாடலா? என வியக்கும் வகையில் உள்ளது காத்தோடு காத்தானேன் பாடல்.. ஆனால் முதல் பாதியில் இத்தனை பாடல்கள் தேவையா? என்பதே கேள்விக்குறி.

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு கண்களுக்கு நல்லதொரு படைப்பு. அன்பறிவின் சண்டைக் காட்சிகள் பெரிதாக சொல்லும்படி இல்லை.

வசந்தபாலன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். நடிகர்கள்.. அருமையான காட்சியமைப்பு என சரியாக செய்துள்ளார். ஆனால் திரைக்கதை என்னவோ வழக்கமான வடசென்னை கதைதான். அந்த பகுதி மக்கள் லேப்டாப் திருடுவதும், கஞ்சா விற்பதும் என பல படங்களில் பார்த்த காட்சிகளாகவே உள்ளது.

புலம் பெயர்ந்து வரும் குடிவாசிகளின் வலியை சொல்லாமல் அவர்களின் நிலை இன்றும் இப்படித்தான் என சொல்லியுள்ளார் வசந்தபாலன். வடசென்னையும் திருந்தவில்லை.. காவல்துறையும் திருந்தவில்லை. இதற்கு தீர்வுதான் உண்டோ?

ஆக.. ஜெயில்… திருடன் போலீஸ் ஆட்டம்…

Jail movie review and rating in tamil

ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ விமர்சனம்

ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

படம் விவரம்.

ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ. என்று பெயரிட்டுள்ள இப்படத்தை சி. ராம்தாஸ் தமது ஸ்ரீபெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். நான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஒளிப்பதிவு செய்து டைரக்ட் செய்துள்ளார் பகவதி பாலா.

புதுமுகம் செல்வாவுடன் அனிதா ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன். நளினி, வையாபுரி, மீரா கிருஷ்ணன், கிங்காங், கொட்டாச்சி, போண்டா மணி, புரோட்டா முருகேஷ், சரோஜா பாட்டி என பலரும் நடித்துள்ளனர்.

தேவா இசையில் கபிலேஷ்வர், சுதந்திரதாஸ் பாடல்களை எழுதி உள்ளனர். ராம் நாத் படத்தொகுப்பையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், ரமேஷ் ரெட்டி நடன பயிற்சியையும், நாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.

கதைக்களம்.. நாயகன் ராகுல் மற்றும் செல்வா இருவரும் நண்பர்கள். பலரை ஏமாற்றி பணம் பறிப்பதை இவர்களின் வேலை.

ஒரு கட்டத்தில் பக்கத்து ஊருக்கு சென்று மற்றொரு நண்பன் கொட்டாச்சி உதவியுடன் போட்டோ ஸ்டூடியோ ஆரம்பிக்கின்றனர்.

அந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக இருக்கும் சுந்தர்ராஜன். இம்முறை தேர்தலில் நிற்காமல் தன் சகோதரரான வையாபுரியை நிறுத்த முயற்சிக்கிறார்.

ஒரு கட்டத்தில் வையாபுரியை தன் சூழ்ச்சியால் வென்று எம் எல் ஏ-வாகி விடுகிறார் கராத்தே ராஜா.

ஆனால் ஒரு கட்டத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். எம் எல் ஏ. அத்துடன் அந்த பிணத்தை காணவில்லை.

எம்எல்ஏவை கொலை செய்தது யார்.? பிணம் என்னாச்சு? ஹீரோ என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

நாயகன் ராகுல் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுக்க வேண்டும். ஆக்‌ஷன் காட்சியில் அசத்தல். நாயகியை வெறுக்கும் காட்சிகளில் இன்னும் முகபாவனைகள் போதவில்லை.

ரவுடி போல நாயகி அனிதா. நல்ல உடல்மொழி.. உச்சரிப்பு உள்ளது. ஆனால் சில நேரங்களில் ஓவராக தெரிகிறது. இவரும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருசில காட்சிகள் மட்டுமே வருகிறார் நளினி. வில்லனாக கராத்தே ராஜா.

வையாபுரி மற்றும் செளந்தர்ராஜன் ஆகியோரின் நடிப்பு சிறப்பு.

சில இடங்களில் காமெடி காட்சிகளை வைத்துள்ளார் இயக்குனர் பகவதி பாலா. அத்துடன் சமுதாய கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

தேவாவின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ”லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்” பாடல் ஓகே ரகம். பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே கை கொடுத்துள்ளது. ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தால் படத்தை இன்னும் ரசித்திருக்கலாம்.

இயக்குனர் பகவதி பாலாவே ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

Aal Illatha Oorla Annan Than Mla movie review and rating in Tamil

More Articles
Follows