மயூரன் திரை விமர்சனம்

மயூரன் திரை விமர்சனம்

இயக்குநர் பாலாவின் பட்டறையைச் சேர்ந்தவர் நந்தன் சுப்பராயன். இவரது இயக்கத்தில் வந்துள்ள படம் மயூரன்.

ஒரு கல்லூரியில் இணையும் மூவர் நண்பர்களாகிறார்கள். ஜான் என்கிற ஜானகிராமன். எதற்காகவும் துணிந்து போராடும் சேகுவரா. இவர்களுடன் விஜய் டிவி புகழ் அமுதவாணன்.

ஒரு நாள் ஜானகிராமன் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். அப்போது கேன்சர் நோயாளியின் மெடிக்கல் ரிப்போர்ட் இவருக்கு வந்துவிடுகிறது.

இதனால் இவருக்கு நோய் என நினைக்கிறார். மேலும் ஒரு பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு போதை பொருளை விற்க முற்படுகிறார்.

தன் நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் போதை பொருளை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்.

அதன்பின்னர் இவர் எங்கு சென்றார்? என யாருக்கும் தெரியவில்லை. எங்கே சென்றார்? என்ன ஆனார்? நண்பர்கள் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

மயூரன்

கலைஞர்கள்…

அஞ்சன், ஆனந்த்சாமி, அமுதவாணன் 3 பேரும் நண்பர்கள். இதில் ஆனந்த்சாமி அப்பாவியாக நடித்திருக்கிறார்.

அஞ்சன் இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். சில காட்சிகளில் பாஸ் மார்க் பெறுகிறார்.

நாயகி அஸ்மிதாவுக்கு பெரிதாக வேலையில்லை. கடைசியில் இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதும் தெரியவில்லை.

கிராமத்து ஆள் போல கம்பீரம் காட்டி நடித்திருக்கிறார் பெரியவர் வேல.ராமமூர்த்தி. இவரின் நடிப்பும் இவரின் அடியாள் ஜான் நடிப்பும் நச்.

பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. அதுபோல் பின்னணி இசையும் ஏனோ தானே என இருக்கிறது. ஒளிப்பதிவு சில காட்சிகளில் மட்டுமே ஓகே.

mayuran movie

பாலாவின் சீடர் என்று படத்திற்கு சென்றால் நம்மை ஏமாற்றியிருக்கிறார் நந்தன்.

ஏழை குடும்பம், படிப்பு, போதை கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மாணவர்கள், நண்பனுக்காக போராடும் காட்சி என அருமையாக கதைக்களத்தை கொண்டு செல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார் டைரக்டர்.

க்ளைமாக்ஸ் நன்றாக இருந்தாலும் அது திடீரென சட்டென முடிவது சரியில்லை.

Comments are closed.

Related News

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், புரமோஷனுக்கு…
...Read More
PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற…
...Read More
கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக…
...Read More