அன்பும் ஆட்டுக்குட்டியும்… மானசி விமர்சனம்

அன்பும் ஆட்டுக்குட்டியும்… மானசி விமர்சனம்

நடிகர்கள்
நடிகர்கள்: நரேஷ் மாதேஸ்வர், ஹரிஷ்ஷா பேகம், தவசி, ஆதித்யா ராம், சல்மான் பரிஸ் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – கண்ணன் பட்டேரி
எடிட்டர் – அச்சு விஜயன்
இசை – சிவ்ராம்
இயக்கம் – நவாஸ் சுலைமான்
தயாரிப்பு – மேத்யூ ஜோசப்

கதைக்களம்…

நாயகன் நரேஷ் மாதேஸ்வர் ஆடு மேய்ப்பவர். ஆடுகள் இவரின் உலகம் எல்லாம். தன் குழந்தை போல் அதிகளவில் பாசம் வைத்திருப்பவர். ஆடுகளுக்க ஒவ்வொரு பேர் வைத்து அதனுடன் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஊரை விட்டு ஒதுக்குப்புறமான இடத்தில் ஆடுகளுடன் வசிக்கிறார். இதனால் மக்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை கூட தெரியாமல் வளர்கிறார்.

ஒரு நாள் ஒரு கல்லறை பார்க்கும் இவர். அதில் உள்ள எழுத்துக்களை படித்து, மானசி என்ற பெயரை தெரிந்துக் கொண்டு அந்த பெண்ணை காதலியாக நினைத்து உருகுகிறார்.

அவருடன் பேசுவதாக நினைத்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். ஒரு ஆட்டுகுட்டிக்கு கூட மானசி என்று பெயர் வைத்து கொஞ்சி விளையாடுகிறார்.

இவரின் மாமா தவசி. (கருப்பன் குசும்பன் கேரக்டர் பிரபலமானவர்). இவர்கள் ஒரு நாள் ஆடுகளை மேய்த்து வரும்போது ஒரு கார் அந்த வழியாக செல்கிறது.

அப்போது அதில் உள்ளவர்கள் மானசியை திருடி செல்கின்றனர்.

எனவே தன் ஆட்டுக்குட்டியை தேடி கம்பம் சிட்டி பகுதிக்கு செல்கிறார் நாயகன். அதன்பின்னர் என்ன ஆனது? தன் மானசியை எப்படி கண்டுபிடித்தார்? காதலி கனவில் மட்டும்தானா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…

நாயகன் நரேஷ் மாதேஷ்வர். ஆட்டுக்குட்டி மீது இப்படி எல்லாம் அன்பு செலுத்த முடியுமா? என ஆச்சரியப்பட வைக்கிறார். கிராமத்து இளைஞராக வெள்ளந்தியாக நடித்திருக்கிறார்.

ஆனால் ஆடு போல கத்தி கொண்டு சண்டை போட்டு முட்டுவது எல்லாம் ஓவர். அதிலும் ஆடும் உடனும் கனவு காதலி உடனும் பேசுவது போரடிக்கிறது.

மாமாவாக வரும் தவசி எப்போதும் போல கிராமத்து மனிதராக ரசிக்க வைக்கிறார்.

நாயகி ஹரிஷ்ஷா பேகத்திற்கு பெரிதாக வேலையில்லை. பாடல் காட்சிகளில் கவர்கிறார். இடையில் போலீசாக வருகிறார். ஆனால் பயந்தபடியே இருப்பது கம்பீரத்திற்கு அளகு இல்லையே.

கிராமத்து பாடல்களும் பாடல் வரிகளும் நன்றாக உள்ளன. ஒரு குத்து பாடல் கூட தாளம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவில் தெளிவில்லை என்பதால் படத்துடன் மனம் ஒன்றாக மறுக்கிறது.

உண்மையாக அன்பு இருந்தால் அது எந்த உயிராக இருந்தாலும் நிச்சயம் அதை நம் மனம் தேடு என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.

ஆடுகளுடன் பேசுவது இல்லாத காதலியை வரவழைத்து அவருடன் பேசுவது நாயகன் ஓகே என்றாலும் ரசிகர்களுக்கு சரி வருமா?

ஆனால் ஆட்டை தேடி சென்ற பின்னும் அதன் பின் நடக்கும் நிகழ்வுகளிலும் சுவராஸ்யம் இல்லை.

ஆட்டை விற்கும் கும்பல் அதன் பின்னணியில் உள்ள வியாபாரத்தை இன்னும் மெருக்கேற்றி சொல்லியிருக்கலாம் இந்த மானசி அனைவருக்கும் பிடித்திருக்கும்.

மானசி.. அன்பும் ஆட்டுக்குட்டியும்

Manasi review rating

Comments are closed.