தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹரா விமர்சனம்.. மோகன் மைக்கை பிடுங்கி துப்பாக்கி கொடுத்த விஜய் ஸ்ரீ
ஸ்டோரி..
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கிறது.. இதற்காக போலீஸ் தரப்பில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமைக்கப்பட்டுள்ளது..
இந்த சூழ்நிலையில் ராம் (மோகன்) தொழுகை செய்துவிட்டு தாவூத் இப்ராஹிம் என தன் பெயரை மாற்றிக் கொண்டு வெளியே புறப்படுகிறார்.
தன் மகள் இறப்புக்கு என்ன காரணம்? அவர் தற்கொலை செய்து கொண்டாளா.? கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்விகளோடு புறப்பட்டு மொட்ட ராஜேந்திரனிடம் ஒரு கள்ளத்துப்பாக்கி வாங்கி கொண்டு வேட்டையாட புறப்படுகிறார் மோகன்.
மோகனால் வேலை பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயக்குமார் தனது சகாக்களுடன் இவரை துரத்துகிறார்.
இதனிடையில் மோகன் தேடுதல் வேட்டையில் மகளின் பாய் ஃப்ரெண்ட் சந்தோஷ் பிரபாகர் மற்றும் நர்ஸ் அனித்ரா மற்றும் அவரது பாய் பிரண்ட் கௌஷிக் உள்ளிட்டோர் இணைகின்றனர்.
தன் மகள் சுவாதியின் மரணத்திற்கு விடை கண்டுபிடித்தாரா மோகன்.? மகள் நிலை என்ன.? ராம் என்ற பெயரில் இருக்கும் இவர் தாவூத் இப்ராஹிம் என பெயரை மாற்றிக் கொண்டது ஏன்? அவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு.? தீவிரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருக்கிறதா?என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
Mohan – Ram/Dhawood Ibrahim
Anumol – Nila
Yogibabu – Advocate
Kaushik Ram – Vamsi
Anitha Nair – Anithra
Charuhasan – Velu Nayakkar
Mottai Rajendran – Bullet Ravi
Suresh Menon – Nirav
Vanitha VijayKumar – Vijaya Bhaskar
Mime Gopi – Dhawood Ibrahim
Aadhavan – Aadhavan
Singam Puli – Puli
Deepa – Judge
Mano Bala – Professor
Santhosh Prabakaran – Dharshan
Swathi – Nimisha
14 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்தாலும் அதே எனர்ஜியுடன் கம்பைக் கொடுத்திருக்கிறார் மோகன்.. ஆக்ஷன் எமோஷன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
தன் மகளுக்கு என்ன ஆனதோ என ஏங்கும் காட்சிகளில் தந்தை உணர்வைக் காட்டி இருக்கிறார்.. போலி மாத்திரைகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் போது ஒன் மேன் ஆர்மியாக உயர்ந்து நிற்கிறார்.
மோகன் ஜோடியாக அனுமோல்.. கணவன் மீது நேசம்.. மகள் மீது பாசம் கொண்ட நிலவாக நிறைந்து இருக்கிறார்..
இளம் காதலர்களாக கௌஷிக் ராம் மற்றும் அனித்ரா.. இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி.. அழகிலும் அக்ஷனிலும் செம..
மற்றொரு ஜோடியாக சந்தோஷ் மற்றும் சுவாதி.. மிகையில்லாத யதார்த்த நடிப்பில் ஜொலிக்கின்றனர்..
போலீசாக வரும் ஜெயக்குமார், இளையா சாய் தீனா, மூவரும் கம்பீரத் தோற்றத்தில் கலக்கி இருக்கின்றனர்..
பழ கருப்பையாவும் வனிதாவும் பேசிக்கொள்ளும் அரசியல் திமுக அதிமுக கட்சிகளை தாக்கும் பளிச் வசனங்கள்..
இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், பழ கருப்பையா, வனிதா விஜயகுமார், சுரேஷ்மேனன், யோகி பாபு, ரயில் ரவி, ஜெயக்குமார், ராஜன், மனோ பாலா, சாம்ஸ், ஆதவன், சிங்கம் புலி, தீபா, தர்மராஜ், அர்ஜுன், அலெக்ஸ், தர்மா, அன்பு கபில், பிரபா, விக்கி மற்றும் கல்லூரி பெண்கள் என பல நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.. மோகனுக்கு உதவும் முக்கிய கேரக்டரில் இவரும் வந்து செல்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
Director – Vijay Sri G
Music- Rashaanth Arwin
DOP Team – Prakath Munusamy Manodinakaran, Mohan Kumar, Vijay Sri G
Edit – Guna
Lyrics – Vijay Sri
Produced by – Kovai SP Mohanraj
Stunt – Vijay Sri G
PRO – Nikil Murukan
சின்ன பட்ஜெட்டில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ் பி மோகன்ராஜ்.
14 வருடங்களுக்குப் பிறகு மோகன் என்ட்ரி என்பதால் மோகன் ரசிகர்கள் இனிமையான பாடல்களை எதிர்பார்த்து இருப்பார்கள்.. அதை இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப கொடுத்து இருக்கிறார் ரஷாந்த் அர்வின்..
இயக்குனர் விஜய் ஸ்ரீ எழுதிய வாடா மல்லி மற்றும் மகளே இரண்டு பாடல்களும் தியேட்டர் விட்டு வந்த பின்னும் முணுமுணுக்க வைக்கிறது..
மோகன் கையில் துப்பாக்கி இருக்கும்போது பாட்டு எதற்கு பைட்டு தானே வேண்டும் என எண்ணி அதிரடி பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின்.
பிரகத் முனியசாமி மனோதினகரன் ஒளிப்பதிவில் காட்சிகளில் பிரம்மாண்டம் தெரிகிறது.. முக்கியமாக பாலக்காடு ரோட்டில் படமாக்கப்பட்ட கன்டெய்னர் சண்டைக்காட்சி வேற லெவல்.. கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடியாக துப்பாக்கி சத்தம் காதை பிளக்கிறது ஆனால் அது கொஞ்சம் நம்பும்படியாக இல்லை..
இடைவேளை வரை விறுவிறுப்பாக பயணிக்கிறது.. அடுத்தது என்ன நடக்கும் என நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து விட்டார் எடிட்டர் குணா.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பு ?? முக்கியமாக தீபா, யோகி பாபு, மைம் கோபி, ஆதவன், சாருஹாசன், நீச்சல் சரளா உள்ளிட்டோரின் காட்சிகளை எடிட்டர் குணா வெட்டி இருக்கலாம்.
ஒரு 14 வயது பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வது என்றால் பெண் போலீஸ் வேண்டும் என அந்த மாணவியே கேள்வி கேட்கும் காட்சி அதிர வைக்கிறது.. அடிப்படை சட்டங்களை அனைவரும் தெரிந்து கேள்வி கேட்டால் கெட்ட போலீசுக்கு வேலை இருக்காது என்பதற்கு அந்த காட்சி ஒரு உதாரணம்.
அப்பா மகள் பாசம்.. கோவை குண்டுவெடிப்பு.. தாவூத் இப்ராஹிம் தீவிரவாத தொடர்பு.. கள்ளத் துப்பாக்கி கலாச்சாரம்.. போலி மாத்திரை வியாபாரம்.. சாமானியனின் தைரியம்… மாதவிடாய் நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட அனைத்து கருத்துக்களையும் கலந்து ஒரு கமர்சியல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.
ஆக ஹரா.. மோகன் கையில் இருந்த மைக்கை பிடுங்கி துப்பாக்கியை கொடுத்திருக்கிறார் விஜய் ஸ்ரீ ஜி.
Mohans Haraa movie review