மனுசனா நீ விமர்சனம்

மனுசனா நீ விமர்சனம்

தமிழகத்தில் ஒரு கும்பல் இளைஞர்களை குறி வைத்து கடத்துகிறது.

கிட்டதட்ட 36 வாலிபர்கள் மாயமாகி விடுகின்றனர். இதனால் போலீஸ் அதற்கான விசாரணையில் இறங்குகிறது.

இதனிடையில் நாயகன் ஆதர்ஷும், நாயகி அனு கிருஷ்ணாவும் காதலிக்கின்றனர்.

ஆதர்ஷின் அப்பா ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவருடைய நிலத்தை அந்த ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சுப்பு பஞ்சு அபகரிக்க நினைக்கிறார். ஆனால், ஆதர்ஷின் அப்பா இடம் கொடுக்க மறுக்கிறார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்படுகிறது.

இந்நிலையில் சுப்பு பஞ்சுவின் ஆட்களை ஆதர்ஷை அடிக்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் கஸாலி ஒரு மருந்து செலுத்துகிறார்.

இதனால் அவருக்கு பல மடங்கு சக்தி வருகிறது.

அப்போது ஆதர்ஷின் முகத்தில் பல காயங்கள் திடீரென ஏற்படுகிறது.

திடீரென ரத்தம் கொட்டுகிறது. முகமெல்லாம் பருக்கள் போல காயங்கள் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் கஸாலி செலுத்திய மருந்துதான் காரணம் என போலீஸ் கண்டுபிடிக்கிறது.

மற்ற இளைஞர்களையும் அவர்தான் கடத்தியுள்ளார் என்பது தெரியவருகிறது.

அப்படியென்றால் கஸாலி என்ன மருந்து கொடுத்தார். மற்ற இளைஞர்களை கடத்த என்ன காரணம்? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

நாயகனாக நடித்திருக்கிறார் ஆதர்ஷ். டான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஓகே. நடிக்க முயற்சித்திருக்கிறார்.

நாயகி அனுகிருஷ்ணா அழகு கண்களால் ரசிகர்களை ஈர்ப்பார். அவரைப் போன்று அவரது கண்களும் குண்டு.

பின்னணி இசை சில இடங்களில் பேசப்படும்.

கஸாலி இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல், மருத்துவமனையின் டீனாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்திற்கு இசையையும் இவரே அமைத்திருக்கிறார்.

மெடிக்கல் க்ரைம் திரில்லர் படத்தை மாறுப்பட்ட கோணத்தில் கொடுக்க நினைத்திருக்கிறார். டாக்டர்கள் ஆராய்ச்சி செய்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதில் ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார். க்ளைமாக்ஸில் அந்த கால் முடியாதவர் பழிவாங்கும் காட்சி நச்.

ஆராய்ச்சி என்ற பெயரில் மனித உயிர்களோடு விளையாடும் மருத்துவர்களுக்கு இப்படம் ஒரு எச்சரிக்கை.

மனுசனா நீ… மெடிக்கல் மிராக்கிள்

Comments are closed.