தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்.. 3.5/5.. கவிதை கலந்த ஆக்சன்
ஸ்டோரி…
ஒரு அடாத மழையினால் தன் காதல் மனைவி இழக்கிறார் விஜய் ஆண்டனி.. அன்று முதல் மழையை வெறுக்க தொடங்கி விடுகிறார்.. அதுதான் மழை பிடிக்காத மனிதன்.
விரக்தியில் இருக்கும் விஜய் ஆண்டனியை மாற்றத்திற்காக அந்தமான் கொண்டு செல்கிறார் அவரது நண்பர் சரத்குமார்.. அதேசமயம் நடந்த சம்பவத்தில் விஜய் ஆண்டனி இறந்து விட்டார் என பொய் தகவல் பரப்பி நம்ப வைக்கிறார்.. அப்படி அவர் சொல்ல என்ன காரணம் என்பது கிளைமாக்ஸ் இல் தெரியும்.
அந்தமானுக்கு சென்ற விஜய் ஆண்டனி அங்கு ஒரு பிரச்சனையில் தன் நண்பனுக்காகவும் தன் காதலிக்காகவும் களம் இறங்குகிறார்.. அடுத்தது நடந்தது என்பதே மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நாய் மீது பாசம்.. காதலி மீது நேசம் என ஸ்கோர் செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி.. அவரது ஹேர் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது.
ரோமியோ படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி தற்போது மீண்டும் சீரியஸ் கேரக்டராக செய்ய ஆரம்பித்துவிட்டாரா? ஆனால் இந்த படத்தின் கேரக்டருக்கு அது ஒத்துப் போவதால் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
மேகா ஆகாஷ் & அவரின் சிஸ்டர் கேரக்டர் கச்சிதம்..
மேகா ஆகாஷ், முரளி ஷர்மா மற்றும் இயக்குனர் ரமணாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.. விஜய் ஆண்டனி சீரியல் டைப் எனவே நீங்களும் சீரியஸாக டைப் ஆகிருங்கள் என மேகா ஆகாஷ் இருக்கு அட்வைஸ் சொன்னாரா விஜய் மில்டன் தெரியவில்லை.. நிறுத்தி நிதானமாகவே எல்லா சீன்களிலும் பேசுகிறார்
வில்லனாக வரும் ‘டாலி’ தனஞ்சய்வின் கேரக்டர் மிரட்டல்… இவருக்கான பில்டப்பும் இவருக்கான பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது.. நீ டாலி ஆள்னு சொல்லிட்ட.. ஆனா உன்ன போலீஸ அடிச்சுட்டா அப்புறம் எனக்கு எப்படிடா மரியாதை..? இப்ப நீ போலீஸ் அடிடா என மிரட்டும் காட்சி தெறி லெவல்..
விஜய் ஆண்டனி நண்பனாக வரும் இளம் ஹீரோ பிரித்வி துறுதுறு.. சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை குறைத்து இருக்கலாம்..
சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோரின் கேரக்டர்கள் வீணடிக்கப்பட்டு இருக்கிறது.. இறுதியாக கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படத்தை முடித்து இருப்பது கேப்டன் ரசிகர்களை மகிழ்விக்கும்..
டெக்னீசியன்ஸ்…
படத்தில் நிறைய இடங்களில் தீராமழை.. தீயவன் என வகை வகையாகப் பிரித்து காட்சிகளை விளக்கி இருப்பது செம.. காட்சிகளை கவிதை நயமாக படமாக்கி விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். இவரே படத்தின் இயக்குனர் என்பதால் காட்சிகளை ரசிக்கத்தக்க வகையில் தந்திருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்..
இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் ‘தீரா மழை’ , இசையமைப்பாளர் ஹரி டபுசியா இசையமைத்த ‘தேடியே போறேன்’ ஆகிய பாடல்கள் கவனம் பெறுகின்றன. விஜய் ஆண்டனி பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது..
ஆக்சன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது.. சரண்யா நடத்தும் உணவகத்தில் நடக்கும் அந்த சண்டை காட்சி வேற லெவல் ரகம்..
பெரும்பாலான காட்சிகளை அந்தமானில் படமாக்கி இருக்கின்றனர்.. அடடா அந்தமான் இவ்ளோ அழகா? ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம் என ஏங்க வைக்கிறது..
மழையில் நனையும் நாய்க்குட்டி முதல் கவிதையாய் பேசும் நாயகி மேகா ஆகாஷ் வரை அனைத்தும் அழகு..
கெட்டவனை அழிப்பதை விட கெட்டதை அழித்தால் நலம் பெறலாம் என்ற நல்ல நோக்கத்துடன் படத்தை முடித்து இருப்பது சிறப்பு.. வில்லனுக்கு விஜய் ஆண்டனி சொல்லும் அட்வைஸ் நாயகனின் பெருந்தன்மையை காட்டும் விதம்..
கூடுதல் தகவல்…
படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சி தனக்கே தெரியாமல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் நாயகன் யார்? அவன் ரவுடியா? போலீஸா? அவனுடன் வரும் சரத்குமார் யார்? அவனுக்கு ஏன் மழை பிடிக்காது என ட்விஸ்ட்டுகளை வைத்து படம் பண்ணியிருந்தேன்.
ஆனால், ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சியி நாயகன் யார் என்பதை ரிவீல் செய்து விட்டால் அதன் பின்னர், படத்தை எப்படி பார்க்க முடியும்” எனக் குமுறியுள்ளார் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன்.
ஒரு படம் சென்சார் செய்யப்பட்ட பின் அதற்கான காட்சிகளை நீக்கவோ சேர்க்க யாருக்கும் உரிமை இல்லாதபோது அதனை செய்தது யார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது..??!!
Mazhai Pidikadha Manidhan movie review